January 01, 2020

பரம்பொருள்-பதிவு-108


            பரம்பொருள்-பதிவு-108

அர்ஜுனன் :
“களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடைய மூவரும்
பாண்டவர்கள் அணியில்
தானே உள்ளனர் ;
பின்பு நாம்
ஏன் கவலைப்பட
வேண்டும் கிருஷ்ணா ?”

“நம் இருவரை
கௌரவர்களால்
நெருங்கவே முடியாதே!”

கிருஷ்ணன் :
“ஆனால் அரவானை
கௌரவர்களால்
நெருங்க முடியுமே?”

அர்ஜுனன் :
“அரவான் என்னுடைய
மகன் என் சொல்படி
தானே கேட்பான் ?”

கிருஷ்ணன் :
“தவறு அர்ஜுனா தவறு
அரவான்
உன்னுடைய மகன்
மட்டுமல்ல
உலூபியின்
மகனும் கூட,
விதைத்து விட்டு
வந்தவன் மட்டும்
தான் நீ - ஆனால்
அன்பும் கருணையும்
உணவில் கொடுத்து
அரவானை ஊட்டி
வளர்த்தவள் உலூபி”

“இரக்கம் அரவானின்
இரத்தத்தோடு
கலந்து இருக்கிறது ;
வீரம் அரவானின்
உயிரோடு
பிணைந்து இருக்கிறது ;”

“உலகத்திலேயே
சிறந்த வீரர்களாக
கருதப்படும்
பீஷ்மர்
துரோணாச்சாரியார்
ஆகியோருக்கு
எதிராக நின்று
சண்டையிடுவதற்கும் ;
அவர்களுடைய
ஆயுதங்களுக்கு எதிராக
எதிர் ஆயுதம் எடுத்து
தடுக்கக்கூடிய
வல்லமை - உனக்கு
மட்டும் தான்
இருக்கிறது என்று
நினைத்து விட்டாயா ?”

“பீஷ்மர்
துரோணாச்சாரியார்
ஆகியோருக்கு எதிராக
சண்டையிடுவதற்கும் ;
அவர்களுடைய
ஆயுதங்களுக்கு எதிராக
எதிர் ஆயுதம்
எடுத்து தடுக்கக்கூடிய
வல்லமை மட்டுமல்ல
அவர்களை
புறமுதுகிட்டு
ஓடச்செய்யும்
சர்வ வல்லமை
படைத்தவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே ! “

“பீஷ்மர்
துரோணாச்சாரியாருடைய
ஆயுதங்களை
தடுக்கும் சக்தி
மட்டும் தான்
உனக்கு உண்டு ;
ஆனால் அவர்களை
புறமுதுகிட்டு
ஓடச்செய்யும் சக்தி
அரவானுக்கு மட்டுமே
உண்டு என்பதை
மறந்து விடாதே !”

“உன்னுடைய
அம்புக்கு எதிர் அம்பு
விடக்கூடியவர்கள்
இந்த உலகத்தில்
ஒரு சிலர் மட்டுமே
இருக்கிறார்கள் - என்று
நினைத்து விடாதே
உனக்கு எதிராக
அரவான் நின்றால்
அவன் விடும் எந்த
ஒரு அம்புக்கும்
எதிர் அம்பு உன்னிடம்
இல்லை என்பதை
மறந்து விடாதே !”

“அரவான்
பாண்டவர்கள்
சார்பாக நின்று
போரிட்டு
கௌரவர்களை
எதிர்த்தான் என்றால்
கௌரவர்களில்
ஒருவரையும்
மிச்சம் வைக்க
மாட்டான் ;
கெளரவர்களுடைய
சந்ததியையே
அழித்து விடுவான் ;”

“அதைப்போல
அரவான்
கெளரவர்கள்
சார்பாக நின்று
போரிட்டு
பாண்டவர்களை
எதிர்த்தான் என்றால்
பாண்டவர்கள் என்ற
ஒரு இனம்
இருந்ததா என்று
அனைவரும்
எதிர்காலத்தில்
கேள்வி கேட்கும்
வகையில்
பாண்டவர் என்ற
இனத்தையே
அழித்து
விடக்கூடிய
வல்லமை
படைத்தவன்
அரவான் ;”

“32 லட்சணங்களும்,
எதிர்ரோமம்
ஆகிய இரண்டு
தகுதிகளையும்
கொண்டவர்கள்
களப்பலி
கொடுப்பதற்கு
மட்டும் தான் தகுதி
உடையவர்கள் என்று
நினைத்துவிட்டாயா ?
அவர்களுக்கென்று
தனிப்பட்ட
சிறப்பு தகுதிகள்
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா
அர்ஜுனா
அதைப்பற்றி
யோசித்து
இருக்கிறாயா ?”

“கேள் அர்ஜுனா கேள்”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 01-01-2020
//////////////////////////////////////////




December 31, 2019

புத்தாண்டு வாழ்த்துக்கள்- 01-01-2020


புத்தாண்டு வாழ்த்துக்கள்-
01-01-2020 !

அன்பிற்கினியவர்களே !

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் “
     -----------வள்ளலார்

“மனதில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியே வேறொன்று
பேசுபவரிடம் உறவு
வைத்துக் கொள்ளக் கூடாது
என்பது தான் இந்த
பாடலுக்கு பொதுவாக
சொல்லப்படும் கருத்து”

“மனதில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியே
வேறொன்றை
பேசுபவர்களிடம் உறவு
வைத்துக் கொள்ளக்கூடாது ;
என்றால் நம்முடைய
நண்பர்கள் ; உறவினர்கள் ;
சுற்றத்தார்கள் ; நம்முடன்
வேலை செய்பவர்கள் என்று
இந்த உலகத்தில் உள்ள
யாருடனும் நம்மால் உறவு
வைத்துக் கொள்ள முடியாது ;
இந்த உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
தனித்தனியாக இருக்க
வேண்டிய சூழ்நிலை
தான் ஏற்படும் ;

 “அப்படி என்றால் இந்த
பாடல் என்ன அர்த்தம்
சொல்கிறது என்று பார்ப்போம் ; “

“ஒரு பணக்கார குடும்பத்தில்
கணவன் ; மனைவி ;
மூன்று பெண் பிள்ளைகள்  
இருந்தார்கள் – இந்த மூன்று
பெண் பிள்ளைகளுமே
வசதியாக வளர்ந்தவர்கள் ;
அழகால் வசீகரிப்பவர்கள் ;
படிப்பில் சிறந்தவர்கள் ;
அறிவில் உயர்ந்தவர்கள் ;
பணத்தில் குளிப்பவர்கள் ;
மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் ;
என்று சொல்லத்தக்க
வகையில் வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ;

“பன்னீரில் குளித்து
சந்தனத்தில் நீந்தி
களிப்படையும் பங்களா
வாசியின் சாளரங்களுக்குள்
மட்டும் எட்டிப்
பார்ப்பதல்ல காதல் ;
அது பணம் படைத்த
பங்களாவுக்கும் வரும்
காசில்லாத குடிசைக்கும்
வரும் என்பதை உணர்த்தும்
வகையில் பணம் படைத்தவர்
பெற்றெடுத்த மூன்று
பெண்களில் முதல் பெண்
பணமில்லாத ஏழை
ஒருவனை காதலித்தாள் ;

“காதல் என்ற ஒன்று
கருத்தினில் நுழைந்து
விட்டால் சுற்றம் தெரியாது ;
உறவுகளின் உதவிக்கரம்  
தெரியாது ; பெற்றோர்களின்
அன்பு தெரியாது ;
நட்பின் நாகரிகம் தெரியாது ;
என்பதற்கேற்ப அவர்கள்
காதல் செய்தனர் ;”

“மறைவாக செய்யப்பட்டு
வந்த காதல் வெளிப்பட்டு
விட்ட போது குடும்பத்தில்
சூறாவளி அடித்தது ;
துயர மேகங்கள் கண்ணீரை
அருவியாக பொழிந்தது ;
கோபக்கனலில் இதயங்கள்
அனைத்தும் எரிந்தது ;
குடும்பம் துடிப்பில்லாத படகு
போல் நிம்மதியிழந்தது ;
மனம் என்ன செய்வது
என்று தெரியாமல் தள்ளாடியது ;
குடும்பத்தில் உள்ள அனைத்து
மனங்களும் அடுத்து என்ன
நடக்கப்போகிறது என்று
தெரியாமல் அல்லாடியது ;
முதல் பெண்ணிற்கும்
பெற்றோர்களுக்கும்
சகோதரிகளுக்கும் இடையே
கருத்து வேற்றுமைகள்
உச்சத்தில் இருந்தது
சண்டைகள்
உக்கிரத்தை அடைந்தது ;

“பல்வேறு நிலைகளில்
பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டது ; பல்வேறு
நிலைகளில் அறிவுரைகள்
வழ்ங்கப்பட்டது ; சில
சமயங்களில் கண்டிப்பும்
செய்யப்பட்டது ; முடிவில்
பெண் காதலை மறந்து
விடுகிறேன் பெற்றோர்கள்
சொல்லும் பையனை
திருமணம் செய்து
கொள்கிறேன் என்று
சொன்னதின் அடிப்படையில்
பெற்றோர்கள் கல்யாண
ஏற்பட்டை செய்த போது
கல்யாணத்தன்று அந்தப்
பெண் காதல் செய்த
பையனுடன் ஓடி அந்தப்
பையனை திருமணமும்
செய்து கொண்டாள் ;”

“அந்த பெற்றோர்கள்
அவமானத்தில் தலை
குனிந்தனர்; தன் பெண்
தங்களை ஏமாற்றி விட்டதாக
அழுது புலம்பினர் ; பையனை
இகழ்ந்தனர் ; கவலை அவர்கள்
இதயத்தை சூழ்ந்தது ; இருள்
அவர்கள் வாழ்க்கையை
சூழ்ந்தது ; மானம் காற்றில்
பறந்ததால் அவமானம்
குடும்பத்தை சூழ்ந்தது ;

“இந்தக் கதையில் தவறு
செய்தவர்கள் யார்
அந்த பெண்ணா அல்லது
பெற்றோர்களா என்ற
கேள்விக்கு பதிலை யோசித்தால்
பெரும்பாலானவர்கள்
அந்தப் பெண் என்று
தான் சொல்வார்கள் ;
நடந்த தவறுக்கு அந்த
பெண் காரணமல்ல
பெற்றோர்கள் தான் காரணம்”

“தனது மகள் மனதில்
நினைத்ததை அப்படியே
வெளியில் சொல்லி விட்டாள் ;
என்று தனது மகளின்
வார்த்தைகளை நம்பி
தனது மகளுடன் கலந்து
ஆலோசித்து தனது மகளுக்கு
திருமணம் செய்ய முயற்சி
செய்த காரணத்தினால்
பெற்றோர்கள் கஷ்டத்தையும்
அவமானத்தையும் சந்திக்க
வேண்டி இருந்தது ;”

“தனது மகள் மனதில்
ஒன்று வைத்து வெளியில்
வேறொன்று பேசியிருக்கிறாள் ;
என்பதை பெற்றோர்கள்
புரிந்து கொண்டிருந்தால்
தனது மகளுடன் கலந்து
ஆலோசிக்காமல் எந்தவிதமான
முடிவையும் எடுக்காமல் கல்யாண
ஏற்பாட்டை பண்ணாமல்
இருந்திருப்பார்கள் ;இதனால்
அவர்கள் கஷ்டப்படுவதும்
அவமானப்படுவதும்
தவிர்க்கப்பட்டிருக்கும் ;”

“உறவு கலவாமை
வேண்டும் என்றால்
உறவு கொள்ளக்கூடாது
என்று பொருள் அல்ல “

“உறவு கலவாமை
வேண்டும் என்றால்
கலந்து ஆலோசித்து
எந்தவிதமான முடிவையும்
எடுக்கக்கூடாது என்று பொருள் ;

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் என்றால்
மனதில் ஒன்று வைத்து
வெளியே வேறொன்று
பேசுபவரிடம் உறவு வைத்துக்
கொள்ளக் கூடாது என்று
பொருள் அல்ல “

“உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும் என்றால்
மனதில் ஒன்று வைத்து
வெளியே வேறொன்று
பேசுபவரிடம் கலந்து
ஆலோசித்து எந்தவிதமான
முடிவையும் எடுக்கக்
கூடாது என்று பொருள் “

“அதாவது மனதில் ஒன்று
வைத்து வெளியே வெளியே
வேறொன்று பேசுபவரிடம்
கலந்து ஆலோசித்து எந்தவிதமான
முடிவையும் எடுக்கக்கூடாது ;
அப்படி எடுத்தால் கஷ்டத்தையும்
அவமானத்தையும் நாம்
சந்திக்க நேரிடும்
என்பதைத் தான் வள்ளலார்

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்

என்ற பாடலின் மூலம்
தெளிவாக்குகிறார் ! “

“உயர்ந்தோர் சொல்லிச் சென்ற
வார்த்தைகளின் உண்மையான
அர்த்தத்தைத் தெரிந்து கொண்டால்
வாழ்க்கை துன்பங்கள் இன்றி
இன்ப மயமானதாக இருக்கும்
என்பதை உணர்ந்து
புத்தாண்டை கொண்டாடுவோம் “

01-01-2020
புத்தாண்டு வாழ்த்துக்கள்!”

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்
----------01-01-2020
/////////////////////////////////////////////////

December 30, 2019

பரம்பொருள்-ஜபம்-107


            பரம்பொருள்-ஜபம்-107

கிருஷ்ணன் :
"களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவர்கள்
யார் என்பதையும் ?
அவர்களுடைய பெயர்கள்
என்ன என்பதையும் ?
நானே உனக்குச்
சொல்கிறேன் பீமா ! "

பீமன் :
"சொல் கிருஷ்ணா சொல்
யார்? என்று சொல்
கிருஷ்ணா சொல் "

கிருஷ்ணன் :
"களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய தகுதி
படைத்தவர்கள் - இந்த
ஈரேழுலோகத்திலும்
மொத்தமே மூன்று பேர்கள்
மட்டுமே உள்ளனர் பீமா ! "

பீமன் :
"மொத்தமே மூன்று
பேர்கள் மட்டுமே
உள்ளனரா கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"ஆமாம் பீமா !
ஆமாம்"

பீமன் :
"யார் அந்த மூன்று
பேர்கள் கிருஷ்ணா"

கிருஷ்ணன் :
"ஒன்று அர்ஜுனன்
இரண்டாவது அரவான்"

பீமன் :
மூன்றாவது யார்
கிருஷ்ணா ?"

கிருஷ்ணன் :
"வேறு யார்
நானே தான் பீமா !
களப்பலி கொடுப்பதற்கு
தகுதி உடைய மூவரில்
நானும் ஒருவன் என்பதை
நினைவில் கொள் பீமா! "

பீமன் :
"கிருஷ்ணா!  உன்னையுமா
களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய
பட்டியலில் சேர்த்து
இருக்கிறார்கள் - என்ன
கொடுமை இது கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"ஏன் என்னை
சேர்க்கக் கூடாதா பீமா!"

"நீ நினைப்பது போல்
களப்பலியாக யாரை
வேண்டுமானாலும் ;
விருப்பப்படுபவர்களை
எல்லாம் தேர்ந்தெடுத்து
களப்பலி கொடுத்து
விட முடியாது ; "

"களப்பலி
கொடுப்பதற்கென்றே
வரையறுக்கப்பட்ட
விதிமுறைகள் இருக்கின்றன ;
அதற்கென்று சில
தகுதிகள் இருக்கின்றன;
அத்தகைய தகுதிகளைக்
கொண்டவர்கள் யார்
இருக்கிறார்கள்
என்பதைக் கண்டறிந்து
அத்தகையவர்களை
மட்டுமே கண்டு பிடித்து
களப்பலி கொடுத்தால்
மட்டுமே போரில்
வெற்றி பெற முடியும் "

பீமன் :
"எத்தகைய தகுதிகளைப்
பெற்றிருக்க வேண்டும்
கிருஷ்ணா ! "

கிருஷ்ணன் :
"32 லட்சணங்கள்
கொண்டவராக
இருக்க வேண்டும் :
எதிர்ரோமம் படைத்தவராக
இருக்க வேண்டும் ;
இந்த இரண்டு
விதிகளையும் பூர்த்தி
செய்பவர்கள் – நான் ;
அர்ஜுனன் ; அரவான் ;
ஆகிய மூன்று பேர்கள்
மட்டுமே! - ஆகவே
தான் களப்பலியாக
கொடுக்கக்கூடியவர்கள்
பட்டியலில் எங்கள்
மூன்று பெயரையும்
சேர்த்து இருக்கிறார்கள் ;"

"களப்பலி கொடுப்பதற்கு
ஏற்ற நாள்
எந்த நாள் என்பதையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதி
உடையவர்கள் யார்
என்பதையும் ;
சகாதேவன்
குறித்துக் கொடுத்து 
துரியோதனன் அதை
தெரிந்து கொண்டு
சென்று விட்டான் ; "

"களப்பலி கொடுப்பதற்கு
ஏற்ற நாளில்
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியுடையவரை 
துரியோதனன்
களப்பலியாக கொடுத்து
விட்டான் என்றால் ;
துரியோதனனை
யாராலும் வெற்றி
கொள்ளவே முடியாது ;
துரியோதனனை எதிர்த்து
யார் போரிட்டாலும்
அவர்கள் அனைவரும்
தோல்வியையே தழுவுவர்
என்பது உண்மை ; "

"தர்மா இனி நாம்
போர் செய்வதால் ஒரு
பயனும் இல்லை "

"இப்போதே போரின் முடிவு
தெரிந்து விட்டது - ஆமாம்
துரியோதனன் தான் போரில்
வெற்றி பெறப்போகிறான்
என்பது தெரிந்து விட்டது"

"ஆகவே பாண்டவர்களாகிய
நீங்கள் தோற்பது என்பது
உறுதியாகி விட்டது"

"இனிமேல் போர் செய்ய
வேண்டிய அவசியமே இல்லை ;
வெற்றி என்பது
ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டு
விட்ட பிறகு - நாம்
போர் செய்வதால்
ஒரு பயனும் இல்லை."

"ஆகவே நீங்கள் அனைவரும்
போர் செய்யாமல்
மீண்டும் காட்டுக்கே
செல்வதே மேல்
போர் செய்து
ஏன் தோல்வியை
தழுவப் போகிறீர்கள் ".

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 30-12-2019
//////////////////////////////////////////