May 01, 2021

பதிவு-5-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்

 பதிவு-5-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

மனிதனுடைய ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாவானது

இரண்டு முறைகளின்

மூலம் கழிகிறது

 

ஒன்று :

இயற்கை நீதியின்படி

கழியும் கர்மா

 

இரண்டு :

மனிதனுடைய செயலின்

மூலம் கழியும் கர்மா

 

ஒன்று

மனிதன் தன்னுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களைக்

கழிக்க வேண்டும்

என்பதற்காக 

எந்தவிதமான

செயலையும் செய்யாமல்

தன்னுடைய

வாழ்க்கையை

நடத்திக் கொண்டு

இருந்தாலும்,

கர்மாவானது

இயற்கையாக

தானாகவே கழிந்து

கொண்டு இருக்கும் ;     

இவ்வாறு இயற்கையாக

தானாகவே

கழியும் கர்மாவிற்கு

இயற்கை நீதியின்படி

கழியும் கர்மா

என்று பெயர்.

 

இடம்,

தொடர்பு கொள்ளும்

பொருள், காலம்,

நோக்கம் , திறமை,

ஆகியவற்றைப் பொறுத்து

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப் பதிவுகளையும்,

புண்ணியப் பதிவுகளையும்

கொண்ட

கர்மாவானது

இயற்கை நீதியின்படி

தானாகவே கழிகிறது.

 

அவ்வாறு கழியும்

கர்மாவானது

சஞ்சித கர்மாவாக

இருக்கலாம் ;

பிராரப்த கர்மாவாக

இருக்கலாம் ;

ஆகாம்ய கர்மாவாக

இருக்கலாம் ;

இந்த மூன்றில்

ஏதேனும்

ஒரு கர்மாவாக

இருக்கலாம்.

 

சஞ்சித கர்மா ;

பல பிறவிகளின்

கருத்தொடராக

வந்த பதிவு

சஞ்சித கர்மா

எனப்படும்.

 

பிராரப்த கர்மா‘ :

பிறந்தது முதல்

இன்று வரை செய்த

செயல்களின் தொகுப்பு

பிராரப்த கர்மா

எனப்படும்.

 

ஆகாம்ய கர்மா :

ஆ என்றால்

ஆன்மா என்று பொருள்.

காம்யம் என்றால்

இச்சை என்று பொருள்.

ஆன்மாவிற்கு

இச்சையைத் தூண்டி

செயலைச் செய்ய

வைப்பது என்று பொருள்.

அதாவது

சஞ்சித கர்மா,

பிராரப்த கர்மா

ஆகிய இரண்டு

கர்மாக்களும்

ஆன்மாவிற்கு

இச்சையைத் தூண்டி

செயலைச் செய்ய

வைப்பதால்

உண்டாகும்

செயல்களின் பதிவு

ஆகாம்ய கர்மா

எனப்படும்.

 

இவ்வாறு

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

சஞ்சித கர்மா

பிராரப்த கர்மா

ஆகாம்ய கர்மா

இந்த மூன்றில் ஏதேனும்

ஒரு கர்மா

மனிதனுடைய

செயல்கள் ஏதும் இன்றி

இடம், தொடர்பு

கொள்ளும் பொருள்,

காலம், நோக்கம்,

திறமை

ஆகியவற்றைப் பொறுத்து

இயற்கையாக

தானாகவே கழிந்தால்

அந்த கர்மாவிற்கு

இயற்கை நீதியின்படி

கழியும் கர்மா

என்று பெயர்.

 

இயற்கை நீதியின்படி

கழியும் கர்மாவானது

இயற்கையாக

தானாகவே கழியும்;

கர்மாவானது

அதுவாகவே

தன்னால் கழிந்தால்

அதற்கு இயற்கை

நீதியின்படி

கழியும் கர்மா

என்று பெயர்.

 

இரண்டு :

மனிதன் தன்னுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களைக்

கழிக்க வேண்டும்

என்பதற்காக 

கர்மாக்களைக்

கழிப்பதற்குரிய

செயல்களைச் செய்து

அதன் காரணமாக

மனிதனுடைய

ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாக்கள்

மனிதனுடைய செயலின்

மூலம் கழிந்தால்

அந்த கர்மாவிற்கு

மனிதனுடைய

செயலின் மூலம்

கழியும் கர்மா

என்று பெயர்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment