December 12, 2018

ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம் !!


                ரஜினி என்ற
                மூன்றெழுத்து மந்திரம் !!

மனிதன் தன்னுடைய
வாழ்க்கையில்
இரண்டு செயல்களை
செய்வது என்பது மிகவும்
கடினமான விஷயம்

ஒன்று :
இந்த உலகத்தில்
தனக்கென்று ஒரு
இடத்தை பிடிப்பது

இரண்டு :
பிடித்த இடத்தை
தக்க வைத்துக்
கொள்வது

ஒரு சாதாரண
குடும்பத்தில் பிறந்து ;
நடத்துனராக
வேலை செய்து ;
தனக்கென்று ஒரு
தனிப்பட்ட திறமையை
உருவாக்கிக் கொண்டு
அந்த திறமையைப்
பயன்படுத்தி
கடுமையாக உழைத்து ;
ஏளனம்
செய்தவர்களையும்,
எள்ளி
நகையாடியவர்களையும்
புறக்கணித்து ;
உழைப்பின்
மேன்மையாலும்
பழகும் தன்மையாலும்
குணத்தில் உயர்ந்து ;
தனக்குள் குடி
கொண்டிருந்த
நிதானம் ; பொறுமை ;
என்ற இரண்டு
மிகப்பெரிய
சக்தியைப் பயன்படுத்தி
பல்வேறுபட்ட
நிலைகளில் இருந்து
தன்னை வந்து
தாக்கிய எல்லாவிதமான
இடையூறுகளையும்
கடந்து சென்று ;
எதிரிகளை எழவே
விடாமல் வீழ்த்தி ;
துரோகிகள் இனி
துரோகியாக யாரிடமும்
இருக்கக் கூடாது என்று
களை எடுத்து
சூப்பர் ஸ்டார்
என்ற பட்டம்
பெற்றது என்பது
ரஜினி
இந்த உலகத்தில்
தனக்கென்று ஒரு
இடத்தைப்
பிடித்ததைக் குறிக்கும்

பல கோடிகள்
புழங்கும் கனவுத்
தொழிற்சாலையில் ;
வீழ்த்தி விட காத்திருந்த
எதிரிகள் தன்னைச்
சுற்றி நின்று
கொண்டிருந்த நிலையில் ;
தோல்வி காண
வைக்க துரோகிகள்
நேரம் பார்த்துக்
கொண்டிருந்த நிலையில் ;
கீழே விழுவாரா
பார்த்து ரசிக்கலாம்
என்று இரக்கமில்லாத
நெஞ்சங்கள் பார்த்துக்
கொண்டிருந்த நிலையில் ;
அழிந்து விட்டால்
கை கொட்டி சிரிக்கலாம்
என்று பார்த்துக்
கொண்டிருந்தவர்கள்
மத்தியில் ;
உழைப்பால் உயர்ந்து
திறமையால் தன்னை
இந்த உலகத்திற்கு
பிறரிடமிருந்து
வேறுபடுத்தி காட்டி
தனக்கென்று ஒரு
இடத்தைப் பிடித்ததோடு
மட்டுமல்லாமல்
அதை 40 ஆண்டுகளாக
தக்க வைத்துக் கொண்டு
இருக்கும் அந்த
மூன்றெழுத்து
மந்திரத்திற்குப் பெயர் தான்
ரஜினி

இந்த உலகத்தில்
எனக்கென்று
ஒரு இடத்தைப் பிடித்து
அந்த இடத்தைத்
தக்க வைத்துக்  
கொள்வதற்கு முன்பு
உலகில் உள்ள
அனைவருடைய
வீட்டு வாசற்படியிலும்
அலுவலக வாசற்படியிலும்
நான் காத்துக் கிடந்தேன் ;
எனக்கென்று ஒரு
இடத்தைப் பிடித்து
அந்த இடத்தை நான்
தக்க வைத்துக்
கொண்டபிறகு
உலகில் உள்ள
அனைவரும் என்
வீட்டு வாசற்படியிலும்
அலுவலக வாசற்படியிலும்
காத்துக் கொண்டிருக்கின்றனர் ;
என்ற வார்த்தை
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரத்திற்கு கச்சிதமாக
பொருந்தும் வார்த்தை

ரஜினியைப் பற்றி
ஆயிரம் கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும்
ரஜினியை நண்பர்களாக
நினைப்பவர்களும் சரி ;
ரஜினிக்கு ரசிகர்களாக
இருப்பவர்களும் சரி ;
ரஜினிக்கு எதிரியாக
இருப்பவர்களும் சரி ;
ரஜினியை எதிரியாக
கருதுபவர்களும் சரி ;
இவர்கள் அனைவரும்
ஒப்புக் கொண்ட
ஒரு விஷயம்
உண்டு என்றால்
அது இது தான்

தன்னுடைய நடிப்பாலும் ;
தன்னுடைய சிரிப்பாலும் ;
தன்னுடைய ஸ்டைலாலும் ;
இந்த உலகத்தை
40 வருடங்களாக
கட்டிப் போட்ட மந்திரம்
என்ற ஒன்று இந்த
உலகத்தில் உண்டு
என்றால் அது
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரம் மட்டுமே
என்பதை அனைவரும்
ஒப்புக் கொண்டுள்ளனர்.

12-12-2018 - அன்று
பிறந்தநாள் காணும்
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரத்திற்கு என்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் !!

----K.பாலகங்காதரன்
----12-12-2018
///////////////////////////////////////////







திருக்குறள்-பதிவு-67


                      திருக்குறள்-பதிவு-67

ஜியார்டானோ
புருனோவின்
தந்தையின் பெயர்
ஜியோவான்னி புருனோ
(Giovanni Bruno)
இவரது தந்தை
ஒரு இராணுவ
அதிகாரி இவரது
தாயாரின் பெயர்
பிரௌலிஸா
ஸாவோலினோ
(Fraulissa Savolino)

ஜியார்டானோ
புருனோ
கல்வி பயில்வதற்காக
1562-ஆம் ஆண்டு
நேபில் நகருக்கு
சென்றார்
1565-ஆம் ஆண்டு
தனக்கு வைக்கப்பட்ட
பெயரான
பிலிப்போ புருனோ
(Filippo Bruno)
என்ற பெயரை
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
என மாற்றிக்
கொண்டார்
1572-ஆம் ஆண்டு
இவர் கிறிஸ்தவ
மத போதகராக
ஆவதற்குரிய
மதக்கல்வி பயின்றார்
1575-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
கிறிஸ்தவ
பாதிரியார் ஆனார்

ஜியார்டானோ
புருனோ எதையும்
வெளிப்படையாகப்
பேசக் கூடியவர்
எந்த ஒரு
விஷயத்தையும்
ஆராந்து பார்த்து
எது நல்லது
எது கெட்டது
என்று முடிவு
செய்து அதன்படி
செயல்படுபவர்

ஒருவர் சொன்ன
கருத்து தவறு என்று
தனக்கு தெரிந்தால்
அதை தைரியமாக
சுட்டிக் காட்டத்
தயங்காதவர்
ஒரு தவறான
கருத்தை காலம்
காலமாக மக்கள்
பின்பற்றி வந்தால்
அந்த கருத்து தவறு
என்று எடுத்துக் காட்ட
தயங்காதவர்

ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மத
போதகராக இருந்தும்
கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்காக
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் உள்ள
பழக்க வழக்கங்களை
ஆராய்ந்து அதில்
உள்ள குறைகளைச்
சுட்டிக் காட்டினார்

கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்கு
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் எப்படி
நடந்து கொண்டே
பேச வேண்டும்
என்பதும்
எப்படி நின்று கொண்டே
பேச  வேண்டும்
என்பதும்
எப்படி மனிதர்களுடன்
பழக வேண்டும்
என்பதும்
கற்றுக் கொடுப்பது
என்பது ஒரு
மதபோதகர்
இச்சமுதாயத்தில்
எப்படி செயற்கையாக
நடந்து கொள்வது
என்பதை சொல்லித்
தருவது போல்
அமைகின்ற
காரணத்தினால்
இந்த கற்பித்தல்
முறையின் மூலம்
ஒரே மாதிரியான
ம்த போதனை
செய்பவர்களைத் தான்
உருவாக்க முடியுமே
ஒழிய உண்மையான
மத போதகர்களை
உருவாக்க இயலாது
என்று கத்தோலிக்க
கிறிஸ்தவ கற்பித்தலில்
உள்ள குறையைச்
சுட்டிக் காட்டினார்

