December 16, 2019

பரம்பொருள்-பதிவு-99


            பரம்பொருள்-பதிவு-99

“யாருக்கும் பயப்படாமல்
அரவான் பேசிய
அர்த்தம் நிறைந்த
வாத்தைகளைக் கொண்ட
பேச்சைக் கேட்ட
இந்திரன் அவையில்
உள்ளோர் அனைவரும்
அரவானின் மயக்கும்
பேச்சைக் கேட்டு
பேசுவதற்கு வார்த்தை
எதுவும் இல்லாமல்
இருந்த போதும்
தங்களையும் அறியாமல்
எழுந்து நின்றனர் “

“அர்ஜுனன்
எழுந்து நின்று
மகனே ! என்று
அழைத்துக் கொண்டே
அரவானை
நோக்கி சென்று
கொண்டிருந்தார் ;
அரவானும் தன்
தந்தை அர்ஜுனனைக்
கண்ட மகிழ்ச்சியில்
அர்ஜுனனை
நோக்கி ஓடினான்  
தன்னுடைய
தந்தை அர்ஜுனன்
காலில் விழுந்து
வணங்கினான் அரவான்;”

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
தந்தையே ! “

அர்ஜுனன் :
“எல்லா நலமும்
பெற்று வளமுடன்
வாழ்க மகனே !
(என்று சொல்லிக்
கொண்டே காலில்
விழுந்த அரவானை
தூக்கி நிறுத்தி
இறுக தழுவிக்
கொண்டான்
அர்ஜுனன்) ;”

“உன் அன்னை
எப்படி இருக்கிறார் ?”

அரவான் :
“தங்கள் நினைவாகவே
இருக்கிறார் ;
தங்களுக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறார் ;
என்றேனும் ஒரு
நாள் உங்களைக்
காண முடியும்
என்ற நினைப்பில்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார் ;
தங்களைக்
காண்பதற்கு காலம்
வழி ஏற்படுத்திக்
கொடுக்கும் என்ற
நம்பிக்கையுடன்
உயிரை
உடலில் வைத்துக்
கொண்டிருக்கிறார் ;
உங்களைத் தவிர
அவர் வேறு
எதையும் சிந்தனை
செய்வதில்லை ;
உங்களைப்
பற்றியே பேசிக்
கொண்டிருக்கிறார் ;
உங்கள்
சிந்தனையிலேயே
காலத்தை ஓட்டிக்
கொண்டிருக்கிறார் ;”

அர்ஜுனன் :
“உன் அன்னை
பெண்களுக்குள்
தெய்வம் ;
காணக்கிடைக்காத
மாணிக்கம் ;
மாசு குறையாத
தங்கம் ; “

அரவான் :
“ஆமாம்”

அர்ஜுனன் :
“உன் தாய் உன்னிடம்
என்ன சொல்லி
அனுப்பினார்?”

அரவான் :
“என் தாய் போர்
ஏற்படப்
போவதை அறிந்து
தந்தைக்கு
உதவியாக இரு
என்று என்னை
அனுப்பி வைத்தார் ;
தந்தை என்ன
சொன்னாலும் எதை
செய்யச் சொன்னாலும்
தட்டாமல் செய்ய
வேண்டும் என்று
சொல்லி என்னை
அனுப்பி வைத்தார் ;”

“என்னுடைய தாயின்
உத்தரவை ஏற்று
நான் தங்களைக்
காண வந்தேன் ;
போரில் உங்களுக்கு
துணையாக இருப்பேன் ;
எத்துன்பம் வரினும்
உங்களை விட்டு
விலக மாட்டேன் ;
நான் தங்களுக்காக
போர் புரிய
எனக்கு அனுமதி
வழங்க வேண்டும் ;”

அர்ஜுனன் : 
“அரவானே! நீ !
பாண்டவர்
சார்பாக போரில்
பங்கேற்பதைக் கண்டு
நான் மனம்
மகிழ்ச்சி
அடைகிறேன் ;
போர் நேரும் போது
நீ எங்களுக்கு
உதவி செய்வாயாக ;”

அரவான் :
“அப்படியே ஆகட்டும்”

“அர்ஜுனனும்
அரவானும் பேசி
முடித்த பின்
அர்ஜுனனிடமிருந்து
விடை பெற்றுச்
சென்ற அரவானை
அர்ஜுனன் மட்டுமல்ல
கிருஷ்ணனும்
அரவான் செல்வதையே
பார்த்துக்
கொண்டிருந்தார் ;”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 16-12-2019
//////////////////////////////////////////

December 13, 2019

பரம்பொருள்-பதிவு-98


            பரம்பொருள்-பதிவு-98

அரவான்  :
"அன்பும் ;கருணையும் ;
கொண்டவனாக
இந்த உலகத்தில்
நான் வாழ்வதற்கு
காரணமாக இருப்பவர் ;
உலகில் உள்ள
அனைத்து உயிர்களையும்
நேசிக்க வேண்டும்
என்று எனக்கு
கற்றுக் கொடுத்தவர் ;
தன்னைப் போல
பிறரை எண்ணும்
தன்மை உள்ளத்தில்
வர வேண்டும்
என்பதை எனக்கு
சொல்லிக் கொடுத்தவர் ;"

"பிறர் நமக்கு துன்பம்
செய்தால்
நாம் எவ்வாறு
கஷ்டப்படுவோமோ ?
அதே போல் தான்
பிற உயிர்களை
நாம் துன்புறுத்தும் போது
அந்த உயிர்களும்
நம்மைப் போல்
கஷ்டப்படும் - எனவே
பிற உயிர்களை
துன்புறுத்தக்கூடாது ?
என்ற உயர்ந்த நெறியை
எனக்கு போதித்தவர் ;"

"அன்பிற்கு
இலக்கணமாக இருப்பவர் ; ;
பாசத்திற்கு
பிறப்பிடமாக உதித்தவர் ;
மாதருக்குள்
மாணிக்கமாகத் திகழ்பவர் ;
பெண்களுக்குள்
வரலாறாக வசிப்பவர் ;
தாய்களுக்குள்
தெய்வத் தாயாக
வாழ்பவர் ;"

"தன்னுடைய கணவனை
எப்போதும் நினைவில்
வைத்து போற்றிக்
கொண்டிருப்பவர் ;
கணவரை கண்
கண்ட தெய்வமாக
அனுதினமும் வழிபட்டுக்
கொண்டிருப்பவர் ;
தன்னுடைய
கணவரைத் தவிர
வேறு யாரையும்
சிந்தனையால் கூட
தீண்டாதவர் ;"

"இந்த உலகம்
கண்டிராத அற்புத
பிறவி அவர்  ;
உலகமே கண்டிராத
அதிசயத்தின் அதிசயமாக
வாழ்ந்து கொண்டிருக்கும்
கருணை தெய்வமான
உலூபியே
என்னுடைய தாய் ;"

"அர்ஜுனன் தன்
இருக்கையில் இருந்து
எழ முயற்சி செய்தான்  ;
கிருஷ்ணன் அவன்
கையைப் பிடித்து
அழுத்தினான் ;
அவன் பேசட்டும்
என்று கண்ணால்
சொன்னார் கிருஷ்ணன்
அர்ஜுனன் தன்
இருக்கையில் அமர்ந்தான் ;"

"அரவான்
தொடர்ந்து பேசினான் "

அரவான்  :
"பொன்னைப் போன்ற
உடல் படைத்து
பொன்னிறமாக
ஒளிர்பவர்  ;
எஃகைப் போன்ற
உள்ளம் படைத்து
கஷ்டங்களை
புறமுதுகிட்டு
ஓடச் செய்தவர் ;
சிங்கம் நிகர்த்த
நடை கொண்டவர்  ;"

"அச்சம் என்றால்
என்ன என்றும்
அச்சத்திற்கான பொருள்
என்னவென்றும்
தெரியாதவர்  ;”

"யாருக்கும் எதற்கும்
எதைக் கண்டும்
எப்போதும்
எந்த காலத்திலும்
அஞ்சாதவர் ;
கலக்கம் என்ற
ஒன்று எப்போதும்
எழாத வகையில்
உறுதியான மனதைக்
கொண்டவர் ;"

"சூழ்ச்சிகளைத்
தகர்த்தெறிந்து
சூதுமதியினரை
அழித்தொழித்து
சூதினால் தன்னை
அழிக்க முடியாது
என்று நிரூபித்துக்
காட்டியவர்  ;
பெண்களை மதித்துப்
போற்றி தெய்வமென
வணங்கி வாழ்ந்து
கொண்டிருப்பவர் ;"

"எதிரிகளின் தூக்கத்தைக்
கலைத்து மரண
பயத்தை ஏற்படுத்திக்
கொண்டிருப்பவர்  ;
இந்த உலகத்தில்
வீரத்திற்கு
எடுத்துக்காட்டாக
திகழ்ந்து
கொண்டிருப்பவர் ;
இந்த உலகம் கண்டிராத
மாவீரனாக இருப்பவர் ;
இனியும் இந்த
உலகம் காண
முடியாத மாவீரனாக
இருக்கக் கூடியவர் ;"

"பீஷ்மரின் அன்பைப்
பெற்றவர்  ;
கிருபாச்சாரியாரின்
ஆசியைப் பெற்றவர்  ;
விதுரரின்
மதிப்பைப் பெற்றவர்  ;
துரோணாச்சாரியாரின்
பிரதம சீடரான
அர்ஜுனனே
என்னுடைய தந்தை !"

"நான் அவர்களுடைய
மகன்
என்னுடைய பெயர்
அரவான் "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 13-12-2019
//////////////////////////////////////////

December 12, 2019

பரம்பொருள்-பதிவு-97


                  பரம்பொருள்-பதிவு-97

"தன்னுடைய தாய்
உலூபியின் அனுமதியைப்
பெற்று தன்னுடைய
தந்தை அர்ஜுனனைக்
காண புறப்பட்டான்
அரவான் "

"அர்ஜுனனுடைய
தந்தையான
இந்திரன் இருக்கும்
இந்திரலோகத்தில்
இந்திரனுடைய அவையில்
அர்ஜுனன் இருப்பதாகக்
கேள்விப்பட்டு இந்திரனுடைய
அவைக்கே சென்றான்
அரவான் "

"இந்திரன் அவையில்
இந்திரன் ; அர்ஜுனன் ;
கிருஷ்ணன் ; மற்றும்
சிலர் இருந்தனர்.
இந்திரனுடைய அவைக்குள்
நுழைந்தான் அரவான் "

இந்திரன்  :
"யார் நீ
எங்கிருந்து வந்திருக்கிறாய் ?
எதற்காக வந்திருக்கிறாய் ?
என்ன காரணத்திற்காக
வந்திருக்கிறாய் ?
என்ன நோக்கத்தோடு
வந்திருக்கிறாய் ?
எத்தகைய செயலைச்
செய்வதற்காக
வந்திருக்கிறாய் ?

" இந்திரன் அவைக்குள்
நுழைவதற்கு முன்
அனுமதி பெற்று
வர வேண்டும்
என்பது உனக்கு
தெரியாதா ?
அனுமதி இல்லாமல்
இந்திரன் அவைக்குள்
நுழைந்தவர்கள்
உயிரோடு வெளியே
சென்றதில்லை என்ற
செய்தி உனக்கு
தெரியாதா ?

நல்ல எண்ணத்துடன்
வந்திருந்தால்
உன் உயிர் தப்பியது ?
தவறான எண்ணத்துடன்
வந்திருப்பாயேயாகில்
உன் உயிர் உனக்கு
சொந்தமல்ல ? "

"நீ உயிரோடு
வாழ வேண்டும் என்றால்;
உன் உயிர் உனக்கு
சொந்தமாக இருக்க
வேண்டும் என்றால் ;
உண்மையைச் சொல்
யார் நீ…………………………….?"

அரவான் :
"தர்மத்தின் பக்கம்
நின்று போர் புரிவதற்காக
வந்திருக்கிறேன் "

இந்திரன் :
" தர்மம் என்றால்
என்ன என்றே
உனக்குத் தெரியவில்லை ?
அப்படி இருக்கும் போது
எப்படி தர்மத்தின்
பக்கம் நின்று
போர் புரிவாய் ? "

அரவான் :
"தர்மம் என்றால்
என்ன என்பதை
என்னுடைய அன்னை
எனக்கு சொல்லிக்
கொடுத்துத் தான்
வளர்த்து இருக்கிறார் "

"என்னுடைய அன்னை
எனக்கு சொல்லிக்
கொடுத்த
தர்மத்தை உணர்ந்து ;
தர்மத்தின்
பாதை தவறாமல்
வாழ்க்கையை நடத்திக்
கொண்டிருப்பவன் நான் ;"

இந்திரன் :
"உன்னுடைய
செயல்களைப் பார்த்தால்
அன்னையின் வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
நடப்பவனாகத்
தெரியவில்லையே !"

" அன்னையின் வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
தர்மத்தை
கடைபிடிப்பவனாக
இருந்திருந்தால்……………….?
இந்திரன் அவைக்குள்
அனுமதி பெற்று அல்லவா
உள்ளே நுழைந்திருப்பாய் !"

"ஒரு விஷயத்தை
நன்றாக தெரிந்து கொள் !
இந்திரன் அவைக்குள்
நட்புடன்  வந்தவர்களை
அன்பு காட்டி ;
அரவணைத்து ;
பாசத்தைக் காட்டி ;
மகிழ்வித்து வழியனுப்பி ;
வைத்திருக்கிறோம் !
விரோதியாக வந்தவர்களுக்கு
மரணம் என்றால்
என்ன என்பதைப்
புரிய வைத்து எங்கு
செல்ல வேண்டுமோ
அங்கு வழியனுப்பி
வைத்திருக்கிறோம் !"

"நீ நண்பனாக
வந்திருக்கிறாயா ? (அல்லது)
விரோதியாக
வந்திருக்கிறாயா ? "

அரவான் :
"எனக்கு விரோதிகள்
என்று யாரும் இல்லை  ;
என்னை யாரும்
விரோதியாக
நினைத்ததில்லை ;
என்னுடைய விரோதி
என்று சொல்லிக்
கொண்டு என் எதிரே
யாரும் நின்றதில்லை.;
ஏனென்றால் என்
எதிரே என்னுடைய
எதிரியாக நிற்பதற்கு
யாருக்கும் தைரியம்
இருந்ததில்லை ;"

"எனக்கு எதிரி என்று
சொல்லிக் கொண்டு
எதிரியாக இப்போது
இந்த உலகத்தில்
யாருமே இல்லை ;
என்னை நண்பனாக
ஏற்றுக் கொண்டவர்கள்
மட்டுமே இந்த
உலகத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ;"

இந்திரன் :
" உன்னுடைய பேச்சும்
நடவடிக்கையும்
உன் மேல்
எனக்கு கோபத்தை
ஏற்படுத்தவில்லை ;
மாறாக உன் மேல்
எனக்கு அன்பைத் தான்
ஏற்படுத்துகிறது ;
பாசத்தைத் தான்
ஏற்படுத்துகிறது ;
இனம் புரியாத
ஏதோ ஒன்று
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
பிணைப்பை
ஏற்படுத்துகிறது ;"

"பிரபஞ்சத்தின்
ரகசியங்கள்
ஆச்சரியப்படத்தக்கவை !
அந்த ஆச்சரியத்தில்
பூத்து வந்தவனாக
நீ இருக்கிறாய் !"

"அதிசயத்தில் பிறந்து
வந்த அற்புதமாக
நீ இருக்கிறாய் "

"விடை காண முடியாத
கேள்விக் குறியாக
நீ இருக்கிறாய்"

"என் மனம் கலக்கம்
அடைகிறது  ;
சிந்தனை குழப்பம்
அடைகிறது ;
எண்ணம் தடுமாறுகிறது  ;
பேச வார்தை
வர மாட்டேன் என்கிறது ;
என்னால் என்னுடைய
உணர்வுகளை கட்டுப்படுத்த
முடியவில்லை ;"

"சொல்……………………………….?
யார் நீ………………………………..?

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 12-12-2019
//////////////////////////////////////////