November 20, 2018

திருக்குறள்-பதிவு-53


                       திருக்குறள்-பதிவு-53

இரு பிரதான
உலக அமைப்புகள்
தொடர்பான
உரையாடல்
(Dialogue Concerning
The Two Chief
World Systems)
என்ற கலிலியோவின்
நூலைத் தீயிட்டுக்
கொளுத்தும்படியும்,
கலிலியோவை
வீட்டுக் காவலில்
வைக்கும் படியும்
ரோமபுரி
மடாதிபதிகள்
கட்டளையிட்டதைத்
தொடர்ந்து
கலிலியோவிற்கு
எதிரானவர்கள்
அனைவரும்
ஒன்று கூடி
கலிலியோவிற்கு
எதிராக நடத்திய
செயல்கள்
அனைத்தும்
வருந்தத் தக்கவை.

கலிலியோவின்
புத்தகம் எங்கெல்லாம்
அச்சடிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறதோ
அங்கெல்லாம்
மதவாதிகள் புகுந்து
அச்சடிப்பதை
அவர்களாகவே
நிறுத்தி அச்சடிக்கப்
பட்டுக் கொண்டிருக்கும்
கலிலியோவின்
புத்தகத்தையும்
அச்சடித்து வைக்கப்
பட்டிருக்கும்
கலிலியோவின்
புத்தகத்தையும்
மொத்தமாக
தெருவில்
கொண்டு வந்து
போட்டனர்

பெரிய கடைகள்
சிறிய கடைகள்
என்ற பேதம்
இல்லாமல்
விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த
கலிலியோவின்
புத்தகங்கள்
அனைத்தையும்
பறிமுதல்
செய்து தெருவில்
கொண்டு வந்து
போட்டனர்

கலிலியோ
புத்தகத்தில்
என்ன சொல்லி
இருக்கிறார்
என்பதை தெரிந்து
கொள்வதற்காகவும்
அவரை எதிர்த்து
விவாதம்
செய்வதற்காகவும்
அவரை எதிர்த்து
கேள்விகள்
கேட்பதற்காகவும்
கலிலியோவின்
எதிர்ப்பாளர்கள்
வாங்கி வைத்த
தங்களுடைய
புத்தகங்களையும்
தெருவில் கொண்டு
வந்து போட்டனர்

கலிலியோவின்
கருத்திற்கு ஆதரவு
தெரிவிப்பவர்கள்
கலிலியோவிற்கு
ஆதரவாக
இருப்பவர்கள் யார்
என்பதையும்
தெரிந்து கொண்டு
அவர்களின்
வீட்டிற்குள் புகுந்து
கலிலியோவின்
ஆதரவாளர்கள்
வாங்கி வைத்து
இருந்த
கலிலியோவின்
புத்தகங்கள்
அனைத்தையும்
மிரட்டி பறிமுதல்
செய்து அத்தனை
புத்தகங்களையும்
தெருவில் கொண்டு
வந்து போட்டனர்

அந்த நாட்டில்
உள்ள எந்த
ஒரு வீட்டிலும்
கலிலியோவின்
புத்தகம் இல்லை
என்று சொல்லும்
வகையில்
கலிலியோவின்
புத்தகம்
அனைவரிடமும்
இருந்து
பறிமுதல் செய்து
தெருவில் கொண்டு
வந்து போட்டனர்

நாட்டின் பல்வேறு
இடங்களில்
இத்தகைய
செயல்களின் மூலம்
கலிலியோவின்
புத்தகங்கள்
அனைத்தும்
தெருவில் கொண்டு
வந்து போடப்பட்டு
மலை போல்
குவியலாக வைத்து
தீயிட்டுக்
கொளுத்தப்பட்டன

அதில் எழுந்த புகை
அந்த நாட்டையே
புகை மண்டலமாக
ஆக்கியதோடு
மட்டும் அல்லாமல்
அந்த நாட்டை
இருள் மயமாகவும்
ஆக்கியது
ஒருவரை ஒருவர்
பார்க்க முடியாதபடி
புகை மண்டலம்
உருவானது என்றால்
எவ்வளவு
எண்ணிக்கையில்
கணக்கிலடங்காத
கலிலியோவின்
புத்தகங்கள்
எரிக்கப்பட்டிருக்கும்
என்பதை கற்பனை
செய்து பார்த்துக்
கொள்ளலாம்

கலிலியோவின்
புத்தகத்தை
எரிப்பதன் மூலம்
கலிலியோவையே
எரிப்பது போல்
நினைத்து
தங்களது
மகிழ்ச்சியை
வெளிப்படுத்தி
கொண்டிருந்தனர்
மதவாதிகள்

--------  இன்னும் வரும்
---------  20-11-2018
/////////////////////////////////////////////////



No comments:

Post a Comment