December 12, 2019

பரம்பொருள்-பதிவு-97


                  பரம்பொருள்-பதிவு-97

"தன்னுடைய தாய்
உலூபியின் அனுமதியைப்
பெற்று தன்னுடைய
தந்தை அர்ஜுனனைக்
காண புறப்பட்டான்
அரவான் "

"அர்ஜுனனுடைய
தந்தையான
இந்திரன் இருக்கும்
இந்திரலோகத்தில்
இந்திரனுடைய அவையில்
அர்ஜுனன் இருப்பதாகக்
கேள்விப்பட்டு இந்திரனுடைய
அவைக்கே சென்றான்
அரவான் "

"இந்திரன் அவையில்
இந்திரன் ; அர்ஜுனன் ;
கிருஷ்ணன் ; மற்றும்
சிலர் இருந்தனர்.
இந்திரனுடைய அவைக்குள்
நுழைந்தான் அரவான் "

இந்திரன்  :
"யார் நீ
எங்கிருந்து வந்திருக்கிறாய் ?
எதற்காக வந்திருக்கிறாய் ?
என்ன காரணத்திற்காக
வந்திருக்கிறாய் ?
என்ன நோக்கத்தோடு
வந்திருக்கிறாய் ?
எத்தகைய செயலைச்
செய்வதற்காக
வந்திருக்கிறாய் ?

" இந்திரன் அவைக்குள்
நுழைவதற்கு முன்
அனுமதி பெற்று
வர வேண்டும்
என்பது உனக்கு
தெரியாதா ?
அனுமதி இல்லாமல்
இந்திரன் அவைக்குள்
நுழைந்தவர்கள்
உயிரோடு வெளியே
சென்றதில்லை என்ற
செய்தி உனக்கு
தெரியாதா ?

நல்ல எண்ணத்துடன்
வந்திருந்தால்
உன் உயிர் தப்பியது ?
தவறான எண்ணத்துடன்
வந்திருப்பாயேயாகில்
உன் உயிர் உனக்கு
சொந்தமல்ல ? "

"நீ உயிரோடு
வாழ வேண்டும் என்றால்;
உன் உயிர் உனக்கு
சொந்தமாக இருக்க
வேண்டும் என்றால் ;
உண்மையைச் சொல்
யார் நீ…………………………….?"

அரவான் :
"தர்மத்தின் பக்கம்
நின்று போர் புரிவதற்காக
வந்திருக்கிறேன் "

இந்திரன் :
" தர்மம் என்றால்
என்ன என்றே
உனக்குத் தெரியவில்லை ?
அப்படி இருக்கும் போது
எப்படி தர்மத்தின்
பக்கம் நின்று
போர் புரிவாய் ? "

அரவான் :
"தர்மம் என்றால்
என்ன என்பதை
என்னுடைய அன்னை
எனக்கு சொல்லிக்
கொடுத்துத் தான்
வளர்த்து இருக்கிறார் "

"என்னுடைய அன்னை
எனக்கு சொல்லிக்
கொடுத்த
தர்மத்தை உணர்ந்து ;
தர்மத்தின்
பாதை தவறாமல்
வாழ்க்கையை நடத்திக்
கொண்டிருப்பவன் நான் ;"

இந்திரன் :
"உன்னுடைய
செயல்களைப் பார்த்தால்
அன்னையின் வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
நடப்பவனாகத்
தெரியவில்லையே !"

" அன்னையின் வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
தர்மத்தை
கடைபிடிப்பவனாக
இருந்திருந்தால்……………….?
இந்திரன் அவைக்குள்
அனுமதி பெற்று அல்லவா
உள்ளே நுழைந்திருப்பாய் !"

"ஒரு விஷயத்தை
நன்றாக தெரிந்து கொள் !
இந்திரன் அவைக்குள்
நட்புடன்  வந்தவர்களை
அன்பு காட்டி ;
அரவணைத்து ;
பாசத்தைக் காட்டி ;
மகிழ்வித்து வழியனுப்பி ;
வைத்திருக்கிறோம் !
விரோதியாக வந்தவர்களுக்கு
மரணம் என்றால்
என்ன என்பதைப்
புரிய வைத்து எங்கு
செல்ல வேண்டுமோ
அங்கு வழியனுப்பி
வைத்திருக்கிறோம் !"

"நீ நண்பனாக
வந்திருக்கிறாயா ? (அல்லது)
விரோதியாக
வந்திருக்கிறாயா ? "

அரவான் :
"எனக்கு விரோதிகள்
என்று யாரும் இல்லை  ;
என்னை யாரும்
விரோதியாக
நினைத்ததில்லை ;
என்னுடைய விரோதி
என்று சொல்லிக்
கொண்டு என் எதிரே
யாரும் நின்றதில்லை.;
ஏனென்றால் என்
எதிரே என்னுடைய
எதிரியாக நிற்பதற்கு
யாருக்கும் தைரியம்
இருந்ததில்லை ;"

"எனக்கு எதிரி என்று
சொல்லிக் கொண்டு
எதிரியாக இப்போது
இந்த உலகத்தில்
யாருமே இல்லை ;
என்னை நண்பனாக
ஏற்றுக் கொண்டவர்கள்
மட்டுமே இந்த
உலகத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ;"

இந்திரன் :
" உன்னுடைய பேச்சும்
நடவடிக்கையும்
உன் மேல்
எனக்கு கோபத்தை
ஏற்படுத்தவில்லை ;
மாறாக உன் மேல்
எனக்கு அன்பைத் தான்
ஏற்படுத்துகிறது ;
பாசத்தைத் தான்
ஏற்படுத்துகிறது ;
இனம் புரியாத
ஏதோ ஒன்று
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
பிணைப்பை
ஏற்படுத்துகிறது ;"

"பிரபஞ்சத்தின்
ரகசியங்கள்
ஆச்சரியப்படத்தக்கவை !
அந்த ஆச்சரியத்தில்
பூத்து வந்தவனாக
நீ இருக்கிறாய் !"

"அதிசயத்தில் பிறந்து
வந்த அற்புதமாக
நீ இருக்கிறாய் "

"விடை காண முடியாத
கேள்விக் குறியாக
நீ இருக்கிறாய்"

"என் மனம் கலக்கம்
அடைகிறது  ;
சிந்தனை குழப்பம்
அடைகிறது ;
எண்ணம் தடுமாறுகிறது  ;
பேச வார்தை
வர மாட்டேன் என்கிறது ;
என்னால் என்னுடைய
உணர்வுகளை கட்டுப்படுத்த
முடியவில்லை ;"

"சொல்……………………………….?
யார் நீ………………………………..?

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 12-12-2019
//////////////////////////////////////////

December 11, 2019

பரம்பொருள்-பதிவு-96


                    பரம்பொருள்-பதிவு-96

“தன்னுடைய தாய்
உலூபியின்
மேற்பார்வையில்
பாதுகாப்பில்
மற்றும்
அரவணைப்பில்
வளர்ந்த அரவான் ;

  ன்பிற்கு
இலக்கணமாய் !

  ளுமைக்கு
உறைவிடமாய் !

  னிமைக்கு
இருப்பிடமாய் !

  கைக்கு
எடுத்துக்காட்டாய் !

  ழைப்புக்கு
உயர்வாய் !

  ருக்கு
உதாரணமாய் !

  ளிமைக்கு
ஆதரவாய் !

  ற்றத்திற்கு
சிந்தனையாய் !

  யத்திற்கு
விளக்கமாய் !

  ற்றுமைக்கு
ஒளிச்சுடராய் !

  ர்மைக்கு
வரலாறாய் !

ஒள ஷதத்திற்கு
முகவரியாய் !

அனைவரும்
போற்றும்படி
வீரத்திற்கு
விளை நிலமாய் !
வெற்றியின்
திருவுருவமாய் !
வளர்ந்தான்  

“இத்தகைய
சூழ்நிலையில்
பாண்டவர்களுக்கும் ;
கௌரவர்களுக்கும் ;
இடையே போர்
ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக
நடத்தப்பட்ட
அனைத்து சமாதான
பேச்சு வார்த்தைகளும் ;
தோல்வியில் முடிந்து
விட்ட காரணத்தினால்
பாண்டவர்களுக்கும் ;
கௌரவர்களுக்கும் ;
இடையே போர்
நடைபெறுவது என்பது
உறுதியாகி விட்டது "

"இதனால் போர்
நடப்பதற்கு
தேவையான
அனைத்து ஆயத்த
வேலைகளையும்
பாண்டவர்களும்  ;
கௌரவர்களும் ;
தனித்தனியாக செய்து
கொண்டிருந்தனர் "

"பாண்டவர்கள்
அணியில் நின்று
பாண்டவர்களுக்கு
ஆதரவாக  ;
பாண்டவர்களின் சார்பாக ;
போர் செய்வதற்காக
தங்களுடைய
சம்மதத்தை அளித்து  ;
தங்களுடைய ஆதரவை
தெரிவிப்பதற்காகவும் ;
கௌரவர்கள்
அணியில் நின்று
கௌரவர்களுக்கு
ஆதரவாக
கௌரவர்களின்
சார்பாக போர்
செய்வதற்காக
தங்களுடைய 
சம்மதத்தை அளித்து
தங்களுடைய
ஆதரவை
தெரிவிப்பதற்காகவும் ; "

"பல்வேறு நாட்டைச்
சேர்ந்தவர்களும்  ;
பல்வேறு திறமைகளை
படைத்தவர்களும் ;
பல்வேறு அற்புதமான
ஆற்றல்
படைத்தவர்களும் ;
பிரமிக்கத்தக்க சக்தி
படைத்தவர்களும் ;
பாண்டவர்களையும்
கௌரவர்களையும்
தனித்தனியாக
சந்தித்து
தங்களுடைய
சம்மதத்தை அளித்து
தங்களுடைய ஆதரவை
தெரிவித்த
வண்ணம் இருந்தனர்".

"இதனைக்
கேள்வியுற்ற
அரவான்
தன்னுடைய தந்தை
அர்ஜுனனுக்கு
ஆதரவாகவும்  ;
பாண்டவர்களின்
சார்பாகவும் ;'
பாண்டவர்கள்
அணியில் நின்று
போரிடுவதற்காகவும் ;
தன்னுடைய
சம்மதத்தை அளித்து ;
தன்னுடைய ஆதரவை
தெரிவிப்பதற்காகவும் '
தன்னுடைய தந்தை
அர்ஜுனனைக்
காண புறப்பட்டான் ;"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 11-12-2019
//////////////////////////////////////////

December 10, 2019

பரம்பொருள்-பதிவு-95


            பரம்பொருள்-பதிவு-95

“ஆண் குழந்தையை
தாய் தான் வளர்க்க
வேண்டும் என்று
நம்முடைய
முன்னோர்கள் சொல்லி
விட்டு சென்றதற்கு
பல்வேறு காரணங்கள்
இருக்கிறது”

“ஆண்குழந்தை
பிறந்து வளரும் போதே
இயல்பாகவே தைரியம்
கொண்டதாக இருக்கும் ;”

“வீரத்தை வெளிப்படுத்தக்
கூடிய செயல் எதுவாக
இருந்தாலும் - அந்தச்
செயலில் வீரத்தை
வெளிப்படுத்தும் வகையில்
செயல்களைச் செய்து
கொண்டே இருக்கும் ;”

“சிந்தித்து
செயல்படக்கூடிய
செயல்களில்
சில நேரங்களில்
சிந்திக்காமல் தைரியத்தை
வெளிப்படுத்துவதாக
நினைத்துக் கொண்டு
செயல்களை தவறாக
செய்து சிக்கலில்
மாட்டிக் கொள்ளும் ;”

“அதனால் ஆண்
குழந்தைக்கு
முதலில் 
வீரத்தை
ஊட்டக் கூடாது
அப்படி வீரத்தை
ஊட்டினால்
அந்த ஆண் குழந்தை
வளர வளர பிறரிடம்
சண்டை போடுவது ;
பிரச்சினையை 
கொண்டு வருவது ;
கோபத்தை பிறர் மேல்
பிரயோகப் படுத்துவது ;
பிறரை மதிக்காத
தன்மையைக்
கொண்டு இருப்பது  ;
என்று பல்வேறு
தவறான பழக்க
வழக்கங்களை
வெளிப்படுத்தி
வாழ்க்கையைத்
தொலைத்து விட்டு
வாழ்க்கையைத் தேடி
அலைந்து 
கொண்டிருக்கும் ;”

“அதனால் தான்
ஆண் குழந்தைக்கு 
வீரத்தை ஊட்டாமல்
முதலில்
அன்பை
ஊட்ட வேண்டும்  ;
இதனால் அந்த
ஆண் குழந்தை
அன்பு என்றால்
என்ன என்பதையும் ; 
பிறரிடம் எப்படி
அன்புடன் பழக
வேண்டும் என்பதையும் ;
தனக்கு கஷ்டம்
ஏற்படும் போது தனக்கு
எத்தகைய வேதனை
ஏற்படுகிறதோ அதே
வேதனை தான்
மற்றவர்களுக்கும்
ஏற்படும் என்பதை
உணர்ந்து
பிறருக்கு தீங்கு
செய்யாமல் இருக்க
வேண்டும் என்பதையும் ;
தன்னைப் போல
பிறரையும் எண்ண
வேண்டும் என்பதையும் ;
கற்றுக் கொள்ளும் ;”

“அன்பைப் பற்றி
தெரிந்து கொண்ட பிறகு
இரண்டாவதாக
அறிவை
ஊட்ட வேண்டும் ;
இதனால் அந்த
ஆண் குழந்தை - இந்த
சமுதாயத்தில் தான்
எப்படி வாழ வேண்டும்
என்பதையும் ;
தன்னுடைய
வாழ்க்கைத் தரத்தை
எப்படி உயர்த்த
வேண்டும் என்பதையும் ;
தன்னுடைய
வாழ்க்கைத் தரத்தை
உயர்த்துவதற்கு
எத்தகைய செயல்களைச்
செய்ய வேண்டும்
என்பதையும் ;
கற்றுக் கொள்ளும் ;”

“அறிவைப் பற்றி
தெரிந்து கொண்ட பிறகு
மூன்றாவதாக
வீரத்தை
ஊட்ட வேண்டும்  ;
இதனால் அந்த
ஆண் குழந்தை
தன்னுடைய வாழ்க்கையில்
எத்தகைய காலத்தில் ;
எத்தகைய நேரத்தில் ;
எத்தகைய சூழ்நிலையில் ;
எத்தகைய செயலில் ;
வீரத்தை வெளிப்படுத்த
வேண்டும் என்பதையும் ;
தேவையற்ற
செயலுக்கெல்லாம்
வீரத்தை வெளிப்படுத்தக்
கூடாது என்பதையும் ;
பிறருக்கு உதவிகரமாக
இருக்கும் என்றால்
வீரத்தை வெளிப்படுத்த
வேண்டும் என்பதையும் ;
பிறருக்கு துன்பத்தை
ஏற்படுத்தும் என்றால்
வீரத்தை வெளிப்படுத்தக்
கூடாது என்பதையும் ;
கற்றுக் கொள்ளும் ;”

“இத்தகைய
காரணங்களினால் தான்
ஆண் குழந்தையை
தாய் வளர்க்க வேண்டும்
என்பதையும் ;
ஒரு தாய்
ஆண் குழந்தையை
வளர்க்கும் போது
ஆண் குழந்தைக்கு
அன்பு ; அறிவு ; வீரம் ;
என்ற வரிசையில்
குணநலன்களை
ஊட்டி வளர்ப்பாள்
என்பதையும் ;
நம்முடைய
முன்னோர்கள் சொல்லி
விட்டு சென்றிருக்கிறார்கள் “

“அவ்வாறே
உலூபியும் தன்
மகன் அரவானை
தன்னுடைய நேரடி
கண்காணிப்பில்
வைத்துக் கொண்டு
முதலில்
அன்பை
ஊட்டி வளர்த்தாள் ;
இரண்டாவதாக
அறிவை
ஊட்டி வளர்த்தாள் ;
மூன்றாவதாக
வீரத்தை
ஊட்டி வளர்த்தாள் ;

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 10-12-2019
//////////////////////////////////////////