April 29, 2019

பரம்பொருள்-பதிவு-8


                        பரம்பொருள்-பதிவு-8

“உயிருள்ள கல்லை
தேர்ந்தெடுத்து ;
அந்த கல்லிடம்
கடவுள் சிலையை
செதுக்க அனுமதி
பெற்ற உடன் ;
கடவுள் சிலையை
செதுக்கக் கூடாது ; “

“ கர்ப்பக் கிரகத்தில்
வைக்கப்படும் கடவுள்
சிலையுடன்
சேர்த்து மொத்தம்
மூன்று முக்கியமான
விஷயங்கள் ஒன்றுடன்
ஒன்று சூட்சுமமாக
பிணைந்து இருக்கின்றன “

“கோயிலின்
நீளம் அகலம், உயரம்
மற்றும்
கர்ப்பக்கிரகத்தின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவற்றிற்கு ஏற்ப
கர்ப்பக் கிரத்தில்
வைக்கப்படும்
கடவுள் சிலையின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவை இருக்க
வேண்டும் “

“ இவைகள் மூன்றும்
ஒன்றுக்கு ஒன்று
தொடர்புடையவை ;
மூன்றும் ஒன்றுக்கொன்று
ஒத்திசைவை உடையவை ;
மூன்றும் ஒன்றுக்கொன்று
ஒத்ததிர்வை உடையவை ; “

“ எனவே, இவை
மூன்றையும்
ஒன்றுக்கொன்று
தொடர்பு இருக்கும்
விதத்தில்
அமைத்தால் மட்டுமே
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையின்
மூலமாக பெறப்படும்
சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படும்”


“கர்ப்பக் கிரகத்தில்
வைப்பதற்காக
முதலில் கடவுள் சிலை
செதுக்கப்படுமானால்……………….?
கடவுள் சிலைக்கு
ஏற்றாற்போல்
கர்ப்பக்கிரகத்தின்
நீளம், அகலம், உயரம்
மற்றும் கோயிலின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவை அமைக்ப்பட்டு
மூன்றும் ஒன்றுக்கொன்று
ஒத்திசைவு கொள்ளும்
விதத்தில் கோயில்
அமைக்கப்பட வேண்டும்”

“கோயிலும்,கர்ப்பக்கிரகமும்
முதலில் கட்டி
முடிக்கப்படுமானால்……………….?
கோயிலுக்கும்
கர்ப்பகிரகத்திற்கும்
ஏற்றாற்போல்
கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும்
கடவுள் சிலையின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவை அமைக்கப்பட்டு
மூன்றும் ஒன்றுக்கொன்று
ஒத்திசைவு கொள்ளும்
விதத்தில் கோயில்
அமைக்கப்பட வேண்டும்”

“கோயிலின்
நீளம், அகலம், உயரம்
கர்ப்பகிரகத்தின்
நீளம், அகலம்,உயரம்
கர்ப்பகிரகத்தில்
வைக்கப்படும்
கடவுள் சிலையின்
நீளம், அகலம், உயரம்
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
ஒத்திசைவு கொள்ளும்
விதத்தில் கோயில்
அமைக்கப்பட வேண்டும்”

“கடவுள் சிலை
செதுக்கிய பிறகு
கோயிலும், கர்ப்பக்கிரகமும்
அமைக்கப்பட்டாலும் சரி ;
கோயிலும், கர்ப்பக்கிரகமும்
அமைக்கப்பட்ட பிறகு
கடவுள் சிலை
அமைக்கப்பட்டாலும் சரி  ;
மூன்றும் ஒன்றுக் கொன்று
ஒத்திசைவு கொள்ளும்
வகையில் தான்
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் சிலைகள்
அமைக்கப்பட வேண்டும்”

“இவ்வாறு அமைக்கப்படும்
முறைக்கு ஆகம சாஸ்திரம்
என்று பெயர் ‘

“ ஆகம சாஸ்திர
முறையின் படியே
அந்தக் காலம்முதல்
இந்தக் காலம் வரை
இந்துமதக் கோயில்கள்
கட்டப்பட்டு பராமரிக்கப்
பட்டு வருகின்றன ‘

“ கர்ப்பக் கிரகத்தில்
வைக்கப்படும் கடவுள்
சிலைகள் மற்றும்
இந்துமதக் கோயில்களில்
வைக்கப்படும் அனைத்து
கடவுள் சிலைகளும்
ஆகம சாஸ்திர
முறைப்படி தான்
செதுக்கப்பட்டு
இந்துமதத்தின்
கோயில்களில்
வைக்கப்படுகின்றன”

“உயிருள்ள கல்லை
கண்டுபிடித்து-அந்த
கல்லிடம்
கடவுள் சிலை செதுக்க
அனுமதி பெற்ற பிறகு
ஆகம சாஸ்திர முறைப்படி
கடவுள் சிலையை
செதுக்கிய பிறகு
கடவுள் சிலையை
உயிரோட்டம் உள்ளதாக
மாற்ற வேண்டும்”

அதாவது
கடவுள் சிலையை உயிருள்ள
ஒன்றாக மாற்றுவது ;
அதாவது
கடவுள் சிலைக்கு உயிர்
கொடுப்பது ;
அதாவது
கடவுள் சிலையை
கடவுளாகவே மாற்றுவது ;
அதாவது
கடவுள் சிலைக்குள்
கடவுளை இறக்குவது ;
அதாவது
கடவுள் சிலைக்குள்
கடவுளை பிரதிஷ்டை
செய்வது ;
அதாவது
கடவுள் சிலைக்கு பிராண
பிரதிஷ்டை செய்வது ;
அதாவது
கடவுள் சிலையை
கடவுளாக உருவாக்குவது ;

என்று பொருள்

பிராண பிரதிஷ்டை
என்றால் என்ன
என்று தெரியுமா……………?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  28-04-2019
/////////////////////////////////////////////////////



No comments:

Post a Comment