July 22, 2019

பரம்பொருள்-பதிவு-45


             பரம்பொருள்-பதிவு-45

திருஞான சம்பந்தர் :
“நான் என்ன செய்ய
வேண்டும் என்று நீங்கள்
நினைக்கிறீர்கள்………………. ?”

மக்கள் :
“இறந்த பூம்பாவைக்கு
உயிர் கொடுக்க வேண்டும் ?

திருஞான சம்பந்தர் :
“இறந்த பூம்பாவைக்கு
உயிர் கொடுப்பதன் மூலம்
என்ன பலன் ஏற்பட்டு
விடப்போகிறது ;
ஒரு பலனும் ஏற்பட்டு
விடப்போவதில்லை !”

“இறந்தவரை உயிரோடு
எழுப்பிய பிறகு
உயிரோடு எழுப்பப்பட்டவர்
இறக்காமல் இருந்து
விடுவாரா………………….?
மீண்டும் இறக்கத்தானே
போகிறார் ! ”

“ ஒருவரை உயிரோடு
எழுப்புவதன் மூலம்
எழுப்பப்பட்டவர்
இறக்காமல் இருந்தால்
உயிரோடு எழுப்பலாம் ;
மீண்டும் இறக்கப்போகும்
ஒருவரை உயிரோடு
எழுப்புவதால் என்ன
பலன் ஏற்பட்டு
விடப்போகிறது ;
ஒரு பலனும் ஏற்பட்டு
விடப்போவதில்லை !”

மக்கள் :
“ அந்தக் குடும்பத்
தலைவரை நம்பித்தான்
அந்த குடும்பமே இருக்கிறது
அந்த குடும்பத் தலைவர்
இறந்து விட்டால்  - அந்த
குடும்பமே கஷ்டப்படும்
என்று சொல்லத்தக்க
நிலையில் இருப்பவர்
இறந்து விட்டால்
இறந்து விட்ட அந்த
மதிப்பு மிக்க உயிரை
உயிரோடு எழுப்பலாமா “

திருஞான சம்பந்தர் :
“ இறந்து போன உயிர்களில்
மதிப்பு மிக்க உயிர் ;
மிதிப்பு இல்லாத உயிர் ;
என்று எதுவுமே இல்லை ;
இந்த உலகில் பிறந்த
அனைத்து உயிர்களும்
மதிப்பு மிக்க உயிர்கள் தான் “

“ இந்த உலகத்தில்
படைக்கபட்ட எந்த
உயிர்களும் ஒன்றை
ஒன்று சார்ந்து இல்லை ;
சார்ந்து தான் வாழ
வேண்டும் என்ற நிலையில்
எந்த உயிர்களையும்
இறைவன் படைக்க வில்லை ;”

“ தன்னைத் தானே சுயமாக
காப்பாற்றிக் கொள்ளும்
வகையில் தான் இறைவன்
இந்த உலகத்தில் உள்ள
அனைத்து உயிர்களையும்
படைத்து இருக்கிறான் ;”

“ ஒரு குடும்பத்தை
காப்பாற்றிக் கொண்டு வரும்
குடும்பத் தலைவராக
இருக்கும் கணவன்
தான் இருக்கும் போதே
தன்னுடைய குழந்தைகளுக்கு
வேலை வாங்கித் தர வேண்டும் ;
திருமணம் செய்து
வைக்க வேண்டும் ;
அவர்களுக்கு சொத்து
சேர்த்து வைக்க வேண்டும் ;
தான் இறந்து விட்டால்
தன்னுடைய குடும்பத்தை
யார் காப்பாற்றுவார்கள் ;
யாரும் காப்பாற்ற
மாட்டார்கள் என்று
நினைக்கிறார் ;”

“ தன்னை வைத்துத் தான்
இந்த குடும்பம் ஓடுகிறது
என்று நினைக்கிறார் ;
தான் இறந்து விட்டால்
தன்னுடைய குடும்பத்தை
யாரும் காப்பாற்ற மாட்டார்கள்
என்று நினைக்கிறார்  ;
எனவே, தன்னுடைய
குழந்தைகளுக்கு
வாழ்க்கைக்குத் தேவையான
பாதுகாப்பைச் செய்ய
வேண்டும் என்று நினைக்கிறார் ;”

“ ஆனால் அந்த கணவர்
இறந்து விட்டால்-அந்த
குடும்பம் ஒன்றும்
நடுத்தெருவிற்கு வந்து
விடப்போவதில்லை ;
அவருடைய மனைவியோ !
அவருடைய மகனோ !
அவருடைய மகளோ !
அவருடைய குடும்பத்தை
காப்பாற்றுவார் !”

“ கணவர் இறந்து பிறகு
அவருடைய மனைவி
அவருடைய குடும்பத்தை
காப்பாற்றினார் என்ற செய்தியை
நீங்கள் கேட்டதில்லையா ?”

“கணவர் இறந்த பிறகு
அவருடைய மகன்
அவருடைய குடும்பத்தை
காப்பாற்றினார் என்ற செய்தியை
நீங்கள் கேட்டதில்லையா? “

“ கணவர் இறந்த பிறகு
அவருடைய மகள்
அவருடைய குடும்பத்தை
காப்பாற்றினார் என்ற செய்தியை
நீங்கள் கேட்டதில்லையா ?

“யாரையும் யாரையும் நம்பி
யாரும்  பிறக்கவுமில்லை
யாரையும் யாரையும்
சார்ந்து யாரும் வாழ
வேண்டிய அவசியமும்
யாருக்கும் இல்லை”

“இறந்தவர்களை எழுப்புவதே
அவசியம் இல்லை என்ற
நிலையில் இருக்கும் போது
அதில் மதிப்பு மிக்க உயிர்
என்பதைப் பற்றி சிந்திக்க
வேண்டிய அவசியம் இல்லை”

மக்கள் :
“நம் முன்னோர்கள்
இறந்தவரை எழுப்புவது
அற்புதம் என்று சொல்லி
விட்டுச் சென்று இருக்கிறார்கள்”

“நீங்கள் இறந்தவரை
எழுப்புவது அற்புதம் இல்லை
என்று சொல்ல வருகிறீர்களா”


-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 22-07-2019
//////////////////////////////////////////////////////////

July 19, 2019

பரம்பொருள்-பதிவு-44


                   பரம்பொருள்-பதிவு-44

சிவநேசர் :
" கடல் கடந்து வாணிபம்
செய்து நான் தேடிய
அளவற்ற செல்வத்தை
என்னிடம் மட்டும்
வைத்துக் கொள்ளாமல்
தேவைப்படுவோருக்கு
தானங்கள் பலவற்றை
செய்தேன் ;"

" ஏழை எளியவர்களுக்கு
நான் செய்த தானத்தின்
பலனாக எனக்கு கிடைத்த
புண்ணியத்தின் மூலமாகவும் ;"

" அண்ட சராசரங்கள்
அனைத்தையும்
தன்னுள் வைத்து இயக்கி
காப்பாற்றி வழிநடத்திக்
கொண்டிருக்கும் எல்லாம்
வல்ல பரம்பொருளான
சிவத்திற்கு தொண்டு
செய்யும் சிவனடியார்களை
உபசரித்ததினால்
எனக்குக் கிடைத்த
புண்ணியத்தின் மூலமாகவும் ;"

"சைவ நெறியைப் பின்பற்றுதல் ;
சிவனை வணங்குதல் ;
சிவநாமத்தை உச்சரித்தல் ;
ஆகியவற்றினால்
எனக்குக் கிடைத்த
அருளின் மூலமாகவும் ;"

" நான் செய்த தவத்தின்
பலனாக எனக்குக் கிடைத்த
வரத்தின் மூலமாகவும் ;"

“எனக்கு மகளாகப் பிறந்தவள்
தான் பூம்பாவை! "

என் மகள் பூம்பாவை
"அழகின் உருவமாகப்
பிறந்தவள் ;"

"அன்பே வடிவமாக
வளர்ந்தவள் ;"

"கருணையே குணமாகத்
திகழ்ந்தவள் ;"

"வீரத்தின் வித்தாக
முளைத்தவள்;"

"பொறுமையின்
சிகரமாக நடந்தவள்;"

"உண்மையை
வார்த்தையாக பேசியவள் ;"

"ஒழுக்கத்திற்கு
உதாரணமாக வாழ்ந்தவள் ;"

"ஏழைகளின் துயர்
கண்டு வாடியவள்;"

"துன்பப்படுவோரின்
துயர் கண்டு துடித்தவள் ;"

"இல்லாதவர்களின் நிலை
கண்டு இரங்கியவள் ;"

"அறிவு. அழகு. அன்பு ஆகிய
அனைத்தையும் தன்னுள்
கொண்டு நல்லோர்
பாரட்டும் வண்ணமும் ;
உயர்ந்தோர் போற்றும்
வண்ணமும்; வாழ்ந்தவள் ;"

" ஒரு பெண் இந்த
சமுதாயத்தில் எப்படி
இருக்க வேண்டுமோ
அப்படி இருந்தவள் ; "

"அனைத்து நற்குணங்களையும்
ஒருங்கே பெற்று
நற்குணவதியாக திகழ்ந்தவள் ;"

" பூம்பாவை
உங்களுக்கென்றே பிறந்தவள் ;
உங்களுக்கென்றே வளர்ந்தவள் ;
உங்களைத் திருமணம்
செய்து கொண்டு உங்களுக்கு
பணிவிடை செய்து
இல்லறத்தை நல்லறமாக
மாற்றுவதற்காகவே
வாழ்ந்தவள் ; "

" இத்தகைய சிறப்புகள்
பலவற்றை தன்னுள் கொண்ட
பூம்பாவைக்கு வயது
ஏழானபோது அனைவருடைய
மனங்களையும் அன்பால்
தீண்டியவளை
பாம்பு ஒன்று நஞ்சு
கொண்டு தீண்டியது ;"

" அதனைத் தொடர்ந்து
மரணமும் அவளைத்
தீண்டியது ;"

"அதனைத் தொடர்ந்து
நெருப்பும் அவளைத்
தீண்டியது ;"

" அவள் தங்களைத்
தீண்டும் பாக்கியமும் ;
தாங்கள் அவளைத்
தீண்டும் பாக்கியமும் ;
அவளுக்கு கிடைக்கவில்லை;"

"என் மகளை நெருப்பு
தீண்டியதால் உண்டானது
தான் இந்த குடத்தில்
உள்ள எலும்புகளும்
சாம்பலும் ;- ஆமாம்
இந்த குடத்தில் என் மகள்
பூம்பாவையின் எலும்புகளும்
சாம்பலும் உள்ளன ;"

" என் மகள் பூம்பாவை
உங்களுக்காகவே பிறந்தவள் ;
உங்களுடைய மனைவியாக
இருக்கவே வளர்ந்தவள் ;
என்ற காரணத்தினால்
பூம்பாவையின் அஸ்தியை
உங்களிடம் ஒப்படைப்பதற்கு
நாங்கள் காத்துக்
கொண்டிருந்தோம்;"

" நீங்களே நேரில் வந்து
விட்டீர்கள் - இந்த அஸ்தியை
பெற்றுக் கொள்ளுங்கள் !"

" இதை தாங்கள் பெற்றுக்
கொண்டீர்கள் என்றால்
என்னுடைய கடமை
முடிந்தது என்று நான்
நினைத்துக் கொள்வேன் !"

"என் மகள் பூம்பாவையின்
அஸ்தியை தாங்கள்
பெற்றுக் கொள்ள் வேண்டும்"

திருஞானசம்பந்தர் :
" பூம்பாவையின் அஸ்தியை
பெற்றுக் கொண்டு நான் என்ன
செய்ய வேண்டும் என்று
நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் "

மக்கள் :
"இறந்த பூம்பாவையை
உயிர்பெறச் செய்ய
வேண்டும்…………………….!"

திருஞானசம்பந்தர் :
"என்ன…………………………………….?"

மக்கள் :
"இறந்த பூம்பாவைக்கு
உயிர் கொடுக்க
வேண்டும்………………….!"

திருஞானசம்பந்தர் :
"_ _ __ _ __ _ __ _ _"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 19-07-2019
//////////////////////////////////////////////////////////

July 18, 2019

பரம்பொருள்-பதிவு-43


                              பரம்பொருள்-பதிவு-43

“ திருமயிலாப்பூரில்
குடி கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல
பரம்பொருளான
சிவபெருமானை
தரிசிக்கும் பொருட்டு
திருவொற்றியூரிலிருந்து
திருமயிலாப்பூர் வந்த
திருஞான சம்பந்தர்
கபாலீச்சுரரையும் ;
கற்பகவல்லியையும் ;
பன்முறை பணிந்து
வணங்கி விட்டு
கோயிலை விட்டு
வெளியே வந்தார் ;”

“கோயிலை விட்டு
வெளியே வந்த
திருஞான சம்பந்தரரை
பெருமானே! வருக! வருக!
தாங்கள் வரவு
நல்வரவு ஆகட்டும்!- என்று
அழைத்துக் கொண்டே
திருஞான சம்பந்தரை
நோக்கி ஓடி வந்தார்
சிவநேசர் “

(தன்னை நோக்கி ஓடி
வந்தவரைப் பார்த்து அவர்
யார் என்று மக்களைப்
பார்த்துக் கேட்டார்
திருஞான சம்பந்தர்)

மக்கள் :
“இவர் தான் சிவநேசர் !”

திருஞானசம்பந்தர் :
“இந்த உலகத்தை எல்லாம்
கட்டி காப்பாற்றிக்
கொண்டிருக்கும் சிவனை
தரிசிப்பதற்காக நான்
வரும் வழியில் எனக்கு
எந்தவிதத்திலும் உடற்
களைப்பு ஏற்பட்டுவிடக்
கூடாது என்ற
காரணத்திற்காக - நான்
தங்கி இருந்த
திருவொற்றியூரிலிருந்து
திருமயிலாப்பூர் வரை
நடைப்பந்தர் அமைத்த
மாபெரும் சிவபக்தர்
சிவநேசரா இவர் ;”

மக்கள் :
“ ஆமாம் - இவர்
தான் சிவநேசர் “

(சிவநேசர் திருஞான
சம்பந்தரை வணங்கிய
நிலையில் திருஞான
சம்பந்தர் முனனால்
சிவநேசர் நிற்கிறார்)

திருஞானசம்பந்தர் :
“சிவநேசரே வணக்கம் !”

“தங்களை சந்தித்ததில்
நான் மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன் !”

“ஆண்டவர் மேல் பக்தி
கொண்டு ஆண்டவருக்கு
தொண்டு செய்து
ஆண்டவரின் அருளைப்
பெற்றவர்களைப் பார்த்து
இருக்கிறேன் - ஆனால்
ஆண்டவரின் அடியார்களுக்கு
தொண்டு செய்வதின் மூலம்
ஆண்டவரின் அருளைப்
பெற்றவரை இப்போது
தான் பார்க்கிறேன் !”

“சிவநேசரே! தங்கள் அன்பு
கண்டு வியந்து நிற்கிறேன்!”

“தாங்கள் செய்த செயலைக்
கண்டு என்னால் பேச
முடியவில்லை - மெய்
சிலிர்த்து நிற்கிறேன்!”

“ஆண்டவரின் மேல் காட்டும்
பக்தியை சிவனடியார்களின்
மேலும் காட்டுவதைக் கண்டு
மலைத்து நிற்கிறேன்!”

“சிவனுக்கு தொண்டு செய்யும்
எவ்வளவோ சிவனடியார்கள்
இருந்த போதிலும் - இந்த
எளியவன் மீது தாங்கள்
வைத்திருக்கும் பற்று
கண்டு பேச்சற்று நிற்கிறேன்!”

“இறைவன் அருள் உங்களுக்கு
பரிபூரிணமாக கிடைக்கட்டும்!”

(என்று சொல்லிக் கொண்டே
திருஞானசம்பந்தர்
கன்னிமாடத்தில் ஒரு
பீடத்தில் வைக்கப்பட்ட
குடத்தைப் பார்த்தார்)

திருஞானசம்பந்தர் :
“கன்னி மாடத்தில் பீடத்தில்
ஒரு குடத்தை வைத்து
அந்த குடத்திற்கு பொன்னும்
மணியும் பூட்டியும்
மாலைகள் சாத்தியும்
பல்வேறு அலங்காரங்களையும்
செய்து வைத்திருப்பவர்
யார்………………………………………….? “

“அவர் எங்கிருக்கிறார்?”

“ஏன் அவ்வாறு
செய்து வைத்திருக்கிறார்”

“அந்த குடத்திற்குள்
அப்படி என்ன தான்
இருக்கிறது?”

சிவநேசர் :
“கன்னி மாடத்தில்
பீடத்தில் பல்வேறு
அலங்காரங்களுடன்
காணப்படும் குடம்
என்னுடையது தான்”

“இறந்து போன
என்னுடைய மகள்
பூம்பாவையின்
அஸ்தியைத் தான் அந்த
குடத்தில் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்  ;
பத்திரமாக இருக்க
வேண்டும் என்பதற்காக
பாதுகாப்பாக
வைத்திருக்கிறேன்;”

திருஞானசம்பந்தர் :
“என்ன காரணத்திற்காக
பூம்பாவையின் அஸ்தியை
கரைக்காமல் பாதுகாப்பாக
வைத்திருக்கிறீர்கள்”

சிவநேசர் :
“தங்களிடம் பத்திரமாக
ஒப்படைக்க வேண்டும்
என்ற காரணத்திற்காகத்
தான் பூம்பாவையின்
அஸ்தியை பாதுகாப்பாக
வைத்திருந்தோம்”

“அதனால் தான்
தங்கள் வருகையை
ஆவலுடன் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருந்தோம்”

திருஞானசம்பந்தர் :
“பூம்பாவையின்
அஸ்தியை என்னிடம்
ஒப்படைப்பதற்காகவா?
பாதுகாப்பாக
வைத்திருக்கிறீர்கள் !”

“என்ன காரணத்திற்காக
என்னிடம் ஒப்படைக்க
வேண்டும்……………………………?”

“எதற்காக என்னிடம்
ஒப்படைக்க
வேண்டும்………………………………?”

“ஏன் என்னை
எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டு இருக்கிறீர்கள்………..?”

(சிவநேசர் பேசத்
தொடங்கினார்)

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 18-07-2019
//////////////////////////////////////////////////////////