May 31, 2024

கோயில்கள்-(20)-திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில்-31-05-2024

 

கோயில்கள்-(20)-திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில்-31-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

திருச்சி உச்சிப்

பிள்ளையார் கோயில்

மலைக்கோட்டையின்

உச்சியில் 273 அடி

உயரத்தில் உள்ளது

பிள்யையார் சன்னதியை

அடைய

தரையில் இருந்து

437 படிகள் ஏற

வேண்டும்

 

இத்தகைய

சிறப்புகள்

வாய்ந்த

உச்சிப் பிள்ளையார்

கோயிலைப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----31-05-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




May 30, 2024

கிறிஸ்தவம்-(5)-அன்னை மேரியை 18 முறை நேரில் சந்தித்த புனித லூர்து அன்னையின் திருத்தலம்-29-05-2024

கிறிஸ்தவம்-(5)-அன்னை மேரியை 18 முறை நேரில் சந்தித்த புனித லூர்து அன்னையின் திருத்தலம்-29-05-2024 



அன்பிற்கினியவர்களே!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தமரம் செல்லும் சாலையில் கடையநல்லூரிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது திருமலாபுரம் என்னும் சிற்றூர் இந்த ஊரில் அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலைத் தொடரை நோக்கியவாறு அமைந்துள்ள வண்ணாத்திப்பாறையின் மேல் புனித லூர்து அன்னையின் திருத்தலம் உள்ளது அன்னையை தரிசிப்போம் அனைத்து வளங்களையும் பெறுவோம் நன்றி ------திரு.K.பாலகங்காதரன் -----29-05-2024 -----புதன் கிழமை ///////////////////////////////////////////////




May 24, 2024

கோயில்கள்-(19)-திருவரங்கம் திருக்கோயில், திருச்சி-24-05-2024

 

கோயில்கள்-(19)-திருவரங்கம் திருக்கோயில், திருச்சி-24-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

திருமகள் திருவரங்கத்தில்

திருஅரங்கநாயகியாக

அவதரித்து

அன்றும் இன்றும் என்றும்

நித்யவாசம்

செய்கிற படியால்

இந்த கோயிலுக்கு

திருவரங்கம் எனப்

பெயர் ஏற்பட்டது

 

பல்வேறு ஆச்சாரியார்கள்,

மகான்கள்

அவதரித்து உகந்து

உறைந்த திருவரங்கம்

திருக்கோயில்

 

இத்தகைய

சிறப்பு மிக்க

கோயிலைப்

பற்றிப் பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----24-05-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




May 13, 2024

தென்காசி சரித்திரம்(22)-ஓவியர்.கொண்டல்ராஜ் ஓவியங்களின் வரலாறு-பதிவு-(3)-13-05-2024

 

தென்காசி சரித்திரம்(22)-ஓவியர்.கொண்டல்ராஜ் ஓவியங்களின் வரலாறு-பதிவு-(3)-13-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

திரு.கொண்டல்ராஜ்,

ஓவியர், கடையநல்லூர்

அவர்கள்

தான் வரைந்

ஓவியங்களை

எவ்வாறு வரைந்தார்

என்பதையும்,

எதற்காக வரைந்தார்

என்பதையும்,

எப்படி வரைந்தார்

என்பதையும்,

நமக்காக

விளக்குகிறார்.

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----13-05-2024

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




 

 

 

May 07, 2024

தென்காசி சரித்திரம்(19)-உலக கலை பொக்கிஷங்களின் பாதுகாவலர் ஓவியர்.கொண்டல்ராஜ்-07-05-2024

 

தென்காசி சரித்திரம்(19)-உலக கலை பொக்கிஷங்களின் பாதுகாவலர் ஓவியர்.கொண்டல்ராஜ்-07-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

உலக நாட்டில்

உள்ள எந்த ஒரு

கலைப்படைப்பாக

இருந்தாலும்,

அந்த படைப்பு

அந்த நாட்டின்

கலை,பண்பாடு,

கலாச்சாரத்தை

பறைசாற்றும்

வகையில் இருக்கும்

 

திரு.கொண்டல்ராஜ்,

ஓவியர், கடையநல்லூர்

அவர்கள் சேகரித்து

வைத்துள்ள

கலைப்பொக்கிஷங்களைப்

பார்த்து

அந்த அந்த நாட்டின்

கலை, பண்பாடு,

கலாச்சாரத்தைத்

தெரிந்து கொள்வோம்.

