January 14, 2021

UNIFIED FORCE LETTER-BOOK RELEASE-THANKS

 

அன்பிற்கினியவர்களே !


நான் எழுதிய

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தின்

வெளியீட்டு விழாவும்,

UNIFIED FORCE

TRUST-ன்

அறிமுக விழாவும்,

12- திருநங்கைகளுக்கு

நலத்திட்டங்கள்

வழங்கும் விழாவும்

முப்பெரும் விழாவாக

10-01-2021-ம் தேதி

அன்று

ஞாயிற்றுக் கிழமை

காலை 10,00

மணியளவில்

Kamalamal,

Kalyana Mandapam,

No.42/3, Kalayana

Sundaram Street,

Perambur,

Chennai-600 011

கல்யாண மண்டத்தில்

சிறப்பாக

நடைபெற்றது

 

இவ்விழா

திட்டமிட்டபடி

சிறப்பாக

நடைபெற வேண்டும்

என்பதற்காக

இரவு பகல் பாராது

அயராது

உழைத்தவர்களுக்கும்

இரத்தத்தை

வியர்வையாக சிந்தி

உழைத்தவர்களுக்கும்

ஆதரவு தந்த

அன்புள்ளங்களுக்கும்

நிதியளித்த

கருணை

உள்ளங்களுக்கும்

என்னுடைய

அழைப்பினை ஏற்று

விழாவிற்கு

வருகை புரிந்து

விழாவினை

சிறப்பித்த

உயர் மனம்

படைத்தவர்களுக்கும்

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நான் எழுதிய

அரவான் களப்பலி

என்ற புத்தகம்

வெளியிடப்பட்ட

அன்றே

ரூ,10000-க்கு

(பத்தாயிரத்துக்கு)

விற்பனையாகி

இருக்கிறது

என்பதை

மகிழ்ச்சியுடன்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

அரவான் களப்பலி

புத்தகத்தை விற்பனை

செய்வதன் மூலம்

கிடைக்கும்

பணப்பலன்களை நான்

UNIFIED FORCE TRUST-க்கு

கொடுத்து இருப்பதால்

அனைத்து

பணப்பலன்களும்

UNIFIED FORCE

TRUST-க்கு

சென்று சேருகிறது

 

UNIFIED FORCE

TRUST-க்கு நான்

எழுதிக் கொடுத்த

கடிதமும்

UNIFIED FORCE

TRUST எனக்கு

எழுதிக் கொடுத்த

கடிதமும்

அனைவருடைய

பார்வைக்காகவும்

சமர்ப்பிக்கிறேன்

 

நன்றி

 

------என்றும் அன்புடன்,

------K.பாலகங்காதரன்

 

------14-01-2021

//////////////////////////////////////////////






 

January 07, 2021

அரவான் களப்பலி-LETTER

 

அன்பிற்கினியவர்களே,

 

பாலாவின்

பார்வையில்

சித்தர்கள்

என்ற தலைப்பில்

இயங்கிக்

கொண்டிருக்கும்

என்னுடைய

வலைதளமான

Kbalagangadharan.

blogspot.com

whats app

facebook

ஆகியவற்றில் நான்

தொடர்கதையாக

எழுதி வந்த

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

என்னுடைய

முதல் புத்தமாக

வெளியிட

வேண்டும்

என்று

என் மேல்

அன்புள்ளம்

கொண்டவர்கள்

வேண்டுகோள்

வைத்தனர்.

 

அன்புள்ளம்

கொண்டோர்களின்

வேண்டுகோளுக்கு

இணங்க

அவர்களின்

ஒத்துழைப்புடன்

அரவானின் வாழ்க்கை

வரலாற்றை

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

என்னுடைய முதல்

புத்தகமாக

வெளியிட

இருக்கிறேன்

 

நான் எழுதிய

அரவான் களப்பலி

என்ற ஒரு

புத்தகத்தின்

விலை ரூ,330/-

என விலை

நிர்ணயம்

செய்யப்

பட்டிருக்கிறது

 

இந்த விலை

கொண்ட

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

விற்பனை

செய்வதன்

மூலம்

கிடைக்கும்

பணப்பலன்களை

வாழ்வாதாரத்தை

இழந்து

தவிக்கும்

மக்களுக்கு

UNIFIED FORCE

TRUST

மூலமாக

வாழ்வாதாரம்

கிடைக்கச் செய்ய

வேண்டும் என்ற

நோக்கத்திற்காக

நான் எழுதிய

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

விற்பனை

செய்வதன் மூலம்

கிடைக்கும்

பணப்பலன்களை

UNIFIED FORCE

TRUST-க்கு

அளித்திருக்கிறேன்.

 

நான் எழுதிய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

வெளியிடும் விழா

UNIFIED FORCE

TRUST-ன்

அறிமுக விழா

UNIFIED FORCE

TRUST - மூலமாக

தேர்ந்தெடுக்கப்பட்ட

12 திருநங்கைகளுக்கு

நலத்திட்டங்கள்

வழங்கும் விழா

என்று

பாலாவின்

முப்பெரும் விழா

நடைபெற

இருக்கிறது

என்று

மகிழ்ச்சியான

செய்தியைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

அரவான் களப்பலி

புத்தகத்தின்

முன்பக்க அட்டை

மற்றும்

பின்பக்க அட்டை

உங்கள்

பார்வைக்காக

சமர்ப்பிக்கிறேன்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------06-01-2021

/////////////////////////////////////////////





December 21, 2020

UNIFIED FORCE TRUST-ENROLLMENT FORM RELEASE

 

அன்பிற்கினியவர்களே,

 UNIFIED FORCE

TRUST-ன்

சேர்க்கை படிவம்

ENROLLMENT FORM

19-12-2020-ம் தேதி

சனிக்கிழமை அன்று

திரு.M.ராஜேஷ்

INTERIOR DECORATOR

CHENNAI

அவர்கள் வெளியிட

திரு.J.சந்தோஷ குமார்

JOINT SECRETARY,

UNIFIED FORCE

TRUST

அவர்கள்

பெற்றுக் கொண்டார்

 

திரு.M.ராஜேஷ்

அவர்கள்

பன்முகத் திறமை

கொண்டவர்

சிறந்த உழைப்பாளி

பல்வேறு

திறமைகளை

தன்னுள்

கொண்டிருந்தாலும்

அமைதியாக

இருக்கக் கூடியவர்

எளிமையான

நிலையில் இருப்பவர்

பழகுவதற்கு

இனியவர்

உதவி என்று

கேட்டு விட்டால்

ஓடிச்சென்று

உதவக் கூடியவர்

 

அளவிட முடியாத

கஷ்டங்கள்

தன்னைச் சாய்த்து

கீழே தள்ளினாலும்

அந்த கஷ்டங்கள்

தன்னுடைய

குடும்பத்தை

அழுத்தினாலும்

இயற்கையும்

உதவி செய்ய

மறுத்தாலும்

உதவி செய்தவற்கு

கரம் ஒன்று

இல்லை என்றாலும்

எதைப்பற்றியும்

கவலைப்படாமல்

தன்னையும்

தன்னுடைய

குடும்பத்தையும்

புன்சிரிப்புடன்

நடத்திச் சென்று

கொண்டிருப்பது

மட்டுமல்ல

உதவி

என்று கேட்டு

வந்தவர்களுக்கு

ஓடிச் சென்று

உதவக்கூடிய

அற்புத மனிதர்

 

INTERIOR

DECORATOR

ஆக இருக்கும்

திரு.M.ராஜேஷ்

அவர்கள்

INTERIOR

DECORATION-ன்

உட்பிரிவுகளான

 

(1) Painting Work

(2) Wall Designs

(3) Plumbing work

(4) Electric Work

(5) Modular Kitchen Work

(6) False Ceiling Work

(7) Fabrication Work

(8) Granite Laying Work

 

ஆகிய

அனைத்தையும்

திறம்பட

செய்யக்கூடிய

திறமை படைத்தவர்

அதுமட்டுமல்ல

ஆட்டோ ரிக்‌ஷாவும்

ஓட்டுபவர்

 

 

இத்தகைய

சிறப்புகள்

பலவற்றையும்

தன்னுள் கொண்ட

திரு.M.ராஜேஷ்

அவர்கள்

UNIFIED FORCE

TRUST-ன்

சேர்க்கை படிவம்

ENROLLMENT

FORM

வெளியிட்டதற்கு

UNIFIED FORCE

TRUST

தனது

நன்றியினை

அவருக்கு

தெரிவித்துக்

கொள்கிறது

 

--------என்றும் அன்புடன்

--------K,பாலகங்காதரன்

 

--------20-12-2020

////////////////////////////////////////












 

December 15, 2020

UFT LETTER-ARAVAN

 

அன்பிற்கினியவர்களே,

 

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

திருநங்கைகளாலும்

கடவுளென

வணங்கப்படும்

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை ;

குருஷேத்திரப்

போரில்

பாண்டவர்கள் வெற்றி

பெறுவதற்கு

முக்கிய காரணமாக

இருந்த

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை ;

இந்த உலகத்தில்

உள்ள மக்களின்

நன்மைக்காக

தன்னையே

பலியாகக் கொடுத்த

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை ;

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

என்னுடைய

முதல் புத்தகமாக

வெளியிட

இருக்கிறேன்

 

அரவான் களப்பலி

என்ற

புத்தகத்தை

வெளியிடுவதற்கு

முன்னர்

அரவான்

தெய்வத்தை

தரிசிக்க

வேண்டும்

என்ற எண்ணம்

என்னுள்

எழுந்த

காரணத்தினால்

விழுப்புரம்

மாவட்டம்

கூவாகம்

கிராமத்தில்

அமைந்துள்ள

கூத்தாண்டவர்

கோயிலில்

உள்ள அரவான்

என்ற தெய்வத்தை

தரிசனம் செய்து

விட்டு

வந்தேன்

 

நான்

அரவான்

தெய்வத்தை

தரிசிக்க

உதவிகள்

செய்த

என்னுடைய

தோழிகள்

திருநங்கை

பாவனா

மற்றும்

ஷெரின்

அவர்களுக்கு

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

அரவான்

தெய்வத்தை

தரிசனம்

செய்த பின்பு

தலைமையாசிரியராக

இருக்கும்

என்னுடைய

இரண்டாவது

மூத்த சகோதரர்

திரு.K.தர்மேந்திரராஜ்

அவர்கள்

மற்றும்

அவருடைய

குடும்பத்தை

சந்தித்து

விட்டு வந்தேன்

 

கூவாகம்

மற்றும்

என்னுடைய

அண்ணன்

வீட்டில்

நான் எடுத்த

புகைப் படங்கள்

உங்களுடைய

பார்வைக்கு

வைக்கிறேன்

 

நன்றி

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------15-12-2020

/////////////////////////