July 14, 2019

பரம்பொருள்-பதிவு-41


                  பரம்பொருள்-பதிவு-41

"பூம்பாவை வீட்டிற்கு
அருகில் உள்ள
ஒரு பூந்தோட்டத்திற்கு
பூப்பறிக்கச் சென்றாள் ;
அதாவது
பூம்பாவை என்ற
பூ ஒன்று
பூப்பறிக்கச் சென்றது ;
பூம்பாவை பூந்தோட்டத்தில்
பூப்பறித்துக் கொண்டிருந்த
போது பாம்பு ஒன்று
பூம்பாவையின் விரல்களில்
தன்னுடைய நான்கு
பற்களையும் பதிய வைத்து
விஷத்தை பூம்பாவையின்
உடலில் ஏற்றியது ;"

" குரங்கினால் கசக்கப்பட்ட
பூமாலை எப்படி
கசக்கப்பட்ட நிலையில்
இருக்குமோ - அப்படி
பாம்பினால் தீண்டப்பட்ட
பூம்பாவை கசங்கிய
மலரென மயங்கி விழுந்தாள் "

" அவளுடைய தோழிகள்
அனைவரும் பூம்பாவையை
தூக்கிக் கொண்டு
போய் படுக்கையில்
சாய்த்து வைத்தார்கள் ;
பூம்பாவை இருக்கும்
நிலையைக் கண்டு
சிவநேசர் தன்னையே
பாம்பு தீண்டியதைப்
போல் அலறித் துடித்து
பெருந்துயருற்றார் ;"

" இச்செய்தியைக்
கேள்விப்பட்ட சுற்றத்தார் ;
உறவினர்கள் ;
நண்பர்கள் ; அனைவரும்
ஓடி வந்து பூம்பாவையின்
உடல் மீது விழுந்து
அம்மா! ஆருயிரே!
கண்ணே! கண்மணியே!
என்று பூம்பாவையின்
மேல் விழுந்து
கதறிய கதறல்
அந்த இடத்தையே
அதிர வைத்தது "

" பூம்பாவையின் உடலில்
ஏறிய விஷத்தை
இறக்குவதற்காக
மந்திரம் ; மருந்து ;
தவம் ; ஆகியவற்றில்
சிறந்து விளங்குபவர்கள்
அனைவரும்
வர வழைக்கப்பட்டனர் ;
இவர்கள் அனைவரும்
தங்களுடைய துறைகளில்
தனித்தனியாக தாங்கள்
கற்றிருந்த அனைத்து
வித்தைகளையும்
பிரயோகித்துப் பார்த்தும்
பூம்பாவையின் உடலில்
ஏறிய விஷத்தை
அவர்களால் இறக்க
முடியவில்லை ;
இது விதியின் செயல் ;
இதனை மாற்ற முடியாது ;
என்று கைவிட்டு
விட்டு சென்று விட்டனர் ;"

" இதனால் பூம்பாவையின்
உடலில் ஏறிய விஷம்
பூம்பாவையின் உயிரை
கொஞ்சம் கொஞ்சமாக
குடித்துக் கொண்டு
இருந்த காரணத்தினால்
பூம்பாவையின் உடல்
கொஞ்சம் கொஞ்சமாக
தளர்ந்து கொண்டு
இருந்தது ;"

" பூம்பாவை
கொஞ்சம் கொஞ்சமாக
இறப்பை நோக்கி சென்று
கொண்டு இருந்தாள் "

" பூம்பாவையின் மேல்
அளவற்ற அன்பும் ;
பாசமும்; நேசமும்;
வைத்திருந்த சிவநேசர்
தன்னுடைய
மகளின் விஷத்தை
விலக்கவல்லார்க்கு
அளவற்ற நிதி
தருவேன் என்று
எல்லா இடங்களிலும்
பறை அறிவித்தார் ;"

" மூன்று நாட்கள் வரை
அரசர்களிடம் உள்ள
மருத்துவர்கள் ;
முதிர்ந்த அனுபவசாலிகள்;
மற்றும் எல்லா
இடங்களிலும் உள்ள
திறமைசாலிகள் ;
பலரும் வந்து தங்களால்
என்னென்ன செயல்களைச்
செய்ய முடியுமோ ?
அத்தனை செயல்களையும்
செய்து பார்த்துவிட்டு
பூம்பாவையின் உடலில்
ஏறிய விஷத்தை இறக்க
முடியாத காரணத்தினால்
வருத்தத்துடன்
சென்று விட்டனர் "

" பட்டாம் பூச்சியென
கவலை மறந்து
களித்து இருந்தவள் ;
சக்கரமென சுழன்று
வேலைகளைச்
செவ்வனே செய்து
உழைப்புக்கு உதாரணமாகத்
திகழ்ந்தவள் ;
தேனொழுகும் வார்த்தையின்
மூலம் கேட்போரை
தன்னுடைய கொஞ்சிப்
பேசும் மொழியின் மூலம்
வசீகரித்து வைத்தவள் ;
தெரிந்தவர் தெரியாதவர்
என அனைவரையும்
அன்பு என்ற நூல்
கொண்டு தன்னுடன்
கட்டிப் போட்டவள் ;
கருணையின் வடிவமாக
அனைவருடைய
உள்ளங்களிலும்
நிறைந்து இருந்தவள் ;
இத்தகைய பல்வேறு
சிறப்புத் தன்மைகளைக்
கொண்டு உண்மையின்
உருவாக விளங்கிய
பூம்பாவையின்
உடலில் ஏறிய விஷம்
பூம்பாவையின் உயிரைக்
குடித்து விட்டது ;
ஆம் பூம்பாவை
இறந்து விட்டாள் !"

" பூம்பாவையின் இறந்த
உடம்பைச் சுட்டு
எலும்பையும் ; சாம்பலையும் ;
ஒரு குடத்தில்
நிரப்பினார் சிவநேசர் ;
கன்னிமாடத்தில்
ஒரு பீடத்தில்
அந்த குடத்தை வைத்து
அந்த குடத்திற்கு
பொன்னும்; மணியும்;
அணிகலன்களும் ;
அணிவித்துத்
திருஞானசம்பந்தரையே
நினைத்து அனுதினமும்
அந்த குடத்தின் அருகில்
அமர்ந்து தவம் செய்து
கொண்டிருந்தார் ;
நாள்தோறும்
மாலை; சந்தனம்;
முதலியவைகளைத்
தவறாமல் அந்த
குடத்திற்கு புனைந்து
வந்தார் "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 14-07-2019
//////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment