February 21, 2020

பரம்பொருள்-பதிவு-136


            பரம்பொருள்-பதிவு-136

உலூபி :
“யார் தவறு செய்தாலும்
அதை தட்டிக் கேட்கும்
தைரியம் படைத்தவர்
நீங்கள் - உங்கள் முன்னால்
நடந்த செயல் தவறு
என்று உங்களுக்குத்
தெரியவில்லையா ?”

“தவறு என்று தெரியாமல்
ஒப்புதல் கொடுத்தீர்களா  ?
அல்லது தவறு என்று
தெரிந்தும் ஒப்புதல்
கொடுத்தீர்களா ? “

பீமன்  :
“நேருக்கு நேர் மோதி
சண்டையிட்டு வெற்றி
பெற வேண்டும் என்ற
எண்ணம் இல்லாத
மானங்கெட்ட
கோழைப்பயல்
துரியோதனன்………………………”

தர்மர் :
“யாரையும் தவறான
வார்த்தைகளால்
திட்டக் கூடாது பீமா “

பீமன் :
“துரியோதனனை
திட்டலாம் துரியோதனன்
பகைவன் மட்டுமல்ல
கெட்டவனும் கூட ;
கெட்டவனை கெட்ட
வார்த்தையால் திட்டாமல்
நல்ல வார்த்தையிலா
அவனை புகழ முடியும் “

தர்மர் :
“துரியோதனன் கெட்டவனாக
இருக்கலாம் அதற்காக
கெட்டவன் கெட்டது
செய்கிறான் என்பதற்காக
நல்லவனாக இருக்கும் நீ
கெட்ட செயலை செய்யலாமா ?”

“கெட்டவனையும் கெட்ட
வார்த்தையால் பேசாதே  !
நல்ல வார்த்தையால்
பேசு - அது தான்
நல்லவர்களுக்குரிய பண்பு “

பீமன்  :
“நேருக்கு நேர் மோதி
சண்டையிட்டு வெற்றி
பெற வேண்டும் என்ற
எண்ணம் இல்லாத
துரியோதனன்………….
………………………………………………..
என்னது…………………………………..
…………………………………………………
நான் சொன்னது
சரியா………………………….? “

(என்று சொல்லி விட்டு
பீமன் தர்மரைப் பார்த்தான்)

(பீமன் பேசிய வார்த்தையில்
உள்ள அர்த்தத்தைப் புரிந்து
கொண்ட தர்மர் அமைதியாக
புன்னகை சிந்தினார்)

பீமன் :
“நேருக்கு நேர் மோதி
வெற்றி பெற வேண்டும்
என்ற எண்ணம் இல்லாத
துரியோதனன் வெற்றி
பெறுவதற்காக தவறான
விஷயத்தைக்
கையிலெடுத்தான் - அவன்
செயலாக்க நினைத்த
தவறான விஷயத்தை
முறியடிப்பதற்காக
அனைவரும் தவறான
விஷயத்தையே கையில்
எடுத்து இருக்கிறார்களே
என்று வருத்தப்பட்டேன் “

“துரியோதனன்
தான் தவறு செய்தான்
என்றால் இவர்கள் செய்யும்
செயலும் தவறான
விஷயமாக இருக்கிறதே
என்று வேதனைப் பட்டேன்”

“தவறான விஷயத்தை
முறியடிப்பதற்காக
தவறான விஷயத்தையா
பயன்படுத்தவது
என்று கூட யோசித்தேன் “

“யோசித்த போது தான்
தெரிந்தது தவறான
விஷயத்தை
முறியடிப்பதற்காக
சரியான விஷயத்தை
செயலாக்க
முயற்சி செய்து
கொண்டிருக்கிறார்கள் என்று”

“தவறான விஷயத்தை
முறியடிக்க இதை விட
சிறந்த செயல் வேறு
எதுவும் இருக்க முடியாது
என்பதை நான் உணர்ந்து
கொண்ட காரணத்தினால்
தான் சரியான விஷயத்தை
செயல்படுத்துவதற்காக
ஒப்புதல் அளித்தேன் “

“சரியான விஷயத்திற்குத்
தான் ஒப்புதல் கொடுத்து
இருக்கிறேன் என்னுடைய
ஒப்புதலில் எந்தவித
தவறும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை “

“நான் ஒன்றும்
தவறான விஷயத்திற்கு
ஒப்புதல் அளிக்கவில்லை
சரியான விஷயத்திற்குத்
தான் ஒப்புதல்
அளித்து இருக்கிறேன்”

“தவறான விஷயத்திற்கும்
சரியான விஷயத்திற்கும்
உள்ள வேறுபாட்டை - நீ
நன்றாக யோசித்துப்
பார்த்தாயானால் - நான்
ஒப்புதல் அளித்தது சரி
என்று உனக்குப் புலப்படும் “

“நன்றாக யோசி உலூபி
நன்றாக யோசி “

“உன்னுடைய ஒப்புதலில்
தான் இந்த உலகத்திற்கு
விடியலே இருக்கிறது
என்பதை நினைத்துப்
பார்த்து நன்றாக யோசி”

“நீ எடுக்கப் போகும்
முடிவிற்காக - இந்த
உலகமே காத்துக்
கொண்டிருக்கிறது
என்பதை மட்டும்
மறந்து விடாதே உலூபி”

(இனி பீமனிடம்
பேசுவதால் ஒரு பயனும்
இல்லை என்று முடிவெடுத்த
உலூபி நகுலனிடம் சென்றாள்)


-----------இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 21-02-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment