September 21, 2019

பரம்பொருள்-பதிவு-64


            பரம்பொருள்-பதிவு-64

“நேராக ஓடிக்
கொண்டிருக்கும்
ஆற்று நீரை அதன்
திசையிலிருந்து
திருப்பி எந்த
திசையில் ஓடச்
செய்ய வைக்க
வேண்டுமோ
அந்த திசையில்
திருப்பி ஓடச்
செய்ய வைக்கலாம்”

“நமக்கு எந்த திசையில்
ஆற்றுநீரை திருப்பி
ஓடச் செய்ய
வைக்க வேண்டுமோ?
அந்த திசைக்கு திருப்பி
ஆற்று நீரை ஓடச்
செய்ய வைக்கலாம். “

“உதாரணத்திற்கு
கிழக்கு நோக்கி
ஓடிக் கொண்டிருக்கும்
ஆற்று நீரை
தெற்கு திசை நோக்கி
திருப்பி ஓடச்
செய்ய வைக்க
தெற்கு திசையில்
செல்லும் வகையில்
அணையைக் கட்டினால்
கிழக்கு நோக்கி
ஓடிக் கொண்டிருக்கும்
ஆறானது
தெற்கு திசை நோக்கி
திரும்பி ஓடும்,”

“இந்நிகழ்வு
கண்ணிற்கு தெரியும்படி
இயங்கிக்
கொண்டிருக்கும்
சக்தியை  ;
கண்ணிற்கு தெரியும்
இயக்கமற்ற
பொருளைக் கொண்டு
திருப்புவது ஆகும் ;
இது மிகவும்
எளிதான ஒன்று “

“ஆனால் இந்துமதக்
கோயில்களில்
கண்ணிற்கு தெரியாத
இயங்கிக் கொண்டிருக்கும்
கடவுள் சக்தியை ;
கண்ணிற்கு தெரியும்
பலிபீடம் என்ற
இயக்கமற்ற
பொருளைக் கொண்டு
தடுப்பதும் ;அதனை
திருப்பி விடுவதும்
அவ்வளவு
எளிதான காரியமல்ல;”

“இந்துமதக்
கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும் கடவுள்
சிலையின் மூலமாக
உற்பத்தி செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டிருக்கும்
கடவுள் சக்தியானது
கர்ப்பக்கிரகத்தை விட்டு
வெளிக்கிளம்பி
நேர் எதிராக
கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
சென்று மோதுகிறது “

“கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடம் தன் மீது
மோதிய
கடவுள் சக்தியை
தெற்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடுகிறது”

“கர்ப்பக் கிரகத்திலிருந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
அதிகமான
அழுத்தத்துடனும்;
அளவிடற்கரிய
வேகத்துடனும்;
முழுமையான
சக்தியுடனும்;
நேர் எதிராக
கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதும் போது
கிழக்கு திசையில்
இருக்கும் பலிபீடம்
கடவுள் சக்தியை
தடுத்து நிறுத்தி
தெற்கு நோக்கி
திருப்பக்கூடிய
மிகப்பெரிய
பணியைச் செய்வதால்
கர்ப்பக் கிரகத்திற்கு
நேர் எதிராக
கிழக்கில் இருக்கும்
பலிபீடம்
தலைமை பலிபீடமாக
கருதப்படுகிறது”

“கர்ப்பக் கிரகத்திலிருந்து
தொடர்ந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
நந்தியைத் தாண்டி
தொடர்ந்து பலிபீடத்தின்
மீது மோதுவதால்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சக்தியில்
உள்ள தன்மைகள்
அனைத்தும்.
நந்திக்குள் முழுமையாக
நிறைந்திருக்கும்”

“பக்தர்கள் தங்கள்
வேண்டுகோளை
நந்தியின் காதுகளில்
சொல்வது என்பது
கர்ப்பக்கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சிலையில்
இருக்கும்
கடவுளிடம்
சொல்வதற்குச் சமம்”

“கர்ப்பக் கிரகத்திற்கு
நேர் எதிராக
கிழக்கில் இருக்கும்
தலைமை பலிபீடம்
கர்ப்பக் கிரகத்திலிருந்து
வெளிப்பட்டுக்
கிளம்பி வரும்
கடவுள் சக்தியை
தடுப்பதும்
தெற்கு திசை நோக்கி
திருப்பி விடுவதும்
ஆகிய இரண்டு
மிகப்பெரிய பணிகளைச்
செய்து கொண்டிருக்கிறது”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------21-09-2019
//////////////////////////////////////////////////////////


September 20, 2019

பரம்பொருள்- பதிவு-63


            பரம்பொருள்- பதிவு-63

“இந்துமதக் கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும் கடவுள்
சிலையிலிருந்து
உற்பத்தி செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டிருக்கும்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே
வருவதற்கும் ;
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்குவதற்கும் ;
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
குவித்து வைப்பதற்கும் ;
மூன்று வெவ்வேறு
தன்மையுள்ள
9-பலிபீடங்கள் பயன்
படுத்தப்படுகின்றன “

9-பலிபீடங்களின்
மூன்று வெவ்வேறு
தன்மைகள் :

ஒன்று :
"பலிபீடம் தன் மீது படும்
கடவுள் சக்தியை ;
அது செல்லும்
திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது ; "

இரண்டு :
"பலிபீடம் தன்மீது
படும் கடவுள் சக்தியை
இடது புறமாகவோ
அல்லது
வலது புறமாகவோ
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது "

மூன்று :
"பலிபீடம் தன் மீது படும்
கடவுள் சக்தியை  
அது செல்லும்
திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையையையும் ;
பலிபீடம் தன்மீது
படும் கடவுள் சக்தியை
இடது புறமாகவோ
(அல்லது)
வலது புறமாகவோ
திருப்பி விடும்
வேலையையும் ;
ஆக மொத்தம் இரண்டு
வேலைகளைச் செய்கிறது "

“மூன்று வெவ்வேறு
தன்மையுள்ள
இந்த 9-பலிபீடங்களும்
ஒவ்வொரு
இந்துமதக் கோயிலின்
ஆகமவிதிகளுக்கு
ஏற்ப கோயிலில்
அமைக்கப்பட்டிருக்கும்”

“கோயிலில்
கர்ப்பக்கிரகத்திற்கு
எதிராக ஒரு பலிபீடம் ;
அஷ்ட திக்குகளில்
எட்டு பலிபீடங்கள்
ஆக மொத்தம்
கோயிலில் உள்ள
பல்வேறு
பலிபீடங்களில்
முக்கியமாக
9-பலிபீடங்கள் எடுத்துக்
கொள்ளப்படுகின்றன,”

“அஷ்ட திக்குகள்
என்றால்
எட்டு திசைகள்
என்று பொருள் ;
எட்டு திசைகள்
எனப்படுபவை
கிழக்கு திசை ;
தென்கிழக்கு திசை ;
தெற்கு திசை ;
தென்மேற்கு திசை ;
மேற்கு திசை ;
வடமேற்கு திசை ;
வடக்கு திசை ;
வடகிழக்கு திசை ;
ஆகியவை ஆகும்”

“கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சிலைக்கு
எதிரில் இருக்கும்
பலிபீடம் ;
மற்றும்
எட்டு திசைகளில்
இருக்கும் எட்டு
பலிபீடம் ;
ஆக மொத்தம்
9-பலிபீடங்களும்
மூன்று வெவ்வேறு
விதமான
தன்மைகளைக் கொண்டு
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
வரும்படிச் செய்து ;
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்கி ;
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சக்தியை குவித்து
வைக்கும் ;
மிகப்பெரிய
பணியினைச்
செய்து வருகிறது,.”

“மூன்று வெவ்வேறு
விதமான
தன்மைகளைக் கொண்ட
9-பலிபீடங்கள்
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
எப்படி சுற்றி
வரும்படிச் செய்து
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
எப்படி குவித்து
வைக்கும்
வேலையைச் செய்கிறது
என்று தெரியுமா ?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------20-09-2019
//////////////////////////////////////////////////////////

September 18, 2019

வடகரை-14-09-2019 ,15-09-2019


             வடகரை-14-09-2019 ,15-09-2019

அன்பிற்கினியவர்களே,

“சித்தர்களால்
அருளப்பட்டு
பல்லாயிரம் ஆண்டுகளாக
காலத்தால் மறைத்து
வைக்கப்பட்டிருந்த
சித்தவித்தை
எனப்படும்
வாசியோகத்தை
உலகில் உள்ள
அனைவரும் கற்று
பயன் பெற்று
பிறந்த பயனை
அடைய வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்துடன்
சித்தவித்தை
எனப்படும்
வாசியோகத்தை
இந்த உலகத்திற்கு
அருளிச் சென்றவர்
ஞான பிதா
சிவானந்த பரமஹம்சர்
அவர்கள்”

“மனம் அமைதி
பெறுவதற்காக
நான் அடிக்கடி
சென்று வரும்
ஞான ஒளி
வழங்கிய
ஞானபிதா
சிவானந்த பரமஹம்சர்
ஜீவசமாதி
அடைந்து இருக்கும்
கேரளாவில்
கோழிக்கோடு
மாவட்டத்தில்
வடகரையில்
அமைந்திருக்கும்
சித்த சமாஜத்தில்
14-09-2019
சனிக்கிழமை மற்றும்
15-09-2019
ஞாயிற்றுக் கிழமை
ஆகிய இரண்டு
தினங்களும்
நான் கற்று
தேர்ச்சி அடைந்த
வாசியோகத்தை
செய்யும் பேறு
பெற்றேன்”

“ஜீவசமாதி
அடைந்து இருக்கும்
ஞான பிதா
சிவானந்த பரமஹம்சர்
அவர்களின்
ஜீவசமாதி மற்றும்
சித்தசமாஜத்தின்
புகைப்படங்கள்
ஆகியவற்றை
தங்கள் பார்வைக்காக
வைத்திருக்கிறேன்
நன்றி ! ”

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
--------18-09-2019
///////////////////////////////////////////////








September 11, 2019

பரம்பொருள்-பதிவு-62


             பரம்பொருள்-பதிவு-62

"சர்க்கஸில் செய்து
காட்டப்படும்
பல்வெறு சாகச
நிகழ்ச்சிகளில்
முக்கியமான ஒரு
சாகச நிகழ்ச்சியான
உலக உருண்டை போன்று
காணப்படும்
இரும்புக் கூண்டிற்குள்
சாகசக் கலைஞர் மோட்டார்
சைக்கிளை நிறுத்தாமல்
ஓட்டிக் கொண்டே
இருக்கும் சாகச
நிகழ்ச்சியை எடுத்துக்
கொண்டு ;அந்த நிகழ்ச்சியை
கோயிலில் நடைபெறும்
நிகழ்ச்சியுடன் ஒப்பிடும்
போது; கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியானது
எப்படி செயல்படுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம் ;"

"உலக உருண்டை
போன்று காணப்படும்
இரும்புக் கூண்டு
நிலையாக அசையாமல்
இருக்கும்படி பொருத்தப்
பட்டுள்ளது ;
அந்த கூண்டைத் திறந்து
கொண்டு மோட்டார்
சைக்கிளுடன் ஒருவர்
உள்ளே செல்கிறார்;
பின்பு அவர் அந்த
கூண்டிற்குள் பொறுமையாக
மெதுவாக வண்டியை
ஓட்ட ஆரம்பித்து வட்ட
வடிவில் சுற்ற ஆரம்பித்து
வட்ட வடிவில் சுற்றிக்
கொண்டே இருக்கிறார் ;
இதனால் இரும்புக்
கூண்டிற்குள் வட்டவடிவில்
ஒரு காட்சியை
உருவாக்குகிறார் ;"

"இரும்புக் கூண்டு
இயக்கமற்ற நிலையைக்
குறிக்கிறது ;
ஒருவர் மோட்டார்
சைக்கிளுடன் - அந்த
இரும்புக்கூண்டிற்குள்
நுழைவது கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்
படுவதைக் குறிக்கிறது ;
உள்ளே நுழைந்து அந்த
கூண்டிற்குள் வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே இருப்பது
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே
இருப்பதைக் குறிக்கிறது ;
இரும்புக் கூண்டிற்குள்
மோட்டார் சைக்கிள்
மூலம் சுற்றிக் கொண்டே
வட்ட வடிவத்தை
உருவாக்குவது கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் சக்தி
வட்டத்தை
உருவாக்குவதைக் குறிக்கிறது ;"

"இரும்புக் கூண்டிற்குள்
மோட்டார் சைக்கிள்
ஓட்டும் நிகழ்வையும் ;
கோயிலுக்குள்
நடைபெறும் நிகழ்வையும் ;
ஒப்பிட்டு நோக்குவதன் மூலம்
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது எப்படி
செயல்படுகிறது என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் ;"

"இரும்புக் கூண்டு
இயக்கமற்ற நிலையைக்
குறிக்கிறது
அதைப்போல
கோயிலும் இயக்கமற்ற
நிலையைக் இருக்கிறது;"

"மோட்டார் சைக்கிள்
ஓட்டுபவர் மோட்டார்
சைக்கிளை எடுத்துக்
கொண்டு இரும்புக்
கூண்டிற்குள் நுழைகிறார் ;
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப் படுவதைக்.
குறிக்கிறது ;"

"மோட்டார் சைக்கிள்
ஓட்டுபவர் இரும்புக்
கூண்டிற்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில் சுற்றிக்
கொண்டே இருக்கிறார் ;
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே
இருப்பதைக் குறிக்கிறது;"

"மோட்டார் சைக்கிள்
ஓட்டுபவர் இரும்புக்
கூண்டிற்குள் மோட்டார்
சைக்கிளைத் தொடர்ந்து
ஓட்டிக் கொண்டு
கற்றிக் கொண்டே
இருக்கும்போது
இரும்புக் கூண்டிற்குள்
ஒரு வட்ட வடிவம்
உருவாகுகிறது ;
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
இருக்கும் போது
கடவுள் சக்தியானது
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்குவதைக்
குறிக்கிறது ;"

"கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானதுகோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் வட்ட
வடிவில் சுற்றிக்
கொண்டே இருக்கும்
போது கோயிலுக்குள்
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்குகிறது ;"

"கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் வட்ட
வடிவில் சுற்றிக் கொண்டே
வருவதற்கும் ;
கோயிலுக்குள் வட்ட
வடிவில் ஒரு சக்தி வட்டத்தை
உருவாக்குவதற்கும் ;
இதன் மூலம் கடவுள்
சக்தியை கோயிலில்
குவித்து வைப்பதற்கும் ;
மெய்ஞ்ஞானம் உணர்ந்த
நம்முடைய முன்னோர்கள்
எத்தகைய முறைகளைக்
கையாண்டார்கள் என்பது
தெரியுமா………………………………..?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 11-09-2019
//////////////////////////////////////////////////////////