அதற்கு கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையினர்
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்கிறார்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
அச்சபை பின்பற்றி
வரும் நடை
முறைகளையும்
எதிர்க்கிறார் என
ஜியார்டானோ புருனோ
அவர்களின் மீது
குற்றம் சுமத்தினர்
எனவே,
ஜியார்டானோ புருனோ
1576-ஆம் ஆண்டு
பாதிரியார் வாழ்க்கையை
துறக்க வேண்டிய
கட்டாயத்திற்கு
தள்ளப் பட்டார்

இதன் தொடர்ச்சியாக
ஜியார்டானோ புருனோ
அறிவு ஒருவனை
உயர்த்தும்
அறியாமை ஒருவனை
வீழ்த்தும் என்பதை
புரிந்து கொண்டார்
இதனால் அவருக்கு
அறிவின்
மேல் காதலும்,
அறியாமையின் மேல்
வெறுப்பும் அவருக்கு
ஏற்பட்டது

இதன் விளைவாக
ஜியார்டானோ புருனோ
ஒரு புரட்சியாளனாக
மாறினார்
பாராம்பரியமாக இருந்து
வரும் அதிகாரத்தையும்
அந்த அதிகாரத்தைப்
பயன்படுத்தி அதிகாரம்
செய்பவர்களையும்
அவர் ஏற்றுக்
கொள்ள மறுத்தார்
இதனால் அவர்
தனிமைப் படுத்தப்
பட்டார் இதன்
விளைவாக இவர்
பல நாடுகளில்
நாடோடியாக அலைய
வேண்டி இருந்தது
ஆனாலும் உண்மைகளைச்
சொல்வதில் எந்தவிதமான
தயக்கமும் அவருக்கு
ஏற்படவில்லை

உண்மையை சொல்வதன்
மூலம் என் உயிர்
போகும் என்றால் நான்
அந்த உண்மையை
கண்டிப்பாக சொல்வேன்
என்றார் ஜியார்டானோ
புருனோ

--------- இன்னும் வரும்
---------  11-12-2018
///////////////////////////////////////////////////////////



December 11, 2018

திருக்குறள்-பதிவு-66


                       திருக்குறள்-பதிவு-66

நான் கிறிஸ்தவ
மதத்தை அழித்து
விடுவேன் என்று
நீங்கள்
நினைக்கிறீர்களா ?
நான் செய்யும்
செயல்களால்
நீங்கள் புனிதமாகக்
கருதும்
பைபிளை கிறிஸ்தவ
மக்கள் புறக்கணித்து
விடுவார்கள் என்று
நீங்கள்
நினைக்கிறீர்களா ?
நான் மரணத்தை
கண்டு அஞ்சவில்லை !
உங்கள் கண்களில்
தெரியும் பயம்
நீங்கள் என் மேல்
கொண்டிருக்கும்
பயத்தை தான்
வெளிப்படுத்துகிறது !
நீங்கள் என்னைப்
பார்த்து பயப்படுகிறீர்கள் !
என்பதைத் தான்
உங்கள் கண்கள்
காட்டுகிறது !

நான் என்
உயிருக்கு பயந்து
மன்னிப்பு கேட்க
மாட்டேன் !
நான் எதற்கும் தயார்
என்று புரட்சி செய்தவர் !!

சூரியனை மையமாக
வைத்து
பூமி சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அமைதியாக சொன்னதை
ஆவேசமாகவும் ;
ஆக்ரோஷமாகவும் ;
அழுத்தமாகவும் ;
புரட்சிகரமாகவும் ;
சொன்னவர் ;
விஞ்ஞானிகளில்
புரட்சியாளர் என்று
வர்ணிக்கப்பட்டவர் ;
நாத்திகவாதி என்று
சித்தரிக்கப்பட்டவர் ;
பகுத்தறிவாதி
என்று புனையப்பட்டவர் ;
தத்தவமேதை ;
வானவியலாளர் ;
கணிதவியலாளர் ;
என்று பாராட்டப்பட்டவர்

மிகச் சிறந்த
எழுத்தாளர்களில்
சிறந்தவராகக்
கருதப் படுபவர் ;
நல்ல பேச்சாளர்களே
வியந்து கேட்கும்
படியாக தான்
சொல்ல வந்த கருத்தை
ஆணித்தரமாகவும்
அழுத்தம், திருத்தமாகவும்
அனைவரும் எளிதில்
புரிந்து கொள்ளும்
வகையில்
பேசுவதில் வல்லவர் ;
அறிவு பூர்வமான
கேள்விகளைக்
கேட்டு எதிராளியை
வார்த்தைகளால் மடக்கி
சிந்திக்க வைப்பவர் ;
சிலேடையாக
பேசுவதில் வல்லவர் ;
இறையியலைச் சார்ந்தும்
அதனை அடிப்படையாக
வைத்தும்
அதனை எளிமையாக
விளக்கியும்
தெளிவாக பேசுபவர் ;
அறிவியலின்
கலங்கரை விளக்கம்
என்று போற்றப்பட்டு
கலங்கரை
விளக்கமாக இருந்து
அனைவருக்கும்
வழி காட்டியவர் ;


ஐரோப்பாவின்
மிகச் சிறந்த
புத்திசாலியான மனிதர்
என்று போற்றப்பட்டவர் ;
ஜியோமிதியில் வல்லவர் ;
மொழியியல் வித்தகர் ;
மறுமலர்ச்சி இரசவாதி
என்று போற்றப்பட்டவர் ;
14-ஆம் நூற்றாண்டின்
சாக்ரடீஸ் என்று
அழைக்கப்பட்டவர் ;
அனைத்திற்கும் மேலாக
வானிவியல் தந்தை
என்று அழைக்கப்படும்
கலிலியோ அவர்களின்
மிக நெருங்கிய
நண்பர் என்று
சொல்லப்படுகிறவர் ;

இவ்வாறு பலவேறுபட்ட
நிலைகளில்
பல்வேறுபட்ட
திறமைகளைத் தன்னுள்
கொண்டவர் ;
தான் சொன்ன
கருத்திற்காக உயிரையும்
விடத் தயாராக
இருந்தவர் அவர் தான்
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)


ஜியார்டானோ புருனோ
1548-ஆம் ஆண்டு
இத்தாலியில்
நேபில்ஸ் நகருக்கு
அருகில் நோலா
(Nola near Neples)
என்னும் இடத்தில்
பிறந்தார்.

நோலாவில் தான்
சால்டிய கிரேக்கர்கள்
முதன் முதலில்
காலனி அமைத்தனர்
ரோமானியப் பேரரசின்
காலத்திய முக்கிய
நகரங்களில்
நோலாவும் ஒன்று
உயர்குடி மக்கள்
எனப்படும்
கிறித்துவ திருச்சபையின்
துறவிகள் மடங்களும்
இங்கு தான்
கட்டப்பட்டன
இப்படி வரலாற்று
சிறப்பு மிக்க
இடத்தில் பிறந்தார்
ஜியார்டானோ புருனோ

ஜியார்டானோ
புருனோவின்
பிறப்பு பலவகையிலும்
சிறப்பிடம் பெற்றது
நோலா என்ற
வரலாற்று சிறப்பு
மிக்க இடத்தில்
“பாராசல்ஸ்” என்ற
வேதியியல் விஞ்ஞானி
உலகை விட்டு
மறைந்த பிறகு
ஜியார்டானோ புருனோ
பிறந்தார்

ஜீசஸ் சமூகத்தின்
முதல் ஜெனரலான
“லபோராதேய”
பதவி ஏற்பு இப்போது
தான் ஏற்பட்டது

ஜியார்டானோ
புருனோவிற்கு
(Giordano Bruno)
பிலிப்போ புருனோ
(Filippo Bruno)
என்ற கத்தோலிக்க
கிறிஸ்தவப் பெயர்
சூட்டப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  10-12-2018
///////////////////////////////////////////////////////////