February 18, 2022

ஜபம்-பதிவு-682 (சாவேயில்லாத சிகண்டி-16)

 

ஜபம்-பதிவு-682

(சாவேயில்லாத

சிகண்டி-16)

 

பீமதேவன் :

அருவிகளின்

பாய்ச்சலினாலும்

நதிகளின்

ஓட்டத்தினாலும்

ஆறுகளின்

விரைவினாலும்

இயற்கை எழில்

கொஞ்சி

விளையாடியதால்

செழித்து விளங்கும்

காசி நாட்டின்

மன்னனாகிய நானும்

காசி நாட்டின்

மக்களும்

 

வந்தாரை வாழ

வைத்திருக்கிறோம்

வாழ விடாதவரை

வேரறுத்திருக்கிறோம்

 

அன்பு காட்டி

வருபவர்களுக்கு

ஆதரவு

அளித்திருக்கிறோம்

ஆணவத்தைக் காட்டி

வருபவர்களின்

ஆணவத்தை

அடக்கியிருக்கிறோம்

 

வாழ்விழந்தவர்களுக்கு

வாழ்வளித்திருக்கிறோம்

வாழ வழி

இல்லாதவர்களுக்கு

வாழ வழி

காட்டியிருக்கிறோம்

 

ஏழைகளின் துயரை

துடைத்திருக்கிறோம்

ஏற்றமிகு வாழ்வை

அவர்களுக்கு

அளித்திருக்கிறோம்

 

இல்லாமை இல்லை

என்ற நிலையை

உருவாக்கியிருக்கிறோம்

 

இதனால் இல்லாதவர்கள்

காசி நாட்டில்

இல்லை என்ற

சாதனையைப்

படைத்திருக்கிறோம்

 

இத்தகைய

சிறப்பு மிக்க

காசி நாட்டின்

சார்பாகவும்

காசி நாட்டு

மக்கள் சார்பாகவும்

காசி நாட்டு

மன்னன்

என்ற முறையில்

என்னுடைய சார்பாகவும்

என்னுடைய மூன்று

மகள்களான

அம்பை

அம்பிகை

அம்பாலிகை

சுயம்வரத்திற்கு

வருகை புரிந்திருக்கும்

அனைத்து தேசத்து

அரசர்களையும்

அரசப்

பிரதிநிதிகளையும்

காசி நாட்டு

மக்களையும்

சுயம்வரத்திற்கு

வருகை புரிந்திருக்கும்

அனைவரையும்

வருக வருக

என வணங்கி

வரவேற்கிறேன்

 

பெண்களை

தெய்வமாக

வணங்கும் நாடு

எங்கள் காசி நாடு

எங்கள் நாட்டில்

ஆண் பெண் என்ற

பேதம் கிடையாது

ஆண் உயர்ந்தவர்

பெண் தாழ்ந்தவர்

என்ற வேறுபாடு

எல்லாம் கிடையாது

காசி நாட்டில்

அனைவரும் சமம்

 

தங்கள் வாழ்க்கைத்

துணையை தானே

தேர்ந்தெடுக்கும்

உரிமையை

ஆண்கள் எப்படி

பெற்றிருக்கிறார்களோ

அப்படியே

பெண்களும்

தங்கள் வாழ்க்கைத்

துணையைத் தானே

தேர்ந்தெடுக்கும்

உரிமையைப்

பெற்றிருக்கின்றனர்

 

பணம் படைத்தவர்களும்

பதவியில்

இருப்பவர்களும்

அதிகாரத்தில்

இருப்பவர்களும்

தங்கள் வாழ்க்கைத்

துணையைத் தானே

தேர்ந்தெடுப்பதைப்

பார்க்கும் போது

 

சாதாரண நிலையில்

உள்ள பெண்களும்

எதற்கும் பயப்படாமல்

யாருக்கும் அஞ்சாமல்

தன்னுடைய

வாழ்க்கைத்

துணையைத் தானே

தேர்ந்தெடுக்கக்கூடிய

வலிமையை

அவர்களுடைய மனதில்

உண்டாக்க வேண்டும்

என்ற

காரணத்திற்காகத் தான்

என்னுடைய மூன்று

மகள்களின்

சுயம்வரத்தை

காசி நாட்டு மக்கள்

அனைவரும் காணும்

வகையில்

அரண்மனைக்கு அருகில்

இருக்கும்

இந்த மைதானத்தில்

உருவாக்கப்பட்ட

சுயம்வர மண்டபத்தில்

சுயம்வரத்தை

நடத்திக்

கொண்டிருக்கிறேன்

 

இந்த உலகத்தில்

விவாஹவிதி

எட்டு வகைகளாகப்

பிரிக்கப்பட்டிருக்கிறது

 

உத்தம

குணமுள்ளவர்களைக்

கன்யையின் பிதா

உபசரித்து அழைத்துத்

தன்னால் கூடிய

த்ரவ்யத்தைக்

கொடுத்துக்

கன்யையை

அலங்காரத்துடன்

அவனுக்குப்

பார்யையாகக் கொடுப்பது

ப்ராஹ்ம

விவாஹமாகும்

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-681 (சாவேயில்லாத சிகண்டி-15)

 

ஜபம்-பதிவு-681

(சாவேயில்லாத

சிகண்டி-15)

 

(காசி நாட்டில்

அரண்மனைக்கு

அருகில் உள்ள

மைதானத்தில்

அலங்காரம்

செய்யப்பட்ட

சுயம்வரம்

மண்டபம்

அமைக்கப்பட்டது.

 

அழைப்பிதழ்

பெறப்பட்டு

சுயம்வரத்தில் கலந்து

கொள்ள வந்த

மன்னர்கள்,

காசி நாட்டு மக்கள்

ஆகியோர் அந்த

சுயம்வர மண்டபத்தில்

கூடி இருந்தனர்

 

காலத்தை கணிக்கும்

கணியர் எழுந்து

நின்று பேசத்

தொடங்கினார்)

 

கணியர் :

விரத்தை

தன்னிடத்தே

கொண்டவராய்

 

வெற்றியை

அணிகலனாய்

அணிந்தவராய்

 

எளிமையின்

இலக்கணமாகத்

திகழ்பவராய்

 

ஏற்றத்திற்கு

உதாரணமாக

விளங்குபவராய்

 

அன்புக்கு

அடிபணியும்

நல்லவராய்

 

ஆளுமையில்

சிறந்து விளங்கும்

வல்லவராய்

 

உறவுக்கு கை

கொடுக்கும் உத்தமராய்

 

உரிமைக்கு குரல்

கொடுக்கும் காவலனாய்

 

வந்தாரை

வாழவைக்கும்

கருணை உள்ளம்

கொண்ட

கொடையாளியாய்

 

வாழ்பவர்களின்

வாழ்க்கைத் தரத்தை

உயர்த்தும்

உயர்ந்த உள்ளம்

கொண்டவராய்

 

காலம் தந்த

தங்கப் புதையலாய்

 

வரலாறு காணாத

சாதனை நாயகனாய்

 

விளங்கிக்

கொண்டிருக்கும்

காசி நாட்டு மன்னர்

பீமதேவன் உடன்

அவருடைய

மனைவி புராவதி

அவர்களும் இணைந்து

ஒன்றாய்

வருகிறார்கள்

வருகிறார்கள்

வருகிறார்கள்

 

(காசி நாட்டு

மன்னன் பீமதேவன்

தன்னுடைய மனைவி

புராவதியுடன்

இணைந்து

சுயம்வர

மண்டபத்திற்குள்

நுழைந்தான்.

 

இருவரும்

ஒன்றாக இணைந்து

அவையோரைப்

பார்த்து

இருகரம் கூப்பி

வணக்கம்

செலுத்தி விட்டு

மன்னன் பீமதேவன்

அரியணையில் அமர்ந்தான்.

 

காசி மன்னர்

உள்ளே நுழைந்து

அரியணையில்

அமரும் வரை

அரசர் வாழ்க

அரசி வாழ்க

அமைச்சர் வாழ்க

இளவரசிகள் வாழ்க

என்ற வாழ்த்துக்கள்

அந்த சுயம்வர

மண்டபத்தில்

எதிரொலித்துக்

கொண்டிருந்தது

 

காசி மன்னரின்

வலப்பக்கம் அமைச்சர்

பால்குனர் நின்று

கொண்டிருந்தார்.

காசி மன்னரின்

இடப்பக்கம்

அணுக்கச் சேவகன்

பாவகன் நின்று

கொண்டிருந்தான்.

கணியர் மீண்டும்

பேசத் தொடங்கினார்.)

 

கணியர் :

இந்த சிறப்புமிக்க

சுயம்வரம் விழாவில்

காசி நாட்டு மன்னர்

பீமதேவன்

அவர்கள்

அனைவரையும்

வரவேற்று

பேசுவார்

 

(பீமதேவன்

தன்னுடைய

இருக்கையை விட்டு

எழுந்து அனைவரையும்

இருகரம் கூப்பி

வணங்கி விட்டு

அனைவரையும் பார்த்து

பேசத் தொடங்குகினார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

 

February 04, 2022

பதிவு-13-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-13-செயற்கரிய-

திருக்குறள்

 

என்று மக்கள்

தங்கள் எண்ணங்களை

பலத்த

கைத்தட்டல்களுக்கு

நடுவிலும்

ஆரவாரங்களுக்கு

இடையிலும்

வெளியிட்டனர்.

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலை

அலெக்சாண்டர்

செய்து

காட்டியதன் மூலம்

மக்கள்

செல்வாக்கைப்

பெற்றான்

மக்களுடைய

ஆதரவைப் பெற்றான்

 

மக்கள்

செல்வாக்கு

பெறுவது

அவ்வளவு எளிதல்ல.

மக்கள்

ஆதரவைப்

பெறுவதும்

அவ்வளவு எளிதல்ல

மக்கள் செல்வாக்கை

மக்கள் ஆதரவை

தன்னுடைய

வீரத்தினாலும்

அறிவினாலும்

அலெக்சாண்டர்

பெற்றான்

 

இதனைக் கண்ட

அலெக்சாண்டர்

தந்தை

மன்னன் பிலிப்

மற்றும்

தாயார் ஒலிம்பியஸ்

ஆகியோர்

மகிழ்ச்சி

அடைந்தனர்.

 

அலெக்சாண்டர்

யாரும்

செய்யாத செயலை,

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்தான்

அதனால்

மக்களுடைய

பாராட்டை மட்டுமல்ல

மக்களின்

ஆதரவையும்

பெற்றான்

அதனால் தான்

மாவீரன்

அலெக்சாண்டர்

என்ற

பெயரைப் பெற்று

காலத்தை வென்று

இன்றும்

வரலாற்றில்

அழிக்க முடியாத

சக்தியாக

திகழ்ந்து கொண்டு

இருக்கிறான்

அலெக்சாண்டர்.

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்றும்

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்ய

முடியாதவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்க மாட்டார்கள்

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

""""செயற்கரிய

செய்வார்

பெரியர்

சிறியர்

செயற்கரிய

செய்கலா

தார்.""""

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

 

--------சுபம்

 .//////////////////////////////////////////////////////




 

 

பதிவு-12-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-12-செயற்கரிய-

திருக்குறள்

 

ஜீலம்

நதிக்கரையில்

அந்தக்

குதிரையைப்

புதைத்து

அந்த இடத்தில்

நகர் ஒன்றை

அமைக்கிறான்

அலெக்சாண்டர்

அதற்குத் தன்

அருமைக்

குதிரையின்

நினைவாக

பியூசிபேலியா

என்று

பெயரிடுகிறான்

 

அலெக்சாண்டர்

தன்னுடைய தாய்

ஒலிம்பியஸ் பார்க்க

அவர் அறை

செல்கிறான்.

அம்மா நான்

குதிரையை

அடக்கி விட்டேன்.

அப்பா பியூசிபேலஸ்

குதிரையை எனக்கு

வாங்கிக் கொடுத்தார்.

 

அப்பா என்னை

வீரன் என்றார்.

நான் வெற்றி

பெறுவதற்காகவே

பிறந்தவன் என்றார்

இந்த உலகத்தையே

வெல்லப்

போகிறேன் என்றார்

உன் வெற்றியின்

ஆரம்பம்

இங்கு தான்

தொடங்குகிறது

என்றார்.

 

இவ்வாறாக

அலெக்சாண்டர்

சொல்லிக் கொண்டு

இருக்கும் போதே

ஒரு தாயாக தன்

மகனின்

பெருமையை

நினைத்து

மகிழ்ச்சி

அடைந்து கொண்டே

இருந்ததால்

அலெக்சாண்டரின்

தாய் ஒலிம்பியஸ்

கண்களிலிருந்து

ஆனந்தக் கண்ணீர்

வழிந்து

கொண்டிருந்தது

அவள் வாயிலிருந்து

வார்தைகள்

வரவில்லை.

 

அந்த சமயம்

பார்த்து வெளியே

ஆரவாரம் கூச்சல்

கேட்கிறது

அலெக்சாண்டரைப்

பார்க்க வேண்டும்

என்று மக்கள்

கூடி இருந்தனர்.

குரல் கேட்டு

வெளியே வந்த

அலெக்சாண்டர்

மக்களைப் பார்த்து

கையை அசைக்கிறான்.

 

அலெக்சாண்டரைப்

பார்த்தவுடன் மக்கள்

அலெக்சாண்டர் வாழ்க

அலெக்சாண்டர் வாழ்க

என்று கைதட்டி

ஆரவாரம் செய்தனர் 

 

எங்களை வாழ

வைப்பீர்கள் என்ற

நம்பிக்கை

எங்களுக்குப்

பிறந்திருக்கிறது

 

எங்கள் வருங்காலம்

உங்களின் கைகளில்

இருக்கிறது

 

எங்களை நீங்கள்

பாதுகாப்பீர்கள்

எங்களை வாழ

வைப்பீர்கள்

என்ற நம்பிக்கை

எங்களுக்கு

பிறந்திருக்கிறது

 

எங்கள் நாடு

பாதுகாப்பாகவும்

அமைதியாகவும்

இருக்கும்

என்று நம்புகிறோம்

 

நாங்கள் அனைவரும்

உங்கள் பக்கம்

இருக்கிறோம்

உங்கள் வார்த்தைக்கு

கட்டுப்படுகிறோம்

நீங்கள் இடும்

கட்டளைகளை

ஏற்று நடக்கிறோம்.

 

நீங்கள் நீடூழி

வாழ வேண்டும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////