April 21, 2019

பரம்பொருள்-பதிவு-5


                       பரம்பொருள்-பதிவு-5

“கோயில் கோபுரங்களில்
உள்ள கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்யும்
மிகப்பெரிய வேலையை
செய்து வருகின்றன “

“கோபுரக் கலசங்கள்
என்பது தங்கம், வெள்ளி,
செப்பு மற்றும் ஐம்பொன்
இவைகளில் ஏதேனும்
ஒன்றால் செய்யப்பட்டதாக
இருக்கும் “

“கோபுரக் கலசத்திற்குள்
உயிர்ச்சக்தி கொண்ட
பொருள் வைக்கப்பட்டிருக்க
வேண்டும் - அப்படி
உயிர்ச்சக்தி கொண்ட பொருள்
கோபுரக் கலசத்திற்குள்
வைக்கப்பட்டு இருந்தால்
மட்டுமே கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் - இல்லை என்றால்
கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்காது “

“கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்க வேண்டும்
என்பதற்காக - கோபுரக்
கலசத்திற்குள்
நவ தானியங்கள் அல்லது
பாதரசம் வைப்பார்கள்”

“ நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியுடன் இருக்கும்
வரை தான் - கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் தன்மையுடன்
இருக்கும்- நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியை இழந்து
விட்டால் கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும்
சக்தியை இழந்து விடும்”

“ கோபுரக் கலசத்தில்
நிரப்பப்பட்டிருக்கும்
நவதானியங்கள் எனப்படும்
நெல், கம்பு, கேழ்வரகு,
திணை, வரகு,சோளம்,
மக்காச்சோளம், சாமை
எள் ஆகியவை 12 ஆண்டுகள்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
12 வருட காலத்தை
தாண்டும் போது அந்த
நவதானியங்கள்
தங்கள் உயிர்ச்சக்தியை
இழந்து விடும் ; “

“ 12 வருடங்கள் கழித்து
கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கக்கூடிய தன்மையை
இழந்து விடக் கூடிய
நிலைக்கு வந்து விடும் ;
12 வருடங்களுக்கு
ஒரு முறை கும்பாபிஷேகம்
என்ற பெயரில்-கோபுரக்
கலசத்தில் உள்ள
உயிர்ச்சக்தியை இழந்த
நவதானியங்கள் மாற்றப்பட்டு
புதியதாக உயிர்ச்சக்தி
கொண்ட நவதானியங்கள்
நிரப்பப்படுகின்றன “

“நவதானியங்கள் ஒரு
குறிப்பிட்ட காலம்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
அந்த குறிப்பிட்ட காலம்
முடிந்தவுடன் அந்த
நவதானியங்களை
மாற்ற வேண்டும்- ஆனால்
பாதரசம் எப்போதும்
உயிர்ச்சக்தியுடன்
தான் இருக்கும்;-பாதரசம்
ஒருபோதும் தன்
உயிர்ச்சக்தியை இழக்காது  
எனவே கோபுரக் கலசத்தில்
ஒருமுறை பாதரசத்தை
நிரப்பி விட்டால்
12 வருடங்களுக்கு
பாதரசத்தை மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை;”

“இவ்வாறாக கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கின்றன;”

“கோபுரக் கலசங்களின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவற்றைப்
பொறுத்து தான்
கோபுரங்கள் அமைக்கப்பட
வேண்டும் “

“கோபுரக் கலசங்கள்
மூலம் கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரத்தின் வழியாக
இறங்கி கோயிலுக்குள்
செல்கிறது”

“கோபுரக் கலசங்கள்
மூலமாக கிரகிக்கப்படும்
சக்தியானது கோபுரத்தின்
குறுகிய இடம் வழியாக
உட்புறமாக இறங்கி
அகன்று கொண்டே
சென்று கோபுரத்தின்
கீழ் வரை சென்று
கோயிலுக்குள் சென்று
சக்தியை உற்பத்தி
செய்கிறது “

“கோபுர கலசத்திற்கு
ஏற்றவிதத்தில்
கோயில் கோபுரங்கள்
அமைக்கப்படவில்லை எனில்
கோபுரக் கலசங்கள்
வழியாக கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரங்கள் வழியாக
கீழே இறங்காது ;
கோபுரக் கலசங்கள்
மூலமாக கோயிலுக்குள்
சக்தியை உற்பத்தி செய்ய
முடியாத நிலை உருவாகும்

எனவே, கோயிலுக்குள்
சக்தியானது கோபுரக்
கலசங்கள் மூலமாக
உற்பத்தி செய்யப்பட
வேண்டுமானால்
கோபுரக் கலசங்கள்
எத்தகைய நீளம்,
அகலம், உயரம்,
கொண்டிருக்கிறதோ
அதற்கேற்றவாறு கோயில்
கோபுரங்களின் நீளம்,
அகலம், உயரம்,
அமைக்கப்பட வேண்டும்
இல்லை என்றால்,
கோபுரக் கலசங்கள்
மூலமாக பிரபஞ்ச
சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  21-04-2019
/////////////////////////////////////////////////////


April 20, 2019

பரம்பொருள்-பதிவு-4


                      பரம்பொருள்-பதிவு-4

“நம் உடலில் கடவுள்
எங்கு இருக்கிறார்.
அவரை அடையக்கூடிய
வழி என்ன,
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் என்பதை
உணர முடியாமல்
இருப்பவர்களும்
கடவுளுடன் இணைந்து
தனக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
இந்த மூன்று
விஷயங்களையும்
அடிப்படையாக வைத்து
இந்துமதக் கோயில்கள்
அன்று முதல்
இன்று வரை
கட்டப்பட்டு வருகின்றன “

“இந்த மூன்று
விஷயங்களை
அடிப்படையாக வைத்து
உலகில் உள்ள அனைத்து
இந்து மதக் கோயில்களும்
கட்டப்பட்டு இருந்தாலும்
முக்கியமான மூன்று
விஷயங்களை சூட்சுமமாக
தன்னுள் கொண்டு
இந்துமதக் கோயில்கள்
செயல்பட்டு வருகின்றன “

ஒன்று :
சக்தியை உற்பத்தி
செய்தல்

இரண்டு :
சக்தியை குவித்து
வைத்தல்

மூன்று :
சக்தியை பரிமாற்றம்
செய்தல்

“ உலகில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களையும்
எடுத்துக் கொண்டால்
இந்துமதக் கோயில்கள்
ஒவ்வொன்றும்
ஒரு குறிப்பிட்ட
சக்தியை உற்பத்தி செய்து ;
அந்த சக்தியை
குவித்து வைத்து ;
அந்த சக்தியை
பரிமாற்றம் செய்து
கொண்டிருக்கும் ;
மிகவும் சக்தி வாய்ந்த
சக்தி மையங்களாகத்
திகழ்ந்து கொண்டு
இருக்கின்றன ;
இந்துமதக் கோயில்கள்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள் “

“இந்த பிரபஞ்சத்தில்
பல்லாயிரக்கணக்கில்
பல்வேறு விதமான
சக்திகள் இருக்கும் ‘போது “

“ஒரு குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து,
அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
கோயிலுக்குள் செலுத்தி……………!

“ அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
இடத்திற்குள் சுற்றி
வரும்படி குவித்து………….!

கோயிலுக்கு கடவுளை
வணங்க வருபவர்கள்
குவித்து வைக்கப்பட்டுள்ள
அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
தங்களுக்குள் பரிமாற்றம்
செய்து கொள்ளும்
வகையில்……………………………..!

இந்துமதக் கோயில்களை
கட்டி வைத்திருக்கின்றனர்”

“இத்தகைய கடினமான
ஒரு மெய்ஞ்ஞான
விஷயத்தையும் ;
கற்பனையும் செய்து
பார்க்க முடியாத
அறிவுபூர்வமான
ஒரு விஷயத்தையும் ;
மக்கள் அனைவரும்
பயன்பெற வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்துடன் நம்
முன்னோர்கள் செய்து
வைத்திருக்கிறார்கள் ; “

ஒன்று
சக்தியை உற்பத்தி
செய்தல்

“ கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
பல்வேறு முறைகள்
கையாளப்பட்டாலும்
முக்கியமான
இரண்டு முறைகள்
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
பயன்படுத்தப்படுகின்றன ”

(அ) பிரஞ்சத்தின் மூலம்
பெறப்படும் சக்தி

(ஆ) கடவுள் சிலைகளின்
மூலம் பெறப்படும் சக்தி

“இந்த இரண்டு
நிலைகளில் பெறப்படும்
சக்தியையும் கோயிலுக்குள்
செலுத்தி கோயிலுக்குள்
சக்தியானது உற்பத்தி
செய்யப்படுகிறது”

(அ) பிரஞ்சத்தின் மூலம்
பெறப்படும் சக்தி

“ஒரு கோயில் எந்த
சக்தியை அளிப்பதற்காக
உருவாக்கப்பட்டதோ
அந்த சக்தியை
பிரபஞ்சத்தில் இருந்து
கிரகிக்கும் வகையில்
இந்துமதக் கோயில்கள்
அமைக்கப்பட்டிருக்கும்”

“கோயிலில் பிரபஞ்ச
சக்தியை கிரகித்து
பிரபஞ்ச சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
கோபுரக் கலசங்கள்
பயன்படுத்தப்படுகின்றன”

--------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  20-04-2019
/////////////////////////////////////////////////////



April 17, 2019

பரம்பொருள்-பதிவு-3


                         பரம்பொருள்-பதிவு-3

“நம் உடலில் கடவுள்
எங்கு இருக்கிறார்.
அவரை அடையக்கூடிய
வழி என்ன,
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் என்பதை
உணர்ந்தவர்கள்

அந்த முறையைப்
பின்பற்றி கடவுளை
அடையக்கூடிய வழியின்
மூலமாக பிரயாணித்து,

கடவுள் தரிசனம்
பெற்றவர்கள் ;

கடவுளிடமிருந்து தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொண்டவர்கள்;

கடவுளுடன் இரண்டறக்
கலந்தவர்கள்;

ஞானம் என்ற உயர்நிலை
அடைந்தவர்கள்;

ஜீவசமாதி அடையக்கூடிய
நிலையில் இருந்தவர்கள்;

பிறப்பை அறுத்தவர்கள்;

இறப்பை வென்றவர்கள்;

முக்தி நிலையை நெருங்கிக்
கொண்டிருந்தவர்கள் ;

என்று ஆன்மீகத்தின் உயர்
நிலைகளை அடைந்தவர்கள்
அனைவரும் தாங்கள்
அடைந்த உயர்ந்த நிலைகளை

உலகில் உள்ள மக்கள்
அனைவரும் பெற வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன்
நம் உடலுக்குள்
செயல்படும் இந்த மூன்று
முக்கியமான ஆன்மீக
விஷயங்களையும்
மறைபொருள்
ரகசியங்களாகவும்,
சூட்சும விஷயங்களாகவும்,,
ரகசிய குறியீடுகளாகவும், 
இந்து மதக்கோயில்களில்
வைத்து - இந்து மதக்
கோயில்களைக் கட்டி
இருக்கின்றனர் “

“நம்முடைய உடலை
அடிப்படையாக வைத்து
கட்டப்பட்டது தான்
இந்துமதக் கோயில்கள் “

“நம்முடைய உடலுக்குள்
கடவுள் எந்த இடத்தில்
இருக்கிறார் என்பதை
கோயிலின் கர்ப்பக்கிரகத்தில்
வைக்கப்பட்டிருக்கும்
மூலவர் சிலை குறிக்கும் !

“நம்முடைய உடலுக்குள்
கடவுளை அடைவதற்கு
எந்த வழியை நாம்
பயன்படுத்த வேண்டுமோ
அந்த வழிகள் கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
மூலவர் சிலையை
மையமாக வைத்து சுற்றிலும்
ஏற்படுத்தி வைத்திருக்கும்
வழிகளைக் குறிக்கும் !

“நம்முடைய உடலுக்குள்
கடவுளை அடைவதற்கு
நாம் எத்தகைய
முறையைப் பயன்டுத்த
வேண்டுமோ - அத்தகைய
முறை  கோயிலில்
வழிபாட்டு முறைகளாக
வைக்கப்பட்டிருப்பதைக்
குறிக்கும் !”

“நம்முடைய உடலுக்குள்
எந்த முறையைப் பின்பற்றி
எந்த வழியின் மூலமாக
இறைவனை அடைகிறோமோ
அந்த முறைகள் கோயிலில்
அனைவரும் எளிதில் புரிந்து
கொள்ளும் வகையில்
அமைக்கப்பட்டிருக்கிறது”

“எல்லா இடங்களிலும் உள்ள
கடவுளுடன் தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொணடு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
முடியாமல் இந்த உலகில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
மக்கள் அனைவரும்…………….?

“ கோயிலுக்கு சென்று
கோயிலில் பின்பற்றப்படும்
வழிபாட்டு முறைகளை
சிறிதும் பிழையில்லாமல்
எந்தவிதமான குறைவும்
இல்லாமல் பின்பற்றி “

“ கர்ப்பக் கிரகத்தில் உள்ள
மூலவர் சிலையை சுற்றி
உள்ள வழிகளைப் பின்பற்றி
கர்ப்பகிரகத்தை அடைந்து “

“கர்ப்பகிரகத்தில் உள்ள
மூலவர் சிலையுடன்
தொடர்பை ஏற்படுத்திக்
கொண்டு “

“தங்களுக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ளும்
வகையில் இருக்கும்படித்
தான் இந்துமதக் கோயில்கள்
கட்டப்பட்டிருக்கின்றன”

“மலையில் உள்ள
படிக்கட்டுகளின் வாயிலாக
கோயிலை அடைவது என்பது
கடவுளை அடைவதற்கான
முறையைக் குறிப்பது ஆகும் !

“கோயிலை அடைந்தவுடன்
கோயிலைச் சுற்றி
வந்து கர்ப்பகிரகத்தை
அடைவது என்பது
கடவுளை அடையக்கூடிய
வழியைக் குறிப்பது ஆகும்”

“கர்ப்பகிரகத்தில் உள்ள
கடவுளை அடைந்து
கடவுளை வணங்குவது
கடவுள் எங்கு இருக்கிறார்
என்பதைக் குறிப்பது ஆகும்!

“உலகத்தில் உள்ள
அனைத்து இந்து மதக்
கோயில்களில் இந்த
மூன்று விஷயங்களும்
தான் முக்கியமாக
இடம் பெற்றிருக்கிறது
என்பதை அனுபவ பூர்வமாக
உணர்ந்து கொள்ளுங்கள்”

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  17-04-2019
/////////////////////////////////////////////////////