February 17, 2020

பரம்பொருள்-பதிவு-133


            பரம்பொருள்-பதிவு-133

கிருஷ்ணன் :
“பீமா ! நீ என்ன
சொல்கிறாய் ? “

பீமன் :
“அண்ணன்
சொல்வதில்
தவறு எதுவும்
இருப்பதாக எனக்குத்
தோன்றவில்லை ;
அனைத்தும்
சரியானதாகவே
எனக்குத்
தோன்றுகிறது  ;
அதனால்
பாண்டவர்களின்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் “

கிருஷ்ணன் :
“அர்ஜுனா ! நீ
என்ன சொல்கிறாய் ? “

அர்ஜுனன் :  
“எது நடக்க
வேண்டுமோ அது
நடக்கத் தான்
போகிறது - யார்
தடுத்தாலும்
அது நிற்கப்
போவதில்லை ;
அனைத்தும்
நல்லபடியாக
நடப்பதற்கு
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் “

கிருஷ்ணன் :
“நகுலா ! நீ
என்ன சொல்கிறாய் ? “

நகுலன்  :
“பெரியவர்கள்
முடிவு எடுத்தால்
அனைத்தும்
சரியானதாகத்
தான் இருக்கும்  ;
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் ; “

கிருஷ்ணன் :
“சகாதேவா ! நீ
என்ன சொல்கிறாய் ? “

சகாதேவன் :
“அனைத்தும்
உணர்ந்தவர் பரந்தாமர் ;
அவர் எடுத்த
முடிவு என்றைக்கும்
தவறாய்
போனதில்லை ;
பரந்தாமர் எடுத்த
முடிவுக்கு - நானும்
சம்மதிக்கிறேன் ;
ஆமாம் ,
பாண்டவர்களின்
சார்பாக அரவாரனைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
நானும்
சம்மதிக்கிறேன்”

கிருஷ்ணன் :
“திரௌபதி ! நீ
என்ன சொல்கிறாய் ? “

திரௌபதி :
“நல்லது நடக்க
வேண்டும் என்று
அனைவரும் முடிவு
எடுத்து விட்ட பிறகு
நான் எப்படி
நல்லது நடப்பதற்கு
தடையாக
இருப்பேன் - நானும்
சம்மதிக்கிறேன் ;
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலி
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் ; ”

கிருஷ்ணன் :
“நீங்கள் அனைவரும்
பாண்டவர்கள்
சார்பாக அரவனைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
வாக்கு கொடுத்து
இருக்கிறீர்கள் ;
நீங்கள் கொடுத்த
வாக்கை மறந்து
விடாதீர்கள் ; “

“இப்போது
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு வாக்கு
கொடுத்து விட்டு
பிறகு வாக்கு
மாறக்கூடாது “

தர்மர் :
“நாங்கள் கொடுத்த
வாக்கிலிருந்து
எப்போதும்
தவற மாட்டோம்
பரந்தாமா - எங்களை
முழுவதுமாக
நம்பலாம் “

கிருஷ்ணன் :
“தர்மா ! இப்போது
நீ சொன்னதை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள் ;
ஒருவர் உங்களை
சந்தித்து கேள்விகள்
கேட்க வருகிறார்
அவர் கேள்விகள்
கேட்ட பிறகு
நீ வாக்கு தவறாமல்
இருக்கிறாயா
என்று பார்ப்போம் ?”

தர்மர் :
“நாங்கள் கொடுத்த
வாக்கை மீறி
வாக்கு
தவறும் அளவுக்கு
எங்களை சந்தித்து
கேள்விகள் கேட்கப்
போவது யார் ?
யார் அவர்
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“வேறு யார்
…………………………..? “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 17-02-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment