February 12, 2019

திருக்குறள்-பதிவு-105


                     திருக்குறள்-பதிவு-105

பெல்லரமினோ :
“ உங்கள் மேல்
பல்வேறு விதமான
குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்பட்டு இருந்தாலும்
அவைகள் அனைத்தையும்
ஒதுக்கி விட தீர்மானித்து
உள்ளோம் - ஆனால்
நீங்கள் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும் ;
கிறிஸ்தவ மதத்திற்கும் ;
பைபிளுக்கும் ; எதிராக
செயல்பட்டீர்கள்
என்பதற்கு ஆதாரமாக
உள்ள அனைத்து
குற்றச் சாட்டுக்களையும்
ஒதுக்கி விடாமல் ;
அந்த குற்றச்சாட்டுக்கள்
அனைத்தையும் நாங்கள்
எட்டாக சுருக்கி உள்ளோம் “

ஒன்று :
“ நீங்கள் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராகவும் ;
போப்பிற்கு எதிராகவும் ;
எழுதி இருக்கிறீர்கள் “

இரண்டு :
“ நீங்கள் கன்னிமேரியின்
கன்னித் தன்மையை
சந்தேதிக்கும் வகையில்
இழிவு படுத்தி
எழுதி இருக்கிறீர்கள் “

மூன்று :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்
பட்டிருக்கும் திருப்பலியில்
வழங்கப்பட்டு
உட்கொள்ளப்படும்
அப்பம் (Bread)
இயேசுவின் உடலாகவும்,
மதுரசம் (Wine)
இயேசுவின் இரத்தமாகவும்
மாற்றமடைகிறது என்ற
கோட்பாடு தவறானது
என்று எழுதி
இருக்கிறீர்கள் “

நான்கு :
“ நீங்கள் இயேசு
கிறிஸ்துவை கடவுளின்
பிள்ளை இல்லை என்றும் ;
அவர் ஒரு மந்திரவாதி
என்றும் ;எழுதி
இருக்கிறீர்கள் “

ஐந்து :
“ நீங்கள் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது என்றும் ;
அதைப்போல்
எண்ணற்ற சூரியக்
குடும்பங்கள் இந்த
பிரபஞ்சத்தில் நிறைய
எண்ணிக்கையில்
நிரம்பி இருக்கிறது
என்றும் ; எழுதி
இருக்கிறீர்கள் “

ஆறு :
“ நீங்கள் மறுபிறப்பில்
நம்பிக்கை கொண்டு
இருக்கின்ற காரணத்தினால்
மறுபிறப்பு
உண்டு என்றும் ;
சொர்க்கமும், நரகமும்
இல்லை என்றும் ;
எழுதி இருக்கிறீர்கள் “

ஏழு :
“ நீங்கள் பிசாசுகளும்
இரட்சிக்கப்படுவார்கள்
என்று எழுதி
இருக்கிறீர்கள் “

எட்டு :
“ அற்புதம் என்பது
இயற்கையுடன்
இணைந்து இருக்கிறது
என்றும் ;
அப்போஸ்தலர்களும் .
தீர்க்கதரிசிகளும் .
மந்திரவாதிகள்
என்றும் நீங்கள்
எழுதி இருக்கிறீர்கள் “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி இருக்கும்
பழக்க வழக்கங்களுக்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ மத
நம்பிக்கைகளுக்கு
எதிராகவும் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராகவும் ;
நீங்கள் கூறியுள்ள
உண்மைக்கு புறம்பாக
உள்ள இந்த எட்டு
கருத்துக்களையும் ;
நீங்கள் விசாரணையின்
போது கூறி இருக்கிறீர்கள். “

“ நீங்கள் சொன்ன
இந்த எட்டு கருத்துக்களும்
தவறானவை என்றும் ;
இனி இதைப்போல்
தவறுகள் செய்ய
மாட்டேன் என்றும் ;
ஒப்புக் கொண்டு ,
ஸாண்டா மரியா
டெல்லா மினர்வா
சர்ச்சில்
(Church of Santa Maria
della Minerva)
பொது மக்கள்
முன்னிலையில்
மண்டியிட்டு நீங்கள்
பகிரங்கமாக மன்னிப்பு
கேட்க வேண்டும் “

“ நீங்கள் மன்னிப்பு
கேட்டுக் கொண்டு
உங்கள் உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்கு
உங்களுக்கு எவ்வளவு
காலம் தேவைப்படுமோ
அவ்வளவு காலத்தை
நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம் “

(என்று சொல்விட்டு
ஜியார்டானோ புருனோவை
பார்த்தார் பெல்லரமினோ)


ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

பெல்லரமினோ :
“ உங்கள் உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்கு
நாங்கள் உங்களுக்கு
நாற்பது நாட்கள்
அவகாசம் தருகிறோம் “

“ உங்கள் உயிரை
காப்பாற்றிக்
கொள்வதற்கான
கடைசி வாய்ப்பு இது “

“ அதனை நீங்கள்
சரியான விதத்தில்
பயன்படுத்திக்
கொள்வீர்கள் என்று
நினைக்கிறோம் “

“ கடவுள் உங்களை
காப்பாற்றட்டும்…………………………..! “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  12-02-2019
//////////////////////////////////////////////


No comments:

Post a Comment