June 13, 2019

பரம்பொருள்-பதிவு-24


                       பரம்பொருள்-பதிவு-24

“பிரபஞ்சத்தில் உள்ள
கடவுள் சக்தியை
கிரகிப்பதற்கு
தேவையான
செயல்களை
கும்பஸ்தாபனம் ;
மூலம்
செய்யப்படுகிறது ;”

“பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிக்கப்பட்ட
கடவுள் சக்தியை
கும்பத்தில்
இறக்கி
கும்பத்திற்குள்
வைப்பதற்கு
தேவையான
செயல்களை
கலாகர்ஷணம் ;
மூலம்
செய்யப்படுகிறது ;”

“கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்வதற்கு
தேவையான
செயல்கள்
யாகசாலையில் ;
செய்யப்படுகிறது ;”

“இவ்வாறு
கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
ஒன்றாக
செயல்பட்டு
பிரபஞ்சத்தில்
இருந்து
கடவுள் சக்தியை
கிரகித்து ;
கும்பத்தில்
இறக்கி ;
கும்பத்தில்
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்யும் முக்கியமான
மூன்று பணிகளைச்
செய்கிறது “

10.ஸ்பர்சாஸீதி
“ஸ்பர்சாஸீதி
கும்பாபிஷேகம்
இரண்டும்
ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை”

“கடவுள்
சக்தியானது
ஸ்பர்சாஸீதி மூலம்
மறைமுகமாக
கடவுள் சிலைக்கு
செலுத்தப்படுகிறது”

“கடவுள்
சக்தியானது
கும்பாபிஷேகம் மூலம்
நேரடியாக
கடவுள் சிலைக்கு
செலுத்தப்படுகிறது”

“யாகசாலையில்
செய்யப்பட்ட
பல்வேறு
செயல்கள் மூலம்
கடவுள் சக்தியானது
கும்பத்தில்
முழுமையாக இறங்கி ;
கும்பத்தில்
கடவுள் சக்தியானது
முழுமை அடைந்து
இருக்கிறது ;
அதாவது ,
கடவுளானவர்
தனது முழுமையான
சக்தியோடு
கும்பத்தில் இறங்கி
இருக்கிறார் ;
என்று சொல்லலாம் “

“மேலும் நாம்
செய்த செயல்கள் ;
நாம் வேண்டிய
வேண்டுதல்கள் ;
ஆகியவற்றின்
காரணமாக
மக்களுக்கு
அருள் பாலிக்க
வேண்டும் என்ற
நோக்கத்திற்காக
கடவுள் தனது
முழு சக்தியோடு
கும்பத்தில்
இறங்கியிருக்கிறான்;”

“கும்பத்தில் இறங்கி
முழுமை அடைந்து
இருக்கும் இந்த
கடவுள் சக்தியை
கடவுள் சிலையில்
சேர்க்கும் செயலுக்கு
ஸ்பர்சாஸீதி
என்று பெயர்”

“யாகசாலையில்
இருக்கும்
கும்பத்திற்கும் ;
கடவுள் சிலைக்கும் ;
தங்கக் கம்பி
(அல்லது)
வெள்ளிக் கம்பி
(அல்லது)
தர்ப்பைக் கயிறு
மூலம்
இணைப்பு ஏற்படுத்தி
யாகசாலையில்
செய்யப்பட்ட
ஹோமங்களையும் ;
தத்துவங்களையும் ;
தத்துவ
அதிபர்களையும் ;
கடவுள் சிலையில்
சேர்ப்பதற்கு
செய்யப்படும்
செயலுக்கு
ஸ்பர்சாஸீதி
என்று பெயர் “

“இவ்வாறு
ஸ்பர்சாஸீதி
மூலமாக
கடவுள் சக்தியானது
மறைமுகமாக
கடவுள் சிலையில்
சேர்க்கப்படுகிறது”

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 13-06-2019
//////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment