May 01, 2024

ஜபம்-பதிவு-959 மரணமற்ற அஸ்வத்தாமன்-91 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-959

மரணமற்ற அஸ்வத்தாமன்-91

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சிவன்: தெரிந்தும் சில பேர் பாவங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்களே!

அஸ்வத்தாமன்: மனிதர்கள் அனைவரும் செய்வதில்லை ஒரு சில மனிதர்கள் மட்டும் தான் பாவங்களை துணிந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிவன்: பாவங்களில் மிகப்பெரிய பாவம் கடவுளின் பெயரைச் சொல்லி அக்கிரம அநியாயங்களைச் செய்து கொண்டிருப்பது.

நான் சொல்வது அனைத்தையும் தவறு என்று சொல்வாயே! இதுவும் தவறு தானே!

அஸ்வத்தாமன்: இறைவா நீங்கள் சொல்வதில் தவறு இருந்தால் மட்டுமே நான் தவறு என்று சொல்கிறேன். சரியாக இருப்பதை நான் ஏன் தவறு என்று சொல்லப் போகிறேன்.

மனிதர்களில் ஒரு சில பேர்கள் மட்டும் தான் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம்,அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் அனைவரும் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம், அநியாயம் செய்வதில்லை

கடவுள் மேல் பக்தி கொண்டவன் கடவுளை கும்பிட்டு விட்டு சென்று விடுகிறான்

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவன் மக்களை ஏமாற்றி வாழ்க்கையை நடத்துகிறான்.

கடவுள் மேல் வெறி கொண்டவன் வெறியனாக மாறி மற்றவர்களுக்கு கெடுதல்களைச் செய்கிறான்.

கடவுள் மேல் பக்தி கொண்டவன் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம், அநியாயம் செய்வதில்லை.

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவன், கடவுள் மேல் வெறி கொண்டவன் ஆகியோர் தான் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம், அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்

உண்மையான பக்தி கொண்டவர்கள் கடவுள் இருக்கிறார் என்று கடவுளை நம்புகிறார்கள் கடவுளை வணங்குகிறார்கள் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

கடவுளுக்கு தங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு பணம் செலவு பண்ணி பூஜைகள் செய்கிறார்கள். விழாக்கள் கொண்டாடுகிறாரகள் தங்கள் வேலையைப் பார்க்க போய் விடுகிறார்கள்.

கடவுள் மேல் பக்தி கொண்டவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். கடவுளை வணங்கினால் அவர் என்றாவது ஒரு நாள் தாங்கள் கேட்டதைக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள். கடவுளை வணங்கி விட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள்.

ஆனால்,

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் தாங்கள் வாழ்வதற்காக எத்தகைய செயலையும் துணிந்து செய்யக் கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்

மக்களுடைய ஏழ்மையையும், அறியாமையையும்

தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்

கடவுளை வணங்கினால்

கடவுள் உங்கள் பாவங்களை மன்னிப்பார்.

கடவுள் உங்கள் பாவங்களைக் கழிப்பார்.

கடவுள் உங்கள் பாவங்களை எரிப்பார்

என்று நாடகம் போட்டுக் கொண்டு

பாவங்களைக் கழிப்பதாக சொல்லி

நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment