April 01, 2025

லாடன் குடைவரைக் கோயில்

 

லாடன் குடைவரைக் கோயில்

#பராந்தகநெடுஞ்சடையன்

#இரண்டாம்ராஜசிம்மன்

#பாண்டியர்கள்

#லாடன்குடைவரைக்கோயில்

#முருகன்குடைவரைக்கோயில்

#மதுரை

#மயிலை

#மயிலைசீனிவேங்கடசாமி

#வரலாறு




March 23, 2025

தென்காசி சரித்திரம்-(29)-ராமநதி, தத்துவசாரா நதி, தசரதன், இராமர், கடையம்-23-03-2025

 

தென்காசி சரித்திரம்-(29)-ராமநதி, தத்துவசாரா நதி, தசரதன், இராமர், கடையம்-23-03-2025

 

அன்பிற்கினியவர்களே,

 

தென்காசி மாவட்டம்,

கடையம் அருகே

உள்ள ராமநதி

சிறப்பைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 23-03-2025

------- ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////////////




March 16, 2025

மரணத்தோடு மோதி கேரளா எஸ்டேட்டில் ஒரு பயணம்

 

சுற்றுலா(1) - மரணத்தோடு மோதி கேரளா எஸ்டேட்டில் ஒரு பயணம்-16-03-2025

 

அன்பிற்கினியவர்களே

 

மரணத்தோடு மோதிப்பார்த்து

கேரளா எஸ்டேட்டில்

ஒரு பயணம்

 

அடர்ந்த காடுகள்,

மலைகள்,

ஆறுகள்,

பள்ளத்தாக்குகள்,

ஆகியவற்றைக்

கடந்து ஒரு பயணம்

 

வாகனத்தை ஓட்டி

கேரளாவின்

எழிலை நமக்கு

காட்டிய

திரு.பொன்ராஜ்

கண்மணியாபுரம்

அவர்களுக்கு

 

நன்றி

 

------16-03-2025

-----ஞாயிற்றுக்கிழமை

 

///////////////////////////////////////





March 11, 2025

ஜபம்-பதிவு-1039 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-17

 ஜபம்-பதிவு-1039

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-17


துணைத் தளபதி : யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?


அர்ஜுனன் : உலகத்திலேயே பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் தான் திறமைசாலிகள்   அவர்களுடைய திறமைக்கு இணையான ஒற்றர்கள்  இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். 


அப்படிப்பட்டவர்களால் கூட

நான் யார்? எங்கிருந்து வருகிறேன் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லையா?


துணைத் தளபதி :  பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை

நீ விசாரிக்கப்படும் போது தெரிந்து கொள்வாய்


அர்ஜுனன் : நான் எதற்காக விசாரிக்கப்பட வேண்டும்?


துணைத் தளபதி : ஏனென்றால், இப்போது நீ கைது செய்யப்பட்டு இருக்கிறாய்!


அர்ஜுனன் : நீங்கள் கைது செய்யும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்.


துணைத் தளபதி : இளவரசியின் விருப்பம் இல்லாமல் அவரை துரத்திச் சென்று இருக்கிறாய் அதற்காக?


அர்ஜுனன் : இளவரசி சொன்னாரா?


துணைத் தளபதி : நாங்களே பார்த்தோம்.


அர்ஜுனன் : நீதிக்காக உயிர் கொடுத்த பாண்டியர்கள் வாழும் பாண்டிய நாட்டில்

எந்தக் குற்றமும் செய்யாதவனை கைது செய்கிறீர்கள்.


துணைத் தளபதி : நீ குற்றவாளியா இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தெரியும்.


அர்ஜுனன் : இளவரசியை விசாரிப்பீர்களா?


துணைத் தளபதி : விசாரணையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.


பாண்டிய நாட்டின் நீதிக்கு முன்னால் அரசன், அரசி, இளவரசன், இளவரசி, மக்கள் எல்லோரும் ஒன்று தான். நீதிக்கு முன் அனைவரும் சமமாகத் தான் நடத்தப்படுவார்கள்.


பெண்களை விருப்பம் இல்லாமல் அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கு பாண்டிய நாட்டில் ஒரே தண்டனை தான் அவர்கள் தலை அவர்கள் உடம்பில் இருக்காது என்பதைத் தெரிந்து கொள்.


இவனை விசாரணைக்கு அழைத்து வாருங்கள்.


(என்று சொல்லி விட்டு குதிரையில் ஏறி துணைத் தளபதி சென்று விட்டார் காவலாளிகள் அர்ஜுனனைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.


அர்ஜுனன் கைதியாக பாண்டிய நாட்டிற்குள் அழைத்துச் செல்லப்படுகிறான்.)


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1038 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-16

 ஜபம்-பதிவு-1038

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-16


காதல் என்பது உணர்வு மட்டும் கிடையாது. 

உணர்வில் மட்டும் கலந்து இருப்பதற்கு.


காதல் என்பது உயிர். 

அது உயிருடன் கலந்தும் இருக்கும். 

உடலில் உயிர் இருக்கும் வரை காதலும் இருக்கும் 


காதல் என்பது கடவுள். 

காதல் கடவுளாகவும் இருக்கும். 

இந்த உலகத்தில் கடவுள் இருக்கும் வரை காதலும் இருக்கும்


காதல் என்பது புனிதமானது. புனிதத்துடன் தொடர்பு கொண்டது. 

புனிதமாகவே வாழ்ந்து கொண்டிருப்பது.


காதல் என்பது தைரியத்துடன் தொடர்பு கொண்டது


தைரியம் என்பது சுயமாகவும் வெளிப்படும், சூழ்நிலையைப் பொறுத்தும் வெளிப்படும். 

அது எதைப் பொறுத்து வெளிப்படுகிறது என்பது தான் முக்கியம்


தைரியம் என்பது எல்லா சூழ்நிலைகளிலும் வெளிப்படாது


நாம் எதன் மேல் அதிக அன்பாக இருக்கிறோமோ 

அதற்கு பாதிப்பு ஏற்படும் போது தைரியம் என்பது வெளிப்படும்.


எந்த ஒன்றை அடைய விரும்புகிறோமோ 

அதை அடைவதற்கு தைரியம் என்பது வெளிப்படும்

எந்த ஒன்றை இழக்கக் கூடாது என்று நினைக்கிறோமா 

அந்த ஒன்றை இழக்கக் கூடாது என்பதற்காக போராடும் போது 

தைரியம் என்பது வெளிப்படும்.


ஆனால், காதல் மட்டும் தான் இதிலிருந்து வேறுபட்டு நிற்கும்


காதல் நமக்குள் பிறக்கும் போதே தைரியம் வந்து விடும்

காதலை வெளிப்படுத்தும் போதும் தைரியம் வந்து விடும்

காதல் செய்யும் போதும் தைரியம் வந்து விடும்

காதலை இழக்கக் கூடிய நிலை வரும் போது  தைரியம் வந்து விடும்

காதலை தடுப்பவர்களை எதிர்க்கும் போதும் தைரியம் வந்து விடும்

காதலுக்கு தடையாக யார் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு தைரியம் வந்து விடும்

காதலில் வென்று காட்ட வேண்டும் என்று போராடும் போதும் தைரியம் வந்து விடும்

காதலுக்காக உயிரைக் கொடுக்கக் கூடிய நிலை வரும் போதும் தைரியம் வந்து விடும்


ஆகவே, காதலைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தைக் கைவிடுங்கள்

காதல் என்று வந்து விட்டால்

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள்

ஒரே மாதிரி தான் செயல்படுவார்கள்


உங்களுக்கும் காதல் என்பது வந்து விட்டது

ஆனால், அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்கள்


வெளிப்படுத்த இடம், காலம், நேரம், சூழ்நிலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்


காதல் என்பது வந்து விட்டால் அதை உடனே வெளிப்படுத்தி விடுங்கள்

ஏனென்றால், காதல் என்பது உயிர்த் தன்மையுள்ளது


உயிர்த்தன்மையுள்ள காதலை வெளிப்படுத்த தாமதம் செய்தால் 

அது தன் உயிர்த் தன்மையை இழந்து விடும்


காதல் தன் உயிர்த் தன்மையை இழப்பதற்கு முன் 

உங்கள் காதலை சொல்லி விடுங்கள்


சித்திராங்கதை :  உடலிலிருந்து உயிர் பிரிந்தால் உடல் தான் அழியுமே தவிர, உயிர் அழியாது.


அப்படி இருக்கும் போது, உயிருடன் இரண்டறக் கலந்து இருக்கும் காதல் மட்டும் எப்படி அழியும். தன் உயிர்த்தன்மையை எப்படி இழக்கும். காதல் எப்போதுமே அழியாது. காதலர்கள் தான் அழிவார்கள்.


உங்கள் பேச்சைக் கேட்டால் காதல் செய்யாதவனும் காதல் செய்வான்

காதல் வேண்டாம் என்பவனும் காதல் வேண்டும் என்பான்


காதலை வெறுப்பவனும் காதல் மேல் காதல் கொள்வான்


ஒரு இளவரசியின் காதல் 

எளிதாக வெளிப்படுத்தக் கூடியதும் அல்ல

எல்லா இடத்திலும் வெளிப்படுத்தக் கூடியதுமல்ல.


நான் என்னுடைய காதலை எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த காலத்தில்,

எந்த சூழ்நிலையில் வெளிப்படுத்த வேண்டுமோ 

அப்போது கண்டிப்பாக வெளிப்படுத்துவேன்


அப்போது நான் சொல்லும் காதல் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கும்


(என்று சொல்லி விட்டு சித்திராங்கதை குதிரையில் ஏறி செல்கிறார்

அவரை அர்ஜுனன் துரத்திக் கொண்டு செல்கிறான்

அதைப் பார்த்த துணைத் தளபதி மற்றும் காவலர்கள் 

அர்ஜுனனை வளைத்துக் கொள்கின்றனர்

குதிரையிலிருந்து இறங்கும் துணைத் தளபதி அர்ஜுனனை நோக்கி வருகிறார். 

அவர் பேசுகிறார்)



-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1037 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-15

 ஜபம்-பதிவு-1037

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-15


சித்திராங்கதை :  ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். 


அவர்களுக்கு சமூக கட்டுப்பாடுகளும் கிடையாது. 

சமூகத்தைப் பார்த்து பயமும் கிடையாது. 


எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதும் கிடையாது.

பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதும் கிடையாது.


அவர்களுக்கு குடும்பத்தைப் பற்றிய அக்கறையும் கிடையாது

மானம்  மரியாதைப் பற்றிய கவலையும் கிடையாது.


அவர்களுக்கு அவர்கள் காதல் தான் முக்கியம்

காதல் செய்வது தான் முக்கியம்


அதற்காக அவர்கள் எந்த ஒரு எல்லைக்கும் போவார்கள்.


ஆனால் பெண்கள் அப்படி இல்லை.


பெண்கள் தங்கள் காதலை சீக்கிரத்தில் வெளிப்படுத்த மாட்டார்கள்.

உடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் கிடையாது.


பெண்களுக்கு சமூகக் கட்டுப்பாடும் உண்டு. 

சமூகத்தைப் பற்றிய பயமும் உண்டு.


எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் உண்டு.

பின்விளைவுகளைப் பற்றிய கவலையும் உண்டு


பெண்கள் காதலா குடும்பமா என்ற நிலை வரும் போதும்

காதலா மானமா என்று நிலை வரும் போதும்

காதலா மரியாதையா என்ற நிலை வரும் போதும்

பெண்கள் காதலைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்

குடும்பம் மானம் மரியாதையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்


அர்ஜுனன் : ஆண்களுக்கு காதல் தான் முக்கியம். குடும்பம், மானம், மரியாதை முக்கியமில்லை என்று சொல்ல வருகிறீர்களா


சித்திராங்கதை : அதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது. இலக்கியங்கள் சொல்கிறது.


அர்ஜுனன் : நீங்கள் இன்னும் காதலைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. 


காதலைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் காதலிக்கும் ஆண்களைப்பற்றித் தவறாகப் பேசுகிறீர்கள். காதலில் இருந்து ஆண்களைத் தனியாகப் பிரித்து பேசுகிறீர்கள் 


காதலுக்குள் பிளவை ஏற்படுத்தி பார்க்கிறீர்கள்

காதல் செய்யும் ஆணையும், பெண்ணையும் வேறுபடுத்தி பார்க்கிறீர்கள்.


ஆண் செய்யும் காதலை தவறு என்றும்,

பெண் செய்யும் காதலை சரி என்றும் பார்க்கிறீர்கள்


காதல் செய்யும் ஆண்களே தவறானவர்கள் என்ற சிந்தனையில் பார்க்கிறீர்கள் 


காதலில் உங்கள் கண்ணோட்டம் தவறாக இருக்கிறது

காதலை  தவறான கண்ணோட்டத்தில் சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.


ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்வது தான் காதல். 

ஆண் மட்டும் தனியாகவோ பெண் மட்டும் தனியாகவோ செய்வது காதல் கிடையாது.


இரண்டு பேர் சேர்ந்து செய்யும் போது உண்டாவது தான் காதல்.

ஒருவர் மட்டும் தனியாகச் செய்தால் அதற்கு பெயர் காதல் கிடையாது


காதல் செய்யும் போது உண்டாகும் உணர்வுகள் என்பது

இரண்டு பேருக்கும் பொதுவானது.


காதல் என்பது உண்டாகி விட்டால்

உண்டாகும் இன்பங்களும், துன்பங்களும் இரண்டு பேருக்கும் பொதுவானது


காதல் என்பது உண்டாகி விட்டால்

எடுக்கும் எந்த ஒரு முடிவும் இரண்டு பேருக்கும் பொதுவானது


காதல் என்பது உண்டாகி விட்டால்

உண்டாகும் எண்ணமும் இரண்டு பேருக்கும் பொதுவானது.


காதலை நேசிப்பவர்கள்,

காதலை சுவாசிப்பவர்கள்,

காதலை கடவுளாய் வணங்குபவர்கள்,

காதலின் புனிதத் தன்மையை உணர்ந்தவர்கள்,

காதலாகவே வாழ்பவர்கள்

அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி 

இரண்டு விதமான எண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

ஒரே விதமான எண்ணங்களைக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள்.


காதல் சாதி பார்க்காது

காதல் மதம் பார்க்காது

காதல் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு பார்க்காது

காதல் உயர்வு தாழ்வு என்ற மனப்பான்மை பார்க்காது


காதல் ஒன்றே ஒன்றைத் தான் பார்க்கும்

காதல் காதலைத் தான் பார்க்கும்.



-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////