April 10, 2021

பதிவு-2-முயற்சி- பழமொழி

 

பதிவு-2-முயற்சி-

பழமொழி

 

சிலர் சொல்வார்கள்

இவர்களைத் தவிர்த்து

மற்றவர்கள்

சரியானபடி

முயற்சி

செய்யவில்லை என்று

அது என்ன

சரியான முயற்சி

என்று தெரியவில்லை

இவர்கள் சரியான

முயற்சி செய்தால்

மற்றவர்கள் தவறான

முயற்சி செய்தார்கள்

என்று தானே அர்த்தம்

 

முயற்சியில்

அது என்ன

சரியான முயற்சி

தவறான முயற்சி

என்று தெரியவில்லை

 

முயற்சி என்றால்

ஒன்றே ஒன்று தான்

அது முயற்சி

மட்டும் தான்

முயற்சியில்

சரியான முயற்சி

தவறான முயற்சி

என்று எதுவும்

இல்லை

 

சிலர் எனக்கு

கெட்ட கோபம் வரும்

என்று சொல்வார்கள்

கெட்ட கோபம் என்ற

ஒன்று உண்டு

என்றால்

நல்ல கோபம்

என்ற ஒன்று

உண்டு அல்லவா

 

அது என்ன கோபத்தில்

நல்ல கோபம்

கெட்ட கோபம்

என்று தெரியவில்லை

கோபம் என்றாலே

கெட்டது தான்

தவறானது தான்

 

கோபத்தில்

நல்ல கோபம்

கெட்ட கோபம்

என்ற

ஒன்றும் இல்லை

கோபம் என்றால்

ஒன்றே ஒன்று தான்

அது கோபம்

மட்டும் தான்

 

அதைப் போல

சரியான முயற்சி

தவறான முயற்சி

என்று

எதுவும் இல்லை

முயற்சி என்றால்

ஒன்றே ஒன்று தான்

அது முயற்சி

மட்டும் தான்

 

இந்த பழமொழியில்

முயற்சி செய்ய

வேண்டும் என்று

சொல்கிறார்கள்

முயற்சி செய்தால்

என்ன கிடைக்கும்

என்று சொல்கிறார்கள்

இந்தப் பழமொழியில்

முயற்சி செய்தால்

என்ன கிடைக்கும்

என்று சொல்லி

இருக்கிறார்கள்

 

முயற்சியுடையார்

தோல்வி அடையார்

என்று சொல்லி இருந்தால்

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்று பொருள்

எடுத்துக் கொள்ளலாம்

 

முயற்சியுடையார்

வெற்றி அடைவார்

என்று

சொல்லி இருந்தால்

முயற்சி செய்தால்

தோல்வி கிடைக்காது

என்று பொருள்

எடுத்துக் கொள்ளலாம்..

 

ஆனால் அவ்வாறு

சொல்லவில்லை

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்று

சொல்லப்பட்டிருக்கிறது

ஏன் அவ்வாறு

சொல்ல வேண்டும்

 

முயற்சி செய்தால்

இரண்டு விஷயங்கள்

தான் கிடைக்கும்

வெற்றி கிடைக்கும்

அல்லது

தோல்வி கிடைக்கும்

இரண்டில் ஒன்று

தான் கிடைக்கும்

 

இந்தப் பழமொழியில்

இகழ்ச்சி என்ற

சொல்லுக்கு

ஏமாற்றம் என்று

பொருள் கொள்ள

வேண்டும்

 

இகழ்ச்சியடையார்

என்றால்

ஏமாற்றம் அடைய

மாட்டார் என்று

பொருள் கொள்ள

வேண்டும்

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றால்

முயற்சி செய்பவர்

ஏமாற்றம்

அடைய மாட்டார்

என்று பொருள்

கொள்ள வேண்டும்

 

முயற்சி செய்பவர்

எப்படி ஏமாற்றம்

அடைய மாட்டார்

என்ற கேள்வி

எழுகிறது

ஆமாம் முயற்சி

செய்பவர் ஏமாற்றம்

அடைய மாட்டார்

என்பது சரியான

வார்த்தை தான்

 

இந்த உலகத்தில்

உள்ள யாரை

எடுத்துக் கொண்டாலும்

அவர் எந்த

ஒரு செயலைச்

செய்ய முயற்சி

எடுத்தாலும்

அந்த செயலின்

மூலம் இரண்டே

இரண்டு விஷயங்கள்

தான் நடக்கும்

வெற்றி கிடைக்கும்

அல்லது

தோல்வி கிடைக்கும்

இரண்டில் ஒன்று

தான் கிடைக்கும்

இரண்டில்

ஒன்று தான்

கண்டிப்பாக கிடைக்கும்

இந்த இரண்டைத் தவிர

வேறு எந்த

ஒன்றும் கிடைக்காது

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////

 

No comments:

Post a Comment