January 12, 2024

கோயில்கள்-(17)-இந்து மதக் கோயில்களில் கோபுரம் மற்றும் கருவறையில் உள்ள ரகசியங்கள்-12-01-2024

 

கோயில்கள்-(17)-இந்து மதக் கோயில்களில் கோபுரம் மற்றும் கருவறையில் உள்ள ரகசியங்கள்-12-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

இந்துமதக் கோயில்கள்

சக்தியின் களமாக இருக்கிறது

மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும்,

கவலைகளையும்,

சோகங்களையும்,

துன்பங்களையும்

தீர்க்கும் சக்தி வாய்ந்த ஒரு இடமாக இருக்கிறது

 

கோயில்கள் சக்தி வாய்ந்த

ஒரு களமாக இருப்பதற்குக் காரணம்

கோபுரங்களும், கருவறைகளும்

ஆகும்.

 

இவைகள் எப்படி

சக்தியை எப்படி உண்டாக்குகிறது

சக்தியை எப்படி சேமித்து வைக்கிறது

சக்தியை எப்படி நாம் பெறலாம்

என்பதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 12-01-2024

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////






January 09, 2024

பழமொழி-(16)-கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்-09-01-2024

 

பழமொழி-(16)-கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்-09-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கல்லைக் கண்டால்

நாயைக் காணோம்

 

நாயைக் கண்டால்

கல்லைக் காணோம்

 

என்பதற்கு பல்வேறு தரப்பினர்

பல்வேறு

அர்த்தங்களைக் கூறினாலும்

அதன் உண்மையான

அர்த்தம் என்ன என்பதைத்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 09-01-2024

------செவ்வாய் கிழமை

///////////////////////////////////////////////





January 07, 2024

ஆன்மீகம்-(19)-மேரி மாதா கன்னித்தாயாக ஆவதற்கு முன்பாகவே, கன்னித்தாயாக இருந்தவர் பார்வதி தேவி-07-01-2024

 ஆன்மீகம்-(19)-மேரி மாதா கன்னித்தாயாக ஆவதற்கு முன்பாகவே, கன்னித்தாயாக இருந்தவர் பார்வதி தேவி-07-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சிவன் பார்வதிக்கு பிறந்தவர்கள்

விநாயகர், முருகன்

என்று அனைவரும் சொல்வார்கள்

 

ஆனால்

விநாயகரும், முருகனும்

சிவனும் பார்வதியும் சேர்ந்ததால்

பிறந்தவர்கள் கிடையாது

 

பார்வதி தேவி கன்னித்தாயாக

இருந்து தான் பிறந்தவர்கள்

 

இந்த உலகத்தில்

கன்னித் தாய் என்று

சொல்லப்படுகிறவர்கள் அனைவருக்கும்

முற்பட்டவர் பார்வதி தேவி

எப்படி என்பதைத் தெரிந்து

கொள்வோம்

 

 

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 07-01-2024

------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////





January 05, 2024

பழமொழி-(15)-தவளையும் தன் வாயால் கெடும்-05-01-2024

 

பழமொழி-(15)-தவளையும் தன் வாயால் கெடும்-05-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பழமொழிகள் என்பவை

ஒரு விஷயத்தை இந்த

உலகத்திற்கு சொல்வதற்காக

நம்முடைய முன்னோர்கள்

பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்

 

பழமொழிகளின் உண்மை

அர்த்தம் தெரியாமல் ஒவ்வொருவரும்

தங்கள் அறிவுக்கு எட்டியதை

சொல்லி வருகின்றனர்

 

பழமொழிகளின் உண்மை

அர்த்தங்களைத் தெரிந்து கொள்வோம்

நம் முன்னோர்களின்

அறிவுத் திறனை புரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- படைப்பாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 05-01-2024

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////





January 01, 2024

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

 

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

குரங்கு, அணில், காகம் வடிவில் இருந்த,

வாலி, இந்திரன், எமன் ஆகியோர்

இறைவனை வணங்கி சாபவிமோசனம் பெற்ற காரணத்தினால்,

இந்த ஊருக்கு குரங்கணில் முட்டம் என்ற பெயர் வந்தது.

இந்த ஊரில் இந்த குடைவரைக் கோயில் அமைந்துள்ளதால்

இந்த குடைவரைக் கோயிலுக்கு

குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில் என்று பெயர்.

