July 24, 2016

இயேசு கிறிஸ்து-தாயுமானவர்-அங்கிங்கெனாதபடி-பதிவு-76(பாகம்-1)

இயேசு கிறிஸ்து-தாயுமானவர்-அங்கிங்கெனாதபடி-பதிவு-76(பாகம்-1)

""""பதிவு எழுபத்துஆறை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""
இயேசு கிறிஸ்து:
"காவல் பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக் கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது."
--------மத்தேயு - 27 : 15
"அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர் போன ஒருவன் இருந்தான்"
--------மத்தேயு - 27 : 16
"பொறாமையினாலே அவரை ஒப்புக் கொடுத்தார்கள் என்று பிலாத்து பிலாத்து அறிந்து"
--------மத்தேயு - 27 : 17
"அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ?கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்."
--------மத்தேயு - 27 : 18
"பரபாசை விட்டுவிடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்."
--------மத்தேயு - 27 : 20
"தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டும் என்று கேட்டான்.அதற்கு அவர்கள்:பரபாசை என்றார்கள்."
--------மத்தேயு - 27 : 21
"பிலாத்து அவர்களை நோக்கி:அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான்என்ன  செய்ய வேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்."
--------மத்தேயு - 27 : 22
"தேசாதிபதியோ:ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்:அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்."
--------மத்தேயு - 27 : 23
"கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு,தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன்:நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றான்."
--------மத்தேயு - 27 : 24
"அதற்கு ஜனங்களெல்லாரும் இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்."
--------மத்தேயு - 27 : 25
"அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து,சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்."
--------மத்தேயு - 27 : 26
"அப்பொழுது,தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேவாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய்,போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச் செய்து,"
--------மத்தேயு - 27 : 27
"அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
--------மத்தேயு - 27 : 28
"முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து,அவர் முன்பாக முழங்காற்படியிட்டு:யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,"
--------மத்தேயு - 27 : 29
"அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்."
--------மத்தேயு - 27 : 30
"அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டு போனார்கள்."
--------மத்தேயு - 27 : 31

அன்றைய கால கட்டத்திலும்
இன்றைய கால கட்டத்திலும்
சமுதாயம் இரண்டு விதமான
செயல்களைச் செய்து வருகிறது
ஒன்று       தேவையுள்ள செயல்
மற்றொன்று   தேவையற்ற செயல்

எது தேவையுள்ள செயல்
எது தேவையற்ற செயல் என்று புரியாமலேயே
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமலேயே
இரண்டிற்கும் உள்ள அர்த்தம் அறியாமலேயே
செயல்களைச் செய்து கொண்டு வருகிறது
சமுதாயம்

பெரும்பாலும்
தேவையற்ற செயலை
தேவையுள்ள செயல் என்று நினைத்துக் கொண்டு
தேவையற்ற செயலை
தேவையுள்ள செயல் என்று நினைத்துக் கொண்டு
செயல்களைச் செய்து வருகிறது
சமுதாயம்

தேவையற்ற செயலை செய்வதால்
ஏற்படும் நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளாமல்
துணிந்தே எந்தவிதமான எதிர் விளைவுகளுக்கும் கவலைப் படாமல்
தேவையற்ற செயலை செய்து வருகின்றனர்

தேவையுள்ள செயலுக்கும் தேவையற்ற செயலுக்கும்
உள்ள வேறுபாடு தெரியாத காரணத்தினால்
உண்மை எது பொய் எது
உணர முடியாமல் தவிக்கிறது
சமுதாயம்

உண்மை எது பொய் எது என்று
உணர முடியாத காரணத்தினால்
சமுதாயத்தில் நிலவி வரும்
வார்த்தைகளின் அர்த்தம்
புரிய முடியாமல் போகிறது.

சமுதாயத்தில் நிலவி வரும் வார்த்தைகளின் அர்த்தம்
புரியாத காரணத்தினால்
தங்களுக்கு என்ன அர்த்தம் தெரிகிறதோ
அந்த அர்த்தத்தை சொல்லி விடுகின்றனர்
சமுதாயத்தில் உள்ள சிலர்.
பழமொழிகளின் அர்த்தம் தெரியாத காரணத்தினால்
பழமொழியையே மாற்றி விடுகின்றனர்
மேலும் சிலர்.

"பந்திக்கு முந்து படைக்கு பிந்து"
என்பது பழமொழி
இதற்கு பல்வேறு தரப்பட்ட அர்த்தங்கள் நிலவுகின்றன
பந்தி போட்டால் முதலில் போய் சாப்பிட வேண்டும்
இல்லையென்றால் சாப்பாடு தீர்ந்து விடும்
போர் என்று வந்து விட்டால்
கடைசியில் தான் போருக்குச் செல்ல வேண்டும்
முன்னாடி சென்றால் போரில் இறந்து விடுவோம்
என்ற அர்த்தத்தில்
பந்திக்கு முந்து படைக்கு பிந்து
என்ற பழமொழி
இந்த சமுதாயத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

நாம் எந்த வேலையைச் செய்தாலும்
அதற்கு உடலில் சக்தி வேண்டும்
உடலில் சக்தி இல்லையென்றால்
உடல் சரியாக வேலை செய்யாது
அதாவது நம்மால் சரியாக வேலை செய்ய முடியாது
நம்மால் சரியாக இயங்க முடியாது.

உடலில் உள்ள சக்தியின் அளவைப் பொறுத்தே
ஒவ்வொருவரும் வேலை செய்ய முடியும்
உடலில் சக்தி குறைய குறைய
உடலானது தளர்வு நிலைக்கு சென்று விடும்.
உடலானது தளர்ந்து போய்விடும்.

ஒரு கல்லைத் தூக்க வேண்டும் என்றால்
உடலுக்கு சக்தி தேவை
உடலில் சக்தி இல்லை என்றால்
நம்மால் கல்லை தூக்க முடியாது.
உடலுக்கு சக்தியை கொடுப்பது
நாம் சாப்பிடும் உணவில் உள்ள
வைட்டமின்கள்,
புரோட்டீன்கள்,
கார்போஹைட்ரேட்டுகள்.

நாம் உண்ணும் உணவில் உள்ளவைகளே
நம் உடலைத் தாங்குகிறது
நம் உடலைக் காப்பாற்றுகிறது
நாம் சாப்பிடும் உணவில் உள்ள
சத்துப் பொருட்களைப் பொறுத்து
உடல் வலிமை பெறுகிறது
உடலுக்கு வலிமையைப் பெற்றுத் தருகிறது
உடல் வலிமை பெற்று வேலை செய்கிறது
உடலில் சக்தி இல்லை என்றால்
நம்மால் வேலை செய்ய முடியாது.

போர் செய்ய வேண்டும் என்றால்
உடலில் வலிமை வேண்டும்
உடல் எந்த அளவுக்கு வலிமை உடையதாக இருக்கிறதோ
அந்த அளவிற்கே நம்மால் போர் செய்ய முடியும்.

அந்த கால கட்டங்களில் போர் செய்ய வேண்டும் என்றால்
வாள், கேடயம் போன்றவற்றை
தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அவைகள் அதிக கனம் கொண்டவையாக இருக்கும்
கிலோ கணக்கில் அதன் எடை அதிக கனமானதாக இருக்கும்
எடை அதிக அளவில் இருக்கும்
அதனை தூக்க வேண்டும்
சுமக்க வேண்டும்
தூக்கி கொண்டு நடக்க வேண்டும்
தூக்கி கொண்டு ஓட வேண்டும்
தூக்கி கொண்டு போர் செய்ய வேண்டும் என்றால்
உடலில் அதிக அளவில்  சக்தி வேண்டும்
சக்தி இல்லை என்றால் கனமாக பொருட்களை
எடை அதிகமான பொருட்களை
எடை அதிகமான போர்க்கருவிகளை
கையாண்டு போர் செய்ய முடியாது.

அதற்காக சத்து நிறைந்த உணவுப் பொருட்களை
அதிக அளவில் சாப்பிட்டு
உடலை திடகாத்திரமாக வைத்துக் கொண்டால் தான்
நம்மால் நன்றாக போர் செய்ய முடியும்
போர் செய்யும் அளவுக்கு உடலில் வலிமை இல்லை என்றால்
நம்மால் போர் செய்ய முடியாது - எனவே
உடலை போர் செய்வதற்கு ஏற்ற வகையில்
உடலை வலிமை நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் நல்ல நிலையில் இல்லை என்றால்
உடல் வலிமை பெற்ற நிலையில் இல்லை என்றால்
உடல் சக்தியுள்ள நிலையில் இல்லை என்றால்
உடல் திடகாத்திரமாக இல்லை என்றால்
உடல் நன்றாக இல்லை என்றால்
போர் செய்தால்
ஆபத்து நமக்குத் தான்.

போரில் எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்றால்
எதிரிக்கு கிடைக்க வேண்டிய
உணவுப் பொருட்களை அவர்களுக்கு
கிடைக்க விடாமல் பண்ணி விட்டால்
உணவுப் பொருட்களை அழித்து விட்டால்
உணவுப் பொருட்களை கைப்பற்றி விட்டால்
எதிரிப் படையை அழித்து விடலாம்.

அந்தக் கால போர் முறையானாலும் சரி
இந்தக் கால போர் முறையானாலும் சரி
போர் முறை தான் மாறுமே ஒழிய ;
சூழ்நிலைகள் தான் மாறுமே ஒழிய ;
போர் தந்திரங்கள் தான் மாறுமே ஒழிய ;
காலங்கள் தான் மாறுமே ஒழிய ;
போர் வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய
உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதால் தான்
இறப்புகள் அதிகம் ஏற்பட்டது என்பது
வரலாற்று உண்மை.

உணவுப் பொருட்களை அழித்ததினாலும்
போர் வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவுப் பொருட்களை
கிடைக்காமல் செய்ததினாலும் தான்
வெற்றிகள் பல பெறப்பட்டன என்பது வரலாற்றில்
நாம் காணும் உண்மை.

உடலில் சக்தி இருந்தால் போர் செய்ய வேண்டும்
உடலில் சக்தி இல்லை என்றால்
நாம் போர் செய்ய செல்லக் கூடாது
போர் செய்ய உடலில் சக்தி வேண்டும்
அதனால் உணவு உண்ண வேண்டும்
அதனால் முதலில் பந்திக்கு முந்து
அதாவது முதலில் சாப்பிடு
சாப்பிட்டதால் கிடைக்கும் சக்தியை வைத்து
போர் செய்யலாம்
அதனால் படைக்கு பிந்து
அதாவது சாப்பிட்டு விட்டு போருக்கு போ
சாப்பிடாமல் போருக்கு போகாதே
சாப்பிடாமல் போருக்கு போனால்
நம்மால் போர் செய்ய முடியாது.
என்ற அர்த்தத்தில்
முதலில் சாப்பிடு பிறகு போருக்கு போ
என்ற அர்த்தத்தில்
" பந்திக்கு முந்து படைக்கு பிந்து "
என்ற பழமொழி சொல்லப்பட்டது.

பழமொழிகளின் அர்த்தம் புரியாமலேயே
புரியாத காரணத்தினாலேயே
பழமொழிகளின் அர்த்தத்தை மட்டும்அல்ல
பழமொழிகளையே மாற்றி விடுகின்றனர்.

"குரைக்கிற நாய் கடிக்காது"
இது ஒரு பழமொழி
நம்மை நோக்கி ஒரு நாய் குரைக்கிறது என்றால்
நாம் அதை திரும்பி முறைத்தால்
அல்லது
அந்த நாயை நாம் எதிர்த்தால்
அந்த நாய் ஓடிவிடும்
அந்த நாய் நம்மை கடிக்காது
குரைக்கிற நாய் கடிக்காது
நாய் பயத்தினாலேயே குரைக்கிறது
அது கடிக்காது
எனவே குரைக்கிற நாயைப் பார்த்து
பயப்பட வேண்டாம் என்ற அர்த்தம் கொண்டு
இந்த பழமொழி உலா வருகிறது.

அலுவலகத்தில் நாம் வேலை செய்கிறோம்
நம் மேல் அதிகாரி நம் மேல் கோபம் கொண்டு
நம்மை திட்டிக் கொண்டே இருக்கிறார்
எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்
என்றால்
நாம் அவரை எதற்கெடுத்தாலும் அவர்
குரைத்துக் கொண்டே இருக்கிறார்
என்போம்.
ஆனால் நமக்கு ஏதாவது பிரச்சினை
ஸஸ்பென்சன் வரும் போது
கோபத்துடன் நம்மை திட்டிய
நம்மை குறை சொல்லிக் கொண்டே இருந்த
நம் உயர் அதிகாரி
நம் மேல் அதிகாரி 
நமக்காக பரிந்து பேசி நம்மைப் பற்றி
உயர்வாக சொல்லி
நன்றாக வேலை செய்வார் ;
கடினமான உழைப்பாளி ;
நேர்மையானவர் ;
நியாயமாமனவர் ;
யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார் ;
தன் வேலையை மட்டும் பார்ப்பார் ;
அலுவலக நேரத்தில் அரட்டை அடிக்க மாட்டார் ;
அலுவலக நேரத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்ப்பார்;
அலுவலக வேலையை செய்யாமல்
சொந்த வேலையை பார்ப்பவர்கள் மத்தியில்
இவர் அலுவலக வேலையை மட்டும் பார்ப்பார்;
மற்றவர்களைப் பற்றி புறம் பேச மாட்டார் ; - என்று
நம்மைப் பற்றி உயர்வாக சொல்லி
நம்மைப் பற்றிய உண்மைகளைப் பற்றிச் சொல்லி
நமக்கு கிடைக்க வேண்டிய ஸஸ்பென்சன்
கொடுக்க விடாமல் செய்து விடுவார்.
நம்மை காப்பாற்றுவார்

அதாவது திட்டுபவர் நமக்கு ஆபத்து வந்தால்
நம்மை அழிக்க மாட்டார்
நம்மை காப்பாற்றுவார்.
குரைக்கிற நாய் கடிக்காது என்றால்
நம்மை திட்டும் அதிகாரி
நம்மை அழிக்க மாட்டார்
நம்மை அழிக்க நினைக்க மாட்டார்
நம்மை காப்பாற்றுவார்
என்பது தான் பொருள்.
அது தான் கோபம் உள்ள இடத்தில்
குணம் இருக்கும் என்று சொல்வது.

குரைக்கிற நாய் கடிக்காது - ஆனால்
குரைக்காத நாய் கடிக்கும் என்பது
அந்தப் பழமொழியினுள் மறைந்திருக்கும் மற்றொரு பொருள்
குரைக்கிற நாயை நாம் நம்பலாம் -ஆனால்
குரைக்காத நாயை நாம் நம்பக்கூடாது என்று பொருள்.

அலுவலகத்தில் நம்மை அண்டி இருக்கும் அலுவலர்
நம் உழைப்பை சுரண்டுபவர் ;
நம்மை ஏமாற்றி வேலை வாங்குபவர் ;
நம்மிடம் வேலை வாங்க வேண்டும் என்பதற்காகவும் ;
நம்மை வேலை செய்ய வைக்க வேண்டும் என்பதற்காகவும் ;
நம் நலனில் அக்கறை உள்ளவர் போல் நடிப்பவர் ;
தன் வேலை நடக்க வேண்டும் என்பதற்காக
நம் அறிவைப் புகழ்பவர் ;
தன் வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்
என்பதற்காக நம் திறமையைப் போற்றுபவர் ;
தன் காரியத்தை முடித்து கொள்ள வேண்டும்
என்பதற்காக நம்மை புகழ்பவர் ;
நமக்கு ஒரு ஆபத்து வந்தால்
நம்மை விட்டு ஓடி விடுவதுடன் ,
நமக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவதுடன் ,
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு
நம்மை அழிப்பதற்கான சதி வேலைகளில் ஈடுபட்டு
நம்மை காப்பாற்றுவது போல் நடித்து
உங்களுக்காக எவ்வளவோ பாடுபட்டேன் ;
உங்களுக்காக எவ்வளவோ பேசினேன் ;
உங்களைப் பற்றியும் ,
உங்கள் திறமையைப் பற்றியும்,
உங்கள் உழைப்பைப் பற்றியும்,
உங்களுடைய சின்சிரியாட்டியைப் பற்றியும்,
எவ்வளவு சொல்லியும் மேல் அதிகாரிகள் கேட்கவில்லை  - என்று
நம்மை நம்ப வைத்து
நம்மை காப்பாற்றாமல் விட்டு விடுவார்.
நாம் அழிவதற்கு ஒரு காரணமாக
அமைதியாக இருப்பவர் இருப்பார்.

திட்டியவர் நம்மை காப்பாற்றுவார் ;
திட்டாமல் இருப்பவர் நம்மை அழிப்பார் ;


குரைக்கிற நாயிடம்
நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
ஏனென்றால் குரைக்கிற நாய் கடிக்காது;

குரைக்காத நாயிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ;
ஏனென்றால்,
குரைக்காத நாய் கடிக்காது

அதைப் போல் நம்மைத் திட்டுபவர் திட்டும் அதிகாரி
நம்மைக் காப்பாற்றுவார் ;
நம்மை திட்டாத அதிகாரி
நம்மை காப்பாற்ற மாட்டார் ; -  என்ற
பொருளில்
"குரைக்கிற நாய் கடிக்காது" - என்ற 
பழமொழி இந்த சமுதாயத்தில்
உலா வருகிறது.
இந்த பழமொழியின் அர்த்தம் சரியாக உணரப்பட்டால்
உண்மைக்கும், பொய்யுக்கும் உள்ள வேறுபாடும்
அதன் மூலம்,
தேவையுள்ள செயலுக்கும்,
தேவையற்ற செயலுக்கும்,
உள்ள வேறுபாட்டையும் உணர முடியும்.

கைது செய்து காவலில் வைக்கப்பட்டவர்களை
யாரை குறிப்பாக மக்கள் விடுதலை செய்ய வேண்டும்
என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ
அவனை மக்களுக்காக விடுதலை செய்வது என்பது
பண்டிகை தோறும் தேசாதிபதியின் வழக்கமாயிருந்தது.
காவல் பண்ணப்பட்டவர்களில்
பரபாஸ் என்னப்பட்ட ஒருவனும் இருந்தான்.

பிலாத்து அவர்களை நோக்கி கேட்டான்
உங்களுக்காக நான்
எவனை விடுதலை செய்ய வேண்டும்
பரபாசையா, இயேசுவையா என்று கேட்டான்.

ஏற்கனவே பிரதான ஆசாரியாரும்மூப்பரும்
பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும்;
இயேசுவைக் கொலை செய்யவும்;
ஜனங்களை ஏவி விட்டிருந்தார்கள் ;
ஜனங்களிடம் சொல்லி வைத்திருந்தார்கள்;
ஜனங்கள் மனதை மாற்றி வைத்திருந்தார்கள்;

தேசாதிபதி ஜனங்களை நோக்கி
இவ்விருவரில் நான் எவனை விடுதலை செய்ய வேண்டும்
உங்களுக்காக நான் யாரை விடுதலை செய்ய வேண்டும்
இயேசுவையா, பரபாசையா என்றான்.

ஏற்கனவே பிரதான ஆசாரியாரும் ,மூப்பரும்
ஜனங்களிடம் சொல்லி வைத்தபடி
ஜனங்கள் பரபாஸை விடுதலை செய்ய வேண்டும் என்றார்கள்.

அப்படியானால் நான் இயேசுவை
என்ன செய்ய வேண்டும் - என்று
பிலாத்து ஜனங்களை நோக்கி கேட்டான்
இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் - என்று
ஜனங்கள் சொன்னார்கள்.

தேசாதிபதியோ இயேசு என்ன தவறு செய்தான்
ஏன் சிலுவையில் அறைய வேண்டும் என்றான்
அதற்கு ஜனங்கள்
இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டும் - என்று
அதிகமாய்க் கூச்சலிட்டு, கூக்குரலிட்டு சொன்னார்கள்
சத்தம் அதிகமாக இருந்தது.

எது தேவையுடைய செயல் ;
எது தேவையற்ற செயல் ;
என்று தெரிந்திருந்தும்
சிலர் தேவையுடைய செயலை விட்டு விட்டு
தேவையற்ற செயலைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தங்களுக்கு தேவையில்லாதது
தேவையற்ற செயலாக இருந்தாலும்
தேவையற்ற செயலை தேர்ந்தெடுப்பதால்
தேவையற்றவைகளால்
தேவையற்ற நிகழ்வுகள் நடக்கும் என்று தெரிந்தும் ;
தேவையற்ற செயல்கள் நடக்கும் என்று தெரிந்தும்;
தேவையற்ற வருத்தங்கள் ஏற்படும் என்று தெரிந்தும்;
தேவையற்ற கவலைகள் ஏற்படும் என்று தெரிந்தும்;
தேவையற்ற சோகங்கள் ஏற்படும் என்று தெரிந்தும்;
தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்று தெரிந்தும்;
தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் என்ற தெரிந்தும்;
தேவையற்ற செயலை தேர்ந்தெடுப்பதின் மூலம்
பலன் ஏதும் இல்லை என்று உணர்ந்திருந்தும்;
தேவையுடைய செயல்
தேவையுடையதாக இருந்தாலும் ,
நன்மை பயக்கத்தக்க விதத்தில் அமைந்திருந்தாலும்,
தேவையுடைய செயல்
தேவையுடையது என்று தெரிந்திருந்தும்,
தேவையற்ற செயலையே தேர்ந்தெடுக்கின்றனர்
சமுதாயத்தில் சிலர்.

சமுதாயம் அன்று முதல் இன்று வரை
தேவையுடைய செயல்
எது என்று தெரிந்திருந்தும்
ஒரு சில காரணங்களுக்காக,
ஒரு சில விஷயங்களுக்காக,
சந்தர்ப்பவாத செயல்களுக்காக,
சுயநல நிகழ்வுகளுக்காக,
தேவையற்ற செயலையே செய்து வருகிறது.

சமுதாயம் இரண்டு முக்கியமான செயல்களை
அதாவது

தேவையுடைய செயல் எது என்று தெரியாமல்
தேவையற்ற செயலையும்,
தேவையற்ற செயல் எது என்று தெரியாமல்
தேவையுடைய செயலையும்,
செய்து வருகிறது.

நாம் பெரும்பாலும்
நம் வீட்டு வேலைகளை நாம் செய்வதில்லை
நம் வீட்டு வேலைகளை செய்வதற்கு
இயந்திரங்களைப் பயன் படுத்துகிறோம்
இயந்திரங்களைப் பயன் படுத்துவதோடு மட்டுமில்லாமல்
வேலைக்காரர்களை நியமித்து
நம் வீட்டு வேலைகளைச் செய்யப் பயன் படுத்துகிறோம்.

துணி துவைக்க வாஷிங் மெஷின் பயன் படுத்துகிறோம்;
மாவு அரைக்க கிரைண்டர் பயன் படுத்துகிறோம்;
சமையல் செய்ய சாமான் அரைக்க மிக்ஸி பயன்படுத்துகிறோம்;
அருகில் உள்ள கடைக்குச் செல்ல வேண்டும் என்றாலும்
பைக், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைப் பயன்படுத்துகிறோம்.

அந்த காலத்தில் துணியை கையால் துவைப்பார்கள்
எழுந்து உட்கார்ந்து கசக்கி முறுக்கி தோய்ப்பார்கள்
உடலுக்கு அது ஒரு பயிற்சியாக இருக்கும்.

ஆட்டு உரலில் அரிசி இட்டு உளுந்து போட்டு
கையால் ஆட்டுவார்கள்;
மாவு கிடைக்க,
அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று ஆட்டுவார்கள்;
இது கை உடலுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருந்தது.
அருகில் இடங்களுக்கு மட்டுமில்லாமல்
தொலைவில் உள்ள இடங்களுக்கும் நடந்தே செல்வர்;
கல் மேல் நடந்து செல்வர் ;
காலில் காலணி அணியாமல் நடந்து செல்வர்;
இதனால் கால்கள் பலம் பெறுவதுடன்
உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது.

கால் பாதங்களில் உள்ள நரம்புகள்
உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுடன்
தொடர்பு கொண்டுள்ளன.
வெறும் காலுடன் தரையில் நடப்பதால்
பாதங்களில் உள்ள நரம்புகள்
மற்ற உடல் உறுப்புகளை இயக்க வைக்கிறது;
அவற்றை புத்துணர்ச்சி பெற வைக்கிறது;
அதை விட்டு விட்டு
இன்று அருகில் செல்லக் கூட
பைக், ஸ்கூட்டர் பயன் படுத்துகிறோம்.

அது மட்டுமில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய
வீட்டில் வேலைக் காரர்களை அமர்த்தி
வீட்டு வேலைகளைச் செய்ய வைக்கிறோம்.


வீட்டைத் துடைப்பது;
வீட்டைக் கழுவுவது;
பாத்திரங்கள் கழுவுவது;
சமையல் செய்வது ; - என்று
வேறுபட்ட பல வேலைகளை செய்வதற்கு ,
நம் வீட்டு வேலைகளை செய்வதற்கு,
வேலைக்காரர்களை பயன் படுத்துகிறோம்
இந்த வேலைகளை எல்லாம்
நாமே செய்யாமல் இயந்திரங்களையும், வேலையாட்களையும்
பயன்படுத்துகிறோம்.

இந்த வேலைகளை
தேவையுடைய செயலான
இந்த வேலைகளை நாமே செய்யாமல்
இயந்திரங்களையோ, வேறுபட்ட
மனித உடல் உழைப்பையோ பயன்படுத்தி
நாம் வேலைகளைச் செய்கிறோம்.

தேவையுடைய செயலான
இந்த செயல்களை நாமே செய்தோமானால்
உடற்பயிற்சி என்ற ஒன்றை
நாம் தனியாக செய்ய வேண்டிய அவசியமில்லை.
தேவையுடைய இந்த வேலைகளை நாமே செய்தோமானால்,
உடல் ஆரோக்கியம் பெறும்;
உடல் வலிமை பெறும்;
உடல் எதிர்ப்பு சக்தி ஆற்றல் பெறும் ;
உடல் நோயிலிருந்து
தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மை பெறும்; ஆனால்
தேவையுடைய செயலான
இந்த செயலை நாம் செய்வதில்லை.

காலம் இல்லை நேரம் இல்லை வேலை அதிகம்
போன்ற காரணங்களைக் காட்டி
தேவையுடைய இந்த செயல்களை
நாமே செய்யாமல் விட்டு விடுகிறோம

தேவையுடைய செயல் என்று தெரிந்தும் - சிலர்
தங்களுடைய வேலைகளை தாமே செய்வதில்லை
இந்த தேவையுடைய செயலை செய்வதில்லை;

தேவையுடைய செயல் என்று தெரியாமல் - சிலர்
தங்களுடைய வேலைகளை தாமே செய்வதில்லை
இந்த தேவையுடைய செயலை செய்வதில்லை;

தேவையுடைய இந்த செயல்களை
அன்றாடம் நாம் செய்து வந்தாலே
நம் உடல் வலிமை பெறும் ;
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்குரிய
தன்மைகளைப் பெறும்;
உடற்பயிற்சி என்ற ஒன்றை
தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியதில்லை.

நாம் நம் வேலைகளை அன்றாடம் செய்யாமல்,
தேவையுடைய இத்தகைய வேலைகளைச் செய்யாமல்,
தேவையுடைய நம்முடைய வீட்டு வேலைகளைச் செய்யாமல்,
உடல் ஆரோக்கியம் இழந்த பின்பு
உடல் நோயுற்ற பின்பு - தனியாக
உடற்பயிற்சி என்ற ஒன்றை செய்கிறோம்;
நடக்கிறோம் , ஜாக்கிங் செய்கிறோம் ;
காலையில் எழுந்து இவையெல்லாம் செய்கிறோம் ;
தேவையுடைய செயல் என்று நினைத்துக் கொண்டு
தேவையற்ற செயலை செய்துகொண்டிருக்கிறோம்.

அன்றாடம் நாம் செய்ய வேண்டிய செயல்களை
நாம் அன்றாடம் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளை
தேவையுடைய செயல் என்று உணராமல்,
தேவையற்ற செயலாக - தனியாக
உடற்பயிற்சி என்ற ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம்

தேவையுடைய செயல் எது என்றும்
தேவையற்ற செயல் எது என்றும் - உணராமல்
தேவையுடைய செயலை விட்டு விட்டு
தேவையற்ற செயலை
தேவையுடைய செயல் - என்று நினைத்து
தேவையற்ற செயலை
நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

பிலாத்து
இயேசு என்ன பொல்லாப்பு செய்தான் என்றான்
ஏற்கனவே சொல்லி வைக்கப்பட்டபடி
அவனைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று
அதிகமாகக் கூச்சலிட்டார்கள்.

கலகம் அதிகமாவதைக் கண்டு
கூச்சல் கூடுவதைக் கண்டு
தண்ணீரை கைகளால் அளளி
ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி
இந்த நீதிமானின் இரத்தப் பழிக்கு
நான் ஆளாக விரும்பவில்லை
நான் காரணமாக இருக்க விரும்பவில்லை
நான் குற்றமற்றவன்
நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றான் பிலாத்து.

மக்கள் தேவையற்ற செயலை
தேவையுடைய செயல் என்று நினைத்துக் கொண்டு
தேவையற்ற செயலை
செய்கின்றனர் என்று நினைத்தான்.

பிலாத்தின் வார்த்தைக் கேட்ட
ஜனங்கள் எல்லோரும்
இயேசுவின் இரத்தப் பழி எங்கள் மேலும்
எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்
இரத்தப் பழியை
நாங்களும் எங்கள் பிள்ளைகளும் ஏற்றுக் கொள்கிறோம்
என்றார்கள்.

பிலாத்து
தேவையற்ற செயலை
தேவையுடைய செயலாக நினைத்து
துணிந்து ஜனங்கள் செய்கின்றனர்
என்று நினைத்தான்.

பிலாத்து மக்களுக்காக
பரபாசை விடுதலை பண்ணினான்;
இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில்
அறையும் படிக்கு ஒப்புக் கொடுத்தான்;
மக்கள்
தேவையுடைய செயலான
இயேசுவை விடுதலை செய்யச் சொல்லாமல்
தேவையற்ற செயலான
பரபாசை விடுதலை செய்யச் சொன்னார்கள்.

தனக்கு தேவை இல்லை என்றால்,
தனக்கு பிடிக்கவில்லை என்றால்,
தனக்கு விருப்பம் இல்லை என்றால்,
தேவையுடைய செயலாக இருந்தாலும்
தேவையுடைய செயலை தேர்ந்தெடுக்காமல்
தனக்கு துன்பம் வரும் என்று தெரிந்தும்,
தனக்கு பாதிப்பு வரும் என்ற தெரிந்தும்,
தனக்கு எந்த நன்மையும்
ஏற்படப் போவதில்லை என்று தெரிந்தும்,
தனக்கு துன்பமே ஏற்படும் என்று தெரிந்தும்,
தனக்கு எந்த உபயோகமும்
ஏற்படப் போவதில்லை என்று தெரிந்தும்,
தேவையற்ற செயலை தேர்ந்தெடுத்து
அதனைப் பின்பற்றி
இச்சமுதாயம் செய்து வருகிறது.

இயேசுவை விடுதலை பண்ணும்
தேவையுடைய செயலை செய்யாமல்
பரபாசை விடுதலை பண்ணும் தேவையற்ற செயலை
இச்சமுதாயம் செய்தது.

தேவையுடைய செயல் எது என்றும்,
தேவையற்ற செயல் எது என்றும்,
உணர்ந்திருந்தும்;
தங்களுக்கு பிடிக்காத காரணத்தால்
இயேசுவை விடுதலை பண்ணும்
தேவையுடைய செயல்
தங்களுக்கு பிடிக்காத காரணத்தினால்,
மக்களில் ஒரு சிலரை தவறாக வழிநடத்தி
தேவையுடைய செயலை
தேவையற்ற செயலாக உணர வைத்து,
தேவையற்ற செயலான பரபாசை விடுதலை பண்ணும்
தேவையற்ற செயலை செய்வதற்கு,
சமுதாயத்தில் ஒரு பிரிவினரை
தேவையற்ற செயலை செய்வதற்காக
மக்களை தூண்டி விட்டு
தேவையற்ற செயலை செய்ய வைத்து விட்டனர்.

தேவையற்ற செயல் என்று தெரியாமலேயே சிலரும்
தேவையற்ற செயல் என்று தெரிந்தும் சிலரும்
இந்த தவறை துணிந்து செய்தனர்.

தேவையற்ற செயல்களில்
சில செயல்களைச் செய்வது பாவம் என்று தெரிந்தும்
தேவையற்ற செயலை துணிந்து செய்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

பிறர் மனம் வருத்தப்படும்படி பேசுவதும்,
பிறர் குறையை சுட்டிக் காட்டி பேசுவதும்,
மிகப் பெரிய குற்றம்;
பிறருடைய குறையை சுட்டிக்காட்டி
நேரடியாக பேசுவதும்,
மறைமுகமாக பேசுவதும்.
பாதிக்கப்பட்டவருடைய மனம் புண்படும் - என்று
தெரிந்தோ - தெரியாமலோ பேசுகின்றனர்.

சிலர் தெரிந்தே வேண்டும் என்றே
குறையை சுட்டிக் காட்டி நேரடியாக
மனம் வருத்தப்படும்படி பேசுகின்றனர்.
தாங்கள் நன்றாக இருக்கிறோம்
தங்களுக்கு எந்தக் குறையும் இல்லை;
தங்களுக்கு எந்த நோயும் இல்லை;
தங்களுக்கு எந்த இழப்பும் இல்லை;
தங்களுக்கு எந்த கவலையும் இல்லை;
தங்களுக்கு எந்த துன்பமும் இல்லை;
தங்களுக்கு எந்த சோகமும் இல்லை;
என்ற நினைப்பில்,
மற்றவர்களை இகழ்வாக பேசுவது;
மற்றவர்களை தரம் குறைத்து பேசுவது;
மற்றவர் மனம் வருத்தப்படும்படி பேசுவது; - என்று
தேவையற்ற செயலை பாவம் - என்று
தெரிந்தோ - தெரியாமலோ
தேவையற்ற செயலை செய்கின்றனர்.

நாம் மேலிருக்கிறோம்;
கோபுரத்தின் மேலிருக்கிறோம்;
உச்சத்திலிருக்கிறோம்; - என்று நினைத்துக்கொண்டு
கோபுரத்தின் மேல் இருக்கும் நாம்
கோபுரத்தின் கீழ் விழுவோம்
என்று நினைப்பதில்லை.

சக்கரத்தின் மேல் இருக்கும் நாம்
சக்கரம் சுழன்றால் சக்கரத்தின் கீழ் வருவோம்
என்று நினைப்பதில்லை.

நாம் வாழ்வு என்றும் நிலையானது
சுகத்தில் திளைப்போம்;
மகிழ்ச்சியில் களிப்போம்;
இன்பத்தில் உழல்கிறோம்;
என்று நினைத்துக்கொண்டு,
பிறரை மனம் வருத்தப்படும் படி பேசுவர் சிலர்
தேவையற்ற செயலை செய்வர்.
நமக்கும் துன்பம் வரும்;
நமக்கும் இழப்பு வரும்;
நமக்கும் கவலை வரும்;
நமக்கும் சோகம் வரும்;
என்று நினைத்தால்,
தேவையற்ற செயலான
பிறர்மனம் வருத்தப்படும்படி பேசுவதை
பேச மாட்டார்ர்கள்.

தனக்கு துன்பம் வந்தால் எப்படி நம் மனம் வலிக்குமோ
அப்படியே தான் பிறருக்கு துன்பம் வந்தாலும்
அவர்கள் மனமும் வலிக்கும் என்பதை உணர்ந்தால்
தேவையற்ற செயலான
பிறர் மனம் வருத்தப்படும்படி பேசுவது
பிறர் மனம் வருத்தப்படும்படி நடந்து கொள்வது
போன்ற வேலைகளை
இச் சமுதாயம் செய்யாது.

பிறர் குறையைச் சொல்லி
மனம் வருத்தப்படும்படி பேசுவது என்பது
தேவையற்ற செயல் என்பதை
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து
தேவையற்ற செயலை செய்வதை விலக்கி
தேவையுள்ள செயலான
நல்லதை பேசுவதை
நல்லதையே செய்வதை கைக்கொண்டால்
இச்சமுதாயம் தேவையுள்ள செயலை
பின்பற்றும்
கடைபிடிக்கும்.

இயேசுவின் வஸ்திரங்களைக் கழற்றி
சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி
முள்ளினால் ஒரு முடியைப் பின்னி
அவர் சிரசின் மேல் வைத்து
அவர் கையில் ஒரு கோலைக் கொடுத்து
அவர் முன்முழங்காலிட்டு
முழங்காற் படியிட்டு
யூதருடைய ராஜாவே வாழ்க என்று
அவரை கிண்டல் பண்ணினார்கள்;
கேலி செய்தார்கள்;
கேலி பண்ணிணார்கள்;
பரியாசம் பண்ணினார்கள்;
அவர்மேல் துப்பி அந்தக் கோலை எடுத்து
அவரைச் சிரசில் அடித்தார்கள்;
அவரைக் கேலியும் கிண்டலும் செய்த பின்பு
அவருக்கு உடுத்தின
மேலங்கியைக் கழற்றி
அவருடைய வஸ்திரங்களைக் கழற்றி
அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி
அவரை சிலுவையில் அறையும் படி
கொண்டு போனார்கள்.

தேவையுடைய செயல் எது என்றும்,
தேவையற்ற செயல் எது என்றும்,
தெரியாத காரணத்தினாலும்,
தேவையற்ற செயல் என்று தெரிந்த காரணத்தினாலும்
தேவையற்ற செயலை துணிந்தே செய்தனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

தங்கள் சுய லாபத்திற்காகவும்;
தங்கள் சுய தேவைக்காகவும்;
தங்கள் வசந்த வாழ்கைக்காகவும்;
தங்கள் இன்ப உணர்வுக்காகவும்;
தங்கள் மகிழ்ச்சி நிலைப்பாட்டுக்காகவும்;
தேவையுடைய செயலை
தேவையற்ற செயலாக மாற்றி
தேவையற்ற செயலை
தேவையுடைய செயலாக மாற்றி
மக்களை
தேவையற்ற செயலை
தேவையுடைய செயல் என்று நம்ப வைத்து
தேவையற்ற செயலை துணிந்து
செய்ய வைத்து விட்டனர்.

எனவே,
தேவையுடைய செயல்
தேவையற்ற செயலாகவும்
தேவையற்ற செயல்
தேவையுடைய செயலாகவும்
மாறிவிட்டது.

சமுதாயம் என்று தேவையுடைய செயல் எது என்றும்
தேவையற்ற செயல் எது என்றும் உணர்ந்து
தேவையற்ற செயலை நீக்கி
தேவையுடைய செயலை செய்ய ஆரம்பிக்கிறதோ
அன்று தான்
சுயநல விரும்பிகள்
அழிந்து உண்மை வாழும் என்கிறது பைபிள்.

---------இதன் தொடர்ச்சி
     இயேசு கிறிஸ்து-தாயுமானவர்-அங்கிங்கெனாதபடி-பதிவு-76(பாகம்-2)
------------பார்க்கவும், படிக்கவும்


No comments:

Post a Comment