January 26, 2019

திருக்குறள்-பதிவு-89


                       திருக்குறள்-பதிவு-89

கார்டினல் சார்டோரி :
“ Father Bruno………………!
Father Bruno……………….!
பல்வேறு விதமான
குற்றங்களைச் செய்து
இருக்கிறீர்கள்………
நீங்கள் குற்றவாளி
என்று ஒத்துக்
கொள்கிறீர்களா………..? “

ஜியார்டானோ புருனோ :
“ நான் எப்போது
எந்த இடத்தில்
எந்த குற்றங்களைச்
செய்தேன் ?
நான் குற்றவாளி
என்று ஒத்துக்
கொள்வதற்கு ”

பெல்லரமினோ :
“ நீங்கள்
குற்றமற்றவரா………….?
நீங்கள்
குற்றம் எதுவும்
செய்யவில்லையா………..?

“ உங்களை நீங்களே
குற்றமற்றவர் என்றும் ;
உங்களை நீங்களே
குற்றவாளி
இல்லை என்றும் ;
கூறிக் கொள்வதில்
எந்தவிதமான
ஆச்சரியமும் இல்லை “

ஜியார்டானோ புருனோ :
“ ஒரு குற்றவாளியே
தன்னை குற்றவாளி
என்று ஒத்துக்
கொள்ளாத நிலையில்…………….
எந்த குற்றமும்
செய்யாத என்னை
குற்றவாளி என்று கூறி
குற்றத்தை ஒப்புக்
கொள்ளச் சொல்வது தான்
ஆச்சரியமாக இருக்கிறது ............ ?

பெல்லரமினோ :
“ குற்றவாளி யாரும்
தான் செய்த
குற்றத்தையும் ;
தன்னை குற்றவாளி
என்றும் :
எப்போதும்
எந்தக் காலத்திலும்
ஒத்துக் கொண்டதே
இல்லை - என்பது
இந்த உலகத்தில்
காலம் காலமாக
வழக்கத்தில் இருந்து
வரும் நடைமுறை ;
அதையே நீங்களும்
உங்கள் வாயால்
சொல்வது என்பது
ஆச்சரியப்படுத்தும்
ஒன்றல்ல “

ஜியார்டானோ புருனோ :
“ குற்றம் செய்யாதவனை
பிடித்து பல்வேறு
விதமான குற்றங்களை
அவன் மேல் சுமத்தி
அவனை குற்றவாளி
என்று நிரூபிப்பதற்காக
பல்வேறு விதமான
செயல்களைச்
செய்வது என்பது
உலகம் கடைபிடித்து
வரும் நடைமுறை
அதையே நீங்களும்
செயல்படுத்துவது என்பது
ஆச்சரியப்படுத்தும்
ஒன்றல்ல “

பெல்லரமினோ :
“ ஒரு குற்றவாளியை
இவ்வளவு சுதந்திரமாக
பேச அனுமதி
அளித்ததில் இருந்து
நீங்கள் எங்களுடைய
பரந்த மனப்பான்மையை
புரிந்து கொள்ள வேண்டும்
நீங்கள் புரிந்து
கொள்ளவில்லை எனில்
புரிந்து கொள்ளுங்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ பறவையின் சிறகை
ஒடித்து அதனை
கூண்டில் அடைத்து
உன்னை சுதந்திரமாக
வைத்திருக்கிறேன்
என்று கிளியிடமே
சொல்வது
போல் இருக்கிறது
நீங்கள் பேசுவது “

பெல்லரமினோ :
“ நீங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள்……..?

ஜியார்டானோ புருனோ :
“ குற்றவாளி என்று
நிரூபணம் ஆவதற்கு
முன்பாகவே
பல்வேறு விதமான
சித்திரவதையால்
என்னை துன்புறுத்தியும் ;
விசாரணை என்ற
பெயரால் தேவையற்ற
கேள்விகளைக்
கேட்டு என்னை
அலைக்கழித்ததில்
இருந்தும் ;
நீங்கள் செய்த
செயல்கள் யாவும்
உங்களுடைய பரந்த
மனப்பான்மையையும்
காட்டவில்லை ;
நீங்கள் எனக்கு
சுதந்திரம் அளித்ததையும்
காட்டவில்லை ;
என்பது உங்களுக்கு
புரியவில்லையா..........? “

“ உங்களுக்கு
புரியவில்லை என்றால்
சொல்லுங்கள் நான்
உங்களுக்கு புரிய
வைக்கிறேன்………………….!”

பெல்லரமினோ :
“ நீங்கள் எங்களுக்கு
என்ன புரிய
வைக்கப் போகிறீர்கள் “

(ஜியார்டானோ புருனோவின்
பதில்களால்
பெல்லரமினோ
தடுமாறுவதைப் பார்த்த
கார்டினல் சார்டோரி
கேள்விகளைக்
கேட்கலானார்)

கார்டினல் சார்டோரி :
Father Bruno……………………..!
போதும்………………………..

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையின்
மத நம்பிக்கைகளுக்கு
எதிராக செயல்பட்டுள்ளீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
 “கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையின்
நம்பிக்கைக்கு எதிராக
செயல்பட்டேன் ;
நம்பிக்கைக்கு எதிராக
செயல்பட்டேன் ;
என்று தொடர்ந்து
சொல்லிக் கொண்டே
இருக்கிறீர்கள் ;
நான் எப்போது……?
எந்த இடத்தில்……..?
எந்த வகையில்…..?
மத நம்பிக்கைகளுக்கு
எதிராக செயல்பட்டேன்
என்று சொல்லுங்கள் ;
ஒரு முறைகூட
அதைச் சொல்லாமல்
மத நம்பிக்கைக்கு
எதிராக செயல்பட்டேன் ;
என்று மட்டும்
சொல்லிக் கொண்டே
இருக்கிறீர்கள்………….? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  26-01-2019
/////////////////////////////////////////////////////////////


January 25, 2019

திருக்குறள்-பதிவு-88


                     திருக்குறள்-பதிவு-88

“ சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
ஜியார்டானோ புருனோ
பேசிய பேச்சுக்களை
ஆராய்ந்த ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
மதநம்பிக்கைகளுக்கு ,
எதிரான கருத்துக்கள்
கொண்ட வார்த்தைகளை
ஜியார்டானோ புருனோ
பேசினாரா ? என்று
ஆராய்ந்து பார்த்ததில்
ஜியார்டானோ
புருனோவிற்கு எதிராக
எந்தவிதமான வலுவான
ஆதாரங்களும் கிடைக்காத
காரணத்தினால்………….!
இரண்டாம் கட்ட
விசாரணைக்கு உத்தரவிட்டது  

“ முதல் கட்ட
விசாரணையின் முடிவில்
ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
நிரூபிக்கப்பட்டு
தண்டிக்கப்படுவாரா…..?
(அல்லது)
குற்றமற்றவர் என்று
நிரூபிக்கப்பட்டு விடுதலை
செய்யப்படுவாரா……..?
என்று உலகமே பார்த்துக்
கொண்டிருந்த முதல்
கட்ட விசாரணையில்
எந்தவிதமான முடிவுகளும்
எட்டப்படாத காரணத்தினால்
இரண்டாம் கட்ட
விசாரணையை உன்னிப்பாக
இந்த உலகம்
கவனித்துக் கொண்டிருந்தது “

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
சிறையில் தொடர்ந்து
சித்திரவதை அளிக்கப்பட்ட
காரணத்தினாலும் ;
பல நாட்கள் சாப்பிடாத
காரணத்தினாலும் ;
பல நாட்கள் தூங்காமல்
இருந்த காரணத்தினாலும் ;
ஜியார்டானோ புருனோவின்
உடல் தளர்ந்து நடக்க
முடியாமல் இருந்தார் ;
அதனால் அவரை
கைத்தாங்கலாக பிடித்து
நடக்க வைத்து அழைத்து
வந்து ஜியார்டானோ
புருனோவை நாற்காலியில்
அமர வைத்தனர் ;

“ நாற்காலியில் அமர்ந்து
இருந்த ஜியார்டானோ
புருனோ நாற்காலியில்
சிறிது நேரம் கூட
தொடர்ந்து உட்கார
முடியாத காரணத்தினால்
தலை சாய்ந்து கண்களை
மூடிக் கொண்டு அமர்ந்து
கொண்டு இருந்தார் “

“ரோம் நகரத்தில்
நடைபெற்ற முதல் கட்ட
விசாரணையின் போது
ஒரு தலைபட்சமாகவே
கேள்விகள் கேட்கப்பட்டன :
ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
கருதியே கேள்விகள்
கேட்கப்பட்டன :
ஏற்கனவே தயார்
செய்யப்பட்ட கேள்விகள் ;
ஜியார்டானோ புருனோவை
குற்றவாளியாக்குவதற்கு
என்றே கேட்கப்பட்ட
சாமர்த்தியமான கேள்விகள் ;
ஜியார்டானோ புருனோவின்
வாயிலிருந்து வரும்
வார்த்தைகளை வைத்து
அவரை குற்றவாளியாக்க
வேண்டும் என்ற நினைப்பில்
கேட்கப்பட்ட கேள்விகள் :
ஜியார்டானோ புருனோவை
பதில் சொல்ல விடாமால்
தொடர்ந்து கேட்கப்பட்ட
கேள்விகள்; - என்று
ஒரு தலைப்பட்சமாகவே
முதல் கட்ட விசாரணை
நடந்து முடிந்து விட்ட
காரணத்தினால்
இரண்டாம் கட்ட
விசாரணையில் ஜியார்டானோ
புருனோ பெரும்பாலான
கேள்விகளுக்கு பதில்கள்
எதுவும் சொல்லவில்லை ; “

“ பெரும்பான கேள்விகளுக்கு
ஜியார்டானோ புருனோ
பதில் சொல்லாமல்
தவிர்த்தார்
விசாரணைக்குழு சில
கேள்விகளைக் கேட்டு விட்டு
அதற்கு அவர்களே தவறான
பதில் சொன்ன போது
அதனை மறுத்து
ஜியார்டானோ
புருனோ சரியான
பதிலை சொன்னார் “

“ சில நேரங்களில்
இரண்டாம் கட்ட
விசாரணையில்
கார்டினல் சார்டோரியும்
(Cardinal Sartori)
ஜியார்டானோ புருனோவும்
கடுமையான வார்த்தைகளால்
நேருக்கு நேராக மோதிக்
கொண்ட காட்சியானது
போர்க்களத்தில் இரண்டு
அரசர்கள் நேருக்கு நேராக
ஆக்ரோஷமாக மோதிக்
கொண்டது போல் இருந்தது “

“ பல்வேறு விதமான
வார்த்தைகளைப் பயன்படுத்தி
கேள்விக் கணைகளால்
ஜியார்டானோ
புருனோவை வீழ்த்த
பெல்லரமினோ(Belaramino)
முயற்சி செய்த போதெல்லாம்
ஜியார்டானோ புருனோ
தனக்கே உரிய பாணியில்
வார்த்தைகளால்
பதிலடி கொடுத்ததால்
பெல்லரமினோ(Belaramino)
பல நேரங்களில்
செய்வது அறியாமல்
தடுமாறித்தான் போனார் “

“விசாரணைக் குழுவில்
உள்ள அதிகாரிகள்
கேட்ட கேள்விகளுக்கு
ஜியார்டானோ புருனோ
அளித்த வித்தியாசமான
எளிதாக புரிந்து
கொள்ள முடியாத
பதில்களால் பல
நேரங்களில் விசாரணைக்குழு
அதிகாரிகளுக்கு தலை
சுற்றி மயக்கமே
வந்து விட்டது “

” இத்தகைய பல்வேறு
வியக்கத்தக்க
விஷயங்களைத் தன்னுள்
கொண்ட உலகமே
ஆவலுடன் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருந்த
ஜியார்டானோ புருனோவிற்கு
எதிரான ரோம் நகரத்தின்
இரண்டாம் கட்ட
விசாரணை தொடங்கியது “

கார்டினல் சார்டோரி
எழுந்து கேள்விகள்
கேட்கலானார்

Father Bruno…………………….!
Father Bruno…………………….!


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  25-01-2019
/////////////////////////////////////////////////////////////



January 23, 2019

திருக்குறள்-பதிவு-87


                        திருக்குறள்-பதிவு-87

சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
ஜியார்டானோ புருனோ
பேசுகிறார்……………………………..!

“ பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றி வரவில்லை ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்னபடி,
சூரியனை மையமாக
வைத்தே பூமி
சுற்றி வருகிறது ;
மற்ற கிரகங்களும்
சூரியனை மையமாக
வைத்தே சுற்றி வருகிறது ;”

“ இதைப் போல் எண்ணற்ற
சூரியக் குடும்பங்கள்
இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிரம்பி
இருக்கிறது ;
இந்த பிரபஞ்சம்
எல்லையற்றது ; “

“கடவுள்  நமக்கும் மேலே
எல்லாவற்றுக்கும்
மேலே இல்லை ;
கடவுள் எல்லா
இடங்களிலும் ,
எல்லா உயிர்களிலும் ,
எல்லாப் பொருட்களிலும் ,
உள்ளும், புறமும்
நிரம்பி இருக்கிறான் ;
இறைவன் இல்லாமல்
எந்த ஒன்றும் இயங்காது ;
இந்த தத்துவத்தை
புரியாத மதவாதிகள்
சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தை
அறியாமை நிறைந்த
பல்கலைக் கழகமாக
மாற்றி வைத்து
இருக்கிறார்கள் ; ”

“ மதக் கோட்பாடுகளை
கல்வியின் மீது
திணிக்காதீர்கள் ;
மதவாதிகளின்
கட்டுப் பாட்டில் இயங்காத
கல்வி நிலையங்கள்
மூலம் கற்பிக்கப்படும்
கல்வியே சுதந்திரமான
கல்வியாக இருக்கும் ;
அங்கே தான் சுதந்திரமான
தத்துவமும், அறிவியலும்
பிறக்கும் “

 “இத்தகைய ஒரு
கல்வி இந்த சமுதாயத்திற்கு
கிடைக்குமானால்
சார்போன் (Sorbonne)
மற்றும் அனைத்து
பல்கலைக் கழகங்களிலும்
அறியாமை விலகி
விடுவதோடு
மட்டுமல்லாமல்
மதக்கோட்பாடுகள்
கல்வியை அடிமைப்
படுத்திக் கொண்டிருக்கும்
நிலையும் இருக்காது  ;
மனிதன் சுயமாக
சிந்தித்து தூய்மையான
ஆத்மாவைக் கொண்டு
சுதந்திரமாக வாழக்கூடிய
நிலையும் உருவாகும் “

 “பள்ளிக் கூடங்களிலும் ;
கல்லூரிகளிலும் ;
பல்கலைக் கழகங்களிலும் ;
அனைத்து கல்வி
நிலையங்களிலும் ;
வரையறுக்கப்பட்ட
அணுகுமுறைகளைக்
கொண்ட மதத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள
கல்வி தேவையற்றது “

“ அறிவைப் பெற வேண்டும்
என்று யாரெல்லாம்
தேடி வருகிறார்களோ…………..?
அவர்களுக்கு எல்லாம்
அனைத்து கல்வி
நிலையங்களும்
கல்வி கற்பிக்க
வேண்டுமே ஒழிய……………..
மதத்தைப் போதிக்கும்
மதவாதிகளின் கூடாரமாக
கல்வி நிலையங்கள்
இருக்கக் கூடாது………..? “

“ மதவாதிகளின் கட்டுப்
பாட்டில் இயங்கிக்
கொண்டிருக்கும் அனைத்து
கல்வி நிலையங்களிலும்
மதம் என்பது
தான் இருக்கும்- அங்கே
கல்வி என்பது
சிறிதும் இருக்காது - அங்கே
குழந்தை முதலே
மதவெறி தான்
கற்பிக்கப்படுமேயொழிய
கல்வி என்பது
கற்பிக்கப்படுவது இல்லை
அவைகள்
மதவெறியர்களைத் தான்
உருவாக்குகிறதே தவிர
மனிதத் தன்மையுள்ள
மனிதனை
உருவாக்குவது இல்லை “

“ மதத்தன்மையுள்ள
குடும்பத்தில்
பிறந்த குழந்தைக்கு
எப்படி மதம் சார்ந்த
உணர்வுகள் ஊட்டி
வளர்க்கப்படுகிறதோ ;
அவ்வாறே ,
மதவாதிகளின்
கட்டுப்பாட்டில்
இயங்கிக் கொண்டிருக்கும்
அனைத்து கல்வி
நிலையங்களிலும்
மதவெறி என்பது
ஊட்டி வளர்க்கப்படுகிறது ; “

“ மதத்தின் கட்டுப்பாட்டில்
இயங்கிக் கொண்டிருக்கும்
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும்
கல்வியின் மூலம்
மனிதன் என்ற
நிலையில் உள்ளவன்
மிருகம் என்ற
நிலையை அடைகிறான் ;
ஆனால்,
மதத்தின் கட்டுப்பாட்டில்
இயங்காத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும்
கல்வியின் மூலம்
மிருகம் என்ற
நிலையில் உள்ளவன்
மனிதன் என்ற
நிலையை அடைகிறான் ; “

“ மதவாதிகளின்
கட்டுப்பாட்டில் இயங்காத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும் சுதந்திரமான
கல்வியின் மூலமே
சமதர்ம சமுதாயம்
உருவாகும் ;  
இத்தகைய சமதர்ம
சமுதாயத்தில் ஒரு
குழந்தை பிறக்கும் போது
அந்த குழந்தை ஒரு புதிய
மனிதனாக பிறக்கும் ;
பிறந்து வாழ்ந்து
கொண்டிருக்கும்
மனிதன் புதிய மனிதனாக
மாற்றமடைவான் 

“ மதத்தின் கட்டுப்
பாட்டில் இல்லாத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும் சுதந்திரமான
கல்வியின் மூலமே
புதிய மனிதன் பிறப்பான் ;
புதிய மனிதன் பிறப்பான் ;
புதிய மனிதன் பிறப்பான் ;

ஆமென்……………….!
ஆமென்……………….!
ஆமென்……………….!


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  23-01-2019
/////////////////////////////////////////////////////////////