சிதைக்கப்பட்ட பழமொழிகள்
(விளக்கங்கள் கதைகளுடன்)அன்பிற்கினியவர்களே !
இது வரை 12-புத்தகங்களை
எழுதி உங்கள் பேரன்புடன் வெளியிட்ட நான்
அதன் தொடர்ச்சியாக இப்போது,
என்னுடைய 13-வது புத்தகமாக,
சிதைக்கப்பட்ட பழமொழிகள்
(விளக்கங்கள் கதைகளுடன்)
என்ற புத்தகம்
எழுதி முடித்துவிட்டேன்.
அந்த புத்தகத்தின் முக்கியமான சராம்சம் இது தான்.
இன்றைய கால கட்டத்தில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு பல பழமொழிகளின் உண்மையான அர்த்தம் தெரியவில்லை.
அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அவர்களுடைய அறிவுக்கு ஏற்றபடி பழமொழிக்கு என்ன அர்த்தம் தெரிகிறதோ அந்த அர்த்தத்தைக் கொண்டு பழமொழிகளை அவர்களுக்கு ஏற்றவாறு பழமொழிகளின் வார்த்தைகளை மாற்றி உருவாக்கிக் கொண்டு,
இது தான் உண்மையான பழமொழி என்றும்,
இந்த அர்த்தம் தான் இந்த பழமொழிக்கு
உண்மையான அர்த்தம் என்றும்,
முன்பு பழமொழி இப்படித் தான் இருந்தது என்றும்,
இப்போது இந்த பழமொழி கால சுழற்சியில் மாறி விட்டது என்றும்,
முன்பு சொல்லப்பட்ட பழமொழி தான்
சரியான பழமொழி என்றும் சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.
முன்பு பழமொழியை இப்படித் தான் நம்முடைய முன்னோர்கள் சொல்லி விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
இந்த பழமொழி தான் நாளடைவில் இப்படி மாறி விட்டது என்றும், இப்படித்தான் பழமொழியைச் சொல்ல வேண்டும் என்றும், சொல்லி பழமொழிகளின் வார்த்தைகளையே தங்கள் அறிவுக்கு ஏற்றபடி மாற்றி விட்டு விடுகிறார்கள்.
அது மாதிரி சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல பேர் நிறைய பழமொழிகளின் வார்த்தைகளையே மாற்றிக் கொண்டே வருகிறார்கள் இது தவறான செயல்.
இந்த தவறான செயல் சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த தவறான செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் நம்முடைய முன்னோர்கள் நமக்கு கொடுத்து விட்டுச் சென்ற மிக உயர்ந்த பொக்கிஷமான பழமொழிகளை இழந்து விடுவோம்
நமக்கு பழமொழிகளின் அர்த்தம் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லி விட்டு செல்ல வேண்டும்.
அதை விட்டு விட்டு இது தான் பழமொழிக்கு அர்த்தம் என்று சொல்லி விட்டு பழமொழியின் வார்த்தைகளை மாற்றுவது என்பது தவறான விஷயம்.
பழமொழி ஒன்று தான் ஆனால் அதில் உள்ள அர்த்தம் என்பது ஒருவருடைய எண்ணத்திற்கும், அறிவிற்கும், புத்திசாலித்தனத்திற்கும், அனுபவத்திற்கும் ஏற்றபடி மாறிக் கொண்டே தான் இருக்கும்.
பழமொழியின் அர்த்தம் நமக்கு என்ன தெரிகிறதோ அதைச் சொல்ல வேண்டும். நம்முடைய அறிவில் நாம் என்ன கண்டோமோ அதைச் சொல்ல வேண்டும்.
இது தான் பழமொழியின் உண்மையான அர்த்தம் என்று பழமொழியையே மாற்றுவது கூடாது. அப்படி மாற்றுவது தவறான செயல் ஆகும்.
இந்தப் புத்தகத்தில் நான் 22 பழமொழிகளுக்கு விளக்கங்கள் கதைகளுடன் சொல்லி இருக்கிறேன்.
சிதைக்கப்பட்ட பழமொழிகள் (விளக்கங்கள் கதைகளுடன்)
என்ற புத்தகம் எழுதி முடித்து இப்போது LAY OUT, PROOF CORRECTION
சென்றிருக்கிறது.
நான் எழுதிய என்னுடைய 13-வது புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்பதை சொல்லிக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி
K.பாலகங்காதரன்
எழுத்தாளர்
///////////////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment