September 01, 2019

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்-02-09-2019


 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் - 02-09-2019 !

அன்பிற்கினியவர்களே !

“சிவபெருமான் கயிலாயம்
வந்து கொண்டிருப்பதை
அறிந்து மகிழ்ந்த
பார்வதி தேவி அவரை
வரவேற்கும் முன்பு
தயாராக நினைத்தார் ;  
ஆனால். அப்போது
நந்தி இல்லாததால்
அங்கு வாயிற்காவலர்
யாரும் இருக்கவில்லை ;
எனவே. பார்வதி தேவி
தாம் குளிக்கும் முன்பு
மஞ்சள் விழுதால்
ஒரு சிறுவனைச் செய்து
அதற்கு உயிர் கொடுத்தார்;
அவனுக்கு
“விக்னங்களைத் தீர்ப்பவன் “
என்ற பொருளில்
விநாயகர் என்ற பெயர்
சூட்டினார் ;
தான் வரும்வரை
யாரையும் உள்ளே
அனுமதிக்க வேண்டாம் ;
என்று அறிவுறுத்துகிறார்.
விநாயகரும் அவ்வாறே
செய்வதாக வாக்களிக்கிறார் ;
விநாயகர் இப்படித்
தான் பிறந்தார் ;”

“சிவபெருமான் தனது
நெற்றிக் கண்ணில்
இருந்து நெருப்பினை
தோற்றுவித்தார் ;
அப்பொறியை வாயுவும்
அக்னியும் கங்கையில்
சேர்த்தனர். ஆறு
தாமரை மலர்களில்
ஆறு குழந்தைகள்
உருவாயின. அந்த
குழந்தைகளை வளர்க்கும்
பொறுப்பை கார்த்திகைப்
பெண்கள் ஆறுபேரிடம்
சிவன் ஒப்படைத்தார் ;
பிள்ளைகள் ஆறு
பேரையும் காண வந்த
பார்வதி தேவி
ஆறுமுகத்தையும்
ஒரு முகமாக்கினாள் ;
இதனால், அப்பிள்ளைக்கு
கந்தன் என்ற திருநாமம்
உண்டானது - கந்தன்
என்றால் ஒன்று
சேர்க்கப்பட்டவன்
என்று பொருள்
முருகன் இப்படித்
தான் பிறந்தார் ; “

“இரண்டு கதைகளையும்
நன்றாக ஆழ்ந்து படியுங்கள்  
விநாயகர் பிறப்புக்கும் ;
முருகன் பிறப்புக்கும் ;
உள்ள மிக முக்கியமான
ஒற்றுமை ஒன்று
அனைவருக்கும் புலப்படும் ;”

“பார்வதிதேவி
சிவனின் கலப்பு இல்லாமல்
விநாயகரைத் தோற்றுவித்தார் ;
சிவன்,
பார்வதி தேவியின்
கலப்பு இல்லாமல்
முருகனைத் தோற்றுவித்தார் ;
ஆமாம்
பார்வதி தேவி மற்றும்
சிவன் ஆகிய
இரண்டு பேருடைய
கலப்பும் இல்லாமல்
பிறந்தவர்கள் தான்
விநாயகரும்,முருகரும்
ஆமாம்
ஆண் மற்றும் பெண்
இருவருடைய
கலப்பும் இல்லாமல்
விநாயகரும், முருகரும்
பிறந்ததால் பார்வதிதேவி
கன்னித்தாய் ஆகிறாள்;”

“ இவர்களில் விநாயகருக்கு
ஒரு தனிச் சிறப்பு
உண்டு-அதாவது
பார்வதி தேவி
சிவபெருமானுடன்
கலக்காமல் விநாயகரை
தோற்றுவித்ததால்
பார்வதி தேவி
கன்னித்தாய் ஆகிறாள் ;
கன்னித் தாய்
பார்வதி தேவிக்குப்
பிறந்து திருமணமே
செய்யாத காரணத்தினால்
விநாயகர்
கன்னித் தெய்வம் ஆகிறார்;”

“கன்னித் தாய்
பார்வதி தேவிக்குப் பிறந்த
கன்னி தெய்வம் விநாயகர்”

“இன்று உலகம் முழுவதும்
பல்வேறு மதங்கள்
பல்வேறு கதைகளைப்
புனைந்து
பல்வேறு பெயர்களில்
பல்வேறு வடிவங்களில்
பெரும்பாலான மக்களால்
வணங்கப்பட்டு வரும்
கன்னித்தாய் வழிபாட்டிற்கும் ;
கன்னித் தெய்வ வழிபாட்டிற்கும் ;
அடிப்படை கன்னித்தாயான
பார்வதி தேவிக்கும்
கன்னி தெய்வமான
விநாயகருக்கும் இந்தியாவில்
நடத்தப்பட்டுக் கொண்டு
இருக்கும் வழிபாடாகும் ;”

“கன்னித் தாயான
பார்வதி தேவிக்குப் பிறந்த
கன்னி தெய்வமான
விநாயகரை
விநாயகரின்
சிறப்பினை உணர்ந்து
விநாயகர் சதுர்த்தியான
02-09-2019-ம் தேதி அன்று
வணங்குவோம்! “

விநாயகர் சதுர்த்தி
வாழ்த்துக்கள்-02-09-2019”

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்
-----02-09-2019
///////////////////////////////////////////////////

August 31, 2019

பரம்பொருள்-பதிவு-59


                 பரம்பொருள்-பதிவு-59

“நீர், நீராவி, அனல்,
அணு மற்றும் காற்று
போன்றவைகளின்
மூலமாக உற்பத்தி
செய்யப்படும் மின்சாரம்
என்ற சக்தியானது
மக்களின் பயன்பாட்டிற்காக
வழங்கப்படுகிறது.  

“மக்களின் பயன்பாட்டிற்காக
வழங்கப்பட்ட மின்சாரத்தை
மக்கள் மின்விளக்கைப்
பயன்படுத்தும் போது
மின்னாற்றலை
ஒளியாற்றலாகவும் ;
மின்விசிறியைப்
பயன்படுத்தும் போது
மின்னாற்றலை
இயக்க ஆற்றலாகவும் ;
மாற்றி மின்சாரத்தை
தங்கள் தேவைக்கேற்ப
பல்வேறு விதமாக
பயன்படுத்தி வருகின்றனர் ;”.

“பல்வேறு முறைகளின்
மூலமாக உற்பத்தி
செய்யப்படும் மின்சாரத்தை
சேமித்து வைத்து
தேவைப்படும் காலத்தில் ;
தேவைப்படும் சமயத்தில் ;
தேவைப்படும் சூழ்நிலையில்;
மின்சாரத்தைப் பயன்
படுத்த முடியாது ;
ஏனென்றால் மின்சாரத்தை
சேமித்து வைத்து
பயன்படுத்த முடியாது.;
மின்சாரம் உற்பத்தி
செய்யப்படும் போதே
மின்சாரத்தை
பயன்படுத்த வேண்டும் ;”.

“நிலவிற்கு மனிதனை
அனுப்பியது விஞ்ஞானம்
என்றும்; இந்த உலகத்தை
காப்பாற்றிக் கொண்டு
வருவது விஞ்ஞானம்
என்றும்; பெருமையாக
பேசிக் கொண்டு
திரியும் விஞ்ஞானத்திற்கு
மின்சாரம் என்ற ஒரு
சாதாரண சக்தியையே
எப்படி சேமித்து
வைப்பது எப்படி என்று
தெரியவில்லை “

“ஆமாம் மின்சாரம்
என்னும் ஒரு சாதாரண
சக்தியை சேமித்து வைக்கும்
முறையை இதுவரை
விஞ்ஞானம் கண்டு
பிடிக்கவில்லை என்பது
எத்தனை பேருக்கு தெரியும் “

“இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிறைந்து
இருக்கக்கூடிய கடவுள்
சக்தியை கிரகித்து ;
இந்துமதக் கோயிலுக்குள்
செலுத்தி ; உற்பத்தி
செய்யப்பட்ட
கடவுள் சக்தியை ;
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட இடத்தில்
குவித்து சேமித்து வைத்து
தேவைப்படும் காலத்தில்;
தேவைப்படும் சமயத்தில்;
தேவைப்படும் சூழ்நிலையில்;
குவித்து வைக்கப்பட்டு
சேமித்து வைக்கப்பட்ட
கடவுள் சக்தியில் இருந்து
மக்கள் தங்களுக்கு
தேவைப்படும்
கடவுள் சக்தியை
எடுத்துக் கொண்டு
தங்களுடைய தேவையை
பூர்த்தி செய்து கொள்ளும்
வகையில்
கடவுள் சக்தியானது
கோயிலில் குவித்து சேமித்து
வைக்கப்பட்டு இருக்கிறது “

“எத்தனை நூற்றாண்டுகள்
கடந்தாலும் அந்த
கடவுள் சக்தியானது
இந்துமதக் கோயில்களில்
அப்படியே இருக்கும்
வகையில் இந்துமதக்
கோயில்களை கட்டி
வைத்தனர் இந்திய
நாட்டில் வாழ்ந்த
நம்முடைய முன்னோர்கள் “

“மின்சாரம் என்ற ஒரு
சாதாரண சக்தியையே
சேமித்து வைக்க
விஞ்ஞானத்திற்கு
தெரியவில்லை - ஆனால்
இந்த பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்து இருக்கக் கூடிய
கடவுள் சக்தியை
கிரகித்து கோயிலுக்குள்
செலுத்தி குவித்து வைத்து
மெய்ஞ்ஞானத்தின் மூலம்
சேமித்து வைத்தனர்
இந்திய நாட்டில் வாழ்ந்த
நம்முடைய முன்னோர்கள்.”

“பல்வேறு விதமான
உயர்ந்த கண்டுபிடிப்புகள்
அனைத்தும் விஞ்ஞானத்தின்
மூலம் தான் கண்டுபிடிக்கப்
பட்டது என்று பெருமை
பேசிக் கொண்டு
மின்சாரம் என்ற ஒரு
சாதாரண சக்தியையே
குவித்து வைத்து சேமித்து
வைக்கத் தெரியாத
விஞ்ஞானத்தை புகழ்ந்து
பேசும் மேல்நாட்டினர்
அறிவாளிகளா
அல்லது
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
கடவுள் சக்தியை ஒரு
குறிப்பிட்ட இடத்தில்
குவித்து வைத்து
அனைவரும் பயன்படுத்தும்
வகையில் மெய்ஞ்ஞானத்தின்
மூலம் சேமித்து
செயல்களைச் செய்து
வைத்த இந்திய
நாட்டில் வாழ்ந்த
நம்முடைய முன்னோர்கள்
அறிவாளிகளா என்பதை
சிந்தித்துப் பார்த்தால்
உண்மை விளங்கும்”

“இதிலிருந்து ஒரு
குறிப்பிட்ட இடத்தில்
கடவுள் சக்தியை
குவித்து வைத்து
சேமிப்பது என்பது
எவ்வளவு பெரிய செயல்
என்பதை அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும்”

" இந்து மதக்கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட இடத்தில்
குவித்து வைத்து
சேமிக்கப்படும்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
எப்படி குவித்து
வைக்கப்படுகிறது
என்று தெரியுமா………………………..?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 31-08-2019
//////////////////////////////////////////////////////////

August 30, 2019

பரம்பொருள்-பதிவு-58


            பரம்பொருள்-பதிவு-58

ஒன்றுக்கொன்று
தொடர்பில்லாமல்
செய்யப்படும்
இரண்டு செயல்களில்
சில சமயங்களில்
நெருங்கிய தொடர்பு
கொண்ட அர்த்தங்கள்
மறைந்து இருக்கிறது

நெருங்கிய தொடர்பு
கொண்ட அர்த்தங்கள்
மறைந்து இருக்கும்
இரண்டு செயல்கள்

ஒன்று :
அடைத்து வைத்தல்

இரண்டு :
குவித்து வைத்தல்

1.அடைத்து வைத்தல் :
அடைத்து வைத்தல்
என்ற செயல்
இரண்டு முக்கியமான
அர்த்தங்களைத் தன்னுள்
கொண்டிருக்கிறது

ஒன்று :
தனக்கு மட்டுமே
உரிமை உண்டு

இரண்டு :
தேவைப்படும்
பிறருக்கு உரிமை
கிடையாது

ஒரு மாநிலம்
தன்னுடைய
மாநிலத்தில் ஓடும்
ஆற்று நீரை
அடைத்து வைத்து
அணை கட்டுகிறது
இங்கு
அடைத்து வைத்தல்
என்ற செயலில்
அந்த ஆற்றின் மீது
தங்கள் மாநிலத்திற்கு
மட்டுமே உரிமை உண்டு
எனவே,
தண்ணீரை நாங்கள்
மட்டுமே
பயன்படுத்துவோம்
என்றும்
ஆற்று தண்ணீர் மீது
பக்கத்து மாநிலத்திற்கு
உரிமை இல்லை
எனவே
தேவைப்படும்
பக்கத்து மாநிலத்திக்கு
தரமாட்டோம் என்றும்
இரண்டு அர்த்தங்கள்
மறைந்து இருக்கிறது

2,குவித்து வைத்தல் :
குவித்து வைத்தல்
என்ற செயல்
இரண்டு முக்கியமான
அர்த்தங்களை தன்னுள்
கொண்டிருக்கிறது

ஒன்று :
தனக்கு உரிமை உண்டு

இரண்டு :
தேவைப்படும் பிறருக்கும்
உரிமை உண்டு

ஒரு செல்வந்தர்
தன்னுடைய
பண்ணையின்
வெளியில் அனைவரும்
பார்க்கும் வகையில்
பூக்களை மலைபோல்
குவித்து வைத்திருந்தார்

இந்தச் செயலில்
பூக்கள் மீது தனக்கு
உரிமை உண்டு
எனவே
பூக்களை விற்பதற்காக
வைத்திருக்கிறேன்
என்றும்
பூக்கள் தேவைப்படும்
பிறருக்கும்
உரிமை உண்டு
எனவே,
யாருக்கு தேவைப்
படுகிறதோ அவர்
பூக்களை விலை
கொடுத்து பெற்றுக்
கொள்ளலாம் என்றும்
இரண்டு அர்த்தங்கள்
மறைந்து இருக்கிறது

அடைத்து வைத்தல்
என்ற செயல்
தனக்கு மட்டுமே
பயன்படும்
பிறருக்கு பயன்படாது
ஆனால்
குவித்து வைத்தல்
என்ற செயல்
தனக்கும் பயன்படும்
பிறருக்கும் பயன்படும்
என்ற காரணத்தினால்
உலகில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களிலும்
கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
சக்தியானது கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் குவித்து
வைக்கப்பட்டிருக்கிறது

" இந்து மதக்கோயில்களில்
உற்பத்தி செய்யப்படும்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
எப்படி குவித்து
வைக்கப்படுகிறது
என்று தெரியுமா………………………..?"

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 30-08-2019
//////////////////////////////////////////////////////////



August 29, 2019

பரம்பொருள்-பதிவு-57


              பரம்பொருள்-பதிவு-57

"பைரவர் கோயிலின்
நீளம், அகலம், உயரம்,
கர்ப்பக் கிரகத்தின்
நீளம், அகலம், உயரம்,
கர்ப்பக் கிரகத்தில்
வைக்கப்படும்
பைரவர் சிலையின்
நீளம், அகலம், உயரம்,
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு ;
ஒத்திசைவு பெற்று ;
இயங்குவதற்கு
ஏற்ற வகையில்
பைரவர் சிலையை
செதுக்குவதற்கு முதலில்
உயிருள்ள கல்லானது
தேர்ந்தெடுக்கப்படுகிறது ;

" தேர்ந்தெடுக்கப்பட்ட
உயிருள்ள கல்லிடம்
பைரவர் சிலையை
செதுக்குவதற்கு
தேவையான
அனுமதி பெறப்பட்டு ;
ஆகமசாஸ்திர
விதிமுறைகளின்படி
பைரவர் சிலையானது
செதுக்கப்படுகிறது ; "

" செதுக்கப்பட்ட
பைரவர் சிலைக்கு
பிராண பிரதிஷ்டையின்
மூலமாக
உயிரூட்டப்பட்டு ;
பைரவர் சிலை
பைரவராகவே
மாற்றப்படுகிறது ;

"பைரவராகவே
மாற்றப்பட்ட
பைரவர் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்பாக
பைரவர் சிலைக்குரிய
மந்திரம்;
பைரவர் சிலைக்குரிய
யந்திரம்;
பைரவர் சிலைக்குரிய
தந்திரம் ;
ஆகிய மூன்றும்
தேர்ந்தெடுக்கப்பட்டு ;
ஒன்றுக் கொன்று
ஒன்றுபட்டு செயல்படும்
வகையில்
செயல்களைச்
செய்த பின்னர்
பைரவர் சிலைக்கும்
பீடத்திற்கும் இடையில்
மந்திரத் தகடு
வைக்கப்பட்டு ;
பைரவர் சிலையானது
பீடத்துடன்
அஷ்ட பந்தன
மருந்து மூலம்
இணைக்கப்படுகிறது "

"பைரவர் சிலையானது
பீடத்துடன் இணைக்கப்
பட்டபிறகு
கும்பாபிஷேகம்
செய்யப்படுகிறது ;
செய்யப்பட்ட
கும்பாபிஷேகத்தின் மூலம்
பைரவர் சிலையில் உள்ள
பைரவர் சக்தியானது
இயங்கும் சக்தியைப்
பெறுகிறது ;"

"கும்பாபிஷேகத்தின் மூலம்
இயங்கும் சக்தியைப்
பெற்ற பைரவர்
சிலைக்கு
ஒவ்வொரு நாளும்
பூஜைகள்
செய்யப்படுகிறது ;
பூஜைகள் என்பது
மந்திரம், யந்திரம், தந்திரம்,
ஆகிய மூன்றினைக்
கொண்டு செய்யப்படுகிறது "

"மந்திரம், யந்திரம், தந்திரம்,
ஆகிய மூன்றும்
தொடர்ந்து
பயன்படுத்தப்படுவதால்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும்
பைரவர் சிலையிலிருந்து
பெறப்படும் பைரவர்
சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கோயிலுக்குள் பைரவர்
சக்தியானது உற்பத்தி
செய்யப்படுகிறது ;; "

" இந்துமதக் கோயில்களில்
எந்த ஒரு கோயிலை
எடுத்துக் கொண்டாலும்
எந்த ஒரு கடவுளுடைய
சக்தியாக இருந்தாலும்
இவ்வாறாகத் தான்
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படுகிறது "

" கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்படும் சக்தி
எந்த ஒரு கடவுளுடைய
சக்தியாக இருந்தாலும்
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
இடத்திற்குள் குவித்து
வைக்கப்பட வேண்டும்,.  "

"கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்படும் சக்தி
கோயிலுக்குள் குவித்து
வைக்கப்பட்டால் மட்டுமே
கோயிலானது ஆற்றல்
மிக்க களமாக இருக்கும். "

" கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட சக்தியானது
கோயிலுக்குள் குவித்து
வைக்கப்படவில்லையெனில்
கோயிலானது ஆற்றல்
மிக்க களமாக இருக்காது "

" இந்து மதக்கோயில்களில்
உற்பத்தி செய்யப்படும்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
எப்படி குவித்து
வைக்கப்படுகிறது
என்று தெரியுமா………………………..?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 29-08-2019
//////////////////////////////////////////////////////////