July 20, 2022

ஜபம்-பதிவு-810 (சாவேயில்லாத சிகண்டி-144)

 ஜபம்-பதிவு-810

(சாவேயில்லாத

சிகண்டி-144)

 

ஸ்தூணாகர்ணன் :

உன்னைப் போல்

உலக அனுபவம்

பெற்ற ஒருவர்

எனக்கு பிள்ளையாக

இருப்பதில் எனக்கு

மகிழ்ச்சி தான்

ஆனால்

உன்னைப் பற்றி ஒரு

சில விஷயங்கள்

மட்டுமே எனக்குத் தெரியும்

அதை வைத்துக்

கொண்டு உனக்கு

என்னால் எப்படி

உதவிகள் செய்ய முடியும்

 

கஷ்டத்தில்

இருக்கும் போது

உதவி வேண்டும்

என்று கேட்டு வருபவர்கள்

உதவியைப் பெற்று

மகிழ்ச்சியை அடைந்தவுடன்

உதவி செய்தவர்களை

மறந்து விடுகிறார்கள்

 

உதவியைப் பெறும்

வரை கால் பிடித்து

வாழ்கிறார்கள்

உதவியைப் பெற்றவுடன்

காலை வாரிவிட்டு

சென்று விடுகிறார்கள்

 

உதவி பெற்றவர்கள்

உதவி செய்தவர்களை

மறந்தாலும் பரவாயில்லை

ஆனால்

உதவி பெற்றவர்கள்

உதவி செய்தவர்களை

இழிவு படுத்தும்

வேலைகளைச்

செய்கின்றனர்

 

உதவி செய்தவர்களுடைய

மனம் வருந்தக் கூடிய

செயல்களைச் செய்கின்றனர்

 

அதனால் தான்

உதவி செய்ய வேண்டும்

என்று நினைப்பவர்களும்

உதவி செய்வதில்லை

 

இதை எல்லாம் மனதில்

கொண்டு தான்

நானும் யோசிக்கிறேன்

 

சிகண்டினி :

செய்த உதவியின்

நன்றியை மறப்பவர்கள்

எப்போதும் நன்றியை

மறக்கத் தான்

செய்வார்கள்

அவர்களை மாற்றவே

முடியாது

 

அதற்காக

உதவி பெறுகிறவர்கள்

அனைவருமே

நன்றியை மறப்பார்கள்

என்று சொல்ல முடியாது

 

இந்த உலகத்தில்

உள்ள அனைவரும்

ஒரே மாதிரியான

குணத்தைத் தான்

பெற்று இருப்பார்கள்

என்றும் சொல்ல முடியாது

 

பொய்யானவர்களால்

பாதிக்கப்பட்டதால்

உண்மையானவர்களை

ஏற்க மறுக்கிறீர்கள்

 

பாதிப்படைந்தவர்களின்

மனம் எந்த

ஒன்றைப் பார்த்தாலும்

யாரைப் பார்த்தாலும்

சந்தேகம் கொள்ளத்

தான் செய்யும்

 

உங்கள் பக்கத்தில்

இருந்து பார்க்கும் போது

அதைத் தவறு என்று

சொல்ல முடியாது

 

ஆனால் ஒன்று

அனைவரையுமே

சந்தேகக் கண்

கொண்டு பார்த்தால்

உண்மையானவர்களை

இழந்து விடுவோம்

 

ஸ்தூணாகர்ணன் :

நான் உனக்கு

செய்யப் போகும் உதவியை

நீ சாகும் வரை

மறக்க மாட்டேன்

என்கிறாயா

 

சிகண்டினி :

நான் அப்படி

சொல்ல வரவில்லை

 

ஸ்தூணாகர்ணன் :

பிறகு என்ன

சொல்ல வருகிறாய்

 

சிகண்டினி :

விதி வகுத்த வழியில்

செல்லக் கூடியவன்

மனிதன்

விதியை மாற்றிக்

கொண்டு செல்ல

மனிதனால் முடியாது

 

நாளை என்ன நடக்கும்

என்று யாராலும்

சொல்ல முடியாது

 

நீங்கள் செய்யப்போகும்

உதவியை வருங்காலத்தில்

நான் மறந்தும் விடலாம்

 

உங்களுக்கு எதிரே

எதிரியாகவும் நிற்கலாம்

 

உங்களுக்கு எதிராகவும்

செயல்படலாம்

 

உங்களை இழிவு

படுத்தும் வேலைகளையும்

செய்யலாம்

 

உங்கள் மனம்

வருத்தப்படும்

செயல்களையும் செய்யலாம்

 

அல்லது

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-809 (சாவேயில்லாத சிகண்டி-143)

 ஜபம்-பதிவு-809

(சாவேயில்லாத

சிகண்டி-143)

 

சிகண்டினி :

கேட்காமல் தெரியாதா

 

எனக்குள் தன்னால்

வெளிப்படாதா

 

ஸ்தூணாகர்ணன் :

தனாகவே வெளிப்படலாம்

 

சிகண்டினி :

வெளிப்படுமா

 

ஸ்தூணாகர்ணன் :

கண்டிப்பாக வெளிப்படும்

என்று சொல்ல முடியாது

 

வெளிப்பட வாய்ப்பு

இருக்கிறது என்று

தான் சொல்ல முடியும்

 

சிகண்டினி :

எனக்குள் மறைந்திருக்கும்

ரகசியம்

வெளிப்படட்டும்

வெளிப்படாமல் போகட்டும்

 

எனக்குள் மறைந்திருக்கும்

ஆணை வெளிப்பட

உதவி செய்யுங்கள்

 

நான் ஆணாக இந்த

உலகத்தில்

வெளிப்பட வேண்டும்

 

நான் முழுமையான

ஆணாக மாற

உங்கள் உதவி தேவை

அதற்கு நீங்கள்

உதவி செய்ய வேண்டும்

 

உதவி செய்வீர்களா

 

ஸ்தூணாகர்ணன் :

பெண்ணாக இருக்கும்

உனக்குள்

ஆணுக்கான உணர்வுகளை

நீ பெற்று இருந்தாலும்

ஆண் உடலுக்கான

மாற்றத்தை

உன் உடல்

பெறவில்லையெனில்

முழுமையாக ஆணாக

மாற முடியாது

 

சிகண்டினி :

ஆணுக்கான

உணர்வுகளைப்

பெற்ற என்னால்

ஆணுக்கான உடல்

மாற்றத்தை என்னால்

பெற முடியாதா

 

ஸ்தூணாகர்ணன் :

பெற முடியும்

 

சிகண்டினி :

அதற்கு நான் என்ன

செய்ய வேண்டும்

 

ஸ்தூணாகர்ணன் :

வைத்திய முறைகளுடன்

சில விஷயங்களையும்

முறைப்படி பின்பற்ற

வேண்டும்

 

சிகண்டினி :

அதற்கு நீங்கள் தான்

உதவி செய்ய வேண்டும்

உங்களால் முடியும்

 

அனைத்தையும் அறிந்தவர்

நீங்கள் என்பதை

அறிந்து தான் வந்தேன்

 

ஸ்தூணாகர்ணன் :

அனைத்தையும் அறிந்து

தான் வந்தேன்

என்கிறாயே

 

பெண்ணிலிருந்து ஆணாக

மாறுவதற்காக செய்யப்படும்

அறுவை சிகிச்சைகள்

உயிருக்கு ஆபத்தானது

அது மறுபிறப்பைப்

போன்றது

புதியதாக ஒன்றைப்

பிறக்க வைப்பது

என்பதை அறிந்து

தான் வந்தாயா

 

சிகண்டினி :

மறுபிறப்பு எடுக்க

வேண்டும் என்று தான்

வந்திருக்கிறேன்

 

உயிருக்கு பயப்படாமல்

வந்திருக்கிறேன்

 

எத்தகைய வலி

ஏற்பட்டாலும்

அதை ஏற்றுக்

கொள்ளும்

மனநிலையில் தான்

வந்திருக்கிறேன்

 

எதற்கும் துணிந்து

தான் வந்திருக்கிறேன்

 

என்னை மாற்றிக்

கொள்ள வேண்டும்

என்ற நினைப்பில்

தான் வந்திருக்கிறேன்

 

நான் யார் என்பதை

இந்த உலகத்திற்கு

வெளிப்படுத்தி

வாழ வேண்டும்

என்ற நினைப்பில்

தான் வந்திருக்கிறேன்

 

என்னை மறைத்துக்

கொண்டு வாழ

நான் விரும்பவில்லை

 

நீங்கள் செய்வீர்கள்

என்று நம்பி

வந்திருக்கிறேன்

 

உங்களால் செய்ய

முடியும் என்று

வந்திருக்கிறேன்

 

உங்களை அன்னையாக

ஏற்று வந்திருக்கிறேன்

 

என்னை உங்கள்

பிள்ளையாக ஏற்றுக்

கொள்வீர்கள்

என்று வந்திருக்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-808 (சாவேயில்லாத சிகண்டி-142)

 ஜபம்-பதிவு-808

(சாவேயில்லாத

சிகண்டி-142)

 

சிகண்டினி :

காலத்தின் மூலம்

கர்மா என்ற திரை

எப்போது விலகும்

 

ஸ்தூணாகர்ணன் :

காலத்தின் மூலம்

கர்மா என்ற திரை

எப்போது விலகும் என்று

என்னால் சொல்ல

முடியாது

அது கர்மாவின்

விளைவினைப் பொறுத்தது

அது காலத்தைப்

பொறுத்தது

 

ஆனால்

அந்த காட்சிகள் உனக்கு

எதற்காக தெரிகிறது

என்று என்னால்

சொல்ல முடியும்

 

சிகண்டினி :

சொல்லுங்கள்

 

ஸ்தூணாகர்ணன் :

போன ஜென்மத்தில்

நீ செய்த செயல்கள்

உனக்கு காட்சிகளாக

வந்து போகிறது

 

சிகண்டினி :

எனக்கு வரும் காட்சிகள்

போன ஜென்மத்தின்

காட்சிகள் தான் என்று

எப்படி சொல்ல முடியும்

 

போன ஜென்மத்திற்கு

முந்தின ஜென்மத்தில்

நான் செய்த

செயல்களாக இருக்கலாம்

அதற்கு முந்தின

ஜென்மத்தில்

நான் செய்த

செயல்களாக இருக்கலாம்

 

அல்லது

 

அதற்கு பல

ஜென்மங்களுக்கு முன்னால்

நான் செய்த

செயல்களாகக் கூட

இருக்கலாம்

அல்லவா

 

ஸ்தூணாகர்ணன் :

இல்லை

 

நீ கண்ட காட்சிகள்

அனைத்தும் போன

ஜென்மத்தின் காட்சிகள்

மட்டுமே

 

சிகண்டினி :

போன ஜென்மத்தின்

காட்சிகள் என்று

எப்படி உறுதியாகச்

சொல்கிறீர்கள்

 

ஸ்தூணாகர்ணன் :

ஒரு ஜென்மத்தில்

கண்டிப்பாக

செய்து முடித்தே தீர

வேண்டும் என்று

ஆரம்பித்த செயலை

தொட்டு விட்டு

ஒரு சில காரணங்களால்

அந்த ஜென்மத்தில்

அந்த செயலை

முடிக்காமல்

விட்டு விட்டு வந்தால்

அடுத்த ஜென்மத்தில்

எந்த செயலை தொட்டு

விட்டு விட்டு வந்தோமோ

அந்த செயலை

முடிப்பதற்கான

காலம் வரும் போது

அந்த செயல் நமக்கு

கொஞ்சம் கொஞ்சமாக

வெளிப்படும்

 

உனக்கு வந்து

செல்லும் காட்சிகள்

போன ஜென்மத்தில்

கண்டிப்பாக செய்து

முடித்தே தீர

வேண்டும் என்று

நீ தொட்டு 

விட்டு விட்டு

வந்த செயல்களின்

காட்சிகள் தான்

 

இந்த காட்சிகள்

எப்போதிலிருந்து உனக்கு

தெரிய ஆரம்பித்தது

 

சிகண்டினி :

(சிகண்டினி யோசிக்கிறாள்)

 

எனக்கு ஞாபகம்

வந்து விட்டது

 

அரண்மனையை விட்டு

வெளியே வரும் போது

அரண்மனை

வாயிலில் மாட்டி

வைக்கப்பட்டிருந்த

வாடாத தாமரை மாலையை

என்னுடைய கழுத்தில்

மாட்டியதிலிருந்து தான்

இந்த காட்சிகள்

எனக்குத் தெரிகிறது

 

ஸ்தூணாகர்ணன் :

அப்படி என்றால்

உனக்கும் அந்த மாலைக்கும்

ஏதோ ஒரு

சம்பந்தம் இருக்கிறது

 

மாலையைப் பற்றிய

ரகசியத்தைக்

கண்டுபிடித்தாலே

உனக்கு வரும்

காட்சிகள் எதற்காக

வருகிறது

என்ன காரணத்திற்காக

வருகிறது

எந்த விஷயதைச்

சொல்ல வருகிறது

என்பது தெரிந்து விடும்

 

மாலையைப் பற்றி

யாருக்கேனும்

தெரிந்து இருந்தால்

அவர்களிடம் கேட்டும்

ரகசியத்தைத் தெரிந்து

கொள்ளலாம்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-807 (சாவேயில்லாத சிகண்டி-141)

 ஜபம்-பதிவு-807

(சாவேயில்லாத

சிகண்டி-141)

 

ஸ்தூணாகர்ணன் :

இல்லை நாம்

கற்றுக் கொள்ளும் கல்வி

பெறும் அனுபவம்

ஆகிய இரண்டின் மூலம்

அறியாமைத் திரை விலகும்


சிகண்டினி :

ஆனால்

சிலரை

அறிவுள்ளவர்கள் என்றும்

சிலரை

அறிவற்றவர்கள் என்றும்

சொல்கிறோமே

 

ஸ்தூணாகர்ணன் :

கற்றுக் கொள்ளும் கல்வி

பெறும் அனுபவம்

அனைவருக்கும் ஒரே

மாதிரியாக இருக்காது

மனிதருக்கு

மனிதர் வேறுபடும்

அதனால் தான்

வெளிப்படும் அறிவும்

மனிதருக்கு

மனிதர் வேறுபடுறது

 

வெளிப்படும் அறிவின்

தன்மையைப் பொறுத்து

மனிதர்களில் சிலரை

அறிவுள்ளவர்கள் என்றும்

அறிவற்றவர்கள் என்றும்

சொல்கிறோம்

 

சிகண்டினி :

கடந்த சில

மாதங்களாகவே

ஒரே நிகழ்வுகளைக் கொண்ட

சில காட்சிகள்

எனக்கு அடிக்கடி வந்து

போய்க் கொண்டே

இருக்கிறது

 

உறங்கும் போதும் சரி

விழித்திருக்கும்

போதும் சரி

கடவுளை வணங்கும்

போதும் சரி

தவம் செய்யும்

போதும் சரி

அந்த காட்சிகள் எனக்கு

அடிக்கடி தெரிந்து

கொண்டே இருக்கிறது

 

அந்தக் காட்சிகளை

முதலில் நான்

சாதாரணமாகத் தான்

எடுத்துக் கொண்டேன்

ஆனால்

நாட்கள் ஓட ஓடத்தான்

எனக்குத் தெரிந்தது

அந்தக் காட்சிகள்

சாதாரணமான காட்சிகள்

இல்லை என்று

 

ஏதோ ஒன்றை எனக்கு

சொல்ல வரும்

காட்சிகள் என்று

 

அந்தக் காட்சிகள்

என்ன சொல்ல வருகிறது

என்பதைக் கண்டுபிடிக்க

நான் எவ்வளவோ

முயற்சிகள் செய்தேன்

என்னால் கண்டுபிடிக்கவே

முடியவில்லை

 

ஸ்தூணாகர்ணன் :

அந்தக் காட்சிகள் உன்னைப்

பற்றியதாகவும் இருக்கலாம்

உன்னுடன்

சம்பந்தப்பட்டதாகவும்

இருக்கலாம்

 

சிகண்டினி :

அதைத் தான் என்னால்

கண்டுபிடிக்க

முடியவில்லையே

 

அந்தக் காட்சிகள்

எனக்கு என்ன சொல்ல

வருகிறது என்று

தெரியவில்லையே

 

அந்தக் காட்சிகள்

தெளிவில்லாமல் பார்க்க

முடியாத வகையில்

இருப்பதாலும்

முழுமையான நிகழ்வுகளாக

இல்லாமல் இருப்பதாலும்

வார்த்தைகள் சரியாக

கேட்காமல் இருப்பதாலும்

தான் அந்த காட்சிகள்

என்ன சொல்ல வருகிறது

என்பதை என்னால்

கண்டு பிடிக்க

முடியவில்லை

 

எனக்குள் என்ன தான்

நடந்து கொண்டிருக்கிறது

 

எனக்குள் எழுகின்ற

காட்சியை

மறைத்து வைத்திருக்கும்

திரை எது

 

ஸ்தூணாகர்ணன் :

உனக்குள் எழுகின்ற

காட்சியை கர்மா

என்ற திரை மறைத்து

வைத்திருக்கிறது

 

சிகண்டினி :

கர்மா என்ற திரை

எதனால் விலகும்

 

எப்போது விலகும்

 

அந்த காட்சி எனக்கு

எப்போது வெளிப்படும்

 

அந்த காட்சியை எப்போது

நான் தெளிவாகப்

பார்க்க முடியும்

புரிந்து கொள்ள முடியும்

 

ஸ்தூணாகர்ணன் :

உனக்குள் எழுகின்ற

காட்சியை

மறைத்து வைத்திருக்கும்

கர்மா என்ற திரை

காலத்தின் மூலம்

விலகும் போது

உனக்குள் எழுகின்ற

காட்சி வெளிப்படும்

 

அப்போது அந்த

காட்சிகள் உனக்குத்

தெளிவதாகத் தெரியும்

 

அப்போது அந்த

காட்சிகள் உனக்கு

எதற்காக ஏற்பட்டது

என்பதைப் புரிந்து

கொள்வாய்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////