April 21, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-7




ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-7


அப்பொழுது அங்கே
ஔவையார்
வருகிறார்
இவர் தான்
திறமையாக
வேலை செய்பவர்
அதாவது
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
செயல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்.

அவர் நான் ஒரு
பாடல் எழுதி தருகிறேன்
அதை மன்னரிடம்
கொடுங்கள்
என்று கொடுத்தார்

முதலில் புலவர்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை
ஔவையார்
என் பாடல்
நான்குகோடிக்கு
ஈடானது
மன்னரிடம் கொடுங்கள்
என்று சொல்லிய
பின்னர் புலவர்கள்
வாங்கிக் கொண்டனர்.

ஔவையார் எழுதிய
அந்தப் பாடலில்
நான்கு செயல்களைச்
சொல்கிறார்
இரண்டு செயல்களை
செய்ய வேண்டாம்
என்றும்
இரண்டு செயல்களை
செய்ய வேண்டும்
என்றும் சொல்கிறார்.

நன்றாக உற்றுக்
கவனித்தால்
ஒரு செயலுக்கும்
மற்றொரு செயலுக்கும்
தொடர்பு உள்ளது
தெரியவரும்.

ஔவையார் நான்கு
செயல்களைப்பற்றி
சொல்கிறார்
ஒவ்வொரு செயலையும்
கோடி பெறும்
என்கிறார்

கோடி என்ற சொல்லை
ஔவையார்
பணம் என்று
சொல்லவில்லை
நாம் கோடி என்ற
சொல்லை
பணமாகவோ,
பொன்னாகவோ,
புண்ணியமாகவோ
எடுத்துக் கொள்ளலாம்

எந்த இடத்தில் பணம்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
எந்த இடத்தில் பொன்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
எந்த இடத்தில்
புண்ணியம்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
என்பது தான் முக்கியம்

ஒவ்வொரு செயலும்
கோடி மதிப்புடையது
என்றால்
நான்கு செயல்கள்
நான்கு கோடி
மதிப்புடையது

ஒவ்வொரு செயலுக்கும்
மதிப்பு
ஒரு கோடி என்று
மதிப்பீடு செய்து
நான்கு செயல்களுக்கு
நான்கு கோடி என்று
தன்னுடைய பாடலுக்கு
மதிப்பீடு செய்த
செயல்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்துவது ஆகும்.

நான்கு கோடி
பாடல் எழுதாமல்
பாட்டிலேயே
நான்கு கோடியையும்
கொண்டு வந்தது
பிறர் ஏற்றுக் 
கொள்ளத் தக்க
வகையில்
செயல்களைச்
செய்தது ஆகும்.

மற்ற புலவர்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு.

ஒவையார்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
செயல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக் காட்டு.

--------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment