May 10, 2019

பரம்பொருள்-பதிவு-14


                       பரம்பொருள்-பதிவு-14

" கடவுள் சிலை
செய்வதற்காக
உயிருள்ள கல்லைத்
தேர்ந்தெடுத்து ;
தேர்ந்தெடுக்கப்பட்ட
கல்லிடம்
கடவுள் சிலை
செய்வதற்கான
அனுமதியைப் பெற்று ;
ஆகம சாஸ்திர
முறைப்படி
கடவுள் சிலையை
செதுக்கி ;
பிராண பிரதிஷ்டை
மூலம்
சக்தியை செலுத்தி ;
கடவுள் சிலையை
கடவுளாகவே
மாற்றிய பின்னர் ;
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றைப்
பயன்படுத்தி
கடவுள் சிலையை
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவ வேண்டும் “

“கடவுள் சிலையை
நிறுவுவதற்கு
பயன்படுத்தும் முறைக்கு
அஷ்ட பந்தனம்
என்று பெயர்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
வைக்கப்படும்
கடவுள் சிலை
அசையாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
கடவுள் சிலைக்கு
அஷ்ட பந்தனம்
சாத்துவார்கள்”

“கல்லால் செய்யப்பட்ட
கடவுள் சிலையை
கர்ப்பக்கிரகத்தில்
நிறுத்தி வைக்க
வேண்டும் ;
அதாவது கல்லால்
ஆன கடவுள்
சிலையை கல்லோடு
ஒட்டி நிறுத்தி
வைக்க வேண்டும் ;
கல்லால் ஆன
கடவுள் சிலையை
வேறொரு கல்லுடன்
ஒட்டுவதற்கு
கலவை ஒன்று
தயாரிக்கப்படுகிறது;
இதற்கு அஷ்ட
பந்தனம் என்று பெயர்: ”

அஷ்ட பந்தனம்
“அஷ்டம் என்றால்
எட்டு என்று பொருள்;
பந்தனம் என்றால்
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;
அஷ்ட பந்தனம்
என்றால் எட்டுவிதமான
பொருள்களை ஒன்றாக
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;”

“இந்தக் கலவையில்
எட்டு விதமான
பொருட்கள்
சேர்க்கப்பட்டிருக்கும்”

அவையாவன ;

1.கொம்பரக்கு
2.சுக்கான் தூள்
3.குங்கிலியம்
4.கற்காலி
5.செம்பஞ்சு
6.சாதிலிங்கம்
7.வெள்ளை மெழுகு
8.எருமை எண்ணெய்

ஆகிய எட்டு
பொருள்களாகும்

“இந்த அஷ்டபந்தனம்
என்பதை மருந்து
சாத்துதல் என்றும்
சொல்லலாம்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
கடவுள் சிலையை
வைத்து பீடத்திலிருந்து
கடவுள் சிலை
அகலாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
அஷ்ட பந்தன மருந்து
சாத்துவார்கள்”

“இந்த அஷ்ட பந்தன
மருந்து கடவுள்
சிலையை பீடத்துடன்
அழுந்தப் பிடித்துக்
கொள்ளும்”

“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலைக்கு
சாத்தப்பட்ட
அஷ்ட பந்தன மருந்து
12 வருடங்களுக்கு
மட்டுமே வேலை
செய்யும் ;
12 வருடங்களுக்குப்
பிறகு அஷ்ட பந்தன
மருந்தானது செயல்
இழந்து விடும் ;
எனவே,
12 வருடங்களுக்கு
பிறகு அஷ்ட பந்தன
மருந்தை மாற்ற
வேண்டும் ;”

“கர்ப்பக் கிரகத்தில்
அஷ்ட பந்தன மருந்து
சாத்தப்பட்டு
கடவுள் சிலை
நிறுவப் படுகிறது ;
இவ்வாறு
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவப்பட்ட
கடவுள் சிலை
12 ஆண்டுகள் கழித்து
பிரித்து எடுக்கப்
படுகிறது ;
மேலும் கடவுள்
சிலையை பீடத்துடன்
ஒட்டி வைப்பதற்காக
சாத்தப்பட்ட
பழைய அஷ்டபந்தன
மருந்து முற்றிலுமாக
வெளியே எடுக்கப்படுகிறது;
புதியதாக அஷ்ட பந்தன
மருந்து தயாரிக்கப்பட்டு
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் சிலை
பீடத்துடன்
ஒட்டி வைக்கப்படுகிறது”

“இந்த நிகழ்வு
கும்பாபிஷேகத்தின்
போது செய்யப்படுகிறது”

“கும்பாபிஷேகம் எப்படி
நடத்தப் படுகிறது
என்று பார்ப்போம்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  10-05-2019
/////////////////////////////////////////////////////


May 08, 2019

பரம்பொருள்- பதிவு-13


                   பரம்பொருள்- பதிவு-13

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் ஒரு பொருளுக்கு
சக்தியைச் செலுத்தி
உயிரூட்டத் தெரிந்த
பிராண பிரதிஷ்டை
செய்பவர்கள்
பிராண பிரதிஷ்டையை
இரண்டு விஷயத்திற்காக
பயன்படுத்துகிறார்கள் “

ஒன்று
“நல்ல விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் ;”

இரண்டு
“கெட்ட விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் ;”

ஒன்று
“பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்து இருக்கக்கூடிய
இறை சக்தியை
கடவுள் சிலைக்குள்
செலுத்தி
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி
மக்கள் அனைவரும்
தங்களுக்கு வேண்டியதை
பெற்றுக் கொள்ள
வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
பிராண பிரதிஷ்டையை
செய்பவர்கள்
நல்ல விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் “

இரண்டு
“ தெரிந்த நபராக
இருந்தாலும் சரி ;
தெரியாத நபராக
இருந்தாலும் சரி ;
அவர் யாராக
இருந்தாலும் சரி ;
நேரில் பார்த்தோ
அல்லது புகைப்படத்தை
பார்த்தோ அவரைப்பற்றி
தெரிந்து கொண்டபின்
உலகின் எந்த
ஒரு மூலையில் அவர்
வசித்தாலும் அவருடைய
உருவத்தை மனதில்
நிறுத்தி முதலில்
அவரைப் போல ஒரு
உருவத்தை பொம்மையில்
செய்து கொள்கிறார்கள் “

“ பிறகு அந்த A என்ற
நபருடைய
உயிர்ச்சக்தியை
அந்த பொம்மைக்குள்
செலுத்துவதற்காக
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள்”

“அதாவது A
என்பவருடைய
உயிர்ச்சக்தியை அந்த
பொம்மைக்குள்
கொண்டு வருவதற்கு
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள் “

“ அவ்வாறு
பிராண பிரதிஷ்டை
செய்த பிறகு
அந்த பொம்மைக்குள்
A என்பவரது உயிர்
வந்து விடும் ;
அந்த பொம்மை
A ஆகவே மாறி விடும் ;
ஆமாம் அந்த பொம்மை
A ஆகவே மாறி விட்டது ;”

“இப்போது அந்த
பொம்மையில்
சிறிய ஊசி வைத்து
அந்த பொம்மையின்
வலது கையில்
ஊசியால் குத்தினால்
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
இருக்கும்
அந்த A என்ற
நபருக்கு வலிக்கும்”

“அந்த பொம்மையின்
கையை ஒடித்தால்
உலகின் எங்கோ ஒரு
மூலையில் இருக்கும்
A என்பவருடைய கை
ஒடிந்து விடும்”

“பொம்மையை நாம்
எத்தகைய நிலைக்கு
துன்பப்படுத்துகிறோமோ
அந்த அளவிற்கு
அந்த A துன்பப்படுவார்”

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் உலகின் எங்கோ
ஒரு மூலையில்
இருப்பவருடைய
உயிர்ச்சக்தியை
பொம்மைக்குள் செலுத்தி
அவரை எத்தகைய
துன்பத்திற்கும்
உள்ளாக்கலாம் என்றால்
பிராண பிரதிஷ்டை
எவ்வளவு வலிமை
வாய்ந்தது என்பதையும்
பிராண பிரதிஷ்டை
தவறான விஷயத்திற்கும்
பயன்படுத்துகிறார்கள்
என்பதையும்
தெரிந்து கொள்ளுங்கள்”

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் கடவுள்
சிலைக்கு உயிர் கொடுத்து
உயிரோட்டம் உள்ள
ஒன்றாக மாற்றுவதற்கு
எப்படி
ஆகம சாஸ்திரம்
விதிமுறைகளை வகுத்து
வைத்து இருக்கிறதோ  ;
அவ்வாறே ,
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்தி ஒருவரை
பாதிப்பு அடையச் செய்து
வீழ்த்துவதற்கும் ;
மாந்திரீக சாஸ்திரம்
விதிமுறைகள் வகுத்து
வைத்திருக்கிறது “

“மக்கள் அனைவரும்
துன்பம் நீக்கி
இன்பத்தை நுகர்ந்து வாழ
வேண்டும் என்று
உயர்ந்த நோக்கத்துடன் ;
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி கடவுளாகவே
மாற்றுவதற்காக ;
பிராண பிரதிஷ்டை
செய்பவர்கள் நல்ல
செயலுக்குரிய
பலனைப் பெறுவர் ;
பிறரை பாதிப்பு அடையச்
செய்து வீழ்த்த வேண்டும்
என்ற தவறான
நோக்கத்துடன்
பிராண பிரதிஷ்டையை
செய்பவர்கள்
பாவத்தின் சம்பளத்தை
அனுபவித்தே ஆக
வேண்டும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-05-2019
/////////////////////////////////////////////////////


May 06, 2019

பரம்பொருள்-பதிவு-12


                       பரம்பொருள்-பதிவு-12

”மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்டு
கடவுளாகவே மாறிவிட்ட
கடவுள் சிலை
இயங்குவதற்கும் ;
சக்தியை தொடர்ந்து
பெறுவதற்கும் ;
இரண்டு விதமான
முறைகள் பின்பற்றப்
படுகின்றன; ”

ஒன்று :
“கும்பாபிஷேகத்தின்
மூலம் கடவுள் சக்தியை
இயங்கச் செய்வது “

இரண்டு :
“மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றின்
மூலம் சக்தியை
பெறும்படிச் செய்வது “

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்டு
கடவுளாகவே மாறிவிட்ட
கடவுள் சிலை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றின் மூலம்
கர்ப்பக்கிரகத்தில்
பீடத்தின் மேல்
நிர்மாணம் செய்யப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின்
மூலம் இயங்குவதற்கான
சக்தியைப் பெற்று ;
அதனைத் தொடர்ந்து
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால் செய்யப்படும்
பூஜைகள். அபிஷேகங்கள்
ஆகியவற்றின் மூலமாக
தொடர்ந்து சக்தியை பெற்று
பெற்ற சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்யும்
செயலை கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
சிலைகள் செய்கின்றன ;”

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகளுக்கு
12 வருடங்களுக்கு
ஒரு முறை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால்
கடவுள் சிலையை
புதுப்பித்தல் ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
சக்தியை இயங்கச் செய்தல் ;
கடவுள் சிலைக்கு
செய்யப்படும் தொடர்
பூஜை முறைகளால்
சக்தியை பெறச்செய்தல் ;
ஆகிய செயல்களைச்
செய்ய வேண்டும்; “

“அப்படி செய்யவில்லை
என்றால் கடவுள் சிலையின்
மூலம் பெறப்படும்
சக்தியை கோயிலுக்குள்
செலுத்தி கோயிலுக்குள்
சக்தியை உற்பத்தி
செய்ய முடியாது “

“மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலையை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால்
புதுப்பிக்க வேண்டிய
அவசியம் இல்லை ;
12 வருடங்களுக்கு
ஒரு முறை
கும்பாபிஷேகம்
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை ;
அதனைத் தொடர்ந்து
தொடர்ந்தாற் போல்
பூஜைகள். அபிஷேகங்கள்.
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை;”

“ஒரு முறை மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி விட்டால்
கடவுள் சிலையில்
சக்தியானது காலம் காலமாக
தொடர்ந்து இருந்து
கொண்டே இருக்கும்: ”

“கடவுள் சிலையானது
இருக்கும் வரை
சக்தியானது அதில்
தொடர்ந்து இருந்து
கொண்டே இருக்கும் ;
காலத்தால் அழியாமல்
அப்படியே இருக்கும் ;”

“ இதிலிருந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகளைக்
காட்டிலும் ;
மந்திரத்தைப் பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகள்
எவ்வளவு வலிமை
வாய்ந்தவை என்பதை
அறிந்து கொள்ளலாம் ;”

“ தனி ஒரு நபராக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்ட ஆன்மீகத்தில்
உச்ச நிலையும் ;
தனி ஒரு நபராக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு
பக்தி மார்க்கத்தில்
உச்ச நிலையும் ;
அடைந்தவர்களால் மட்டுமே
சாத்தியம் எனும் போது
பிராண பிரதிஷ்டை என்பது
எவ்வளவு பெரிய
உயர்ந்த மதிப்புமிக்க
விஷயம் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் ;”

“இந்த உயர்ந்த
மதிப்பு மிக்க விஷயத்தை
வேறு ஒரு விஷயத்திற்கும்
பயன்படுத்துகிறார்கள்
எதற்கு என்று
தெரியுமா………………………………………-?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 06-05-2019
/////////////////////////////////////////////////////