August 24, 2022

ஜபம்-பதிவு-864 (சாவேயில்லாத சிகண்டி-198)

ஜபம்-பதிவு-864

(சாவேயில்லாத

சிகண்டி-198)

 

உயிர் உடலை

விட்டு கொஞ்சம்

கொஞ்சமாக சென்று

கொண்டிருக்கிறது

என்று தெரிந்த

பின்னும் சண்டை

போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

மரணமற்றவனான

அஸ்வத்தாமன்

தன்னுடைய

வாளை சிகண்டியின்

இதயத்தினுள்

ஆழமாகச்

செருகினான்

 

சிகண்டி இறந்து

விட்டான் என்பது

உறுதியாகத் தெரியும்

வரை தன்னுடைய

வாளால் சிகண்டியை

குத்திக் கொண்டே

இருந்தான்

அஸ்வத்தாமன்

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறி

மாபெரும்

சரித்திரத்தைப்

படைத்த சிகண்டி

இறந்து விட்டான்

 

யாராலும்

செய்ய முடியாத

சாதனையைப்

படைத்த

சிகண்டி

இறந்து விட்டான்

 

உறங்கிக் கொண்டிருந்த

திருஷ்டத்யும்னன்

திரௌபதியின்

ஐந்து மகன்கள்

சிகண்டி மற்றும்

பலரை

அஸ்வத்தாமன்

கொன்று விட்டான்

என்ற செய்தி கேட்டு

பஞ்ச பாண்டவர்கள்,

கிருஷ்ணன்

ஆகியோர்

வருவதற்குள்

அனைத்தும்

முடிந்து விட்டது

 

அந்த இடமே

தீயினால் கருகி

பொட்டல் வெளியாக

மாறி

விட்டிருந்தது

பிணங்கள் குவிந்து

கிடந்தன

அழுகைக் குரல்

மட்டுமே எங்கும்

ஒலித்துக்

கொண்டிருந்தது

 

அஸ்வத்தாமனின்

கொலைவெறித்

தாக்குதலினால்

அந்த இடமே

போர்க்களம் போல்

காட்சியளித்துக்

கொண்டிருந்தது

 

சிகண்டியின் உடல்

மீது விறகுக்

கட்டைகளை

அடுக்கி வைத்து

எரிப்பதற்காக

கிருஷ்ணன்

காத்துக்

கொண்டிருந்த போது

பஞ்ச

பாண்டவர்களும்

அங்கு வந்து

சேர்ந்தனர்

 

பீமன் :

சிகண்டியின் மீது

ஏன் இவ்வளவு

அக்கறை

காட்டுகிறீர்கள்

 

தனிப்பட்ட

முறையில்

தாங்களே அவனுக்கு

மரியாதை

செலுத்துகிறீர்களே

அதற்குத்

தகுதியுடையவனா

அந்த சிகண்டி

 

கிருஷ்ணன் :

தனிப்பட்ட முறையில்

மரியாதை

செலுத்துவதற்கு

தகுதியுடையவன் தான்

அந்த சிகண்டி

 

தகுதியுடையவர்களுக்குரிய

மரியாதையை

நாம் செலுத்தாத

காரத்தினால் தான்

தகுதியற்றவர்கள்

இந்த உலகத்தில்

அதிக அளவில்

தோன்றி விட்டார்கள்

 

பீமன் :

தனிப்பட்ட மரியாதை

செலுத்தும் அளவிற்கு

சிகண்டி

அப்படி என்ன

செய்து விட்டான்

யாராலும் செய்ய

முடியாததையா

செய்து விட்டான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 


ஜபம்-பதிவு-863 (சாவேயில்லாத சிகண்டி-197)

 ஜபம்-பதிவு-863

(சாவேயில்லாத

சிகண்டி-197)

 

அஸ்வத்தாமன் :

சிகண்டி

 

நீ பாண்டவர்களைப்

போல கோழை அல்ல

வீரன் என்பதை

நிரூபித்துக்

கொண்டிருக்கிறாய்

 

பீஷ்மரையே எதிர்த்து

பீஷ்மருடன்

போரிட்டவனல்லவா நீ

உன்னிடம் வீரம்

விளையாடுவதில்

வியப்பில்லை

 

உண்மையிலேயே

நீ ஒரு சிறந்த

வீரன் தான்

 

மரணமற்றவனுக்கு

மரணத்தையே

பரிசாகத் தந்தவன்

அல்லவா நீ

நானும்

மரணமற்றவன் தான்

என்னை உன்னால்

கொல்ல முடியுமா

என்று பார்க்கிறேன்

 

சிகண்டி :

பீஷ்மரை வீழ்த்த

வேண்டும்

என்று சிவனிடம் வரம்

வாங்கி வந்தேன்

அதனால் அவரை

வீழ்த்தினேன்

 

உன்னைக்

கொல்வதற்கு

நான் எந்த வரமும்

வாங்கி

வரவில்லையே

 

மரணமற்றவனை

என்னால் எப்படி

கொல்ல முடியும்

ஆனால் ஒன்று

இந்த சிகண்டியின்

உடலில்

உயிர் இரூக்கும்

வரைக்கும்

உன்னை எதிர்த்துப்

போரிடுவேன்

 

மரணமற்றவனுக்கு

மரணத்தையே

பரிசாகத் தந்த

எனக்கு

மரணமற்றவனால்

தான் மரணம்

என்றால்

அதை யாராலும்

மாற்ற முடியாது

 

அஸ்வத்தாமன் :

என்னுடைய

கையால்நீ

சாகப்போகிறாய்

 

உன்னுடைய

வாழ்க்கைக்கு

முகவுரையை யார்

எழுதினார்கள் என்று

எனக்குத் தெரியாது

ஆனால்

உன் வாழ்க்கையின்

முடிவுரையை

நான் தான்

எழுதப்போகிறேன்

 

வா

சிகண்டி

இறப்பதற்கு

என்னிடம் வா

இறப்பைப்

பரிசாகத்

தருகிறேன் வா

மரண

அன்னையை

முத்தமிட வா

 

(இருவருக்கும்

இடையே

கடுமையான சண்டை

தொடர்ந்து

நடைபெற்றது

 

இரத்தம்

சொட்ட சொட்ட

சண்டை போட்டுக்

கொண்டு இருந்தான்

சிகண்டி

 

எதற்கும் கலங்காமல்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

அஞ்சாமல் சண்டை

போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

உயிரைப் பற்றிக்

கவலைப்படாமல்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

இறக்கப் போகிறோம்

என்று தெரிந்தும்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

வாழ்க்கையின்

இறுதி நிமிடங்கள்

வந்து விட்டது என்று

தெரிந்த பிறகும்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-862 (சாவேயில்லாத சிகண்டி-196)

 ஜபம்-பதிவு-862

(சாவேயில்லாத

சிகண்டி-196)

 

இந்த உண்மையை

மறைத்து

பாண்டவர்களும் அந்த

கபடவேடதாரி 

கிருஷ்ணனும்

இணைந்து

குருக்ஷேத்திரப் போர்

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைப்பதற்காக

நடத்தப்பட்ட போர்

என்று பொய் சொல்லி

இந்த உலகத்தையே

நம்ப வைத்து

விட்டனர்

 

உண்மையில்

குருக்ஷேத்திரப் போர்

அஸ்தினாபுரத்தைக்

கைப்பற்றி ஆள

வேண்டும்என்ற

ஆசையினால்

பாண்டவர்கள்

எடுத்த போர் தான்

 

பல நாட்டு

மன்னர்கள்

இறப்பதற்கும்

பல லட்சக்கணக்கான

மக்கள்

இறப்பதற்கும்

பெண்கள்

விதவைகளாக

ஆனதற்கும்

பிள்ளைகளுக்கு

தந்தை

இல்லாமல்

போனதற்கும்

பெரும் பொருட்செலவு

உயிர் இழப்பு

ஆகியவை

ஏற்பட்டதற்கும்

காரணமே

பாண்டவர்களுக்கு

அஸ்தினாபுரத்தின்

அரியணையின் மேல்

மேல் ஏற்பட்ட

ஆசை தான்

 

திரௌதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைக்கப்போகிறோம்

தர்மத்தை

நிலைநாட்டப்

போகிறோம்

என்று பொய்

பேசிக் கொண்டு

குருக்ஷேத்திரப்

போரின் மூலம்

அனைத்தையும்

அழித்து விட்டனர்

 

இதற்கு மேல்

அழிப்பதற்கு இந்த

உலகத்தில்

எதுவும்இல்லை

என்ற நிலையை

பாண்டவர்கள்

உருவாக்கி

வைத்து விட்டனர்

 

செய்த போரைக்

கூட பாண்டவர்கள்

நேர்மையாக

செய்யவில்லை

நேர்மையற்று தான்

செய்தார்கள்

சூழ்ச்சிகளைப்

பயன்படுத்தித் தான்

போர் செய்தார்கள்

போர் விதிமுறைகளை

மீறித் தான் போர்

செய்தார்கள்

 

பாண்டவர்கள்

பெரும்பாலும்

ஆயுதம் ஏந்தி போர்

செய்தவர்களை

கொல்லவில்லை

ஏனென்றால்

ஆயுதம் ஏந்தி

அவர்களை

எதிர்த்தவர்களை

அவர்களால் கொல்ல

முடியவில்லை

 

ஆயுதம் இல்லாமல்

நிராயுதபாணியாக

இருந்தவர்களைத்

தான் அவர்களால்

கொல்ல முடிந்தது

என்பதற்கு

துரோணரின்மரணம்

கர்ணனின்மரணம்
ஆகியவையே சாட்சி

 

சிகண்டியே

பாண்டவர்களைப் போல்

நான் கோழை அல்ல

ஒரு வீரன்

 

நிராயுதபாணியாக

நிற்கும் உன்னைக்

கொல்ல மாட்டேன்

நீ வீரனாக இருந்தால்

வாளை

எடுத்துக் ‘கொள்

முடிந்தால்

மரணம் உன்னைத்

தழுவாமல்

உன்னைப்

பார்த்துக் கொள்

உன்னுடைய உயிரைக்

காப்பாற்றிக் கொள்

 

(இருவருக்குமிடையே

பயங்கரமாக

வாட் போர்

நடைபெற்றுக்

கொண்டிருந்தது

 

இரண்டு யானைகள்

மோதிக் கொண்டால்

எப்படி இருக்குமோ

அப்படி

இருவருக்குமிடையே

சண்டை நடைபெற்றது

 

வாட்கள்

இரண்டும் உரசியதால்

நெருப்புப் பொறி

கிளம்பியது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-861 (சாவேயில்லாத சிகண்டி-195)

 ஜபம்-பதிவு-861

(சாவேயில்லாத

சிகண்டி-195)

 

அஸ்வத்தாமன் :

இல்லை

இல்லவே இல்லை

 

குருக்ஷேத்திரப் போர்

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைப்பதற்காக

நடைபெற்ற

போர் கிடையாது

 

அஸ்தினாபுரத்தின்

அரியணையின்

மேல் உள்ள

ஆசையால்

பாண்டவர்களால்

நடத்தப்பட்டபோர்

 

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைக்க வேண்டும்

என்றுபாண்டவர்கள்

முடிவெடுத்திருந்தால்

திரௌபதிக்கு

அவமானத்தை

ஏற்படுத்தியவர்களாகக்

கருதப்படும்

துரியோதனன்

துச்சாதானன்

கர்ணன்

ஆகியோர்களை

பாண்டவர்கள்

நேருக்கு

நேர் நின்று

போர் செய்யும்

தனிப்போருக்கு

அழைத்திருக்க

வேண்டும்

 

அவர்களுடன்

பாண்டவர்கள்

நேருக்கு நேராக

நின்று போரிட்டு

இருக்க வேண்டும்

அவர்களைக்

கொன்று

இருக்க வேண்டும்

 

அவர்கள் அவ்வாறு

செய்து இருந்தால்

பாண்டவர்களுக்கு

நேர்ந்த

அவமானமும்

துடைக்கப்பட்டிருக்கும்

திரௌதிக்கு நேர்ந்த

அவமானமும்

நீக்கப்பட்டிருக்கும்

திரௌபதியின்

சபதமும்

நிறைவேறியிருக்கும்

 

ஆனால்

அவர்கள் அவ்வாறு

செய்யவில்லை

 

ஏனென்றால்

அவர்களுடைய எண்ணம்

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைப்பது இல்லை

 

அவர்களுடைய எண்ணம்

அஸ்தினாபுரத்தின்

அரியணையைக்

கைப்பற்றுவது தான்

 

அஸ்தினாபுரத்தை

அரசாள்வது தான்

 

அதனால் தான்

பாண்டவர்கள்

போரே எடுத்தார்கள்

 

போர் நடந்தால் தான்

பாண்டவர்களால்

கௌரவர்கள்

அனைவரையும்

கொல்ல முடியும்

கௌரவர்களைச்

சார்ந்தவர்கள்

அனைவரையும்

கொல்ல முடியும்

கௌரவர்களை

முற்றிலுமாக

அழிக்க முடியும்

 

கௌரவர்களையும்

கௌரவர்களைச்

சார்ந்தவர்களையும்

முற்றிலுமாக

அழித்தால் மட்டுமே

பாண்டவர்களால்

அஸ்தினாபுரத்தைக்

கைப்பற்ற முடியும்

அப்போது தான்

அஸ்தினாபுரத்தை

ஆள முடியும்என்ற

காரணத்தினால் தான்

குருக்ஷேத்திரப்

போரையே

நடத்தினார்கள்

 

பாண்டவர்கள்

அஸ்தினாபுரத்தின் மேல்

உள்ள ஆசையினால்

தான் போர்

செய்தார்கள்

 

அஸ்தினாபுரத்தைக்

கைப்பற்ற வேண்டும்

என்ற ஆசையினால்

தான் போர்

செய்தார்கள்

 

அஸ்தினாபுரத்தை

ஆள வேண்டும் என்ற

ஆசையினால் தான்

போர் செய்தார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////