பரம்பொருள்-பதிவு-143
உலூபி  :
“நான் இறுதியாக
ஒரே ஒரு 
விஷயத்தைத்
தான்
கேட்க விரும்புகிறேன்
“
“அரவானைப் 
பெற்றெடுத்த
தாயாக 
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன்
; “
“பிள்ளைப் பாசத்தால்
துடித்துக்
கொண்டிருக்கும்
ஒரு தாயாக 
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன்
; “
“களப்பலியை
தடுக்க முடியாத
ஒரு தாயாக 
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன்
; “
“என் மகன் விடும்
சுவாசக் காற்றில்
வாழ்ந்து 
கொண்டிருக்கும்
ஒரு தாயாக 
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன்
; “
“என்னுடைய 
மகனுடைய கதி
என்னவாகும்
என்ற 
கேள்விக்கு
விடை 
தெரியாமல் 
தவித்துக் 
கொண்டிருக்கும்
ஒரு தாயாக 
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன்
; ‘
“அரவானைக் 
களப்பலியிலிருந்து
காப்பாற்றவே
முடியாதா ?
“
சகாதேவன்  :
“முடியாது 
முடியவே முடியாது
“
“அரவானைக்
களப்பலியிலிருந்து
காப்பாற்றவே
முடியாது “
“அரவானுடைய
கர்மா 
தன் வேலையை
செய்யத் தொடங்கி
விட்டது “
“அரவானுடைய
கர்மா 
செயல்படுவதற்கு
ஏற்ற வகையில்
காலத்தின் 
அனைத்து 
கதவுகளும் 
திறக்கப்பட்டு
விட்டது  “
“இதனால் 
கர்மா 
எந்தவிதமான
தடங்கலும் 
இல்லாமல் 
இயங்குவதற்கு
ஆரம்பித்து
விட்டது “
“அரவானின் 
கர்மா 
கச்சிதமாக 
தன்னுடைய 
வேலையை 
முடித்து விட்டால்
தவறான 
விளைவுகள் ஏற்பட்டு
விடும் என்ற
காரணத்தினால்
தான்
அரவானுடைய 
கர்மா 
நிகழ்த்தப்
போகும் 
செயல்களை மாற்றி
அமைக்க 
பரந்தாமன் கிருஷ்ணன்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறார்
“
உலூபி :
“அரவான் 
களப்பலியாகப்
போவது யாருக்காக
? “
சகாதேவன் :
“ அது நீங்கள்
அளிக்கப் போகும்
ஒப்புதலைப்
பொறுத்துத்
தான் இருக்கிறது
“
“நீங்கள் 
அளிக்கப் போகும்
ஒப்புதலுக்காக
அனைவரும் 
எப்படி காத்துக்
கொண்டிருக்கிறார்களோ
அப்படியே 
நானும் காத்துக்
கொண்டிருக்கிறேன்
“
“பாண்டவர்கள்
சார்பாக 
அரவானைக் 
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளிப்பீர்களா
“
உலூபி : 
(உலூபி எதுவும்
சொல்லாமல் 
அமைதியாக இருந்தாள்)
சகாதேவன் :
(சகாதேவன் உலூபியையே
பார்த்துக்
கொண்டிருந்தான்)
(சோதிட சாஸ்திரம்
மூலம் அரவானைப்
பற்றி ஓரளவு
விவரங்களைத்
தெரிந்து கொண்ட
உலூபி 
தன்னுடைய கணவன்
அர்ஜுனனைப்
பார்த்தாள். 
உலூபியின் 
பார்வையை 
நேருக்கு நேர்
சந்திக்க முடியாமல்
தன்னுடைய கண்களை
வேறு பக்கம்
திருப்பிக்
கொண்டான் 
அர்ஜுனன் 
அர்ஜுனனின்
முன்னால் போய்
நின்றாள் உலூபி)
-----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
29-02-2020
//////////////////////////////////////////
