December 21, 2011

போகர்-7000- சாயா தரிசனம்- பலன்கள்- பதிவு-4




              போகர்-7000- சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு -4

“”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பாடல் - 5

          “”””அன்றாட தரிசனத்தைக் கண்டமாண்பர்
                             அவனியில் தானும்ஒரு சித்தனைப்போல்
               குன்றான மலைதனிலே இருக்கலாகும்
                            குவலயத்தில் நீயும்ஒரு சித்தனைப்போல்
              வென்றிடவே தேவாதி ரிடிகள்தம்மை
                           விண்ணுலகில் காண்பதற்கு இடம்உண்டாகும்”””””
                                                                             --------போகர் --7000---------
    “”””அன்றாட தரிசனத்தைக் கண்டமாண்பர்
                          அவனியில் தானும்ஒரு சித்தனைப்போல்
           குன்றான மலைதனிலே இருக்கலாகும்”””””
சாயா தரிசனத்தை அனுதினமும் தொடர்ந்து விடாமல் செய்து , சாயா தரிசனத்தைக் கண்டவர்கள் , சாயா தரிசனத்தைச் செய்தவர்கள் பல்வேறு சக்திகளைப் பெற்று படிப்படியாக ஆன்மீக உலகில் உயர்வார்கள் .
ஆன்மீக உலகில் ஒருவர்  உயர்ந்து கொண்டே வர அவருடைய உறவு முறைகள் பந்தங்கள் அறுந்து கொண்டே போகும் .
உறவு முறைகள் ஒவ்வொன்றாக அறுந்து கொண்டே வரும் , இறுதியாக யாரும் துணைக்கு கூட இல்லாமல் தனியாக இருக்கக் கூடிய நிலை கூட வரும் .
எல்லாவற்றையும் இழந்த நிலையில் , எல்லா பந்தங்களும் அறுந்த நிலையில் ,
மனது தெளிவு பெறும் ,
அறிவு விளக்கம் பெறும் ,
ஞானம் உதிக்கத் துவங்கும் .


இந்த உலகத்தில் உள்ள சாதாரண மனிதர்களுடன் இணைந்து இருக்க மாட்டார்கள் . 
இந்த உலக வாழ்க்கையிலிருந்து விலகி , உறவு முறைகளிலிருந்து விலகி , பந்தங்களை அறுத்து விட்டு தனியாக தனித்து வாழ்வதற்காக மனிதர்கள் யாரும் இல்லாத இடம் தேடி சென்று விடுவார்கள் .


அதனால் அவர்கள் மலைகளிலும் , குகைகளிலும் , தனித்து வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்வார்கள் .
சித்தர்  என்ற நிலை அவர்களுக்குள் உருவாகி படிப்படியாக பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் .
தன்னுள் ஏற்படக் கூடிய மாற்றங்களை உணரத் தொடங்குவார்கள் .
ஞான விளக்கம் பெற்று சுதந்திரமாக சுற்றித் திரிவார்கள் .


இவ்வாறாக எல்லாவற்றையும் இழந்து உண்மையான சித்தர்களாக இருப்பவர்களை , இந்த உலகத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள் .
உண்மையான சித்தர்  என்றால் யார் ?  அவர்  எப்படி இருப்பார்  என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் மன நிலையில் இந்த உலகத்தில் உள்ளவர்கள் இல்லை .


எல்லாவற்றையும் இழந்த நிலையில் தான் ஞானம் கிடைக்கும் என்பதையும், சித்தராக முடியும் என்பதையும்,  யார்  ஒருவர்  உணர்ந்து கொள்கிறாரோ அவரே ஞானம் அடையத் தகுதி உடையவர்.
அவரால் மட்டுமே ஞானம் அடைய முடியும் . 


உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டு ஞானம் அடைவது என்பது கடினமான காரியம் .
ஆனால் உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே ஞானம் அடைய உலகில் பிறந்த அனைத்து மனிதர்களாலும் முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே ஞானம் அடைவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டார்கள் .
சூட்சும ரகசியங்களை மறைத்து விட்டார்கள் .
இதற்கு முக்கியமான காரணமாக கீழ்க்கண்டவை சொல்லப்படுகிறது
1 ஒரு சில மனிதர்களிடம் உள்ள அடிமைப்படுத்தும் குணம்.
2 ஒரு சில மனிதர்களிடம் உள்ள அடிமையாக இருந்து பழக்கப்பட்டுப் போன மனம் .
3 ஞானம் அடையக் கூடிய வழிகளை அறிய ஆவல் உள்ளவர்களை இந்த உலகம் அறிய விடுவதில்லை .
4 ஞானம் அடைந்தவர்களை இந்த உலகம் சொல்ல விடுவதில்லை .
5 ஞானம் அடைந்து சொல்ல வந்தவர்களை இந்த உலகம் மதிப்பதில்லை அவமானப் படுத்துகிறது .
6 ஒரு சில உண்மை ஞானிகளை கொன்று விடுகிறது .
7 இவை எல்லாவற்றையும் மீறி சொல்ல வந்தவர்களின் கருத்துக்களை மதிக்காமல் அவர்களை அவமானப் படுத்தியதால் தான் அடைந்த ஞானத்தை பாடல்களில் மறைபொருளாக எழுதி வைத்து விட்டு சென்று விட்டார்கள் .


மேற்கண்டவை தான் உலகியலில் இருந்து கொண்டே ஞானம் அடைவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டதற்கான காரணங்கள் ஆகும்


மேலே சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களால் தான் சாயா தரிசனம் செய்பவர்கள் இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு சித்தனைப் போல் குகைதனிலே , குகைகளிலே வாழக் கூடிய ஒரு நிலையை உண்டாக்கி விடுகிறது என்று போகர்  கூறுகிறார் .


     

      ”””””””குவலயத்தில் நீயும்ஒரு சித்தனைப்போல்
      வென்றிடவே தேவாதி  ரிடிகள்தம்மை
                     விண்ணுலகில் காண்பதற்கு இடம்உண்டாகும்”””””
விண்ணுலகம்
விண் என்றால் உயிர் . உயிரை உணர்ந்தவர்கள் விண்ணவர்கள் எனப்படுவர்.
இந்த உடலுக்குள் எப்படி அந்த விண் உயிராக இருக்கிறது . இந்த பிரபஞ்சம் முழுவதும் அந்த விண் எப்படி ஆற்றலாக இருக்கிறது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் விண்ணவர்கள்.
அந்த விண்ணவர்கள் வாழும் உலகம் விண்ணுலகம் .
அதாவது உயிரை உணர்ந்தவர்கள் வாழும் உலகம் விண்ணுலகம் எனப்படும்.


சாயா தரிசனம் தொடர்ந்து விடாமல் செய்து சித்தர்  என்ற ஒரு உயர்ந்த நிலையை அடைந்தால்    தேவர்களும் , ரிஷிகளும் வசிக்கும், இருக்கும் இடமாகிய விண்ணுலகில் அவர்களை காண்பதற்கும் ,
அவர்கள் சாயா தரிசனம் செய்து சித்தர்  என்ற உயரிய நிலையை அடைந்தவர்களை காண்பதற்கும் உரிய ஓர்  உயரிய இடம் சாயா தரிசனம் செய்தவருக்கு கிடைக்கும் என்கிறார்  போகர்.

       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                             போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”

December 18, 2011

போகர்-7000- சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-3



              போகர்-7000- சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-3

“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                      ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பாடல் - 3

            “””கூறுமே நன்மையென்ற தீமையாவும்
                            குறிப்புடனே உந்தமக்கு முன்னேசொல்லும்
                மாறுபடா மேனியது வாசிகூறும்
                            வளமான தேகமது கல்துhண் ஆகும்
               வீறுடனே வையகத்தில் கோடிகாலம்
                             வித்தகனே இருப்பதும் நிட்சயந்தான்
                நாறுமுடல் அழியாது கோடிகாலம்
                            நானிலத்தில் இருப்பதும் சமாதியாமே”””””””
                                                      -----------போகர்-- 7000 ----
“””கூறுமே நன்மையென்ற தீமையாவும்
                      குறிப்புடனே உந்தமக்கு முன்னேசொல்லும்””””
நாளை நடக்கப் போவது நல்லதா , கெட்டதா என்று தெரியாத நமக்கு வருங்காலத்தில் நடக்கப் போகும் நன்மைகளையும் , தீமைகளையும் அந்தச் செயல்கள் நடைபெறுவதற்கு முன்னர்  சாயா தரிசனம் செய்பவருக்கு
நம்முடனேயே இருக்கும் , ஆள் ரூபமாய் இருக்கும் , அந்த ரூபம் நமக்கு முன் கூட்டியே  சொல்லி விடும் .

நாளை நடைபெறும் செயலுக்கு ஏற்றவாறு தம்மை தயார் படுத்திக் கொள்ள செயல்களை வகுத்துக் கொள்ள தகவல்களை முன் கூட்டியே சொல்லி நம்மை தயார்  நிலையில் வைக்கும் .



“””””மாறுபடா மேனியது வாசிகூறும்
                   வளமான தேகமது கல்துhண் ஆகும்”””””
வாசி என்று சொல்லப்படும் சுவாசக் காற்று ஓடும் இந்த உடலானது ,
கல்லினால் செய்யப்பட்ட செதுக்கப்பட்ட துhண் ஆனது எவ்வளவு கெட்டியாக, உறுதியாக , கடினமாக இருக்குமோ?
அதைப் போல் உடலானது உறுதியாக இருக்கும் எவரும் எளிதில் வீழ்த்தி விட முடியாத அளவுக்கு வலிமை உடையதாக இருக்கும் .


“”””””வீறுடனே வையகத்தில் கோடிகாலம்
                                வித்தகனே இருப்பதும் நிட்சயந்தான்
          நாறுமுடல் அழியாது கோடிகாலம்
                                 நானிலத்தில் இருப்பதும் சமாதியாமே”””””””

சாயா தரிசனம் செய்பவர்  உயிரோடு கூடிய இந்த உடலோடு இந்த உலகத்தில் கோடி காலம் நிச்சயாக வாழ்வார்  என்பது உண்மை ஆகும் . இதில் எள்ளளவும் சந்தேகப் பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்  போகர் .

உயிர்  உடலை விட்டு பிரிந்தால் உடல் அழிந்து விடும் .
அவ்வாறு நடக்காமல் உயிரானது உடலை விட்டு பிரியாமல் உடல் அழியாமல் கோடிக் கணக்கணக்கான ஆண்டுகள் வாழ்வதற்குரிய தகுதியை சாயா தரிசனம் செய்பவர்  அடைவார்,
 அதாவது சாயா தரிசனம் செய்பவர் சமாதி என்னும் நிலையை அடைந்து , இந்த உலகத்தில் இறவா நிலையுடன் வாழ்வதற்குரிய  தகுதியைப் பெறுவார்.

சமாதி என்றால் ஆதி நிலைக்குச் சமமாக மனிதன் உயர்தல் என்று பொருள்.
ஆதி நிலை , முதல் நிலை , மூல நிலை  , இருப்பு நிலை என்று சொல்லப்படக் கூடிய கடவுள் நிலைக்குச் சமமாக மனிதன் உயர்ந்து வாழ்வான் .
இறைவன் என்ற நிலையை அடைந்து இறைவனாகவே வாழ்வான் .
இறவா நிலையுடன் என்றும் நித்தியமாக வாழ்வான் என்று அர்த்தம் .



பாடல் - 4

         “”””ஆமேதான் சாயாவின் தரிசனத்தை
                               அப்பனே கண்டவர்க்கு எல்லாம் சித்தி
               தாமேதான் அட்டமா சித்தியாவும்
                                 தாரணியில் அடைவதற்கு ஐயம் இல்லை
              போமேதான் பனிரெண்டு ஆண்டுமட்டும்
                               பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்
              வேமேதான் காணாத மாண் பருக்கு
                              விட்டகுறை இருந்தாலும் வாய்க்காதன்றே
                                                                 ---------போகர்  --7000----------

""“”””ஆமேதான் சாயாவின் தரிசனத்தை
                      அப்பனே கண்டவர்க்கு எல்லாம் சித்தி””””"
சாயா தரிசனம் கண்டவருக்கு , அதாவது சாயா தரிசனம் செய்தவருக்கு ,
என்ன செயல்களைச் செய்தாரோ,
என்ன செயல்களைச் செய்கின்றாரோ ,
என்ன செயல்களைச் செய்யப் போகின்றாரோ ,
எல்லா செயல்களும் அவருக்கு வெற்றியாகத் தான் முடியும் . தோல்வி என்பது கிடையாது .
சாயா தரிசனம் செய்தவர்களுக்கு காலம் என்பது கிடையாது அதாவது முக்காலத்திலும் அவர்  செய்யும் செயல்கள் வெற்றியாகத் தான் முடியும் .


             "“”தாமேதான் அட்டமா சித்தியாவும்
                                 தாரணியில் அடைவதற்கு ஐயம் இல்லை
                    போமேதான் பனிரெண்டு ஆண்டுமட்டும்
                                பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்”””””
 இங்கே ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் .
அஷ்ட கன்மங்கள்  , அஷ்டமா சித்தி என்று இரண்டு நிலைகள் உள்ளன.
அஷ்ட கன்மங்கள் என்பது வேறு , அஷ்டமா சித்தி என்பது வேறு , இரண்டும் இரண்டு வேறுபட்ட நிலைகளில் மனிதர்கள் அடையும் பெறும் சக்திகள் ஆகும் .

அஷ்ட கன்மங்கள் எனப்படுபவை ,
                          1.  வசியம்                         5. ஆக்ருஷ்ணம்
                          2.  பேதனம்                        6. மோகனம்
                          3.   வித்வேஷணம்         7. ஸ்தம்பணம்
                          4.   மாரணம்                      8 .உச்சாடணம்         
ஆகியவை ஆகும் .

அஷ்டமா சித்தி எனப்படுபவை ,
                          1.   அணிமா                         5. பிராப்தி
                          2.    மஹிமா                       6. பிரகாமியம்
                          3.   லஹிமா                       7. வசித்துவம்
                          4.   கரிமா                             8. ஈசத்துவம்
ஆகியவை ஆகும் .

மேலே சொல்லப்பட்ட அஷ்ட கன்மங்கள் , அஷ்டமா சித்திகள் ஆகியவற்றை, ஆகிய சக்திகளை , ஆகிய பலன்களை சாயா தரிசனம் செய்பவர்கள்  இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில்
அதாவது வாழும் காலத்தில்  மேற்கண்ட சக்திகளை அடைந்து வாழ்வார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்கிறார்  போகர் .

மேலே சொல்லப்பட்ட சித்திகள் , மகிமைகள் , சக்திகள் ஆகிய அனைத்தும் 12 ஆண்டுகள் விடாமல் தொடர்ந்து சாயா தரிசனம் கண்டவருக்கே,  பார்த்தவருக்கே கிடைக்கும் .

சாயா தரிசனம் 12 ஆண்டுகள் :
இங்கே நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் :
சாயா தரிசனம் செய்து 12 வருடங்கள் கழித்து தான் இத்தகைய சக்திகள் கிடைக்கும் என்று யாரும் தவறாக எண்ணி விடக் கூடாது .
தவறான கருத்தை மனதில் திணிக்கக் கூடாது .

எந்த தவம் செய்தாலும் , எந்த பயிற்சி செய்தாலும் , அதை தவறில்லாமல் முறைப்படி செய்தால் , விடாமல் தொடர்ந்து செய்தால் ஒவ்வொரு வருடமும் ஒரு சக்தி கிடைக்கும்.
அதை நம்மால் உணர முடியாது .

மூன்று அல்லது நான்கு வருடங்கள் கழித்துத் தான் நமக்கு என்ன சக்தி, எத்தனை சக்தி கிடைத்திருக்கிறது என்று உணர முடியும் .
12 வருட முடிவில் எந்த பயிற்சி செய்தோமோ , எந்த தவம் செய்தோமோ அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சாயா தரிசனம் செய்பவர்கள் 12 வருட முடிவில் சித்தர்  என்ற நிலையை அடைவார்கள் என்றால்
சொல்லப்பட்ட சக்திகள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் நமக்குக் கிடைக்கும் என்றும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடக்கும் என்றும் பொருள்



     “”””வேமேதான் காணாத மாண் பருக்கு
                          விட்டகுறை இருந்தாலும் வாய்க்காதன்றே”””
 இத்தகைய வார்த்தைகளால் சொல்ல முடியாத பல்வேறு சிறப்புகள் பலவற்றை தன்னுள் கொண்ட சாயா தரிசனத்தை 12 ஆண்டுகள் விடாமல் தொடர்ந்து செய்யாதவருக்கு  தவங்கள் பல செய்தாலும் அதாவது விட்டகுறை இருந்தாலும் அதன் பலனாக மேற்கண்ட சக்திகள் கிடைக்காது என்கிறார்  போகர்.

விட்ட குறை என்றால் போன ஜென்மத்தில் எத்தகைய செயல்களைச் செய்கிறோமோ அவைகள் நல்லவைகளாகவோ ,தீமைகளாகவோ இருந்தாலும் அதற்குரிய பாவங்களுக்கு உரிய , புண்ணியத்திற்கு உரிய, பலன்கள் இந்த ஜென்மத்தில் கிடைக்கும் என்று பொருள்.

அதைப் போல போன ஜென்மத்தில் செய்த தவங்களின் பலனாக இந்த ஜென்மத்தில் தவ நிலையில் உயர்ந்தாலும்,  ஆன்மீக உலகில் சிறப்புப் பெற்றாலும் , இந்த ஜென்மத்தில் சாயா தரிசனம் செய்யா விட்டால் மேலே சொல்லப் பட்ட சக்திகள் பலன்கள் கிடைக்காது என்று போகர்  கூறுகிறார்


""""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                  போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”

December 16, 2011

போகர் -7000 - சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-2



            போகர் -7000  - சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

பாடல் - 1
சாயா தரிசனம் தொடர்ந்து செய்து வர கிடைக்கும் நன்மைகளை ,பலன்களை, சக்திகளை போகர்  7000 பாடலில் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு விளக்குகிறார்:

            “”””உறுதியாம் பனிரெண்டு ஆண்டுதானும்
                                 உத்தமனே தரிசனைகள் காண்பாயானால்
                  உறுதியாய் உன்ரூபங் கண்டரூபம்
                                நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து
                 சுருதியுடன் கருவிகர ணாதியோடு
                                சுத்தமுடன் உடலாவி கொண்டுமல்லோ
                 பரிதிவிட்டு உந்தன்நிழல் கூடேநிற்கும்
                                 பாலகனே சாயாவின் வண்மைபாரே””””””
                                                                      --------- போகர் ---7000 -------


“”””உறுதியாம் பனிரெண்டு ஆண்டுதானும்
                      உத்தமனே தரிசனைகள் காண்பாயானால்””””
நான் செய்யும் தவத்தால் கண்டிப்பாக பலன் உண்டு என்று மனதில் நினைத்துக் கொண்டு ,உறுதியாக ,மனது தளராமல் ,தொடர்ச்சியாக ,12 ஆண்டுகள் மன உறுதியுடன் சாயா தரிசனத்தை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் பின் கண்ட நிகழ்வுகள் நமக்கு நடக்கும் என்கிறார்  போகர்.


“””””உறுதியாய் உன்ரூபங் கண்டரூபம்
                         நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து”””””””
நாம் கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்கிறோம் .
நம்முடைய உருவத்தைப் பிரதி எடுத்தால் எப்படி இருக்குமோ? அத்தகைய உருவம் போல் அதாவது நிழல் உருவமாக இல்லாமல் நிஜமான உருவமாக நம் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
ஓரு ஆள் ரூபமாய் தன்னுடைய ரூபமாய் தன்னுடனேயே திரியும் .


“”””””சுருதியுடன் கருவிகர ணாதியோடு
                         சுத்தமுடன் உடலாவி கொண்டுமல்லோ””””
உயிருடன் உள்ள ஒரு மனித உடலில் என்னவெல்லாம் இருக்குமோ ?சுருதி கருவி கரணாதியோடு ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு உடலாகக் கொண்டு நம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் நம்முடனே கூடவே உலாவும் .
நாம் படுத்தால் அதுவும் படுக்கும் .
நாம் எழுந்தால் அதுவும் எழுந்திருக்கும்.


