May 12, 2019

அன்னையர் தின வாழ்த்துக்கள்-12-05-2019


அன்னையர் தின
வாழ்த்துக்கள்-12-05-2019 !

அன்பிற்கினியவர்களே !

“பட்டினத்தார் ஞானம் பெற
 வேண்டி அனைத்தையும்  
துறந்து வீட்டை விட்டு
வெளியே செல்லும் போது
தன் தாயிடம் இருந்து
விடை பெறுகிறார்.”

தாயார்
“மகனே செல்ல முடிவு
எடுத்து விட்டாய் !
இனி உன்னை தடுத்து
நிறுத்த முடியாது
எனக்காக ஒன்றே ஒன்று
செய்ய வேண்டும்”

பட்டினத்தார்
“அனைத்தையும் துறந்தவனிடம்
என்ன எதிர்பார்க்கிறீர்கள்”

தாயார்
“நான் செத்தபிறகு நீ
தான் எனக்கு கொள்ளி
போட வர வேண்டும்
வருவாயா மகனே”

பட்டினத்தார்
“அம்மா நான் அனைத்தையும்
துறந்தவன்-தாய் பாசத்தையும்
சேர்த்துத் தான் துறந்து
இருக்கிறேன் - அப்படி
இருக்கும் போது எப்படி
உங்களுக்கு கொள்ளி
போட நான் வருவேன்”

தாயார்
“மகனே உலகில் உள்ள 
எந்த ஒரு பாசத்தையும்
துறக்கலாம் - ஆனால்
தாய் பாசத்தை மட்டும்
துறக்க முடியாது “

பட்டினத்தார்
“அனைத்தையும்
துறந்தவனுக்கு
தாய் என்ன ?
தந்தை என்ன ?
மகன் என்ன ?
எல்லாம் ஒன்று தான்”

தாயார்
“இப்பொழுது நான் சொல்லும்
எதுவும் உன் காதுகளுக்கு
எட்டாது. அனுபவம்
வரும் பொழுது தான்
எல்லாம் உனக்கு புரியும்
இருந்தாலும் நான்
சொல்வதைக் கேள்
இந்த நாணயத்தை நீ
வைத்துக் கொள் தினமும்
நீ அணியும் ஆடையின்
முனையில் இதை முடி
போட்டு வைத்துக் கொள்.”

“நான் இறந்தவுடன் அந்த
முடி அவிழ்ந்து நாணயம்
கீழே விழுந்து விடும்.
நான் இறந்து விட்டேன்
என்று உனக்கு தெரிந்தவுடன்
 நீ எங்கிருந்தாலும் நான்
இருக்கும் இடம் தேடி
வந்து நீ எனக்கு
கொள்ளி வைக்க வேண்டும்.
 நீ கொள்ளி வைத்தால்
தான் என் ஆன்மா
சாந்தி அடையும்.”

பட்டினத்தார்
இச்செயல் நடப்பது என்பது
இயலாத காரியம்
இருந்தாலும் உங்களுக்காக
அந்த நாணயத்தை என்
துண்டின் ஓரத்தில்
கட்டி வைத்துக் கொள்கிறேன்

என்று அந்த நாணயத்தை
வாங்கிக் கொண்டார்
அதை அவர் உடுத்தியிருந்த
உடையின் ஓரத்தில்
முடிச்சு போட்டு
வைத்துக் கொண்டார்”

“பட்டினத்தார் பல ஆண்டுகள்
பல  இடங்களுக்கும் சென்று
பல்வேறு கருத்துக்களைப்
பரப்பி வந்தார்.
அவ்வாறான செயல்கள்
நடை பெற்றுக்  கொண்டிருக்கும் 
வேளையில், ஒரு நாள்
தவநிலையில் இருக்கும் போது
அவர் உடுத்தி இருந்த
ஆடையில் முடிந்து வைக்கப்பட்ட
 நாணயம் அவிழ்ந்து
 கீழே விழுந்தது.”

“அவர் தாய் இறந்து
விட்டார் என்று அவருக்கு
தெரிந்ததும், அவரையும்
அறியாமல் அவர் மனம்
தடுமாற்றம் அடைந்தது.
உடனே அவர் அருகில்
இருந்தவர்களிடம் தன்
தாய் இறந்து விட்டார்
அவரைப் பார்க்க சென்று
வருகிறேன் என்று சொல்லி
விட்டு கிளம்பி விட்டார்”

“அவர் தாய் இருக்கும்
இடத்திற்கு வந்தபோது
அங்கே அவர் கண்ட
காட்சி அவரை அதிர்ச்சி
அடையச் செய்தது. அவர்
துறவியாகி எல்லாவற்றையும்
துறந்து சென்று விட்டதால்
சாதி வெறியர்கள் அவர்
குடும்பத்தை விலக்கி
வைத்திருந்தனர். அதனால்
அவர் தாயாரின் இறந்த
உடலுடன் ஓரிருவர் மட்டுமே
நின்று கொண்டிருந்தனர்.”

“தன்னுடைய தாயினுடைய
இறந்த உடலை
பார்த்த பட்டினத்தார்
மனம் வேதனையுற்று
தன்னையுமறியாமல்
கண்ணிலிருந்து விழுந்த
கண்ணீரை அடக்க முடியாமல்,
துக்கம் தாளாமல்
தேம்பித் தேம்பி
அழ ஆரம்பித்தார் ;
கதறி அழ ஆரம்பித்தார் ;
தன்னுடைய அழுகையை
கட்டுப்படுத்த முடியாமல்
அழ ஆரம்பித்தார் ;
உடல் என்னும் கூட்டை
விட்டு இதயம் வெடித்து
வெளியே விழுந்து
விடும் என்று எண்ணத்
தோன்றும் வகையில்
ஆழ ஆரம்பித்தார் ;’

“அப்பொழுது தான் அவர்
தாய் சொன்னது அவர்
நினைவுக்கு வந்தது”

“உலகில் உள்ள எந்த
ஒரு பாசத்தையும்
துறக்கலாம் - ஆனால்
தாய் பாசத்தை மட்டும்
துறக்க முடியாது
என்ற வார்த்தை - அவர்
காதில் எதிரொலித்தது”

“தாயின் வார்த்தையில்
உள்ள உண்மைகளை
உணர்ந்து கொண்டார்
பட்டினத்தார்”

அன்னையர் தின
வாழ்த்துக்கள்-12-05-2019

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்


No comments:

Post a Comment