January 25, 2019

திருக்குறள்-பதிவு-88


                     திருக்குறள்-பதிவு-88

“ சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
ஜியார்டானோ புருனோ
பேசிய பேச்சுக்களை
ஆராய்ந்த ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
மதநம்பிக்கைகளுக்கு ,
எதிரான கருத்துக்கள்
கொண்ட வார்த்தைகளை
ஜியார்டானோ புருனோ
பேசினாரா ? என்று
ஆராய்ந்து பார்த்ததில்
ஜியார்டானோ
புருனோவிற்கு எதிராக
எந்தவிதமான வலுவான
ஆதாரங்களும் கிடைக்காத
காரணத்தினால்………….!
இரண்டாம் கட்ட
விசாரணைக்கு உத்தரவிட்டது  

“ முதல் கட்ட
விசாரணையின் முடிவில்
ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
நிரூபிக்கப்பட்டு
தண்டிக்கப்படுவாரா…..?
(அல்லது)
குற்றமற்றவர் என்று
நிரூபிக்கப்பட்டு விடுதலை
செய்யப்படுவாரா……..?
என்று உலகமே பார்த்துக்
கொண்டிருந்த முதல்
கட்ட விசாரணையில்
எந்தவிதமான முடிவுகளும்
எட்டப்படாத காரணத்தினால்
இரண்டாம் கட்ட
விசாரணையை உன்னிப்பாக
இந்த உலகம்
கவனித்துக் கொண்டிருந்தது “

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
சிறையில் தொடர்ந்து
சித்திரவதை அளிக்கப்பட்ட
காரணத்தினாலும் ;
பல நாட்கள் சாப்பிடாத
காரணத்தினாலும் ;
பல நாட்கள் தூங்காமல்
இருந்த காரணத்தினாலும் ;
ஜியார்டானோ புருனோவின்
உடல் தளர்ந்து நடக்க
முடியாமல் இருந்தார் ;
அதனால் அவரை
கைத்தாங்கலாக பிடித்து
நடக்க வைத்து அழைத்து
வந்து ஜியார்டானோ
புருனோவை நாற்காலியில்
அமர வைத்தனர் ;

“ நாற்காலியில் அமர்ந்து
இருந்த ஜியார்டானோ
புருனோ நாற்காலியில்
சிறிது நேரம் கூட
தொடர்ந்து உட்கார
முடியாத காரணத்தினால்
தலை சாய்ந்து கண்களை
மூடிக் கொண்டு அமர்ந்து
கொண்டு இருந்தார் “

“ரோம் நகரத்தில்
நடைபெற்ற முதல் கட்ட
விசாரணையின் போது
ஒரு தலைபட்சமாகவே
கேள்விகள் கேட்கப்பட்டன :
ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
கருதியே கேள்விகள்
கேட்கப்பட்டன :
ஏற்கனவே தயார்
செய்யப்பட்ட கேள்விகள் ;
ஜியார்டானோ புருனோவை
குற்றவாளியாக்குவதற்கு
என்றே கேட்கப்பட்ட
சாமர்த்தியமான கேள்விகள் ;
ஜியார்டானோ புருனோவின்
வாயிலிருந்து வரும்
வார்த்தைகளை வைத்து
அவரை குற்றவாளியாக்க
வேண்டும் என்ற நினைப்பில்
கேட்கப்பட்ட கேள்விகள் :
ஜியார்டானோ புருனோவை
பதில் சொல்ல விடாமால்
தொடர்ந்து கேட்கப்பட்ட
கேள்விகள்; - என்று
ஒரு தலைப்பட்சமாகவே
முதல் கட்ட விசாரணை
நடந்து முடிந்து விட்ட
காரணத்தினால்
இரண்டாம் கட்ட
விசாரணையில் ஜியார்டானோ
புருனோ பெரும்பாலான
கேள்விகளுக்கு பதில்கள்
எதுவும் சொல்லவில்லை ; “

“ பெரும்பான கேள்விகளுக்கு
ஜியார்டானோ புருனோ
பதில் சொல்லாமல்
தவிர்த்தார்
விசாரணைக்குழு சில
கேள்விகளைக் கேட்டு விட்டு
அதற்கு அவர்களே தவறான
பதில் சொன்ன போது
அதனை மறுத்து
ஜியார்டானோ
புருனோ சரியான
பதிலை சொன்னார் “

“ சில நேரங்களில்
இரண்டாம் கட்ட
விசாரணையில்
கார்டினல் சார்டோரியும்
(Cardinal Sartori)
ஜியார்டானோ புருனோவும்
கடுமையான வார்த்தைகளால்
நேருக்கு நேராக மோதிக்
கொண்ட காட்சியானது
போர்க்களத்தில் இரண்டு
அரசர்கள் நேருக்கு நேராக
ஆக்ரோஷமாக மோதிக்
கொண்டது போல் இருந்தது “

“ பல்வேறு விதமான
வார்த்தைகளைப் பயன்படுத்தி
கேள்விக் கணைகளால்
ஜியார்டானோ
புருனோவை வீழ்த்த
பெல்லரமினோ(Belaramino)
முயற்சி செய்த போதெல்லாம்
ஜியார்டானோ புருனோ
தனக்கே உரிய பாணியில்
வார்த்தைகளால்
பதிலடி கொடுத்ததால்
பெல்லரமினோ(Belaramino)
பல நேரங்களில்
செய்வது அறியாமல்
தடுமாறித்தான் போனார் “

“விசாரணைக் குழுவில்
உள்ள அதிகாரிகள்
கேட்ட கேள்விகளுக்கு
ஜியார்டானோ புருனோ
அளித்த வித்தியாசமான
எளிதாக புரிந்து
கொள்ள முடியாத
பதில்களால் பல
நேரங்களில் விசாரணைக்குழு
அதிகாரிகளுக்கு தலை
சுற்றி மயக்கமே
வந்து விட்டது “

” இத்தகைய பல்வேறு
வியக்கத்தக்க
விஷயங்களைத் தன்னுள்
கொண்ட உலகமே
ஆவலுடன் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருந்த
ஜியார்டானோ புருனோவிற்கு
எதிரான ரோம் நகரத்தின்
இரண்டாம் கட்ட
விசாரணை தொடங்கியது “

கார்டினல் சார்டோரி
எழுந்து கேள்விகள்
கேட்கலானார்

Father Bruno…………………….!
Father Bruno…………………….!


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  25-01-2019
/////////////////////////////////////////////////////////////



January 23, 2019

திருக்குறள்-பதிவு-87


                        திருக்குறள்-பதிவு-87

சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
ஜியார்டானோ புருனோ
பேசுகிறார்……………………………..!

“ பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றி வரவில்லை ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்னபடி,
சூரியனை மையமாக
வைத்தே பூமி
சுற்றி வருகிறது ;
மற்ற கிரகங்களும்
சூரியனை மையமாக
வைத்தே சுற்றி வருகிறது ;”

“ இதைப் போல் எண்ணற்ற
சூரியக் குடும்பங்கள்
இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிரம்பி
இருக்கிறது ;
இந்த பிரபஞ்சம்
எல்லையற்றது ; “

“கடவுள்  நமக்கும் மேலே
எல்லாவற்றுக்கும்
மேலே இல்லை ;
கடவுள் எல்லா
இடங்களிலும் ,
எல்லா உயிர்களிலும் ,
எல்லாப் பொருட்களிலும் ,
உள்ளும், புறமும்
நிரம்பி இருக்கிறான் ;
இறைவன் இல்லாமல்
எந்த ஒன்றும் இயங்காது ;
இந்த தத்துவத்தை
புரியாத மதவாதிகள்
சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தை
அறியாமை நிறைந்த
பல்கலைக் கழகமாக
மாற்றி வைத்து
இருக்கிறார்கள் ; ”

“ மதக் கோட்பாடுகளை
கல்வியின் மீது
திணிக்காதீர்கள் ;
மதவாதிகளின்
கட்டுப் பாட்டில் இயங்காத
கல்வி நிலையங்கள்
மூலம் கற்பிக்கப்படும்
கல்வியே சுதந்திரமான
கல்வியாக இருக்கும் ;
அங்கே தான் சுதந்திரமான
தத்துவமும், அறிவியலும்
பிறக்கும் “

 “இத்தகைய ஒரு
கல்வி இந்த சமுதாயத்திற்கு
கிடைக்குமானால்
சார்போன் (Sorbonne)
மற்றும் அனைத்து
பல்கலைக் கழகங்களிலும்
அறியாமை விலகி
விடுவதோடு
மட்டுமல்லாமல்
மதக்கோட்பாடுகள்
கல்வியை அடிமைப்
படுத்திக் கொண்டிருக்கும்
நிலையும் இருக்காது  ;
மனிதன் சுயமாக
சிந்தித்து தூய்மையான
ஆத்மாவைக் கொண்டு
சுதந்திரமாக வாழக்கூடிய
நிலையும் உருவாகும் “

 “பள்ளிக் கூடங்களிலும் ;
கல்லூரிகளிலும் ;
பல்கலைக் கழகங்களிலும் ;
அனைத்து கல்வி
நிலையங்களிலும் ;
வரையறுக்கப்பட்ட
அணுகுமுறைகளைக்
கொண்ட மதத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள
கல்வி தேவையற்றது “

“ அறிவைப் பெற வேண்டும்
என்று யாரெல்லாம்
தேடி வருகிறார்களோ…………..?
அவர்களுக்கு எல்லாம்
அனைத்து கல்வி
நிலையங்களும்
கல்வி கற்பிக்க
வேண்டுமே ஒழிய……………..
மதத்தைப் போதிக்கும்
மதவாதிகளின் கூடாரமாக
கல்வி நிலையங்கள்
இருக்கக் கூடாது………..? “

“ மதவாதிகளின் கட்டுப்
பாட்டில் இயங்கிக்
கொண்டிருக்கும் அனைத்து
கல்வி நிலையங்களிலும்
மதம் என்பது
தான் இருக்கும்- அங்கே
கல்வி என்பது
சிறிதும் இருக்காது - அங்கே
குழந்தை முதலே
மதவெறி தான்
கற்பிக்கப்படுமேயொழிய
கல்வி என்பது
கற்பிக்கப்படுவது இல்லை
அவைகள்
மதவெறியர்களைத் தான்
உருவாக்குகிறதே தவிர
மனிதத் தன்மையுள்ள
மனிதனை
உருவாக்குவது இல்லை “

“ மதத்தன்மையுள்ள
குடும்பத்தில்
பிறந்த குழந்தைக்கு
எப்படி மதம் சார்ந்த
உணர்வுகள் ஊட்டி
வளர்க்கப்படுகிறதோ ;
அவ்வாறே ,
மதவாதிகளின்
கட்டுப்பாட்டில்
இயங்கிக் கொண்டிருக்கும்
அனைத்து கல்வி
நிலையங்களிலும்
மதவெறி என்பது
ஊட்டி வளர்க்கப்படுகிறது ; “

“ மதத்தின் கட்டுப்பாட்டில்
இயங்கிக் கொண்டிருக்கும்
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும்
கல்வியின் மூலம்
மனிதன் என்ற
நிலையில் உள்ளவன்
மிருகம் என்ற
நிலையை அடைகிறான் ;
ஆனால்,
மதத்தின் கட்டுப்பாட்டில்
இயங்காத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும்
கல்வியின் மூலம்
மிருகம் என்ற
நிலையில் உள்ளவன்
மனிதன் என்ற
நிலையை அடைகிறான் ; “

“ மதவாதிகளின்
கட்டுப்பாட்டில் இயங்காத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும் சுதந்திரமான
கல்வியின் மூலமே
சமதர்ம சமுதாயம்
உருவாகும் ;  
இத்தகைய சமதர்ம
சமுதாயத்தில் ஒரு
குழந்தை பிறக்கும் போது
அந்த குழந்தை ஒரு புதிய
மனிதனாக பிறக்கும் ;
பிறந்து வாழ்ந்து
கொண்டிருக்கும்
மனிதன் புதிய மனிதனாக
மாற்றமடைவான் 

“ மதத்தின் கட்டுப்
பாட்டில் இல்லாத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும் சுதந்திரமான
கல்வியின் மூலமே
புதிய மனிதன் பிறப்பான் ;
புதிய மனிதன் பிறப்பான் ;
புதிய மனிதன் பிறப்பான் ;

ஆமென்……………….!
ஆமென்……………….!
ஆமென்……………….!


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  23-01-2019
/////////////////////////////////////////////////////////////




January 21, 2019

திருக்குறள்-பதிவு-86


                       திருக்குறள்-பதிவு-86

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிராக ரோம்
நகரத்தில் நடைபெற்ற
முதல் கட்ட
விசாரணையின்
குறிப்புகள்
அடங்கிய கோப்பு
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori)
அவர்களால் தயார்
செய்யப்பட்டு
ஃபாதர் டிராக்காலியோலோ
(Father Tragagliolo)
அவர்கள் மூலமாக
போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது ”

“ போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்கள்
அந்த கோப்பை
முழுமையாக
கவனத்துடன்
படித்து முடித்தார் “

போப் கிளமெண்ட்-VIII :
(Pope Clement-VIII)
 “கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவ
குடும்பத்தில் வளர்ந்து ;
கிறிஸ்தவராக வாழ்ந்து :
கிறிஸ்தவ பழக்க
வழக்கங்கங்களைக்
கற்று அதனைக்
கடைபிடித்து
கிறிஸ்தவராக வாழ்ந்து
வருவதோடு மட்டும்
அல்லாமல் ,
Father ஆக இருக்கும்
ஜியார்டானோ புருனோ
“ பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்திற்கு எதிராகவும் ;

கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளுக்கு
எதிராகவும் ;

கிறிஸ்தவ மதத்தில்
உள்ள நம்பிக்கைகளுக்கு
எதிராகவும் ;

கருத்து சொல்கிறார்
என்றால் அது
ஆச்சரியப்பட
வேண்டிய விஷயம்

 “ ஏனென்றால்
கிறிஸ்தவ மத
வரலாற்றில்
இத்தகைய நிகழ்வு
நடைபெறுவது
என்பது இது தான்
முதல் முறை ”
.
“பிரச்சினைக்குரிய
இந்த விஷயத்தை
உலகமே உற்று
நோக்கி இமை
கொட்டாமல் கவனித்துக்
கொண்டு இருக்கிறது “

“ ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளுக்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக
அவரை நெருப்பில்
எரித்து கொல்ல
வேண்டும் என்று
ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு
முடிவு செய்து
இருந்தால் ,
வெனிஸ் நகரத்தின்
விசாரணைக்குழு
அளித்த
ஆதாரங்களைவிட
வலுவான
ஆதாரங்களை
ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு
சமர்ப்பிக்க வேண்டும் “

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
சிறையில்
அடைப்பதையும்
நெருப்பில் இட்டு
கொல்லுவதையும்
விரும்பவில்லை. “

“ கிறிஸ்தவ மத
வரலாற்றில்
நடக்காத ஒரு
விஷயம் இப்போது
நடந்து கொண்டிருக்கிற
காரணத்தினால்
இந்த விஷயத்தை
கவனமுடன் எந்தவித
தவறுகளும் நேராத
வண்ணம் கையாள
வேண்டும் என்றும் ;
அவ்வப்போது
நடக்கும்
விசாரணைப் பற்றிய
நிகழ்வுகளை
உடனுக்குடன்
தனக்கு தெரிவிக்க
வேண்டும் என்றும் ;
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori)
அவர்களிடம் இந்த
தகவலை சேர்க்குமாறு
ஃபாதர் டிராக்காலியோலோ
(Father Tragagliolo)
அவர்களிடம்
போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்கள்
வலியுறுத்தினார் ”

 ‘ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
பழக்க வழக்கங்களுக்கு
எதிராக செயல்பட்டார்
என்பதற்கு ,
ஆதாரமாக அவர்
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
பேசிய பேச்சை
எடுத்துக் கொண்டு
ஆராயலாம் என்று
ரோமன்
விசாரணைக்குழு
முடிவு எடுத்து
அந்த பேச்சை
ஆராய்ந்தது.

ஜியார்டானோ புருனோ
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள்
மத்தியில் பேசிய
பேச்சு இது தான் !

---------  இன்னும் வரும்
---------  21-01-2019
/////////////////////////////////////////////////////////////