“”””””பரிதிவிட்டு உந்தன்நிழல் கூடேநிற்கும்
                        பாலகனே சாயாவின் வண்மைபாரே”””””
பரிதி என்றால் சூரியன் என்று பொருள் .
காலையில் சூரியனுடைய ஒளி நம்முடைய உடலில் பட்டால் நிழல் தெரியும்  .அதைப் போல இரவில் சந்திரனுடைய ஒளி நம்முடைய உடலில் பட்டால் நிழல் ஒளி தெரியும்.
பகலில் சூரியனுடைய ஒளியிலும் ,இரவில் சந்திரனுடைய ஒளியிலும், நம்முடைய நிழல் எப்படி நம்மைப் பின்தொடருமோ? நம்மை விடாமல் நம்மைப் பின்தொடருமோ? நம்மை விட்டுப் பிரியாமல் பின் தொடருமோ?
அதைப் போல சாயா தரிசனம் செய்பவருக்கு நம்முடைய உண்மை அதாவது அசல் உடலுடன் ,நிழல் உருவமாக இல்லாமல் ,நிஜ உருவமும் ,கூடவே வரும் .
ஆகவே சாயா தரிசனம் தொடர்ந்து செய்து அதில் வரும் நன்மைகளை தெரிந்து கொள் என்கிறார் .


பாடல் - 2
சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்து வர நடைபெறும் மகிமைகளை பின் வரும் பாடல்களில் கூறுகிறார் போகர் :

             “”””வன்மையாஞ் சொரூபநிலைப் பின்தொடர்ந்து
                                   வாகுடனே உந்தனிடம் உலாவும்பாரு
                   திண்மையாய் சயனங்கள் செய்யும்போது
                                   தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போதும்
                  தண்மையாய் உட்கார்ந் திருக்கும்போதும்
                                  தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
                 உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை
                                 உத்தமனே உந்தமக்கு கூறும்பாரே””””
                                                                                ------போகர்-- 7000 -----

“”””வன்மையாஞ் சொரூபநிலைப் பின்தொடர்ந்து
                      வாகுடனே உந்தனிடம் உலாவும்பாரு"""" 
முழுமையான உருவம் கொண்டு அதாவது ஒரு ஆள் ரூபமாய் ,தன்னுடைய ரூபமாய் ,தன்னுடனேயே திரியும் .
நாம் எந்த, எந்த இடங்களுக்கு செல்கிறோமோ ?அந்த ,அந்த இடங்களுக்கு எல்லாம் அந்த உருவம் நம்மைப் பின் தொடரும் .நம்மைச் சுற்றியே உலாவும்.



""""""""திண்மையாய் சயனங்கள் செய்யும்போது""""""
நாம் நிம்மதியாக அமைதியாக ,எந்த கவலையும் இல்லாமல், துhங்கும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே துhங்கும் .



"""""""""""தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போதும்""""""""
பூமியில் நாம் பல்வேறு இடங்களுக்கு எல்லாம் நடந்து செல்லும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே நடந்து வரும்.



""""""""""தண்மையாய் உட்கார்ந் திருக்கும்போதும்""""""
ஓய்வு எடுப்பதற்காகவும்,  வேலை செய்வதற்காகவும், நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே உட்கார்ந்து கொண்டு இருக்கும் .
                 


           """"""""""" தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
                 உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை
                                 உத்தமனே உந்தமக்கு கூறும்பாரே””””      
 ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எல்லாம்
அதாவது நல்ல விஷயங்களை பேசும் பொழுதும்,
 ரகசியங்களை பேசும் பொழுதும் ,
சாதாரண விஷயங்களை பேசும் பொழுதும் ,
அதுவும் நம்முடனேயே கூட இருக்கும் .

நம்முடைய எதிர்காலத்தை ,வருங்காலத்தை அடுத்து என்ன நடக்கும் என்ற ரகசியங்களை நமக்கு வரும் நல்லவை ,கெட்டவைகளை அது முன் கூட்டியே நமக்குச் சொல்லும் .
அதாவது சாயா தரிசனம் செய்பவருக்கு சொல்லும் என்கிறார்  போகர் .


“”“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                          போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”””

December 14, 2011

போகர்-7000- சாயா தரிசனம்- வரலாறு - பதிவு-1



       போகர்-7000- சாயா தரிசனம் - நிழல் தவம் - பதிவு-1

"“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - விளக்கம் :
சாயா என்றால் நிழல் என்று பொருள் .
சாயா தரிசனம் என்றால் நிழலை தரிசனம் செய்து பெறப்படும் சக்திகள் என்று பொருள்.
சாயா தரிசனம் - நிழல் தவம் ,விஸ்வரூப தரிசனம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறது .

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களால் மட்டுமே சாயா தரிசனம் செய்யப்படுகிறது .
அதற்கு கீழ்க்கண்டவை முக்கிய  காரணங்களாக சொல்லப் படுகிறது:
1 சாயா தரிசனத்தின் மகிமைகள், சாயா தரிசனத்தை செய்வதால் கிடைக்கும் சக்திகள் மக்களில் பலருக்கு  தெரியவில்லை.
2 ஆன்மீக உலகில் சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள் சரியான வகையில் இல்லாமல் இருக்கிறது.
3 சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள், செய்யும் முறைகள் ,செய்வதால் கிடைக்கும் பலன்கள்  ஆகியவற்றை விளக்கும் புத்தகங்கள் இந்த உலகத்தில் அரிதாக உள்ளன.
4 சாயா தரிசனத்தின் சூட்சும ரகசியங்கள் குரு – சீடர்  பரம்பரை மூலமாக ரகசியமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
5 சாயா தரிசனத்தை அறிந்து செய்பவர்கள் குறைவு .அதிலும் சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்து பலன் அடைந்தவர்கள் அதை விட மிகக் குறைவு ஆகும்.
6 சாயா தரிசனத்தை விளக்கமாக சொல்லித் தரக்கூடிய ஆசிரியர்கள் இல்லை.

சாயா தரிசனம் இந்த உலகத்திற்கு கிடைத்த விதம் பற்றியும் ,
சாயா தரிசனத்தின் சிறப்புகள் பற்றியும் ,
சாயா தரிசனத்தைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் ,
போகர்  தன்னுடைய --போகர் - 7000 --- என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கி இருக்கிறார்.


சாயா தரிசனத்தை என்னுடைய குரு மூலமாக நான் கற்றுக் கொண்டு ,சாயா தரிசனத்தைச் செய்து ,n>,மகிமைகளை உணர்ந்து கொள்ள ஆசைப்படுபவர்
 பயன் பெறும் வகையில் எளிமையாகவும், புரிந்து கொள்ளும் வகையிலும் அனைவருக்கும் என்னால் முடிந்த அளவு சூட்சும ரகசியங்களை உடைத்து விளக்குகிறேன் .

சாயா தரிசனத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்  தெரிந்து செய்து பலன்களைப் பெற்று மகிழ்ச்சி அடையட்டும்.
சாயா தரிசனத்தை தொடர்ந்து படித்து சாயா தரிசனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சாயா தரிசனம் - வரலாறு :

பாடல் -1சாயா தரிசனத்தை இந்த உலகம் பயன்படுத்துவதற்கு வெளிப்படுத்தப் பட்ட வரலாறை கீழ்க்கண்ட பாடல்களின் மூலம் போகர் கூறுகிறார் :
”””தென்திசையில் அகத்தியனார்  முனிவர்தானும்
           செப்பினார்  இந்தமுறை செப்பினார்பாரே

    பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
          பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்
          நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
    சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
          செம்மலுடன் வழிசொன்னார்  மைதான்இல்லை
    கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
          கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
                                                -----------------போகர்- 7000--------
“””””தென்திசையில் அகத்தியனார்  முனிவர்தானும்
                     செப்பினார்  இந்தமுறை செப்பினார்பாரே”””””””
தெற்கு திசையில் இருந்த வாழ்ந்த அகத்தியர் என்ற மாமுனிவர்  சாயா தரிசனம் என்ற ஒரு பயிற்சி முறை என்ற ஒன்று  உள்ளது என்று கூறியுள்ளார்


”””பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
          பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்””””
சரம் பார்த்தலின் ரகசியத்தை எல்லாம் சொல்லும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற அரிய நுhலை ,இந்த உலகத்தில்  உள்ளவர்கள் கற்று பின் பற்றி உயர்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பாடி வைத்தார் அகத்தியர்.

மாணாக்கள் என்றால்  படித்து பின்பற்றுபவர்கள் என்று பொருள் .
போகர்  இந்த இடத்தில் படித்து பின்பற்றும் மக்களை எல்லாம் மாணாக்கள் அதாவது மாணாக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்””””
சரம் பார்த்தலின் ரகசியத்தை எல்லாம் சொல்லும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற அரிய நுhலை ,இந்த உலகத்தில்  உள்ளவர்கள் கற்று பின் பற்றி உயர்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பாடி வைத்தார் அகத்தியர்.

மாணாக்கள் என்றால்  படித்து பின்பற்றுபவர்கள் என்று பொருள் .
போகர்  இந்த இடத்தில் படித்து பின்பற்றும் மக்களை எல்லாம் மாணாக்கள் அதாவது மாணாக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
மரணம் இல்லாத ஓரு நிலையை ,மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை ,அடைவதற்கு தேவையான சாத்திரத்தை பாடி வைத்தார் அகத்தியர்  என்கிறார்  போகர்.

சாத்திரம் என்றால் எழுதியதை செயல்படுத்திப் பார்த்தால் உண்மை விளங்கும் என்று பொருள்.


      ”””””நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
    சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
          செம்மலுடன் வழிசொன்னார்  மைதான்இல்லை”””
இத்தகைய சிறப்பு வாய்ந்த சாத்திரங்கள் பலவற்றின் ரகசியங்களை எல்லாம் சொன்ன அகத்தியர்  சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும்,
சாயா தரிசனத்தை முறைப்படி செய்து எவ்வாறு பலன்களை அடைய வேண்டும் என்றும் ,
இந்த உலகத்திற்கு தேவையான ஆன்மீக விளக்கங்களை அகத்தியர் எடுத்துக் கூறவில்லை.


“””””””கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
                       கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
மையினது என்றால் சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருள் அறிவதற்கான வழி என்று பொருள்.
சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருளை காலங்கி நாதரின் சீடரான போகராகிய நான் அவருடைய அருள் ஆசியினால் சாயா தரிசனத்தின் சிறப்புகளையும் ,மகிமைகளையும் சாயா தரிசனத்தை செய்யக் கூடிய முறைகளையும் கூறினேன் என்கிறார்  போகர்.



பாடல் - 2

சாயா தரிசனத்தின் வரலாற்றை பாடல்கள் மூலம் விவரித்துக் கூறும் போகர், மேலும் விவரித்து அடுத்த பாடல்களில் சாயா தரிசனத்தின் வரலாற்றை  கீழ்க்கண்டவாறு  கூறுகிறார்:

””தானான சித்துமுனி கும்பயோனி
         தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்
    மானான காலங்கி எந்தன்நாதர்
         மகாதேவர்  கடாட்சமது கிருபையாலே
    தேனான கருக்குருவை யானும்கற்று
        தெளிவான மாணாக்கர்  பிழைக்கஎன்று
    பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
        பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
                                                                --------போகர்-7000-------
“””””தானான சித்துமுனி கும்பயோனி
                தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்””””
சித்தர்களின் தலைவரும் சித்தர்களில் உயர்வான தவ நிலையில் உள்ளவரும் சித்தர்களில் சிறந்தவரும் ஆகிய அகத்திய முனிவர்  சாயா தரிசனத்தில் உள்ள மையக் கருவையும் ,சூட்சும ரகசியங்களையும் சொல்லாமல் மறைத்து வைத்தார்


””மானான காலங்கி எந்தன்நாதர்
         மகாதேவர்  கடாட்சமது கிருபையாலே
    தேனான கருக்குருவை யானும்கற்று
        தெளிவான மாணாக்கர்  பிழைக்கஎன்று
    பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
        பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
என்னுடைய குருவான காலங்கி நாதரின் ஆசியாலும் ,அவருடைய அருளாலும் ,சாயா தரிசனத்தின் மையக் கருவை நான் கற்றுக் கொண்டேன் .

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
மரணம் இல்லாத ஓரு நிலையை ,
மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை அடைவதற்கு வேண்டிய பயிற்சி முறைகளை ,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்று உயர்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள்  தெளிவாக உணர்ந்து கொள்ளும் வகையில் ,
புரிந்து செயல்படுத்தும் வகையில்,
சாஸ்திரங்கள் பலவற்றை அலசி ஆராய்ந்து பார்த்து ,
இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு தனது பாடல்களில் சாயா தரிசனத்தைப் பற்றி பாடி வைத்தேன் என்கிறார்  போகர்.

""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                      போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”""