November 02, 2011

பிள்ளையார் தோப்புக்கரணம்


பிள்ளையார் தோப்புக்கரணம்

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம் எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டு உள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும் இதயத்தில் ஒரு பின்னல் போட்டும் புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது

வலது கால் பெருவிரவலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும் இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும் புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது

சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள்ள ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்

நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது

அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறதுஅதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது

பல தடவை தொடர்ந்து தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தியை துhண்டி மேலே எழ வைக்கிறதுதோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுந்து சுழுமுனை நாடி வழியாக புருவமத்தியில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது

ஜப்பானில் ஜென் புத்த மதத்துறவிகள் இந்த தோப்புக் கரணத்தை குண்டலினி சக்தியை கிளப்புவதற்கு உபயோகப் படுத்துகிறார்கள்

நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்ப தோப்புக் கரணம் போடுகிறோம் இந்த தோப்புக் கரணத்தை பிள்ளையாருக்கு மட்டும் ஏன் போட வேண்டும் பிள்ளையார் சிலை முன் ஏன் போட வேண்டும் என்பதை பார்ப்போம்

மனிதர்களுடைய உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன ஒவ்வொரு ஆதாரத்திற்கும் ஒரு தெய்வசக்தி உண்டு ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ள தெய்வ சக்தியின் அருள் நமக்குக் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெற முடியும்

ஆறு ஆதாரங்களும் அந்த ஆதாரங்களுக்கு உரிய தெய்வசக்திகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
ஆதாரம்                      தெய்வசக்திகள்
மூலாதாரம்  -------------           விநாயகர்
சுவாதிட்டானம் ------------          பிரம்மா
மணிபு+ரகம்  -----------------                 விசணு
அநாகதம்    ------------             ருத்திரன்
விசுக்தி           -------------      மகேஸ்வரன்
ஆக்கினை   -------------            சதாசிவன்

இந்த ஆறு ஆதார தெய்வ சக்திகளின் அருளால் கிடைப்பது தான் சகஉறஸ்ரார சித்தி ஆகும்

மேற்கண்ட காரணங்களால் தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்

2 comments:

  1. கிடைத்தற்கரிய இரகசியங்களை வெளிடுவருகிரிர்கள் வாழ்க தங்களின் தமிழ் தொண்டு
    jana

    ReplyDelete
  2. அச்சோ...இது என் Neerkondar Entammal Venkudusamy Naidu பதிவல்லவோ.. Very nice.

    ReplyDelete