May 14, 2019

பரம்பொருள்-பதிவு-15


                     பரம்பொருள்-பதிவு-15

"அஷ்ட பந்தனம் செய்து
கடவுள் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்பு
பயன்படுத்தப்படும்
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகிய மூன்றும்
இரண்டு நிலைகளில்
பயன்படுத்தப்படுகிறது"

ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
முன்

இரண்டு
கும்பாபிஷேகத்திற்கு
பின்

ஒன்று
"அஷ்ட பந்தனம் செய்து
கடவுள் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகிய மூன்றும்
ஒன்றுக் கொன்று
தொடர்பு கொண்டு
இயங்கும் விதத்தில்
அமைக்கப்பட வேண்டும்"

"கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைக்கு
எந்த மந்திரத்தை
பயன்படுத்தி பூஜை
செய்யப் போகிறோமோ ?
அந்த மந்திரத்தை
எடுத்துக் கொண்டு
அந்த மந்திரத்திற்குரிய
யந்திரம் தங்கம்
அல்லது வெள்ளி
போன்ற உலோகங்களில்
அதற்கு என்று
வரையறுக்கப்பட்ட
முறைகளைப் பயன்படுத்தி
யந்திரம் எழுதப்பட
வேண்டும்"

"மந்திரத்திற்கு ஏற்ற
விதத்தில் யந்திரம்
எழுதப் பட வேண்டும்
சொல்லப்படும் மந்திரத்தை
ஏற்றுக்கொண்டு இயங்கும்
விதத்தில் யந்திரம்
எழுதப்பட வேண்டும்"

"மந்திரம் சொல்லப்படும்
போது மந்திரத்திற்கும்,
யந்திரத்திற்கும்
தொடர்பை ஏற்படுத்தி
மந்திரத்தின் மூலம்
யந்திரம் செயல்பட்டு
யந்திரமானது சக்தியை
வெளியிடும் வகையில்
மந்திரமும், யந்திரமும்
ஒன்றொக்கொன்று
தொடர்பு கொண்டு
இயங்கும் விதத்தில்
யந்திரம் எழுதப்பட
வேண்டும்"

"சொல்லப்படும்
மந்திரத்திற்கு
ஏற்றவிதத்தில்
மந்திரத்தின் ஒலியை
உள்வாங்கிக் கொண்டு
யந்திரம் இயக்கம் பெற்று
சக்தியை வெளியிடும்
வேலையை யந்திரம்
செய்வதற்கு தந்திரம்
உதவி செய்கிறது"
  
"அதாவது சொல்லப்படும்
மந்திரத்திற்கு ஏற்ற
விதத்தில் யந்திரம்
இயங்குவதற்கு தேவையான
செயல்களைச் செய்வதற்கு
தந்திரம் உதவுகிறது"

"அதைப் போல்
யந்திரத்திலிருந்து
வெளிப்படும் சக்தியானது
கர்ப்பக்கிரகத்தில்
வைக்கப்பட்டுள்ள
கடவுள் சிலைக்கு
அளிக்கப்படுவதும் ;
கடவுள் சிலை அந்த
சக்தியை ஏற்றுக் கொண்டு
அந்த சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
சக்தியை உற்பத்தி
செய்வதும் தந்திரம்"

"அதாவது சொல்லப்பட்ட
மந்திரத்திற்கு ஏற்ப
யந்திரம் இயக்கம் பெற்று
சக்தியை வெளியிடுவதும் ;
யந்திரத்திலிருந்து
வெளிப்பட்ட சக்தியை
கடவுள் சிலை
பெற்றுக்கொண்டு
பெற்றுக் கொண்ட சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதும்
தந்திரம் ஆகும் ;"
  
"மந்திரம், யந்திரம், தந்திரம்
ஆகியவை ஒன்றுக்கொன்று
ஒன்றுபட்டு ஒன்றாக
இயங்க வேண்டும் அவ்வாறு
ஒன்றுபட்டு ஒன்றாக  
இயங்கினால் மட்டுமே
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றினால் சக்தியானது
உற்பத்தி செய்யப்பட்டு
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
சக்தியை கோயிலுக்குள்
உற்பத்தி செய்ய முடியும் ;
இல்லை என்றால்
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது ; "

"கும்பாபிஷேகம்
செய்யப்படுவதற்கு முன்
கடவுள் சிலையை பீடத்துடன்
இணைக்க வேண்டும்"
  
"கடவுள் சிலையை
பீடத்துடன் இணைப்பதற்கு
முன் கடவுள் சிலைக்குரிய
மந்திரத்தை தேர்ந்தெடுத்து
அந்த மந்திரத்திற்குரிய
யந்திரத்தை எழுதி
சொல்லப்படும் மந்திரத்திற்கு
ஏற்ப யந்திரத்திலிருந்து
வெளிப்படும் சக்தியை
கடவுள் சிலை பெற்று
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்படுகிறதா என்று
சோதித்து அறிந்த பின்னரே
யந்திரத்தை சிலையின்
கீழ் வைத்து பீடத்துடன்
கடவுள் சிலையை
அஷ்ட பந்தனம் மூலம்
இணைக்க வேண்டும்”
  
--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  14-05-2019
/////////////////////////////////////////////////////



May 12, 2019

அன்னையர் தின வாழ்த்துக்கள்-12-05-2019


அன்னையர் தின
வாழ்த்துக்கள்-12-05-2019 !

அன்பிற்கினியவர்களே !

“பட்டினத்தார் ஞானம் பெற
 வேண்டி அனைத்தையும்  
துறந்து வீட்டை விட்டு
வெளியே செல்லும் போது
தன் தாயிடம் இருந்து
விடை பெறுகிறார்.”

தாயார்
“மகனே செல்ல முடிவு
எடுத்து விட்டாய் !
இனி உன்னை தடுத்து
நிறுத்த முடியாது
எனக்காக ஒன்றே ஒன்று
செய்ய வேண்டும்”

பட்டினத்தார்
“அனைத்தையும் துறந்தவனிடம்
என்ன எதிர்பார்க்கிறீர்கள்”

தாயார்
“நான் செத்தபிறகு நீ
தான் எனக்கு கொள்ளி
போட வர வேண்டும்
வருவாயா மகனே”

பட்டினத்தார்
“அம்மா நான் அனைத்தையும்
துறந்தவன்-தாய் பாசத்தையும்
சேர்த்துத் தான் துறந்து
இருக்கிறேன் - அப்படி
இருக்கும் போது எப்படி
உங்களுக்கு கொள்ளி
போட நான் வருவேன்”

தாயார்
“மகனே உலகில் உள்ள 
எந்த ஒரு பாசத்தையும்
துறக்கலாம் - ஆனால்
தாய் பாசத்தை மட்டும்
துறக்க முடியாது “

பட்டினத்தார்
“அனைத்தையும்
துறந்தவனுக்கு
தாய் என்ன ?
தந்தை என்ன ?
மகன் என்ன ?
எல்லாம் ஒன்று தான்”

தாயார்
“இப்பொழுது நான் சொல்லும்
எதுவும் உன் காதுகளுக்கு
எட்டாது. அனுபவம்
வரும் பொழுது தான்
எல்லாம் உனக்கு புரியும்
இருந்தாலும் நான்
சொல்வதைக் கேள்
இந்த நாணயத்தை நீ
வைத்துக் கொள் தினமும்
நீ அணியும் ஆடையின்
முனையில் இதை முடி
போட்டு வைத்துக் கொள்.”

“நான் இறந்தவுடன் அந்த
முடி அவிழ்ந்து நாணயம்
கீழே விழுந்து விடும்.
நான் இறந்து விட்டேன்
என்று உனக்கு தெரிந்தவுடன்
 நீ எங்கிருந்தாலும் நான்
இருக்கும் இடம் தேடி
வந்து நீ எனக்கு
கொள்ளி வைக்க வேண்டும்.
 நீ கொள்ளி வைத்தால்
தான் என் ஆன்மா
சாந்தி அடையும்.”

பட்டினத்தார்
இச்செயல் நடப்பது என்பது
இயலாத காரியம்
இருந்தாலும் உங்களுக்காக
அந்த நாணயத்தை என்
துண்டின் ஓரத்தில்
கட்டி வைத்துக் கொள்கிறேன்

என்று அந்த நாணயத்தை
வாங்கிக் கொண்டார்
அதை அவர் உடுத்தியிருந்த
உடையின் ஓரத்தில்
முடிச்சு போட்டு
வைத்துக் கொண்டார்”

“பட்டினத்தார் பல ஆண்டுகள்
பல  இடங்களுக்கும் சென்று
பல்வேறு கருத்துக்களைப்
பரப்பி வந்தார்.
அவ்வாறான செயல்கள்
நடை பெற்றுக்  கொண்டிருக்கும் 
வேளையில், ஒரு நாள்
தவநிலையில் இருக்கும் போது
அவர் உடுத்தி இருந்த
ஆடையில் முடிந்து வைக்கப்பட்ட
 நாணயம் அவிழ்ந்து
 கீழே விழுந்தது.”

“அவர் தாய் இறந்து
விட்டார் என்று அவருக்கு
தெரிந்ததும், அவரையும்
அறியாமல் அவர் மனம்
தடுமாற்றம் அடைந்தது.
உடனே அவர் அருகில்
இருந்தவர்களிடம் தன்
தாய் இறந்து விட்டார்
அவரைப் பார்க்க சென்று
வருகிறேன் என்று சொல்லி
விட்டு கிளம்பி விட்டார்”

“அவர் தாய் இருக்கும்
இடத்திற்கு வந்தபோது
அங்கே அவர் கண்ட
காட்சி அவரை அதிர்ச்சி
அடையச் செய்தது. அவர்
துறவியாகி எல்லாவற்றையும்
துறந்து சென்று விட்டதால்
சாதி வெறியர்கள் அவர்
குடும்பத்தை விலக்கி
வைத்திருந்தனர். அதனால்
அவர் தாயாரின் இறந்த
உடலுடன் ஓரிருவர் மட்டுமே
நின்று கொண்டிருந்தனர்.”

“தன்னுடைய தாயினுடைய
இறந்த உடலை
பார்த்த பட்டினத்தார்
மனம் வேதனையுற்று
தன்னையுமறியாமல்
கண்ணிலிருந்து விழுந்த
கண்ணீரை அடக்க முடியாமல்,
துக்கம் தாளாமல்
தேம்பித் தேம்பி
அழ ஆரம்பித்தார் ;
கதறி அழ ஆரம்பித்தார் ;
தன்னுடைய அழுகையை
கட்டுப்படுத்த முடியாமல்
அழ ஆரம்பித்தார் ;
உடல் என்னும் கூட்டை
விட்டு இதயம் வெடித்து
வெளியே விழுந்து
விடும் என்று எண்ணத்
தோன்றும் வகையில்
ஆழ ஆரம்பித்தார் ;’

“அப்பொழுது தான் அவர்
தாய் சொன்னது அவர்
நினைவுக்கு வந்தது”

“உலகில் உள்ள எந்த
ஒரு பாசத்தையும்
துறக்கலாம் - ஆனால்
தாய் பாசத்தை மட்டும்
துறக்க முடியாது
என்ற வார்த்தை - அவர்
காதில் எதிரொலித்தது”

“தாயின் வார்த்தையில்
உள்ள உண்மைகளை
உணர்ந்து கொண்டார்
பட்டினத்தார்”

அன்னையர் தின
வாழ்த்துக்கள்-12-05-2019

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்


May 10, 2019

பரம்பொருள்-பதிவு-14


                       பரம்பொருள்-பதிவு-14

" கடவுள் சிலை
செய்வதற்காக
உயிருள்ள கல்லைத்
தேர்ந்தெடுத்து ;
தேர்ந்தெடுக்கப்பட்ட
கல்லிடம்
கடவுள் சிலை
செய்வதற்கான
அனுமதியைப் பெற்று ;
ஆகம சாஸ்திர
முறைப்படி
கடவுள் சிலையை
செதுக்கி ;
பிராண பிரதிஷ்டை
மூலம்
சக்தியை செலுத்தி ;
கடவுள் சிலையை
கடவுளாகவே
மாற்றிய பின்னர் ;
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றைப்
பயன்படுத்தி
கடவுள் சிலையை
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவ வேண்டும் “

“கடவுள் சிலையை
நிறுவுவதற்கு
பயன்படுத்தும் முறைக்கு
அஷ்ட பந்தனம்
என்று பெயர்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
வைக்கப்படும்
கடவுள் சிலை
அசையாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
கடவுள் சிலைக்கு
அஷ்ட பந்தனம்
சாத்துவார்கள்”

“கல்லால் செய்யப்பட்ட
கடவுள் சிலையை
கர்ப்பக்கிரகத்தில்
நிறுத்தி வைக்க
வேண்டும் ;
அதாவது கல்லால்
ஆன கடவுள்
சிலையை கல்லோடு
ஒட்டி நிறுத்தி
வைக்க வேண்டும் ;
கல்லால் ஆன
கடவுள் சிலையை
வேறொரு கல்லுடன்
ஒட்டுவதற்கு
கலவை ஒன்று
தயாரிக்கப்படுகிறது;
இதற்கு அஷ்ட
பந்தனம் என்று பெயர்: ”

அஷ்ட பந்தனம்
“அஷ்டம் என்றால்
எட்டு என்று பொருள்;
பந்தனம் என்றால்
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;
அஷ்ட பந்தனம்
என்றால் எட்டுவிதமான
பொருள்களை ஒன்றாக
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;”

“இந்தக் கலவையில்
எட்டு விதமான
பொருட்கள்
சேர்க்கப்பட்டிருக்கும்”

அவையாவன ;

1.கொம்பரக்கு
2.சுக்கான் தூள்
3.குங்கிலியம்
4.கற்காலி
5.செம்பஞ்சு
6.சாதிலிங்கம்
7.வெள்ளை மெழுகு
8.எருமை எண்ணெய்

ஆகிய எட்டு
பொருள்களாகும்

“இந்த அஷ்டபந்தனம்
என்பதை மருந்து
சாத்துதல் என்றும்
சொல்லலாம்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
கடவுள் சிலையை
வைத்து பீடத்திலிருந்து
கடவுள் சிலை
அகலாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
அஷ்ட பந்தன மருந்து
சாத்துவார்கள்”

“இந்த அஷ்ட பந்தன
மருந்து கடவுள்
சிலையை பீடத்துடன்
அழுந்தப் பிடித்துக்
கொள்ளும்”

“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலைக்கு
சாத்தப்பட்ட
அஷ்ட பந்தன மருந்து
12 வருடங்களுக்கு
மட்டுமே வேலை
செய்யும் ;
12 வருடங்களுக்குப்
பிறகு அஷ்ட பந்தன
மருந்தானது செயல்
இழந்து விடும் ;
எனவே,
12 வருடங்களுக்கு
பிறகு அஷ்ட பந்தன
மருந்தை மாற்ற
வேண்டும் ;”

“கர்ப்பக் கிரகத்தில்
அஷ்ட பந்தன மருந்து
சாத்தப்பட்டு
கடவுள் சிலை
நிறுவப் படுகிறது ;
இவ்வாறு
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவப்பட்ட
கடவுள் சிலை
12 ஆண்டுகள் கழித்து
பிரித்து எடுக்கப்
படுகிறது ;
மேலும் கடவுள்
சிலையை பீடத்துடன்
ஒட்டி வைப்பதற்காக
சாத்தப்பட்ட
பழைய அஷ்டபந்தன
மருந்து முற்றிலுமாக
வெளியே எடுக்கப்படுகிறது;
புதியதாக அஷ்ட பந்தன
மருந்து தயாரிக்கப்பட்டு
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் சிலை
பீடத்துடன்
ஒட்டி வைக்கப்படுகிறது”

“இந்த நிகழ்வு
கும்பாபிஷேகத்தின்
போது செய்யப்படுகிறது”

“கும்பாபிஷேகம் எப்படி
நடத்தப் படுகிறது
என்று பார்ப்போம்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  10-05-2019
/////////////////////////////////////////////////////