April 21, 2024

ஜபம்-பதிவு-952 மரணமற்ற அஸ்வத்தாமன்-84 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-952

மரணமற்ற அஸ்வத்தாமன்-84

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

இது மக்கள் அறியாமையால் ஏற்றுக் கொண்டது.

 

பகுத்தறிந்து பார்க்காத காரணத்தினால் தான் அர்ஜுனனை திறமைசாலி என்று ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

 

பகுத்தறிந்து பார்த்து இருந்தால் மக்கள் அர்ஜுனனை திறமைசாலி என்று ஏற்றுக் கொண்டே இருக்க மட்டார்கள்.

 

சிந்திப்பன் எவனும் அர்ஜுனனை வில் விடுவதில் சிறந்த திறமைசாலி என்று ஏற்றுக் கொள்ள மாட்டான்.

 

நான் அர்ஜுனனை வில் விடுவதில் சிறந்த திறமைசாலி என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

 

 

துரோணர் :  தான் வாழ வேண்டும் என்பதற்காக பிறரை அழிக்கத் துடிப்பவர்களுடன் நட்பு கொண்டு இருக்கிறாய் அல்லவா. அதனால் அப்படித் தான் பேசுவாய்.

 

துரியோதனன் உன் நண்பன் அல்லவா? நீ இப்படி பேசியதில் எனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை

 

நீ இப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

 

நாம் யாரிடம் சேருகிறோமோ அவர் குணம் தான் நமக்கு வரும்.

 

நல்லவர்களுடன் சேர்ந்தால் நல்ல குணம் வரும். கெட்டவர்களுடன் சேர்ந்தால் கெட்ட குணம் தான் வரும்.

 

துரியோதனனுடன் எப்போது சேர்ந்தாயோ அப்போதே நீ மாறி விட்டாய். அதனால் துரியோதனனின் எண்ணங்களை உன் மூலமாக வெளிப்படுத்துகிறாய், உன் குரல் கொண்டு பேசுகிறாய்.

 

துரியோதனனுக்கு அர்ஜுனன் மேல் உள்ள வெறுப்பு உன் மூலமாக வார்த்தைகளாக வெளிப்படுகிறது.

 

துரியோதனனின் ஆசைகளை என் முன்னால் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறாய்.

 

நல்ல நீராக இருந்த நீ நஞ்சு கலந்த நீராக மாறி விட்டாய்.

 

ஏற்கனவே அர்ஜுனன் மேல் நீ கொண்டிருந்த பொறாமை இப்போது வெறுப்பாக மாறி விட்டது. பகையாக உருமாறி விட்டது,.

 

அதனால் தான்,

அர்ஜுனனைத் திட்டுகிறாய்

ஏளனம் செய்கிறாய்.

அவமானப்படுத்துகிறாய்

 

நீ பேசும் வார்த்தைகள்,

அர்ஜுனன் மேல் நீ கொண்ட பொறாமையினால் பேசப்படும் வார்த்தைகள்

அர்ஜுனன் மேல் நீ கொண்ட வெறுப்பினால் பேசப்படும் வார்த்தைகள்.

 

அஸ்வத்தாமன் : பொறாமை கொண்டு பேசுவதற்கு  அர்ஜுனன் ஒன்றும் திறமைசாலியும் கிடையாது

 

வெறுப்பு கொண்டு பேசுவதற்கு, அர்ஜுனன் ஒன்றும் சிறந்த வில்லாளியும் கிடையாது

 

துரோணர் :  நீ ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் 

அர்ஜுனன் திறமைசாலி தான்

உலத்திலேயே சிறந்த வில்லாளி தான்

உன்னைப் போன்ற சிலபேர் அர்ஜுனனை திட்டுவதால்

அர்ஜுனன் திறமைசாலி இல்லை என்று ஆகிவிடாது

உலகத்திலேயே சிறந்த வில்லாளி இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடாது

அர்ஜுனனின் புகழை யாரும் அழித்து விட முடியாது

 

அஸ்வத்தாமன் : அர்ஜுனன் திறமையால் வளர்ந்தவன் என்று சொல்வதை விட வளர்க்கப்பட்டவன் என்று தான் சொல்ல வேண்டும்

 

ஆமாம் அர்ஜுனன் பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களால் வளர்க்கப்பட்டவன் அதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது

 

துரோணர் : அர்ஜுனன் வளர்க்கப்பட்டவன் கிடையாது

என்னிடம் கல்வியைக் கற்றுக் கொண்டவன்

தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டவன்

அதனால் புகழ் அவனைத் தேடி வந்திருக்கிறது

 

அஸ்வத்தாமன் :  அர்ஜுனன் உங்களிடம் கல்வியைக் கற்றுக் கொண்டவன் சொல்வதை விட உங்களால் வளர்க்கப்பட்டவன் என்று சொல்வது தான் சரியானது

 

துரோணர் : ஏன் அவ்வாறு சொல்கிறாய்?

 

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment