September 28, 2018

திருக்குறள்-பதிவு-26


                     திருக்குறள்-பதிவு-26

விஞ்ஞானத்திற்கும்
மெய்ஞ்ஞானத்திற்கும்
ஒரே ஒரு
வித்தியாசம் தான்
உலகம் முழுவதும்
சுற்றி வந்து
தன் புறக்கண்களால்
கண்ìடவைகளை
ஆய்வு செய்து
தான் கண்டுபிடித்ததை
இந்த உலகத்திற்கு
அளித்தால் அது
விஞ்ஞானம்

எங்கும் செல்லாமல்
இருந்த இடத்திலேயே
இருந்து கொண்டு
உலகம் முழுவதையும்
தன் அகக்கண்களால்
கண்டவைகளை
தனக்கு உணர்த்தப்பட்டதை
இந்த உலகத்திற்கு
அளித்தால் அது
மெய்ஞ்ஞானம்

மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
மெய் என்றால்
உண்மை என்று பொருள்.
ஞானம் என்றால்
தெளிந்த அறிவு
என்று பொருள்
மெய்ஞ்ஞானம் என்றால்,
தெளிந்த அறிவை
தன்னுள் கொண்ட
உண்மை என்று பொருள்.

தெளிந்த அறிவைத்
தன்னுள் கொண்ட
உண்மையாக மெய்ஞ்ஞானம்
இருக்கின்ற
காரணத்தினால் தான்
மெய்ஞ்ஞானத்தால்
கண்டு பிடிக்கப்படுபவை
எல்லாம் காலத்தால்
மாற்றம் பெறுவதில்லை

தசவதாரத்தில்
விலங்கு நிலை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை,
மனிதன் நிலை
என்ற வரிசையில்
விலங்குக்கும், மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையை
அதாவது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
நம் முன்னோர்கள்
கண்டுபிடித்தார்கள்

விலங்குக்கும், மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
பிற்காலத்தில்
விஞ்ஞானம் கண்டுபிடிக்க
வாய்ப்பில்லை என்பதையும்,
பிற்காலத்தில் உண்மையான
மெய்ஞ்ஞானம்
இந்த உலகத்தில்
இருப்பதற்கு
வாய்ப்பில்லை என்பதையும்,
பிற்காலத்தில் மனிதன்
எந்த உயிரினத்திலிருந்து
வந்தான் என்பதை
மனிதனால் கண்டுபிடிக்க
வாய்ப்பில்லை என்பதையும்,
உணர்ந்த நம்
முன்னோர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த சிற்பத்தை
உருவாக்கி அதை
பொது இடத்திலோ
சுற்றுலா செல்லும்
இடங்களிலோ
வைக்கவில்லை

மக்கள் அனைவரும்
அடிக்கடி வந்து
செல்லும் இடமான,
மக்கள் அனைவரும்
ஒன்றாகக் கூடும் இடமான,
மக்களால் பாதுகாப்பாக
பாராமரிக்கப்படும் இடமான,
மக்களால் புனிதமாகக்
கருதப்படும் இடமான,
கோயிலில் வைத்தனர்

கோயில் கோபுரங்களிலும்
கோயில் தூண்களிலும்
அந்த சிற்பத்தை வைத்தனர்
பெரும்பாலும் கோயில்
தூண்களில் அந்த
சிற்பத்தை வைத்தனர்

அன்றும், இன்றும்
மக்கள் அனைவரும்
பார்க்கும் இடத்தில்
அமைந்து இருப்பது;
காலம் காலமாக
அனைவரும் பார்த்துக்
கொண்டிருப்பது,;
என்ன என்று
தெரியாமல் மக்களால்
சிந்தித்துக் கொண்டிருக்கும்
நிலையில் இருப்பது;
எண்ணற்ற கோயில்களில்
அதிகமான எண்ணிக்கையில்
சிற்பங்களாக இருப்பது;
காலத்தால் அழியாமல்
இன்றும் இருப்பது;
இது தான் அதன்
ரகசியம் என்று
தெரியாமல் இருப்பது;
அது தான் அந்த
சிற்பத்திற்கு பெயர் தான்
யாளி.

யாளி என்ற பெயர்
கொண்ட சிலை தான்
விலங்கும் மனிதனும்
சேர்ந்த ஒரு நிலை;
இந்த யாளி என்ற
உயிரினத்திலிருந்து
வந்தவன் தான் மனிதன்;

இந்த யாளி சிற்பங்கள்
கோயில்களின் தூண்களில்
வடிக்கப்பட்டிருக்கிறது
எண்ணற்ற வகையில்
ஆகம சாஸ்திர
விதிகளின்படி கட்டப்பட்ட
பல இந்து மத கோயில்
தூண்களில் வடித்து
வைக்கப்பட்டிருக்கிறது

யாளி சிலைகள்
அனைத்தையும் இந்து மத
கோயில்களில் மட்டுமே
நம் முன்னோர்கள்
சிற்பங்களாக செதுக்கி
வைத்திருக்கிறார்கள்

யாளி சிலையை நன்றாக
உற்றுப் பாருங்கள்
படங்களில் பார்க்காதீர்கள்
ஆகம சாஸ்திர
விதிகளின்படி கட்டப்பட்ட
இந்து கோயில்களுக்கு
நேரில் சென்று பாருங்கள்

பழமையான கோயில்களின்
தூண்களில் எல்லாம்
சிங்கத்தின் முகத்தையும்
மனித உடலையும்
கொண்டு இரண்டு
கால்களில் நிற்கும் படியும்,
இரண்டு கைகள்
இருக்கும்படியும்,
வடிக்கப்பட்ட
சிலை இருக்கும்
அதற்குப் பெயர்
தான் யாளி.
அந்த யாளி என்ற
உயிரினத்திலிருந்து
வந்தவன் தான் மனிதன்

உயர்ந்த ரகசியங்களை
தன்னுள் கொண்டு
கோயில்களில் குடி
கொண்டிருக்கும்
யாளிகளைப் பற்றி
இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 27-09-2018
//////////////////////////////////////////


September 26, 2018

திருக்குறள்-பதிவு-25


                     திருக்குறள்-பதிவு-25

உலகில் கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்புகள்
எல்லாவற்றையும்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று விஞ்ஞானத்தால்
       கண்டுபிடிக்கப்பட்ட
       கண்டுபிடிப்புகள்

இரண்டு மெய்ஞ்ஞானத்தால்
         கண்டுபிடிக்கப்பட்ட
         கண்டுபிடிப்புகள்

விஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்புகள் அனைத்தும்
காலத்தால்
மாறிக்கொண்டே இருப்பவை
ஆனால்,
மெய்ஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்புகள் அனைத்தும்
காலத்தால் மாறாமல்
இருப்பவை

அணுவை பிளக்க
முடியாது என்றனர்
விஞ்ஞானிகள்
பின்னர் வந்த
விஞ்ஞானிகள்
அணுவை பிளக்க முடியும்
என்று சொல்லி அணுவை
பிளந்து புரோட்டான்,
எலக்ட்ரான், நியூட்ரான்
இருக்கிறது என்றனர்

மெய்ஞ்ஞானம் சொன்னது
செவ்வாய் கிரகம்
சிவப்பு நிறத்தில்
இருக்கிறது என்று
அவர்களுக்கு பின்னால்
வந்த மெய்ஞ்ஞானிகள்
அதை மறுக்கவில்லை
ஏனென்றால்
அவர்கள் இறுதியான
ஒன்றை உண்மையான
ஒன்றை கண்டுபிடித்து
சொன்னதே காரணம்

இதிலிருந்து
விஞ்ஞானிகள் சொல்வது
மாறிக் கொண்டே
இருக்கும் என்பதையும்
மெய்ஞ்ஞானிகள் சொல்வது
மாறாது இருக்கும்
என்பதையும்
தெரிந்து கொள்ளலாம்

காலத்தால் மாறிக்
கொண்டே இருக்கும்
விஞ்ஞானத்தால் மூன்று
விஷயங்களைச் சொல்ல
முடியாது

ஒன்று : ஏன் என்பதை
        சொல்ல முடியாது

இரண்டு: மாற்றம் எந்த
         இடத்தில் நிகழ்கிறது
         என்பதை சொல்ல
         முடியாது

மூன்று : இறுதியானது எது
         என்பதை சொல்ல
         முடியாது

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொல்ல
முடிந்த விஞ்ஞானத்தால்
மனிதன் ஏன்
குரங்கிலிருந்து வந்தான்
என்ற கேள்விக்கு
குரங்கின் குரோமோசோமும்
மனிதனின் குரோமோசோமும்
நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கிறது
என்று மட்டுமே
சொல்ல முடிந்த
விஞ்ஞானத்தால்
தெளிவான காரணத்தை
விஞ்ஞானத்தால் விளக்கி
சொல்ல முடியவில்லை

மெய்ஞ்ஞானம் சொன்னது
விலங்கிலிருந்து
மனிதன் வரவில்லை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு
நிலையிலிருந்து தான்
மனிதன் வந்தான்
ஏன் என்றால்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
விலங்கு என்ற
நிலை கழிக்கப்பட்டு
மனிதன் என்ற
நிலை வந்தது
என்பதை மெய்ஞ்ஞானம்
சொன்னது

விலங்கிலிருந்து மனிதன்
வந்தான் என்றால்,
விலங்கு நிலையில்
எந்த இடத்தில்
மாற்றம் நிகழ்ந்து
மனிதன் வந்தான்
என்பதை விஞ்ஞானத்தால்
சொல்ல முடியவில்லை

ஆனால்
மெய்ஞ்ஞானம் சொன்னது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
விலங்கு நிலை கழிவதும்
மனிதன் நிலை
உருவாவதும் ஒரே
சமயத்தில் நடைபெறும்
இரு செயல்கள்
இந்த இரு செயல்களும்
ஒரே புள்ளியில்
நடைபெறுகிறது
இந்த இடத்தில் தான்
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் என்ற நிலை
உருவானது என்று
மெய்ஞ்ஞானம் சொன்னது

விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்பது தான்
இறுதியான முடிவு
என்பதை விஞ்ஞானத்தால்
அறுதியிட்டு சொல்ல
முடியவில்லை ஆனால்
மெய்ஞ்ஞானம்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
மனிதன் வந்தான்
என்பது தான்
இறுதியானது என்பதை
மெய்ஞ்ஞானம்
சொன்னது

விஞ்ஞானத்தால்
ஏன் என்பதையும்,
எந்த இடத்தில்
என்பதையும்,
இறுதியானது எது
என்பதையும்
சொல்ல முடியாது
என்ற காரணத்தால் தான்
சார்லஸ் டார்வினால்
விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று மட்டுமே
சொல்ல முடிந்தது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டுபிடிக்க முடியவில்லை.

இருந்தாலும்
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
முதன் முதலில் இந்த
உலகத்திற்கு அளித்து
விஞ்ஞானத்தில் புரட்சியை
ஏற்படுத்திய அறிவியல்
மாமேதை
சார்லஸ் டார்வினை
நாம் வணங்கவில்லையெனில்
அறிவில் சிறந்த  மேதைகள்,
இந்த உலகத்தில்
தோன்றாமலேயே போய்
விடுவார்கள் என்பதை
மட்டும் நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

--------- இன்னும் வரும்
---------- 26-09-2018
//////////////////////////////////////////////////////////



September 24, 2018

திருக்குறள்-பதிவு-24


                     திருக்குறள்-பதிவு-24

தசாவதாரத்தில்
முதல் மூன்று
நிலைகளும்
பரிணாமத்தில்
விலங்கின் நிலையைக்
குறிக்கிறது அதாவது
மச்ச அவதாரம்,
கூர்ம அவதாரம்,
வராக அவதாரம்,
என்பவை விலங்கின்
நிலையைக் குறிக்கிறது.

ஐந்தாவது நிலை முதல்
பத்தாவது நிலை வரை
பரிணாமத்தில் மனிதனின்
நிலையைக் குறிக்கிறது
அதாவது
வாமன அவதாரம்,
பரசுராம அவதாரம்,
இராமர் அவதாரம்,
பலராமர் அவதாரம்,
கிருஷ்ண அவதாரம்,
கல்கி அவதாரம்,
ஆகியவை மனிதனின்
நிலையைக் குறிக்கிறது

மனிதனால் பரிணாமத்தில்
ஒன்று முதல் மூன்று
நிலைவரை உள்ள
விலங்கு நிலையைக்
கண்டுபிடிக்க முடியும்
மனிதனால் பரிணாமத்தில்
ஐந்தாவது நிலைமுதல்
பத்தாவது நிலை வரை
உள்ள மனிதனின்
நிலையைக் கண்டு
பிடிக்க முடியும் ஆனால்
மனிதனால்
நான்காவது நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டு பிடிக்க
முடியாது என்று
நம் முன்னோர்கள்
உணர்ந்து இருந்தார்கள்

மனிதனுடைய
வாழ்க்கையை
எடுத்துக் கொண்டால்
இளமை முடிந்து
முதுமை வருகிறது.
இளமை எங்கே
முடிகிறது என்பதையும்,
முதுமை எங்கே
ஆரம்பிக்கிறது என்பதையும்,
மனிதனால் கண்டுபிடிக்க
முடியாது

இளமையும், முதுமையும்
ஒரு புள்ளியில் சந்திக்கிறது
இளமையும், முதுமையும்
சந்திக்கும் அந்த புள்ளியில்
தான் மாற்றம் என்பது
நிகழ்கிறது அதாவது
இளமை என்பது முடிந்து
முதுமை என்பது
ஆரம்பிக்கிறது
இளமை எது என்பதையும்
முதுமை எது என்பதையும்
கண்டுபிடிக்க முடிந்த
மனிதனால் இளமை
எங்கே முடிகிறது
என்பதையும் முதுமை
எங்கே ஆரம்பிக்கிறது
என்பதையும் மனிதனால்
கண்டு பிடிக்க
முடிவதில்லை

பூ காயாக மாறுகிறது
காய் கனியாக மாறுகிறது

பூ எந்த இடத்தில்
முடிகிறது
காய் எந்த இடத்தில்
ஆரம்பிக்கிறது
என்பதை மனிதனால்
கண்டுபிடிக்க முடியாது
ஏனென்றால்
பூவும், காயும்
ஒரு புள்ளியில்
சந்திக்கிறது
அதைப்போலத் தான்
காய் கனியாக
மாறும் நிலையும்
காய் எந்த இடத்தில்
முடிகிறது
கனி எந்த  இடத்தில்
ஆரம்பிக்கிறது
என்பதையும் மனிதனால்
கண்டுபிடிக்க முடியாது
ஏனென்றால்
இரண்டும் ஒரு
புள்ளியில் சந்திக்கிறது

இரண்டு செயல்கள்
ஒரு புள்ளியில் சந்தித்து
மாற்றம் நிகழும்போது
அந்த மாற்றத்தை
விஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்க முடியாது

உலகில் நடைபெறும்
எந்த ஒரு மாற்றத்தை
எடுத்துக் கொண்டாலும்
ஒன்று எங்கே
முடிகிறது என்பதையும்,
இரண்டு எங்கே
ஆரம்பிக்கிறது
என்பதையும்,
மாற்றம் எந்த
இடத்தில் நிகழ்கிறது
என்பதையும்,
மனிதனால்
கண்டுபிடிக்க முடியாது
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

மனிதன் தனக்குள்
நடைபெறும்
மாற்றத்தையும்
கண்டுபிடிக்க முடியாது
இயற்கையில் நடைபெறும்
மாற்றத்தையும்
கண்டுபிடிக்க முடியாது
என்பதை உணர்ந்து
வைத்திருந்தனர்
நம் முன்னோர்கள்

மனிதனால் தனக்குள்ளே
ஏற்படக்கூடிய
மாற்றத்தையே
கண்டு பிடிக்க முடியாமல்
இருக்கும் போது,
இயற்கையில் நடைபெறும்
மாற்றத்தையும்
கண்டுபிடிக்க முடியாமல்
இருக்கும் போது,
எப்படி மனிதனால்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டுபிடிக்க முடியும்

பிற்காலத்தில் மனிதன்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டு பிடிக்க மாட்டான்
மனிதனால் கண்டுபிடிக்க
முடியாது என்று
அன்றே உணர்ந்து
ஒன்று முதல் மூன்று
நிலை வரை உள்ள
விலங்கு நிலையையும்
ஐந்தாவது நிலை முதல்
பத்தாவது நிலை வரை
உள்ள மனிதன்
நிலையையும்
சிற்பங்களாக செதுக்குவதற்கு
முக்கியத்துவம்
கொடுக்காமல்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த சிற்பத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து
அதை செதுக்கி
வைத்து விட்டு சென்றனர்
நம் முன்னோர்கள்

--------- இன்னும் வரும்
---------- 24-09-2018
/////////////////////////////////////////////