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----07-05-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////



 

May 05, 2024

ஜபம்-பதிவு-972 மரணமற்ற அஸ்வத்தாமன்-104 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-972

மரணமற்ற அஸ்வத்தாமன்-104

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


ஆரம்பத்தில் சிறிது சிறதாக பந்தயப் பொருளை வைத்தவன், போகப்போக பந்தயப் பொருள்களை பெரிதாக வைத்தான். நாட்டை வைத்தான், நகரத்தை வைத்தான், தடைசியில் தன்னை வைத்தான், தன் தம்பிகளை வைத்தான், தன் மனைவியை வைத்தான்.


இப்போது அவனிடம் ஒன்றும் இல்லை. தர்மன், அவன் தம்பிகள், அவனுடைய மனைவி பாஞ்சாலி ஆகிய அனைவரும் கௌரவர்களுக்கு அடிமையாகி விட்டார்கள். 


துரியோதனனுடைய அடிமையாகி விட்டார்கள். 

தர்மனால் அவனுக்கு அவமானம், அவன் தம்பிகளுக்கு அவமானம், அவர்கள் மனைவிக்கு அவமானம். சூதாடினால் குடும்பம் கஷ்டப்படும், அனைத்தையும் இழக்க நேரிடும், மானம் போய் விடும், மரியாதை போய் விடும், குடும்பம் தெருவுக்கு வந்துவிடும், குடும்பம் அவமானப்பட நேரிடும், அசிங்கப்பட நேரிடும், ஏளனப்பட நேரிடும் என்பது தர்மன் சூதாடி இந்த உலகத்திற்கு நிரூபித்து விட்டான்.


தர்மனுடைய இந்த செயலைப் பார்த்தாவது தர்மனுடைய வரலாற்றைப் படித்தாவது வருங்கால தலைமுறைகள் சூதாடினால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


 சூதாடக்கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். சூதாடிகள் சூதாடாமல் இருந்தால் தான் குடும்பத்திற்கு நல்லது அனைத்திற்கும் நல்லது என்பதை உணர வேண்டும். 


தர்மனை ஒரு முன் உதாரமாணமாகக் கொண்டு சூதாடிகள் சூதாடுவதை நிறுத்த வேண்டும். 


ஒரு சூதாடி சூதாடினால் எப்படி இருப்பான் என்பதற்கு வரலாற்றில் தர்மன் ஒரு உதாரணமாகி விட்டான். 

நாளைய வரலாறு சூதாடிகளுக்கு தர்மன் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கட்டும்

அடிமைகளாக இருக்கும் பாண்டவர்கள் மீது அதிக அக்கறை கொண்டு அந்த அடிமைகளின் சார்பாக பேசினீர்கள். தர்மன் என்ற சூதாடியை பெருமையாக பேசினீர்கள்.


 பாஞ்சாலியை பெண்களுக்குள் உயர்ந்தவள் என்று பேசினீர்கள். இதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது ஒன்றும் இல்லை. இதற்குப் பிறகு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அந்த முடிவை எடுங்கள். 


அந்த முடிவையாவது நீதி தவறாமல், நியாயம் தவறாமல், பாண்டவர்கள் மேல் உள்ள அன்பால் அவர்களுக்கு சாதமான முடிவை எடுக்காமல், பாண்டவர்களைச் சார்ந்து ஒரு சார்பாக முடிவு எடுக்காமல் துரியோதனனை எதிரியாகப் பார்க்காமல், அவனுக்கு எதிராக முடிவு எடுக்காமல், உண்மையாக எடுங்கள், நேர்மையாக எடுங்கள், நியாயமாக நடந்து கொள்ளுங்கள், வருங்காலம் உங்களை தவறாக சொல்லும் படி வைத்துக் கொள்ளாதீர்கள்.


