August 01, 2023

பெண்ணின் பெருமை-(9)- அரிச்சந்திரன் பொய்யே சொல்லாதவன் என்ற பெயர் வரக் காரணமே சந்திரமதி தான் – 01-08-2023

 பெண்ணின் பெருமை-(9)- அரிச்சந்திரன் பொய்யே சொல்லாதவன் என்ற பெயர் வரக் காரணமே சந்திரமதி தான் – 01-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

அரிச்சந்திரன்

பொய்யே சொல்லாதவன்

என்று ஊருக்கே

தெரியும்

 

அரிச்சந்திரன்

பொய்யே சொல்லாதவன்

என்ற பட்டம்

வாங்கக் காரணமாக

இருந்ததே

சந்திரமதி தான்

என்பதை

அறிந்து கொள்வோம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 01-08-2023

------- செவ்வாய்க் கிழமை

 

///////////////////////////////////////////////////////



பெண்ணின் பெருமை-(8)-கண்ணகியை விட மாதவி தான் கற்புக்கரசியாக போற்றப்பட வேண்டியவள்-31-07-2023

 

பெண்ணின் பெருமை-(8)-கண்ணகியை விட மாதவி தான் கற்புக்கரசியாக போற்றப்பட வேண்டியவள்-31-07-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆண்டாண்டு காலமாக

கண்ணகியைத் தான்

கற்புக்கரசி என்று

சொல்லிக் கொண்டு

வருகிறோம்

 

கண்ணகியை விட

மாதவி

கற்பில் உயர்ந்தவள்

கற்புக்கரசி என்று

சொல்லலாம்

ஏன் என்பதற்கான

காரணத்தை

இப்போது பார்ப்போம்

  

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 31-07-2023

------- திங்கட் கிழமை

 

///////////////////////////////////////////////////////




July 30, 2023

பாஞ்சாலியின் சபதத்தைவிட, அம்பையின் சபதம் உயர்ந்தது-30-07-2023

 பெண்ணின் பெருமை-(7)-பாஞ்சாலியின் சபதத்தைவிட, அம்பையின் சபதம் உயர்ந்தது-30-07-2023

அன்பிற்கினியவர்களே!

 

மகாபாரதத்தில்

பலபேர்கள் சபதம் எடுத்தார்கள்

அதில் நாம் அதிகமாக

படித்தது கேட்டது பார்த்தது

பாஞ்சாலியின் சபதம்

ஆனால் பாஞ்சாலி சபதத்தை விட

உயர்ந்த சபதம்

அம்பையின் சபதம்

 

எந்த வகையில்

அம்பையின் சபதம்

உயர்ந்தது என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 30-07-2023

------- ஞாயிற்றுக் கிழமை

 

///////////////////////////////////////////////////////

பாஞ்சாலி சபதத்தை விட

அம்பையின் சபதம் உயர்ந்தது

இணையதள முகவரி

https://www.youtube.com/watch?v=c_GmZ8CSCGs




July 25, 2023

தென்காசி சரித்திரம்-(7)-மறைந்திருக்கும் உண்மைகள்-(5)- தாவரங்கள்-வனிதா தேவி-24-07-2023

 தென்காசி சரித்திரம்-(7)-மறைந்திருக்கும் உண்மைகள்-(5)-

தாவரங்கள்-வனிதா தேவி-24-07-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்

இலஞ்சி ஊரில்

மருத்துவம் குணம் கொண்ட மரங்கள்

மூலிகைகள்

செடிகள்

ஆறுகள்

ஆகியவற்றின் 

விசேஷங்கள்

வரலாற்று உண்மைகள்

ஆகியவற்றை

வனிதா தேவி

AGRICULTURAL OFFICER,

அவர்கள்

விவரிக்கிறார்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 24-07-2023

------- திங்கட் கிழமை

 

///////////////////////////////////////////////////////

வனிதா தேவி அவர்கள்

மரங்கள்

மூலிகைகள்

செடிகள்

ஆறுகள்

ஆகியவற்றைப்பற்றி

அதன்

தன்மைகள்,

சிறப்புகள்,

விசேஷங்கள்

ஆகியவற்றைப்பற்றி

பேசி இருக்கிறார்

அதைத் தெரிந்து கொள்ள

கீழே உள்ள

YOU TUBE

முகவரிக்கு செல்லவும்

நன்றி

 

https://www.youtube.com/watch?v=yFsDm1OsXLY








July 23, 2023

குடைவரைக் கோயில்-(7)-மலையடிக்குறிச்சி குடைவரைக் கோயில்-23-07-2023

 

குடைவரைக் கோயில்-(7)-மலையடிக்குறிச்சி 

குடைவரைக் கோயில்,

மரகதவள்ளி சமேத மகாதேவர் 

குடைவரைக் கோயில்-23-07-2023

 

அன்பிற்கினியவர்களே!


புளியங்குடியிலிருந்து 7 கிலோ மீட்டரில்

தாருகாபுரம் என்னும் சிற்றூருக்கு அருகில்

மலையடிக்குறிச்சி என்ற ஊர் உள்ளது

இந்த ஊரின் வடக்கிலுள்ள மலைக்குன்றின்

அடிவாரத்தில் இந்தக்

குடைவரைக் கோயில் அமைந்துள்ளது

 

இந்தக் குடைவரைக் கோயில்

மலையடிக்குறிச்சி குடைவரைக் கோயில்

அல்லது

மரகதவள்ளி சமேத மகாதேவர் குடைவரைக் கோயில்

என்று அழைக்கப்படுகிறது

 

மலையடிக் குறிச்சி குடைவரைக் கோயிலின்

சிறப்புகள்

விசேஷங்கள்

வரலாற்று உண்மைகள்

ஆகியவற்றைப்

பற்றிப் பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 23-07-2023

------- ஞாயிற்றுக் கிழமை

 

///////////////////////////////////////////////////////

மலையடிக் குறிச்சி

குடைவரைக்கோயிலைப் பற்றியும்

அதன்

தன்மைகள்,

சிறப்புகள்,

விசேஷங்கள்

ஆகியவற்றை தெரிந்து கொள்ள

கீழே உள்ள

YOU TUBE

முகவரிக்கு செல்லவும்

நன்றி


https://www.youtube.com/watch?v=W34Z_btY2LU






March 05, 2023

பதிவு-6- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-6- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இளமை ராகம் இதய வீணையில் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் !

பருவ ராகம் பள்ளி யறையில் எழுதி வைக்கப்பட்ட கவிதை !

கன்னி ராகம் கண்களின் ஓரத்தில் காட்டப் பட்ட காட்சி !

அழகு ராகம் ஆசையின் பிம்பத்தில் வார்க்கப் பட்ட நிழல் !

அன்பு ராகம் ஆசையின் அரவணைப்பில் பொறித்து வைக்கப்பட்ட பொதிகைச்சாரல் !

இசை ராகம் இளமை ஊஞ்சலில் மாட்டி வைக்கப்பட்ட காவியம் !

சோக ராகம் துன்பத்தின் சுமையில் முடித்து வைக்கப்பட்ட இன்பம் !

ஆசை ராகம் அழகின் ஆராதனையில் அனுபவிக்கப்பட்ட உண்மை நிஜம் !

கல்வி ராகம் அறிவின் சிகரத்தில் நாட்டப்பட்ட ஞானக் கொடி !

சுதந்திர ராகம் புரட்சியின் முடிவில்  பெற்றுக் கொண்ட தாகம் !

அறிவு ராகம் சிந்தனையின் ஓரத்தில் எழுதப் பட்ட வரலாறு !

உழைப்பு ராகம் இரத்தத்தின் இடையில் தெறிக்கப் பட்ட சுயமரியாதை !

அடிமை ராகம் இல்லாமையின் கண்களில் சுடர்விடும் கனல் !

புரட்சி ராகம் எரியும் நெருப்புக்கு ஊற்றப்படும் அழியாத தன்மானம் !

முதுமை ராகம் முடிந்து போனவைக்கு இருப்பிடம் நாடும் குடில் !

கவிதை ராகம் கவிஞனின் கற்பனையில் நடமாடும் ஞானக் கிடங்கு !

சீர்திருத்த ராகம் சிந்தனையின் முடிவில் பொறிக்கப் படும் கல்வெட்டு !

நட்பு ராகம் துன்பத்தின் தொடக்கத்தில்   பெறப்படும் அனுபவ முத்திரை !

அரசியல் ராகம் அறிவின் உழைப்பில் எழுதப்படும் முடியாத இலக்கியம் !

என்பதை உணர்ந்து

சிற்றின்பத்திற்கும் - பேரின்பத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

நிரந்தரமான - தற்காலிகமான தன்மைக்குள்ள வேறுபாட்டையும் ,

ஜீவாத்மா - பரமாத்மாவுக்குள்ள வேறுபாட்டையும் ,

நிரந்தரத்திற்கும் தற்காலிகத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர நிம்மதி எது,  எது தற்காலிக நிம்மதி என்பதுக்குள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர இன்பம்,  எது தற்காலிக இன்பம், என்பதுக்குள்ள வேறுபாட்டையும்

பதி-பசு-பாசம் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பையும்

தத்துவத்தையும் ரகசியத்தையும் யார்ஒருவர் அறிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்காமல் பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்புறாமல் ஞானம் அடைவர் என்கிறார் திருமூலர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

பதிவு-5- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-5- ஆய பதிதான்-

-திருமூலர்

 

ஆதியும் நீ , அந்தமும் நீ,  அந்தத்தின் அருளும் நீ !

எண்ணும் நீ ,எழுத்தும் நீ , எழுத்தின் இலக்கணம் நீ !

எண்ணமும் நீ , சொல்லும் நீ, சொல்லின் செயலும் நீ !

கண்ணும் நீ , காட்சியும் நீ, காட்சியின் யதார்த்தம் நீ !

அறிவும் நீ , ஆற்றலும் நீ ,ஆற்றலின் இயல்பு நீ !

ஆள்பவனும் நீ , ஆளப்படுபவனும் நீ, ஆளுமையின் பிராணனும் நீ !

விண்ணும் நீ , மண்ணும் நீ , மண்ணின் மூலம் நீ !

அன்பும் நீ , ஆசியும் நீ , ஆசியின் கருணையும் நீ !

ஓசையும் நீ , ஓம்காரமும் நீ,  ஓம்காரத்தின் உருவமும் நீ !

ஒளியும் நீ , வளியும் நீ , வளியின் விதியும் நீ !

மதியும் நீ , மனதும் நீ,  மனதின் பிறப்பும் நீ !

அண்டமும் நீ , அகிலமும் நீ,  அகிலத்தின் சான்று நீ !

உரையும் நீ , உள்ளும் நீ , உள்ளின் உருவகமும் நீ !

பாடலும் நீ , பொருளும் நீ ,பொருளின் மெய்யும் நீ !

இறப்பும் நீ , அழிவும் நீ , அழிவின் ஆக்கமும் நீ !

சான்று நீ , சன்மார்க்கம் நீ , சன்மார்க்கத்தின் விழி நீ !

பார்ப்பவன் நீ , பார்க்கப்படுபவன் நீ,  பார்க்கப்படுபவனின் பாதை நீ !

இதயம் நீ , இல்லறம் நீ , இல்லறத்தின் நல்லறம் நீ !

சாந்தம் நீ , சித்தம் நீ , சித்தத்தின் சிந்தை நீ !

பாரும் நீ , பகலவனும் நீ, பகலவனின் தோற்றம் நீ !

இம்மையும் நீ  ,மறுமையும் நீ, மறுமையின் சாரம் நீ !

முதலும் நீ , முடிவும் நீ, முடிவின் முதலும் நீ !

என்பதில் தெளிவு பெற்று யாருக்கு அறிவு ரேகை திறந்து கொள்கிறதோ

அவருக்கு பதி பசு பாசம் இவற்றுக்கு இடையே உள்ள

ஒற்றுமை வேற்றுமை தெரியும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////