 

குரங்கணில் முட்டம்

குடைவரைக் கோயிலைப் பற்றியும்,

அதன் சிறப்புகளைப் பற்றியும்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 01-01-2024

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////





December 31, 2023

ஜபம்-பதிவு-949 மரணமற்ற அஸ்வத்தாமன்-81 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-949

மரணமற்ற அஸ்வத்தாமன்-81

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : என்னுடைய பாக்கியம், மும்மூர்த்திகளின் அம்சமாக இருக்கும் அஸ்திரங்களில் ஒன்றான நாராயணாஸ்திரத்தை நான் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கொடு கிருஷ்ணா, எனக்குக் கொடு.

(என்று அஸ்வத்தாமன் கிருஷ்ணனின் முன்னர் மண்டியிட்டு இருக்கிறார். கிருஷ்ணர் தன் வலது கையை நீட்டுகிறார். அவர் கையில் நாராயணாஸ்திரம் வருகிறது. அதை எடுத்து அஸ்வத்தாமனிடம் கொடுக்கிறார்.)

அஸ்வத்தாமா! நாராயண அஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ள தகுதியானவன் நீ. இதைப் பெற்றுக் கொள் என்று கிருஷ்ணன் நாராயண அஸ்திரத்தைத் தருகிறார். இந்தா அஸ்வத்தமா இந்த அஸ்திரத்தை பெற்றுக் கொள்

(என்று கிருஷ்ணர் அஸ்திரத்தை அஸ்வத்தாமனிடம் கொடுக்கிறார். அஸ்வத்தாமன் நாராயணாஸ்திரத்தைப் பெற்றுக் கொள்கிறான்.)

இந்த அஸ்திரத்தை வரவழைக்கும் மந்திரம், செலுத்தும் மந்திரம், திருப்பி வரவழைக்கும் மந்திரம், மறைய வைக்கும் மந்திரம் ஆகியவற்றைச் சொல்கிறேன். கேட்டுக் கொள்

(என்று சொல்லச் சொல்ல அஸ்வத்தாமன் அதை கவனத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.)

அஸ்வத்தாமா! திரிஅஸ்திரங்கள் என சொல்லப்படக்கூடியவை பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம். மூம்மூர்த்திகளுடைய அஸ்திரம் என்ற காரணத்தால் இது திரி அஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது.

திரி அஸ்திரங்களில் ஒன்றான நாராயண அஸ்திரத்தை உனக்கு கொடுத்து விட்டேன். அடுத்து என்ன செய்யப் போகிறாய்.

அஸ்வத்தாமன் : பிரம்மாஸ்திரம் பெறப்போகிறேன்.

கிருஷ்ணர் : பிரம்மாவை நோக்கி தவம் செய்யப் போகிறாயா?

அஸ்வத்தாமன் : இல்லை

கிருஷ்ணர் : பிறகு?

அஸ்வத்தாமன் : என் தந்தையிடம் கற்றுக் கொள்ளப் போகிறேன்

கிருஷ்ணர் : உன் தந்தை உனக்கு கற்றுக் கொடுப்பார் என்று நினைக்கிறாயா

அஸ்வத்தாமன் : நான் சீடனாக இருந்து கேட்டால் எனக்குக் கற்றுக் கொடுக்க மாட்டார். அவருடைய மகனாக இருந்து கேட்கப் போகிறேன். மகனாக இருந்து கேட்கும் எதையும் எனக்கு அவர் மறுக்க மாட்டார். கண்டிப்பாக கற்றுக் கொடுப்பார். நான் அவருடைய மகனாக இருந்து கேட்கப் போகிறேன். பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்.

கிருஷ்ணர் : பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளாதே. அதனை பிரயோகம் செய்வதால் கஷ்டங்கள், துன்பங்கள், வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நீ மரணமற்றவன். இந்த உலகத்தில் உயிரோடு இருக்கும் வரை அந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடப் போகிறது. அதனால் பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளாதே.

நான் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் கஷ்டப்படத்தான் வேண்டும் என்பது என்னுடைய விதி என்றால் அது பிரம்மாஸ்திரத்தின் மூலம் மட்டும் தான் வரும் என்று கிடையாது. வேறு எந்த ஒன்றினாலும் வரலாம் அல்லவா?

அஸ்வத்தாமன் : நான் தயாராகி விட்டேன். பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். நான் விடைபெறுகிறேன் கிருஷ்ணா.

(என்று சொல்லி விட்டு அஸ்வத்தாமன் கிளம்பி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன்)

விதியை யாராலும் மாற்ற முடியாது. கடவுளாலும் மாற்ற முடியவில்லையே

(என்று அஸ்வத்தாமன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்)

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////