December 22, 2018

திருக்குறள்-பதிவு-73


                      திருக்குறள்-பதிவு-73

எனக்கு
வாழ்வதற்காக
பணம் தேவைப்பட்டதால்
குழந்தைகளுக்கு
Art of Memory
என்ற பாடத்தை
கற்பிக்கும் தொழிலை
நோலியிலும்
லிகுரியாவிலும்
செய்தேன்

டுரினை விட்டு
வெளியேறி
போ என்ற
ஆற்றைத் தொடர்ந்து
சென்று முதன்
முறையாக வெனிஸ்
சென்றேன்

வெனிஸ் நகரத்தில்
ஒரு மாதமாக
தொழிலாளி
ஒருவருடைய
வீட்டில் தங்கினேன்

அவருடைய பெயரை
என்னுடைய நினைவுக்கு
கொண்டு வர
என்னால்
முடியவில்லை

எனக்கு உடல்நிலை
சரியில்லாமல் போன
காரணத்தினால் நான்
வெனிஸ் நகரத்தை
விட்டு வெளியேறி
படோவா சென்றேன்

ஆல்ப்ஸ் மலையைக்
கடந்து ஜெனிவா
சென்றேன் ஜெனிவா
கல்வானிஸ்டிகளால்
ஆளப்பட்டு வந்தது

அதனைத் தொடர்ந்து
நான் டௌலோவ்
சென்றேன்
அங்கு இரண்டு
ஆண்டுகள்
தங்கி
பல்கலைக் கழகத்தில்
கற்பித்தல் தொழிலை
செய்தேன்

என்மீது
தொடுக்கப்பட்ட
மதப்போர்களின்
காரணமாக நான்
பாரிஸில் இருந்து
வெளியேறினேன்

ஹென்றி 3
என்னிடம்
கேட்டுக் கொண்டதற்கு
இணங்க நான்
Art of Memory
கற்பித்தேன்

ஐந்து வருடங்கள்
பாடம் கற்பித்த பிறகு
சபர்போன்னில்
மதத்தின் பெயரால்
மதப் போர்கள்
என்மீது
நடத்தப்பட்டன
மதக் குற்றங்கள்
சுமத்தப்பட்டன
அங்கிருந்து வெளியேறி
லண்டன் சென்றேன்

ராணி எலிசபெத்
எனக்கு மரியாதை
செலுத்தி
கௌரவித்தார்

ருடால்ப் 2
வான் ஹப்ஸ்பர்க்
அறிவியலின்
மிகப் பெரிய ஞானி
நான் செய்த
பல்வேறு வேலைகளில்
ஜியோமேட்ரிக்
வேலைக்காக மட்டும்
எனக்கு 300 தாலர்ஸ்
கொடுத்தார்

புத்தக சந்தையில்
கலந்து கொள்ள
வேண்டும் என்று
ஜியோவானி
மொசிங்கோ
அழைப்பிதழ் அனுப்பி
அழைத்ததின் பேரில்
வெனிஸ் வந்தேன்

நான் வெனிஸ்
வந்து உங்களால்
குற்றவாளி என்று
குற்றம் சாட்டப்பட்டு
உங்கள் முன் நின்று
கொண்டிருக்கிறேன்

இது தான்
என்னுடைய வாழ்க்கை
வரலாற்றின் சுருக்கம்
என்று சிங்கமென
கர்ஜித்து முடித்தார்
ஜியார்டானோ புருனோ

சிங்கத்தை பிடித்து
கூண்டில் அடைத்து
சித்திரவதை செய்தாலும்
சிங்கம் சிங்கமாகத்
தான் இருக்குமே
தவிர பூனையாக
மாறாது என்பதை
நிரூபித்து விட்டு ;
முதல் விசாரணை
முடிந்து விட்ட
காரணத்தினால்
அடுத்த விசாரணை
நடக்கும் வரை
சிறையில்
சித்திரவதைகளை
அனுபவிக்க சிறைக்கு
சிங்கமென நடந்து
சென்று கொண்டிருந்த
ஜியார்டானோ
புருனோவையே
வைத்த கண் மாறாமல்
பார்த்துக் கொண்டு
நின்று கொண்டு
இருந்தனர்
கிறிஸ்தவ மத
போதகர்கள்
  
இறப்பைக் கண்டு
பயப்படுபவன்
வாழ்க்கையைக்
கண்டும் பயப்படுவான் ;
இத்தகையவனை யார்
வேண்டுமானாலும்
எளிதாக அடிபணிய
வைத்து விடலாம் ;
ஆனால்
இறப்பைக் கண்டு
பயப்படாதவனை
அந்த ஆண்டவனே
வந்தாலும் அடி
பணிய வைக்க
முடியாது ; என்பதை
அவர்கள் உணரத்
தவறிவிட்டனர்

 ---------  இன்னும் வரும்
---------  21-12-2018
///////////////////////////////////////////////////////////


December 21, 2018

திருக்குறள்-பதிவு-72


                     திருக்குறள்-பதிவு-72

ஜியார்டானோ புருனோ
மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களின்
மீது நடத்தப்பட்ட
விசாரணை
7 ஆண்டுகள் தொடர்ந்து
நடந்து கொண்டிருந்த
காரணத்தினால்,
இறுதி விசாரணை
செய்யப்பட்டு
இறுதி தீர்ப்பு
வரும் வரை
ஜியார்டானோ புருனோ
7 ஆண்டுகள் சிறையில்
சித்திரவதை செய்யப்பட்டார்.

ஜியார்டானோ புருனோ
7 ஆண்டுகள் தொடர்ந்து
சிறையில்
சித்திரவதைகளை
அனுபவித்தபோது ;
ஜியார்டானோ புருனோ
மீது சுமத்தப்பட்ட
பல்வேறு குற்றச்
சாட்டுக்களின் மீது
தொடர்ந்து ;
பல்வேறு நிலைகளில்  ,
பல்வேறு கட்டங்களில் ,
பல்வேறு விசாரணைகள் ,
நடத்தப்பட்டது

முதல் விசாரணை-I

கிறிஸ்தவ மத
போதகர்கள் கூடியிருந்த
விசாரணைக்
குழுவின் முன்பு
குற்றவாளி என்று
குற்றம் சுமத்தப்பட்ட
ஜியார்டானோ புருனோ
பேச ஆரம்பித்தார்

நான் என்னுடைய
வாழ்க்கையில்
போராட்டங்களையும் ,
எதிர்ப்புக்களையும் ,
துரோகங்களையும், தான்
கண்டிருக்கிறேனே தவிர
இன்பத்தின் நிழலும் ;
சந்தோஷத்தின்
புன்முறுவலும் ;
மகிழ்ச்சியின் சாயலும் ;
என்னைத் தீண்டியதே
இல்லை.

சமுதாயத்தில்
பல்லாண்டுகளாக
தொடர்ந்து கடைபிடித்து
வரும் தவறானவைகளைச்
சுட்டிக் காட்டினேன் ;
தவறானவைகளைத்
தவறானவை என்று
சொன்னேன் ;
இது தான் உண்மை
இந்த உண்மையைப்
பின்பற்றுங்கள்
என்று சொன்னேன் ;

நான் எவைகள்
எல்லாம் தவறானவைகளோ
அவைகள் எல்லாவற்றையும்
தவறானவைகள் என்று
சுட்டிக் காட்டி
உண்மையைச் சொன்ன
காரணத்தினால் ,
மதத் துரோகி என்று
குற்றம் சாட்டப்பட்டு
எந்த ஊரிலும்
என்னை நிலையாக
வாழ விடாமல் துரத்தி
துரத்தி அடிக்கப் பட்டேன் ;
ஓடினேன் ; ஓடினேன் ;
நாடு நாடாக ஓடினேன்
ஊர் ஊராக
சுற்றி அலைந்தேன் ;
தெரு தெருவாக
அலைந்து திரிந்தேன் ;
அப்படி இருந்தும்
என்னை
எதிர்த்தவர்களுடைய
இரத்த தாகம்
தீரவில்லை ;
தேடிப்பிடித்து விரட்டி
விரட்டி அடித்தார்கள் ;
மதத்தின் பெயரால்
துன்புறுத்தப்பட்டேன் ;
மத வாதிகளால்
குற்றம் சாட்டப்பட்டேன் ;

என்னுடைய வாழ்க்கை
எதிர்ப்புகளாலும் ;
துரோகத்தாலும் ;
ஆனது என்பதை
முதலில் நீங்கள்
தெரிந்து கொள்ளுங்கள்.

25- ஆண்டுகளுக்கு
முன்பு
நேபிள்ஸ் நகரில்
எளிமையாக நடந்த
என்னுடைய முதல்
திருப்பலி நிகழ்ச்சியில்
கலந்து கொண்டேன்

முதலாவதாக நான்
ஒரு புதிய
முயற்சியை செய்தேன்
முதலில் நான்
டொமினிக்கன்
கான்வென்டில்
தங்கி இருந்த போது
அங்கிருந்த அனைத்து
புனிதர் (Saint)
படங்களை எல்லாம்
எடுத்து விட்டேன்

தொடர்ந்து நான்
அங்கே தங்கி
இருந்த போது
என்னுடைய
14-ஆம் வயதில்
மீண்டும் அனைத்து
புனிதர் படங்களையும்
எடுத்து விட்டேன் ;
சிலுவை அணிந்த
படங்களைத் தவிர ;

இரண்டாவது முறையாக
புதியதாக ஒரு
முயற்சியைச் செய்தேன்
Seven Joys of
the Holy Virgin
என்ற புத்தகத்தை
தூக்கி எறிந்து விட்டு
Holy Father
புனித தந்தை
எப்படி இருக்க
வேண்டும் ;
என்பதைக் கற்றுக்
கொடுக்கும்
புத்தகங்களை
படியுங்கள் என்றேன்
புனித தந்தை எப்படி
நடந்து கொள்ள வேண்டும் ;
எத்தகைய பழக்க
வழக்கங்களை
கொண்டிருக்க வேண்டும் ;
எத்தகைய
நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டும் ;
என்று நான் சொன்ன
காரணத்திற்காக
கத்தோலிக்க கிறிஸ்தவ
சபைக்கு எதிராக
செயல்படுகிறேன் என்று
குற்றம் சாட்டப்பட்டு
ரோமை விட்டு
துரத்தி அடிக்கப்பட்டேன்

---------  இன்னும் வரும்
---------  20-12-2018
///////////////////////////////////////////////////////////


December 19, 2018

திருக்குறள்-பதிவு-71


                          திருக்குறள்-பதிவு-71

ஜியார்டானோ புருனோ
சிறையில் இருந்த
7 ஆண்டுகள்
கொடுமையான
சித்திரவதைக்கு
உள்ளாக்கப்பட்டார்

தேசத் துரோக குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கும் ;
அரசாங்கத்தை எதிர்த்து
சதி வேலைகள்
செய்பவர்களுக்கும் ;
ஆட்சியை கவிழ்க்க
குள்ளநரித்தனம்  
புரிபவர்களுக்கும் ;
தீவிரவாதிகள் என்று
அடையாளம்
காட்டப்பட்டவர்களுக்கும் ;
வழங்கப்படும்
கொடுமையான
சித்திரவதைகள்
ஜியார்டானோ
புருனோவிற்கு
வழங்கப்பட்டது

ஒவ்வொரு முறையும்
ஜியார்டானோ
புருனோவை
சித்திரவதை செய்து
முடித்த பின்
ஜியார்டானோ
புருனோவிடம்
மன்னிப்பு கேட்டுக்கொள்
உன்னை விட்டு
விடுகிறோம் என்பார்கள்
நான் எந்த ஒரு
தப்பையும் செய்யவில்லை
நான் எதற்காக
மன்னிப்பு
கேட்க வேண்டும்
நான் மன்னிப்பு கேட்க
மாட்டேன் என்பார்
ஜியார்டானோ புருனோ

7 வருட சிறை
வாழ்க்கையில்
நரக வேதனையை
அனுபவித்த
ஜியார்டானோ புருனோ
தொடர்ந்து 7 வருடங்களாக
அவருக்கு வழங்கப்பட்ட
கொடுமையான
சித்திரவதை
காரணமாக
நடைபிணமாக
ஆக்கப் பட்டார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன சூரிய
மையக் கோட்பாடு
சரியானது என்று
இந்தப் பிரபஞ்சத்தையே
தன்னுடைய
கண்களால் பார்த்து
சொன்ன ஜியார்டானோ
புருனோ இந்தப்
பிரபஞ்சத்தின் சிறிய
ஒளியைக் கண்டாலே
அலறும் நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

பிரபஞ்சத்தின்
ஒலியில் தான்
இந்தப் பிரபஞ்சத்தின்
உயிர்த் தன்மையே
இருக்கிறது ;
பிரபஞ்சத்தின்
ஒலியைக் கேட்பவர்கள்
இந்தப் பிரபஞ்சத்தின்
உயிர்த்தன்மையை
புரிந்து கொள்வார்கள் ;
பிரபஞ்சத்தின்
உயிர்த்தன்மையை
புரிந்து கொள்ள
வேண்டும் என்றால்
பிரபஞ்ச ஒலியைக்
கேட்க வேண்டும் ;
என்று சொன்ன 
ஜியார்டோனோ
புருனோ இந்தப்
பிரபஞ்சத்தின் சிறு
ஒலியைக் கேட்டாலே
அலறும் நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

ஜியார்டோனோ
புருனோவின் நாவானது
அசைந்தால்
புல் கூட
வாள் எடுத்து
போர்முனைக்கு
செல்லும் ;
பிறந்த குழந்தையும்
புதிய வரலாறு படைக்க
புரட்சி கீதம் இசைக்கும் ;
என்று சொல்லத்தக்க
நாவன்மை படைத்த
ஜியார்டோனோ புருனோ
தன்னுடைய நாவை
அசைத்து ஒரு
வார்த்தை கூட பேச
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

உண்மையான
கருத்துக்களை
சாகாத சரித்திரமாக்கி ,
உயிருள்ள எழுத்துக்களில்
எழுதி நூலாக
வெளியிட்ட ,
ஜியார்டானோ புருனோ
ஒரு சிறு எழுத்தைக்
கூட கைகளால் எழுத
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

உண்மைக் கருத்துக்களை
உலகம் முழுவதும்
எடுத்துரைக்க .
ஊர் ஊராக திரிந்து
மக்களிடையே
விழிப்புணர்வை
ஏற்படுத்திய
ஜியார்டானோ புருனோ
ஒரு அடி கூட எடுத்து
வைத்து நடக்க
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

பல்வேறு கொடுமையான
சித்திரவதைகளை
7 வருட சிறை
வாழ்க்கையில்
அனுபவித்தும்
விசாரணை
செய்கிறோம்
என்ற பெயரில்
பல்வேறு நிலைகளில்
நடத்தப்பட்ட
விசாரணையில்
ஜியார்டனோ புருனோ
நடை பிணமாக
ஆக்கப்பட்டார்

7 வருட
ஜியார்டானோ
புருனோவின்
சிறை வாழ்க்கையில்
அவருக்கு தண்டனை
வழங்கியவர்களும் ;
அத்தண்டனையை
நிறைவேற்றியவர்களும் ;
நம்பவே முடியாத
அசாத்திய மன உறுதியை
ஜியார்டானோ
புருனோவிடம்
கண்டு பயந்து
தான் போயினர் ;
தங்கள் வாழ்நாளில்
இப்படியொரு
நெஞ்சுரம் படைத்த
மனிதரை சந்தித்தது
இல்லை என்று
சொல்லும் வகையில்
ஜியார்டானோ புருனோ
எதற்கும் கலங்காத
மன  உறுதியுடன்
இருந்தார்

---------  இன்னும் வரும்
---------  19-12-2018
///////////////////////////////////////////////////////////