(அஸ்தினாபுரத்தின் அவையில் பாஞ்சாலியின் மேலாடை கழட்ட முயற்சி நடந்த செயலுக்குப் பிறகு அனைவருடைய வாக்கு வாதங்களும் முடிந்து விட்டது.


பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும், தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக 1 வருட காலம் வாழ வேண்டும். 


மறைந்து வாழும் போது கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும், தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக 1 வருட காலம் வாழ வேண்டும். 


மறைந்து வாழும் போது கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர்களுடைய ராஜ்ஜியம் அவர்களுடையது என்பதை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வனவாசம் புறப்பட்டனர்.)


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

////////////////////////////////

ஜபம்-பதிவு-971 மரணமற்ற அஸ்வத்தாமன்-103 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-971

மரணமற்ற அஸ்வத்தாமன்-103

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)



தர்மன் என்ற பெயர் யுதிஷ்டிரன் தானம், தர்மம் செய்ததினால்

வந்த பெயரும் கிடையாது.

தர்மத்தின் வழியில் நடந்ததால் 

யுதிஷ்டிரனுக்கு தர்மன் என்ற பெயர் வரவுமில்லை.


குந்தி எமதர்மனுடன் சேர்ந்து யுதிஷ்டிரனைப் பெற்றாள். யுதிஷ்டிரன் எமதர்மனுடைய மகன்.

யுதிஷ்டிரன் எமதர்மனுடைய மகன் என்பதில் உள்ள எம என்ற சொல் மறைந்து தர்மன் என்பது மட்டுமே நிலை பெற்று யுதிஷ்டிரனைக் குறிக்க தர்மன் என்ற சொல் வந்துவிட்டது.


தர்மன் என்ற சொல் யுதிஷ்டிரன் எமதர்மன் மகன் என்பதைக் குறிப்பதாகும். யுதிஷ்டிரன் தர்மம் செய்ததால் இந்த பெயர் யுதிஷ்டிரனுக்கு கிடைக்கவில்லை.   


பீஷ்மர் : தர்மனை சூது செய்து சூதாட்டத்தில் தோற்கடித்து விட்டார்கள்.


அஸ்வத்தாமன் : சூது செய்து யாரும் தர்மனைத் தோற்கடிக்கவில்லை. 


சூதாட வேண்டும் என்று யாரும் அவனை கட்டாயப்படுத்தவில்லை. அவனே விருப்பப்பட்டு தான் வந்தான். அவனே விருப்பத்துடன் தான் விளையாடினான். 


ஏனென்றால், சூதாட்டத்தில் விருப்பம் கொண்டவன் தர்மன். அதுவும் தர்மன் மிகச்சிறந்த சூதாடி.

சூதாடிகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட குணம் ஒன்று உண்டு. சூதாட்டம் ஆடத் தொடங்கிய பிறகு அதிலிருந்து எழுந்திருக்கவே அவர்களுக்கு மனம் வராது. 

அதிலும் எதையாவது இழந்து விட்டாலோ, விட்டதை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வெறி கொண்டு தொடர்ந்து சூதாடுவார்கள். அதனால் மேலும் மேலும் தங்களிடம் உள்ளதை இழந்து கொண்டே தான் இருப்பார்கள். 


அந்த மாதிரி சமயங்களில் அவர்களுடைய சுயபுத்தி என்பது வேலை செய்யவே செய்யாது.இதற்கு மேல் ஆட வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் 

கொண்டாலும், இதற்கு மேல் ஆட வேண்டாம் என்று வலியுறுத்தி சொன்னாலும், சூதாட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எடுத்துச் சொன்னாலும், தயவு செய்து ஆட வேண்டாம் என்று அறிவுரை சொன்னாலும், சூதாடிகள் அவர்கள் பேச்சைக் கேட்கவே மாட்டார்கள். 

வீடு, குடும்பம், வேலை, நண்பர்கள், உறவினர்கள், படித்த படிப்பு, எந்த ஒன்றும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. 


சாதாரணமான ஒன்றாகத் தான் தெரியும். 

சூதாட்டத்தில் தோற்று அனைத்தையும் இழந்தால் குடும்பத்தின் மானம் போய் விடும், தனக்குள்ள மரியாதை கெட்டு விடும், குடும்பம் தாளமுடியாத கஷ்ட நிலைக்குத் தள்ளப்படும், மீளவே முடியாத பழிக்கு தன்னை ஆளாக்கி விடும் என்பதை மனதில் கொள்ளாமல், இதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் தான் சூதாடிகள் சூதாடுவார்கள்.


சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் அழிந்த குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. 

சாதாரண மனிதர்களாக இருந்தால் தங்களிடம் இருப்பதை சூதாட்டத்தில் இழந்ததுமே எழுந்து சென்று விடுவார்கள். 


ஆனால், இவர்களைப் போன்ற பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்கள் இவர்களைப் போன்ற மன்னர்களோ ஒருவரை ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கடைசி வரை விடாமல் எவ்வளவு தான் இழந்தாலும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பார்கள். 


அதனால் அவர்களிடம் அமைதி, பொறுமை, நிதானம், சிந்திக்கும் தன்மை, அறிவு என்பது சுத்தமாக இருக்கவே இருக்காது. 

அரசகுலத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக போர்க்கலைகள் மீது தான் அதிக அளவில் ஆர்வம் இருக்கும். ஆனால், தர்மனுக்கு அப்படி அல்ல சூதாட்டத்தின் மீது தான் அவனுக்கு ஆர்வம் அதிகம். தர்மன் சூதாட்டத்தில் ஆர்வம் உள்ளவன் என்பது இந்த உலகத்திற்கே தெரியும்.


தர்மனுக்கு சின்ன வயதில் இருந்து அவனுக்கு கங்கன் என்ற பெயர் உண்டு. கங்கன் என்றால் சூதாடி என்று பொருள். தர்மன் நன்றாக சூதாடுவான் என்ற காரணத்தினால் தான் தர்மன் தம்பிகள் அவனை சூதாட விட்டனர். 


தர்மன் நன்றாக சூதாடுவான், சூதாட்டத்தில் வல்லவன், சிறிய வயது முதல் சூதாடி பழக்கப்பட்டவன், சூதாட்டம் என்று வந்து விட்டால் எதையும் நினைக்க மாட்டான், சூதாட்டத்தில் திறமைசாலியாக இருக்கிறான், சூதாட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற காரணத்தினால் தான் தர்மன் தம்பிகள் தர்மனை சூதாட அனுமதி அளித்தனர்.


துரியோதனன் தன் மாமா சகுனி ஆடுவார் என்று சொன்னபோது கூட, தர்மன் தன்னுடைய மாமா கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லவில்லை. சூதாட்டத்தில் தன் மேல் உள்ள நம்பிக்கையால், சூதாட்டத்தில் தன்னை விட திறமைசாலி யாரும் இல்லை என்ற காரணத்தினால், சூதாட்டத்தில் தன்னை விட யாரும் சிறப்பாக சூதாட முடியாது என்ற நம்பிக்கையால், சூதாட்டத்தில் தன்னை வெல்ல யாரும் கிடையாது என்ற நம்பிக்கையால் தர்மன் நானே சூதாடுகிறேன் என்று சூதாடினான்.


சூதாட்டம் தொடங்கும் போது தர்மனின் சூதாடும் திறமையைக் கண்டு சந்தோஷப்பட்ட பாண்டவர்கள் தர்மன் தோற்க தோற்க பயந்தார்கள். 


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////