May 01, 2020

பரம்பொருள்-பதிவு-218


              ஜபம்-பதிவு-466
            (பரம்பொருள்-218)

“நட்டு வைக்கப்பட்ட
கம்பில் பொருத்தி
வைக்கப்பட்ட தலையில்
உள்ள கண்களின் வழியாக
பஞ்ச பாண்டவர்களும்
கிருஷ்ணனும் தன்னை
நோக்கி வருவதைக்
கண்டான் அரவான் “

“தன் முன்னால்
வந்து நின்ற
பஞ்ச பாண்டவர்கள்
மற்றும் கிருஷ்ணன்
ஆகியோரைத் தன்
கண்களால்
கண்டான் அரவான்  

அரவான் :
“என்னை ஆசிர்வதியுங்கள்”

கிருஷ்ணன் :
“உன் புகழ் என்றும்
நிலைத்து இருக்கட்டும் “

(பஞ்ச பாண்டவர்கள்
ஐவரும் தங்களுடைய
கைகளை தூக்கி
அரவானை ஆசிர்வதித்தனர்  )

கிருஷ்ணன் :
“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
நேரில் பார்க்கக் கூடிய
பாக்கியத்தைப் பெற்றவன்
நீ ஒருவன் மட்டும் தான்”

“உனக்கு மட்டுமே
குருஷேத்திரப் போர்
முழுவதையும் நேரில்
பார்க்கக்கூடிய வாய்ப்பு
கிடைத்திருக்கிறது”

“குருஷேத்திரப்
போர்க்களத்தில் நடந்த
அனைத்து
விஷயங்களையும்
நேரில் பார்க்கக் கூடிய
பாக்கியத்தைப் பெற்றவன்
நீ மட்டும் தான்”

“உன்னைத் தவிர
இந்த உலகத்தில்
பிறந்த யாருக்கும்
இப்படியொரு பாக்கியம்
கிடைக்கவில்லை”

“இந்த உலகத்திலேயே
மிகப்பெரிய
போராகக் கருதப்படும்
குருஷேத்திரப் போர்
முழுவதையும் நீ
மட்டும் தான்
பார்த்திருக்கிறாய்”

“அதனால் இந்த
குருஷேத்திரப் போரில்
நடந்த அனைத்து
விஷயங்களும்
உனக்குத் தெரியும்”

“இந்தப் போரில்
வீரத்துடன்
போரிட்டவர்கள்
யார் என்பதும் ;
விர மரணங்கள்
அடைந்தவர்கள்
யார் என்பதும் ;
எதைக் கண்டும்
அஞ்சாமல் உயிரை
விட்டவர்கள்
யார் என்பதும் ;
தன்னுடைய
உயிரைப் பற்றி
கவலைப்படாமல்
போரிட்டவர்கள்
யார் என்பதும் ;
குருஷேத்திரப் போரில்
சிறந்த வீரர்
யார் என்பதும் ;
உனக்குத் தெரியும் “

“அதனால் நான்
கேட்கப் போகும்
கேள்விக்கு பதில்
சொல்லத்
தகுதியுடையவன் நீ
மட்டும் தான்”

அரவான் :
“கேள்வியைக் கேளுங்கள்
பரந்தாமா நீங்கள்
கேட்கப் போகும்
கேள்விக்கு என்னிடம்
பதில் இருந்தால்
கண்டிப்பாக
நான் சொல்கிறேன்”

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
நான் கண்டவைகள்
சம்பந்தமாக
உங்களுடைய
கேள்விகள் இருந்தால்
நான் பதில்
சொல்கிறேன் - நான்
பார்த்ததில் எனக்குத்
தெரிந்ததை உங்களுக்கு
சொல்கிறேன் “

கிருஷ்ணன் :
“அரவான் நீ பார்த்ததில்
உனக்கு தெரிந்ததை
சொல்லக் கூடாது ;
நீ பார்த்ததில் நீ
என்ன அறிந்து
கொண்டாயோ அதைத்
தான் சொல்ல வேண்டும் “

அரவான் :
“அப்படியே
ஆகட்டும் பரந்தாமா”

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
நடந்த நிகழ்வுகள்
சம்பந்தமாக உங்களுடைய
கேள்வி இருக்குமானால்
நான் பார்த்ததில்
என்ன அறிந்து
கொண்டேனோ அதை
அப்படியே உங்களுக்கு
சொல்வதில் நான்
கடமைப்பட்டிருக்கிறேன்”

கிருஷ்ணன் :
“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
கெளரவர்களை
அழித்ததில் முக்கிய
பங்கு ஆற்றியது யார்
என்று அறிந்து
கொள்ளும் ஆர்வத்தில்
பஞ்ச பாண்டவர்கள்
இருக்கிறார்கள்”

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்கு முக்கிய
காரணமாக இருந்தவர்
யார் என்பதை
அறிந்து கொள்வதற்கு
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
விரும்புகிறார்கள்”

“பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்காக
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
யார் அதிகமாக
பாடுபாட்டார்கள் என்பதை
அறிந்து கொள்ள
பஞ்ச பாண்டவர்கள்
ஆசைப்படுகிறார்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment