August 11, 2022

ஜபம்-பதிவு-848 (சாவேயில்லாத சிகண்டி-182)

 ஜபம்-பதிவு-848

(சாவேயில்லாத

சிகண்டி-182)

 

யுதிஷ்டிரன் :

சிகண்டி

நாளை அர்ஜுனனுடைய

தேரில் ஏறிக்கொள்

அர்ஜுனன் உனக்கு

துணைக்கு வருவான்

தேரோட்டியாக

கிருஷ்ணர் வருவார்

 

நாளை நீ பீஷ்மரை

வீழ்த்தியே

ஆக வேண்டும்

 

சிகண்டி :

நாளை

குருக்ஷேத்திரத்தில்

நடக்கப் போகும்

பத்தாம் நாள் போரில்

பீஷ்மரை வீழ்த்துவேன்

 

நாளை

இந்த சிகண்டிக்கும்

பீஷ்மருக்கும்

இடையே நடக்கப்போகும்

போர் தான்

பீஷ்மன் தன்

வாழ்நாளில்

செய்யப்போகும்

கடைசிப் போர்

 

யுதிஷ்டிரன் :

பீஷ்மர் வீழ்ந்தார் என்ற

செய்திக்காகக் காத்துக்

கொண்டிருப்பேன்

 

சிகண்டி :

சிகண்டி கையால்

பீஷ்மன் வீழ்ந்தான்

என்ற செய்தி

உங்களுக்குக்

கிடைக்கும்

விடை பெறுகிறேன்

 

என்று சொல்லி

விட்டு சிகண்டி

பாண்டவர்கள்

கூடாரத்தை விட்டு

வெளியேறினான்)

 

குருக்ஷேத்திரத்தில்

பத்தாம் நாள் போர்

 

அர்ஜுனனுடைய தேரில்

அர்ஜுனனும்

சிகண்டியும் ஒரே

தேரில் ஏறிக் கொண்டு

போர்க்களத்தில்

அனைத்துத்

தடைகளையும்

கடந்து சென்று

பீஷ்மரை நெருங்கிக்

கொண்டிருக்கும்

காரணத்தைத்

தெரிந்து கொண்ட

துரியோதனன்

 

சிகண்டியும் பீஷ்மரும்

பீஷ்மரை மேலும்

நெருங்காமல் இருக்க

வேண்டும் என்பதற்காக

அதிக அளவில்

பாதுகாப்பை

பலப்படுத்தினான்

 

துரியோதனனால்

உண்டாக்கப்பட்ட

பாதுகாப்பு

ஏற்பாடுகளையும்

தகர்த்தெறிந்து

அர்ஜுனனும்

சிகண்டியும் பீஷ்மரை

நோக்கி முன்னேறி

சென்றனர்

 

கிருஷ்ணன்

தேரை பீஷ்மருக்கு

நேருக்கு நேராக

கொண்டு சென்று

நிறுத்தினார்

 

பீஷ்மர் :

ஜென்மங்கள்

கடந்து வந்தும்

உன்னுடைய கோபம்

இன்னும்

தணியவில்லையா

அம்பையே

 

சிகண்டி :

பாதிக்கப்பட்டவளின்

கோபம்

பழிவாங்காமல்

தணியாது

 

பீஷ்மர் :

கோபத்தால் உனக்கு

என்ன கிடைத்தது

வாழ்க்கையை வாழாமல்

வாழ்க்கையை

இழந்து நிற்கிறாய்

 

சிகண்டி :

கோபத்தால்

என்னுடைய வாழ்க்கையை

நான் இழக்கவில்லை

வாழ்க்கையை

இழந்ததால் தான்

எனக்கு

கோபமே வந்தது

 

பீஷ்மர் :

கோபத்தால்

எதை எல்லாம்

செய்யக்கூடாதோ

அதை எல்லாம் செய்து

கொண்டிருக்கிறாய்

 

சிகண்டி :

எதை செய்ய

வேண்டும் என்று

நினைத்தேனோ

அதை என்னால்

செய்ய முடியவில்லையே

 

பீஷ்மர் :

இப்போது என்ன

செய்ய வந்திருக்கிறாய்

 

சிகண்டி :

உன்னுடன் போர்

புரிந்து உன்னை

வீழ்த்த வந்திருக்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-847 (சாவேயில்லாத சிகண்டி-181)

 ஜபம்-பதிவு-847

(சாவேயில்லாத

சிகண்டி-181)

 

நான் இருக்கிறேன்

என்பவர்களுக்கு

இருப்பவன் நான்

நான் இல்லை

என்பவர்களுக்கு

இல்லாதவன் நான்

என்னை

உணர்ந்தவர்களுக்கு

என்றும் இருப்பவன் நான்

 

பக்தர்களின்

தேவைகளை எல்லாம்

கொடுப்பவனல்ல

பக்தர்களின் தேவை

அறிந்து

கொண்டுப்பவன் நான்

 

எது எப்போது

எந்த காலத்தில்

எந்த நேரத்தில்

எந்த இடத்தில்

எந்த சூழ்நிலையில்

நடக்க வேண்டுமோ

அதை நடத்துபவன் நான்

 

எது நடக்க வேண்டும்

எது நடக்கக் கூடாது

 

எது முடிய வேண்டும்

எது முடியக் கூடாது

 

எது கிடைக்க வேண்டும்

எது கிடைக்கக் கூடாது

 

எது பிறக்க வேண்டும்

எது பிறக்கக் கூடாது

 

எது இருக்க வேண்டும்

எது இருக்கக் கூடாது

 

எது வாழ வேண்டும்

எது வாழக் கூடாது

 

என்பதை

நிர்ணயிப்பவன் நான்

 

காலத்தால்

கணிக்க முடியாத

குருக்ஷேத்திரப் போரை

நடத்திக்

கொண்டிருப்பவன் நான்

 

நிகழ வேண்டியது

தடுக்கப்படுமானால்

அது நிகழ்வதற்கு

கரம் கொடுப்பவன் நான்

 

மிகப்பெரிய நிகழ்வையே

நடத்தப் போகிறவன் நீ

உனக்கு கரம்

கொடுக்க மாட்டேனா

 

வெளிப்பட

வேண்டிய தர்மத்தை

வெளிப்பட விடாமால்

தடுப்பாக இருந்து

தடுத்துக் கொண்டிருப்பவரை

தகர்க்கப் போகிறவருக்கு

துணையாக

இருக்க மாட்டேனா

 

உடல் இயங்குவதற்கு

மூச்சுக் காற்றாக

இருக்கும் நான்

உலகமே நிம்மதி

பெருமூச்சு விடுவதற்கு

காரணமாக

இருக்கப் போகும்

உனக்கு

தேரோட்டியாக

இருக்க மாட்டேனா

 

மரணமற்றவனுக்கு

மரணத்தையே

பரிசாசத் தரப்

போகிறவனுக்கு

தேரோட்டியாக

இருக்க மாட்டேனா

 

சிகண்டியே

நாளை நடக்கப்போகும்

போரில்

இந்த கடவுளாகிய

கிருஷ்ணனே

உனக்கு தேரோட்டியாக

இருக்கப்போகிறான்

உலகத்திலேயே

சிறந்த வில் வீரனான

அர்ஜுனன் உனக்கு

பாதுகாவலனாக

வரப்போகிறான்

 

யாருக்கும் கிடைக்காத

இந்தப் பெருமை

உனக்குக் கிடைத்து

இருக்கிறது

 

இதை விட உனக்கு

வேறு என்ன வேண்டும்

சொல் செய்கிறேன்

 

சிகண்டி :

பரந்தாமா

உங்கள் கருணையே

கருணை

எனக்கு இதுவே

போதும்

 

இதை விட வேறு

என்ன பாக்கியம்

எனக்கு கிடைக்கப்

போகிறது

 

அனைத்தும்

அறிந்தவர் நீங்கள்

முக்காலமும்

உணர்ந்தவர் நீங்கள்

அனைத்தையும்

ஆட்டுவிப்பவர் நீங்கள்

நல்லதை

நடத்துபவர் நீங்கள்

கெட்டதை

அழிப்பவர் நீங்கள்

 

நடப்பதும் நடக்காததும்

உங்கள் கைகளில்

தான் இருக்கிறது

பிறப்பதும் இறப்பதும்

நீங்கள் இல்லாமல்

நடப்பதும் இல்லை

நீங்கள் இன்றி இந்த

உலகத்தில் எந்த

ஒன்றும்

அசைவதும் இல்லை

 

உங்களுக்கு

தெரியாதது

எதுவும் இல்லை

நான் சொல்லித் தான்

நீங்கள் தெரிந்து

கொள்ள வேண்டிய

அவசியமும் இல்லை

 

எது நல்லது

எது கெட்டது

என்பது

உங்களுக்கு தெரியும்

எதை செய்ய வேண்டும்

எதை செய்யக் கூடாது

என்பது

உங்களுக்கு தெரியும்

 

நீங்கள் இயக்குபவர்

நான் இயங்குபவன்

நீங்கள் கட்டளையிடுபவர்

நான் செயல்படுத்துபவன்

 

நீங்கள் என்னுடன்

இருந்தாலே போதும்

அனைத்தும் வெற்றியில்

தான் முடியும்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-846 (சாவேயில்லாத சிகண்டி-180)

 ஜபம்-பதிவு-846

(சாவேயில்லாத

சிகண்டி-180)

 

யுதிஷ்டிரன் :

அர்ஜுனன் உன்னுடன்

உன்னுடைய தேரில் ஏறி

வருவதில் உனக்கு

ஆட்சேபனையேதும்

இல்லையே

 

சிகண்டி :

ஆட்சேபனை இருக்கிறது

 

யுதிஷ்டிரன் :

எதற்காக ஆட்சேபனை

செய்கிறாய்

 

சிகண்டி :

என்னுடைய தேரில்

அர்ஜுனன் ஏறிக்கொள்ள

வேண்டாம் என்கிறேன்

அர்ஜுனனுடைய தேரில்

நான் ஏறிக்கொள்கிறேன்

என்கிறேன்

 

தேரோட்டியாக

கிருஷ்ணரே வர

வேண்டும் என்கிறேன்

 

கிருஷ்ணன் :

நீ செய்யும் தவறில்

என்னை ஏன்

சேர்த்துக் கொள்கிறாய்

 

சிகண்டி :

குருக்ஷேத்திரத்தில்

இருப்பவர்களில்

இரண்டே இரண்டு

பேர் தான்

சிறந்த தேரோட்டிகள்

ஒன்று கிருஷ்ணன்

இரண்டு சல்லியன்

 

சல்லியன் கௌரவர்கள்

பக்கத்தில் இருக்கிறார்

 

அதனால் தான்

நான் கிருஷ்ணரை

எனக்கு தேரோட்டியாக

வரச் சொல்கிறேன்

 

கிருஷ்ணன் :

சிகண்டி

உனக்கும் நான்

தான் தேரோட்டியா

 

உனக்கு நான்

தேரோட்ட வேண்டுமா

 

சிகண்டி :

உலகத்திலேயே சிறந்த

வில் வீரனான

அர்ஜுனனுக்குத் தான்

தேரோட்டுவீர்களா

 

எனக்காகத்

தேரோட்ட மாட்டீர்களா

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

மாற்றுப் பாலினமான

எனக்கு

தேரோட்ட வேண்டுமா

என்று நினைக்கிறீர்களா

 

எனக்குத் தேரோட்டுவதை

இழிவாகக் கருதுகிறீர்களா

 

அறிவு அழகு

திறமை இருந்தும்

மாற்றுப் பாலினமாக

இருக்கும் எங்களை

மனிதர்களில்

ஒருவராகவே

ஏற்றுக் கொள்ள

இந்த மக்கள்

மறுக்கிறார்கள் என்றால்

கடவுளாகிய

நீயுமா எங்களை

ஏற்றுக் கொள்ள

மறுக்கிறாய்

 

மனிதர்கள் எங்களை

ஏற்றுக் கொள்ள

மறுத்தாலும்

கடவுளாக இருக்கும் நீ

எங்களைக்

காப்பாற்றுவாய்

என்று நம்பித் தானே

உங்களை நாங்கள்

வணங்கிக்

கொண்டிருக்கிறோம்

 

மனிதர்கள் எங்களைக்

கைவிட்டாலும்

கடவுளாக இருந்து

காப்பாற்ற வேண்டிய

நீயே எங்களை

கைவிட்டால் எப்படி

 

பாண்டவர்கள் போரில்

வெற்றி பெற வேண்டும்

என்பதற்காக

தன்னுடைய

தலையைத்

தானே வெட்டி

காளிக்குப் படைத்து

களப்பலியான

அரவானுக்காக

ஆணிலிரு;ந்து

பெண்ணாக

திருநங்கையாக

மாறினாயே

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

எனக்காகத்

தேரோட்ட மாட்டாயா

 

பீஷ்மனைக்

கொல்வதற்கு

எனக்கு வழியை

ஏற்படுத்தித்

தர மாட்டாயா

 

என்னுடைய சபதத்தை

நிறைவேற்ற

உதவ மாட்டாயா

 

போன ஜென்மத்துப்

பகையை இந்த

ஜென்மத்துடன் முடித்து

வைக்க மாட்டாயா

 

கிருஷ்ணன் :

சிகண்டியே

ஆண் பெண்

மாற்றுப் பாலினம்

என்ற வேறுபாடும்

உயர்ந்தவர் தாழ்ந்தவர்

என்ற பிரிவும்

நல்லவர் கெட்டவர்

என்ற பாகுபாடும்

எனக்குக் கிடையாது

 

என்னை நம்பி

பக்தியுடன்

வணங்குகிறவர்களுக்கு

அவர்களுடைய

கர்மவினைகளுக்கு ஏற்ப

அருளைக்

கொடுப்பவன் நான்

 

என்னையே நம்பி

சரணாகதி

அடைந்தவர்களுக்கு

அவர்களுடைய கர்ம

வினைகளைக் கடந்து

அருளைக்

கொடுப்பவன் நான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////