February 04, 2022

பதிவு-3-செயற்கரிய- திருக்குறள்

பதிவு-3-செயற்கரிய-

திருக்குறள்

 

அலெக்சாண்டர்

அம்மா

ஒலிம்பியஸ்

அலெக்சாண்டர் மீது

அளவற்ற அன்பு

வைத்திருக்கிறாள்.

அவன் மேல்

உயிரையே

வைத்திருக்கிறாள்

அவன் தான் தன்

வாழ்க்கை என்று

வாழ்ந்து கொண்டு

இருக்கிறாள்.

அலெக்சாண்டரும்

தன் தாய்

ஒலிம்பியஸ் மேல்

அளவற்ற அன்பும்,

மரியாதையும்

வைத்திருக்கிறான்.

 

அடங்க மறுக்கும்

அந்தக் குதிரையை

அடங்காப்

பிடாரியான

அந்தக் குதிரையை

பியூசிபேலஸ்

என்று

அழைக்கப்படும்

அந்தக் குதிரையை

பார்ப்பதற்காகவும்,

அந்தக் குதிரையை

அடக்கப்

போகிறார்கள்

என்ற செய்தியை

கேள்விப்பட்டும்

அந்த மைதானத்தில்

ஆயிரக்

கணக்கானவர்கள்

கூடி விட்டார்கள்.

 

குதிரையை

அடக்குவதற்காக

சிறப்பு வாய்ந்த

குதிரை வீரர்கள்.

குதிரை

பயிற்சியாளர்கள்,

குதிரையைப்

பற்றி நன்கு

அறிந்தவர்கள்,

குதிரை மேல்

சவாரி செய்பவர்கள்

குதிரைகளுடன்

பல ஆண்டுகள்

பழகியவர்கள்.

குதிரைகளை

அடக்கி வெற்றி

கண்டவர்கள்.

என்று பல்வேறு

சிறப்புக்களைப்

பெற்றவர்கள்

அடங்க மறுக்கும்

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்குவதற்காக

காத்துக் கொண்டு

இருந்தனர்..

 

அடங்காத

குதிரையை

அடக்க வருபவர்கள்

குதிரையை அடக்கி

விடுவார்களா

அடங்காமல்

இருக்கும்

குதிரையை

அடக்க முடியுமா

என்ற கேள்விக்

குறியுடன் என்ன

நடக்கப் போகிறது

பார்க்க வேண்டும்

என்ற ஆவலில்

அந்த மைதானத்தில்

ஆயிரக்

கணக்கானவர்கள்

ஆச்சரியத்துடன்

காத்துக் கொண்டு

இருந்தனர்.

 

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்கப்

போகிறவர் யார்

 

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்கப் போகும்

திறமைசாலி யார்

 

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்கப் போகும்

தைரியசாலி யார்

 

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்கப் போகும்

மாவீரன் யார்

 

என்ற ஆவலுடன்

மைதானத்தில்

உள்ள அனைவரும்

பியூசிபேலஸ்

குதிரையையே

பார்த்துக் கொண்டு

இருந்தனர்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-2-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-2-செயற்கரிய-

திருக்குறள்

 

உலக வரலாற்றை

எடுத்துக்

கொண்டாலும்

எந்தத் துறையை

எடுத்துக்

கொண்டாலும்

வெற்றி

பெற்றவர்கள்,

வரலாறு

படைத்தவர்கள்,

சாதனை

நிகழ்த்தியவர்கள்,

காலத்தை

வென்றவர்கள்,

மக்களால்

போற்றப்படுபவர்கள்,

அறிவாளியாக

ஏற்றுக்

கொள்ளப்பட்டவர்கள்

சிறந்தவராகக்

கருதப்படுபவர்கள்,

புத்திசாலியாகக்

ஒத்துக்

கொள்ளப்பட்டவர்கள்,

யாராக இருந்தாலும்

அவர்கள்

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்திருப்பர்

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்பவர்

வரலாற்றைப்

படைத்து காலத்தை

வென்று நிற்பர்

 

தெஸ்ஸாலி

நாட்டைச் சார்ந்த

ஒருவன்

பிலிப் மன்னனிடம்

விற்பதற்காக

ஒரு குதிரையைக்

கொண்டு வந்தான்.

அந்தக் குதிரை

யாருக்கும்

அடங்காத குதிரை.

யாராலும்

அடக்க முடியாத

குதிரை.

அந்தக் குதிரையின்

பெயர்

பியூசிபேலஸ்.

 

தெஸ்ஸாலி நாட்டு

முரட்டு குதிரையை

யாராலும்

அடக்க முடியாத

குதிரையைக்

காண வேண்டும்

என்ற ஆவல்

பிலிப் மன்னனுக்கு

ஏற்பட்டதால்

மன்னன் பிலிப்

அவரது மனைவி

ஒலிம்பியஸ்

மற்றும்

அவர்களுடைய

மகன்

அலெக்சாண்டர்

ஆகியோர்

அந்தக் குதிரையைக்

காண்பதற்காக

அரண்மனை

மைதானம்

நோக்கிச் சென்றனர்.

 

மன்னன் பிலிப்

அவரது மனைவி

ஒலிம்பியஸ்

மற்றும்

அவர்களுடைய

மகன்

அலெக்சாண்டர்

ஆகியோர் அந்தக்

குதிரையைக்

காண்பதற்காக

அரண்மனை

மைதானம்

நோக்கிச்

செல்கின்றனர் என்ற

செய்தியைக்

கேள்விப்பட்ட

அந்நாட்டின்

தளபதிகளும்,

காவலர்களும்,

வீரர்களும், மக்களும்

அந்த அரண்மனை

மைதானத்தில்

அடங்காத

குதிரையைப்

பார்ப்பதற்காக

அனைவரும்

ஒன்றாகக் கூடி

விட்டனர்.

 

மைதானம் சென்ற

அலெக்சாண்டர்

தனது அப்பா

பிலிப் மன்னன்

அருகில் அமர்ந்து

கொள்கிறான்

அலெக்சாண்டரின்

அம்மா

ஒலிம்பியஸ்

சிறிது தொலைவில்

அமர்ந்து

கொள்கிறாள்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

 

பதிவு-1-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-1-செயற்கரிய-

திருக்குறள்

 

""""செயற்கரிய

செய்வார்

பெரியர்

சிறியர்

செயற்கரிய

செய்கலா

தார்.""""

 

-----திருக்குறள்-26

-----திருவள்ளுவர்

 

 

செய்வதற்கு

அருமையான

செயல்களைச்

செய்ய வல்லவரே

பெரியோர்.

செய்வதற்கு அரிய

செயல்களைச்

செய்ய மாட்டாதவர்

சிறியோர்

என்பது

இந்த திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும்

கருத்து

 

இந்தத்

திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

அர்த்தம்

சொல்லலாம்

 

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்றும்

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்ய

முடியாதவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்க மாட்டார்கள்

 

இதனை விளக்கமாக

காண்போம்

 

செயற்கரிய

என்றால்

செய்வதற்கு

அரிய செயல்

என்று பொருள்

 

செய்வதற்கு

அரிய செயல்

என்றால்

யாரும் செய்யாத

யாராலும் செய்ய

முடியாத செயல்

என்று பொருள்

 

செய்வர்

என்றால்

செய்பவர்

என்று பொருள்.

 

செயற்கறிய

செய்வர்

என்றால்

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்

என்று பொருள்

 

செயற்கறிய செய்வார்

பெரியர்

என்றால்

யாராலும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்பவர்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்று பொருள்.

 

செயற்கரிய செய்வார்

பெரியர்

சிறியர்

செயற்கரிய

செய்கலா தார்

என்றால்

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்றும்

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்ய

முடியாதவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்க மாட்டார்கள்

 

என்றும்

இத்திருக்குறளுக்கு

அர்த்தம்

சொல்லலாம்.

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

 

January 23, 2022

பதிவு-14-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-14-வினைவலியும்-

திருக்குறள்-

 

அவரது தம்பியான

தாலமியை கடலுக்குள்

ஓட விட்டு உப்பு

தண்ணீரைக் குடித்து

வயிறு வீங்கி

செத்துப் போகச்

செய்தார்

தங்கை அர்சினோவை

கைது செய்து

சிறையில் அடைத்தார்

 

கிளியோபாட்ராவின்

எதிரிகள் அனைவரையும்

அழித்து விட்டு

கிளியோபாட்ராவை

எகிப்து நாட்டின்

அரசியாக்கினார்

 

கிளியோபாட்ரா

தன்னுடைய திறமை

என்ன என்பதைத்

தெரிந்து கொண்டார்

 

தனக்கு எதிரிகள்

யார் என்பதைத்

தெரிந்து கொண்டார்

 

தன்னுடைய எதிரிகளை

அழிக்கக் கூடியவர்

ஜுலியஸ் சீசர்

தான் என்பதைத்

தெரிந்து கொண்டார்

 

நல்ல நாள் அந்த

நல்ல நாளில்

நல்ல நேரம்

ஆகியவற்றைப்

பார்க்காமல்

ஜுலியஸ் சீசரைச்

சந்தித்தார்

 

அவரை தனக்கு

துணையாக

வைத்துக் கொண்டார்

அவரைக் கொண்டு

தன்னுடைய

எதிரிகளை அழித்தார்

எகிப்து நாட்டின்

அரசியானார்

கிளியோபாட்ரா

 

கிளியோபாட்ரர

நல்ல நாள் அந்த

நல்ல நாளில்

நல்ல நேரம் பார்த்து

ஜுலியஸ் சீசரை

சந்திக்கவில்லை

ஆனாலும்

வெற்றி பெற்றார்

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

பார்க்காமல் செய்தாலும்

செயலில் வெற்றி

பெற முடியுமா என்ற

கேள்வி எழுகிறது

 

கர்மவினையின்

விளைவால்

நாம் தொடங்கப்

போகும் செயல்

வெற்றியில் தான்

முடியும்

என்று இருந்தால்

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

பார்க்காமல்

தொடங்கினாலும்

அந்தச் செயல்

வெற்றியில் தான்

முடியும்

தோல்வியில்

முடியாது

 

கர்மவினையின்

விளைவால்

நாம் தொடங்கப்

போகும் செயல்

தோல்வியில்

தான் முடியும்

என்றால்

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

பார்க்காமல்

தொடங்கினால்

அந்தச் செயல்

தோல்வியில் தான்

முடியும்

வெற்றியில்

முடியாது

 

""""ஒரு செயலைச்

செய்யத்

தொடங்குவதற்கு

முன்னர்

தன்னுடைய வலிமை

எதிரியினுடைய

வலிமை

எதிரிக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமை

நமக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமை

ஆகியவற்றை

ஆராய்ந்த பிறகு

கர்மவினையினால்

ஏற்படக்கூடிய

விளைவினைக்

கண்டறிந்து

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

ஆகியவற்றைக்

கணித்து

செயலைச்

செய்தால் மட்டுமே

செய்யத் தொடங்கும்

வேலையில்

வெற்றி பெற

முடியும்""""

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

வினைவலியும்

தன்வலியும்

மாற்றான் வலியும்

துணைவலியும்

தூக்கிச் செயல்

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

 

--------சுபம்

//////////////////////////////////////////////