February 25, 2019

திருக்குறள்-பதிவு-112


                     திருக்குறள்-பதிவு-112

“ 17-02-1600
ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட பின்னரும்
அவர் ஏற்றி வைத்த
சுயமரியாதைச் சுடரொளி
அணையாமல் இந்த
உலகத்தில் தொடர்ந்து
எரிந்து கொண்டு
தான் இருந்தது “

“ இத்தாலி நாட்டின்
ஒற்றுமை மற்றும்
இத்தாலியில் ஏற்பட்ட
புதிய இராச்சியம்
ஆகியவை
1870-ஆம் ஆண்டு
அரசு ரோமை
எடுத்துக் கொண்டது ;
இத்தாலி நாட்டின்
தலை நகரமாக
ரோம் மாறியது ;
இதனால் ரோம்
வாட்டிகனில்
ஒரு பகுதியாக இல்லை ;
போப்பின் ஆட்சி
முடிவடைந்தது ; “

“ இதனால்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
உயர் பதவியில்
இருந்தவர்களுக்கும் ;
இத்தாலி இராச்சியத்தின்
தலைவர்களுக்குமிடையில் ;
மிகப்பெரிய மோதல்களை
உருவாக்க இது
காரணமானது ; “

“ போப் பியஸ் IX
(Pope Pius- IX)
தான் வாட்டிகனில் சிறை
வைக்கப்பட்டிருப்பதாக
உணர்கிறேன் என்று
சொன்னதிலிருந்து
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கும் ;
இத்தாலி இராச்சியத்திற்கும் ;
ஏற்பட்ட மோதலை
தெரிந்து கொள்ளலாம் “

“ 1871-ஆம் ஆண்டு
இத்தாலி இராச்சியம்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ;
சர்ச்சுகளும் ;
எவ்வாறு செயல்பட
வேண்டும் என்பதற்கான
புதிய சட்டங்களை
உருவாக்கின ;
இந்த சட்டம் போப்பின்
அதிகாரங்களை
வரைமுறைப் படுத்தின ;
நிதி இழப்பீடும்
வழங்கப்பட்டன ;
போப் பியஸ் IX
(Pope Pius- IX)
இந்த சட்டத்தை
ஏற்கவில்லை ;”

“ Non-Expedit (1874)
என்று அழைக்ப்பட்ட
தீர்ப்பு இத்தாலிய
பாராளுமன்றத்திற்கான
எந்தவொரு தேர்தலிலும்
பங்கேற்க அனைத்து
கத்தோலிக்கர்களையும்
தடை செய்தது “

“ இதனால் இத்தாலிய
இராச்சியத்திற்கும் ;
சர்ச்சுகளுக்கும் ;
இடையேயான மோதல்
உச்ச கட்டத்தை
அடைந்தது ; “

“மக்களின்
நீண்டநாள் கோரிக்கை  ;
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்களின்
முக்கியமான கோரிக்கை ;
மற்றும்
மாணவர்களின்
புரட்சிகரமான
கோரிக்கையுமான ;
ஜியார்டானே புருனோவின்
சிலையை அமைக்க
வேண்டும் என்ற
கோரிக்கை ; - இந்த
கால கட்டத்தில்
புதிய வேகத்துடன்
கிளர்ந்து எழ
ஆரம்பித்து விட்டது ; “

“ இதனால் அரசிற்கும் ;
சர்ச்சுகளுக்கும் ;
இடையே மோதல்
வெடித்தது ;
அது மட்டுமல்லாது
மக்களிடையேயும்
இந்த மோதல் பரவ
ஆரம்பித்தது ;
ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் ;
மற்றும்
ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் ;
என்று இரு வேறுபட்ட
நிலைகளில் மக்கள்
நின்று கொண்டு
ஒருவருக்கொருவர்
மோதிக்கொண்டனர் ;
வாக்குவாதம் ;
பேச்சு வார்த்தை ;
சண்டை ;
மோதல்கள் ;
என்று படிப்படியாக
உருவெடுத்து ;
ரத்தக் களறியில்
கொண்டு சென்று
விட்டது ; “

“ இருந்தாலும்
மக்களின் நீண்ட நாள்
கோரிக்கையான
ஜியார்டானோ
புருனோவிற்கு சிலை
வைக்க வேண்டும்
என்ற கோரிக்கை
ஏற்றுக் கொள்ளப்பட்டது “

“ 17-02-1600-ஆம்
ஆண்டு ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடத்தில்,
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரிந்து
கொண்டிருந்த சரியான
இடத்தில் சிலை வைக்க
முடிவு செய்யப்பட்டது. “

“இதனை கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையும் ;
சர்ச்சுகளும் ;
கிறிஸ்தவர்களும் ;
எதிர்த்தனர். இவர்கள்
அனைவரும் எதிர்ப்பதற்கு
முக்கியமான ஒரு
காரணம் இருந்தது ; “

---------  இன்னும் வரும்


----------  K.பாலகங்காதரன்
---------  25-02-2019
//////////////////////////////////////////////


No comments:

Post a Comment