April 21, 2024

ஜபம்-பதிவு-952 மரணமற்ற அஸ்வத்தாமன்-84 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-952

மரணமற்ற அஸ்வத்தாமன்-84

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

இது மக்கள் அறியாமையால் ஏற்றுக் கொண்டது.

 

பகுத்தறிந்து பார்க்காத காரணத்தினால் தான் அர்ஜுனனை திறமைசாலி என்று ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

 

பகுத்தறிந்து பார்த்து இருந்தால் மக்கள் அர்ஜுனனை திறமைசாலி என்று ஏற்றுக் கொண்டே இருக்க மட்டார்கள்.

 

சிந்திப்பன் எவனும் அர்ஜுனனை வில் விடுவதில் சிறந்த திறமைசாலி என்று ஏற்றுக் கொள்ள மாட்டான்.

 

நான் அர்ஜுனனை வில் விடுவதில் சிறந்த திறமைசாலி என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

 

 

துரோணர் :  தான் வாழ வேண்டும் என்பதற்காக பிறரை அழிக்கத் துடிப்பவர்களுடன் நட்பு கொண்டு இருக்கிறாய் அல்லவா. அதனால் அப்படித் தான் பேசுவாய்.

 

துரியோதனன் உன் நண்பன் அல்லவா? நீ இப்படி பேசியதில் எனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை

 

நீ இப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

 

நாம் யாரிடம் சேருகிறோமோ அவர் குணம் தான் நமக்கு வரும்.

 

நல்லவர்களுடன் சேர்ந்தால் நல்ல குணம் வரும். கெட்டவர்களுடன் சேர்ந்தால் கெட்ட குணம் தான் வரும்.

 

துரியோதனனுடன் எப்போது சேர்ந்தாயோ அப்போதே நீ மாறி விட்டாய். அதனால் துரியோதனனின் எண்ணங்களை உன் மூலமாக வெளிப்படுத்துகிறாய், உன் குரல் கொண்டு பேசுகிறாய்.

 

துரியோதனனுக்கு அர்ஜுனன் மேல் உள்ள வெறுப்பு உன் மூலமாக வார்த்தைகளாக வெளிப்படுகிறது.

 

துரியோதனனின் ஆசைகளை என் முன்னால் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறாய்.

 

நல்ல நீராக இருந்த நீ நஞ்சு கலந்த நீராக மாறி விட்டாய்.

 

ஏற்கனவே அர்ஜுனன் மேல் நீ கொண்டிருந்த பொறாமை இப்போது வெறுப்பாக மாறி விட்டது. பகையாக உருமாறி விட்டது,.

 

அதனால் தான்,

அர்ஜுனனைத் திட்டுகிறாய்

ஏளனம் செய்கிறாய்.

அவமானப்படுத்துகிறாய்

 

நீ பேசும் வார்த்தைகள்,

அர்ஜுனன் மேல் நீ கொண்ட பொறாமையினால் பேசப்படும் வார்த்தைகள்

அர்ஜுனன் மேல் நீ கொண்ட வெறுப்பினால் பேசப்படும் வார்த்தைகள்.

 

அஸ்வத்தாமன் : பொறாமை கொண்டு பேசுவதற்கு  அர்ஜுனன் ஒன்றும் திறமைசாலியும் கிடையாது

 

வெறுப்பு கொண்டு பேசுவதற்கு, அர்ஜுனன் ஒன்றும் சிறந்த வில்லாளியும் கிடையாது

 

துரோணர் :  நீ ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் 

அர்ஜுனன் திறமைசாலி தான்

உலத்திலேயே சிறந்த வில்லாளி தான்

உன்னைப் போன்ற சிலபேர் அர்ஜுனனை திட்டுவதால்

அர்ஜுனன் திறமைசாலி இல்லை என்று ஆகிவிடாது

உலகத்திலேயே சிறந்த வில்லாளி இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடாது

அர்ஜுனனின் புகழை யாரும் அழித்து விட முடியாது

 

அஸ்வத்தாமன் : அர்ஜுனன் திறமையால் வளர்ந்தவன் என்று சொல்வதை விட வளர்க்கப்பட்டவன் என்று தான் சொல்ல வேண்டும்

 

ஆமாம் அர்ஜுனன் பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களால் வளர்க்கப்பட்டவன் அதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது

 

துரோணர் : அர்ஜுனன் வளர்க்கப்பட்டவன் கிடையாது

என்னிடம் கல்வியைக் கற்றுக் கொண்டவன்

தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டவன்

அதனால் புகழ் அவனைத் தேடி வந்திருக்கிறது

 

அஸ்வத்தாமன் :  அர்ஜுனன் உங்களிடம் கல்வியைக் கற்றுக் கொண்டவன் சொல்வதை விட உங்களால் வளர்க்கப்பட்டவன் என்று சொல்வது தான் சரியானது

 

துரோணர் : ஏன் அவ்வாறு சொல்கிறாய்?

 

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-951 மரணமற்ற அஸ்வத்தாமன்-83 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-951

மரணமற்ற அஸ்வத்தாமன்-83

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :  பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களைத் ஆட்டுவிப்பவர்கள் என்கிறேன்.

 

மக்களை முட்டாளாக வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

தாங்கள் சொல்வதை திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக

வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

எந்தவிதமான மறுப்பும் இல்லாமல் தலையாட்டிக் கொண்டு இருக்கும்

தலையாட்டி பொம்மைகளாக மக்களை வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

அவர்களால் தான் நல்ல விஷயமும், கெட்ட விஷயமும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறேன்.

 

நல்ல விஷயத்தை கெட்ட விஷயமாகவும், கெட்ட விஷயத்தை நல்ல விஷயமாகவும் மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள்

என்கிறேன்.

 

அவர்கள் நினைத்தால் நல்லவர்களை கெட்டவர்களாக்கவும் முடியும், கெட்டவர்களை நல்லவர்களாக்கவும் முடியும் என்கிறேன்.

 

நல்ல விஷயம் மக்களிடம் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். மீறி சேர்ந்து விட்டால் அந்த நல்ல விஷயத்தை கெட்ட விஷயமாக மாற்றி விடுகிறார்கள் என்கிறேன்.

 

கெட்ட விஷயத்தை உருவம் மாற்றி நல்ல விஷயமாக கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள் என்கிறேன்.

 

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களால் நல்ல விஷயம் கெட்ட விஷயமாகவும், கெட்ட விஷயம் நல்ல விஷயமாகவும் மக்களின்

மனதில் திணிக்கப்படுகிறது என்கிறேன்.

 

பணம், பதவி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு

யாரைப் பிடித்து இருக்கிறதோ அவர்களை நல்லவர்கள் என்பார்கள்,

 

யாரைப் பிடிக்கவில்லையோ அவர்களை கெட்டவர்கள் என்பார்கள்.

 

தங்களுக்கு பிடித்தவர்களை,

தங்களுக்கு அடிமைகளாக இருப்பவர்களை

எதிர்த்துக் கேள்வி கேட்காதவர்களை,

சுயமாக சிந்திக்காதவர்களை,

சுய அறிவு இல்லாதவர்களை,

பிறரை அண்டி வாழ்பவர்களை

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்கள் உயர்வான நிலைக்கு கொண்டு வருவார்கள்.

 

அவர்களுக்கு திறமை இல்லாவிட்டாலும் திறமை இருக்கிறது என்று சொல்லி மக்களை நம்ப வைத்து அவர்களை வளர்த்து விடுவார்கள்.

 

அப்படி வளர்ந்தவன் தான் அர்ஜுனன்.

அப்படி வளர்க்கப்பட்டவன் தான் அர்ஜுனன்.

திறமை எதுவும் இல்லாவிட்டாலும் சிறந்த திறமைசாலி என்று பொய்யான மாயையில் வளர்க்கப்பட்டவன் தான் அர்ஜுனன்.

 

வில் விடுவதில் சிறந்த திறமைசாலிகள்

இந்த உலகத்தில் நிறைய பேர்கள் இருந்தும்

வில்லுக்கு விஜயன் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் அர்ஜுனன்.

 

உலகத்திலேயே வில் வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன் என்று சொல்ல வைக்கப்பட்டவன்.

 

வில் விடுவதில் மிகுந்த திறமைசாலி என்று மக்களால்

ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டவன் தான் அர்ஜுனன்.

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களால் வளர்க்கப்பட்டவன் தான் அர்ஜுனன்

 

பீஷ்மரை விடவா சிறந்த வில்லாளி அர்ஜுனன்?

 

ஏன் உங்களை விட மேலானவனா அந்த அர்ஜுனன்?

 

பீஷ்மர், துரோணர் இவர்களை விடவா உயர்ந்தவன் அந்த அர்ஜுனன்.

 

மக்களுக்கு உண்மை எது? பொய் எது? என்று தெரியாது

எது சரி? எது தவறு? என்று தெரியாது

எதையும் சிந்தித்தே பார்க்க மாட்டார்கள்.

 

தலையாட்டிகளாக இருப்பார்கள்.


அடிமைகளாக இருப்பார்கள்.

 

அதனால் தான் திறமை இல்லாமல் இருக்கும் அர்ஜுனனை திறமைசாலி என்று மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-950 மரணமற்ற அஸ்வத்தாமன்-82 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-950

மரணமற்ற அஸ்வத்தாமன்-82

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :  தந்தையே! தங்களிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்.

 

துரோணர் : என்ன பேச வேண்டும்?

 

அஸ்வத்தாமன் : என்ன பேச வேண்டும் என்று சொன்னால் தான் பேசுவீர்களா?

 

துரோணர் : நீ தேவையற்றதைத் தான் பேசுவாய் அதனால் தான்.

 

அஸ்வத்தாமன் : எதை தேவையற்றது என்கிறீர்கள்?

 

துரோணர் : அர்ஜுனனை திறமையற்றவன் என்பாய். பாண்டவர்களை கெட்டவர்கள் என்பாய்.

 

துரியோதனனை நண்பன் என்பாய், கௌரவர்களை நல்லவர்கள் என்பாய்.

 

இது நீ எப்போதும் சொல்லிக் கொண்டு இருக்கும் விஷயம் தானே.

 

புதிதாக என்னிடம் என்ன பேசப் போகிறாய், அதை நான் கேட்பதற்கு

 

அஸ்வத்தாமன் : உண்மையைத் தானே பேசுகிறேன்.

 

துரோணர் : ஆனால், நீ நினைப்பது போல் மக்கள் பேசுவதில்லையே! வேறு மாதிரி அல்லவா பேசுகிறார்கள்.

 

அஸ்வத்தாமன் : மக்கள் பேசுவது அனைத்தும் சரி என்கிறீர்களா?

அவர்கள் சரியானதைத் தான் பேசுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

துரோணர் : இதில் தவறு கண்டுபிடிக்க என்ன இருக்கிறது. சரியாகத் தானே பேசுகிறார்கள்.

 

அஸ்வத்தாமன் : எதை சரி என்கிறீர்கள்

 

மக்கள் பேசுவது அனைத்தும் சரி என்கிறீர்களா?

 

துரியோதனனை பிடிக்காத சில பேர் துரியோதனனை கெட்டவன் என்று பேசுவதால் மக்கள் பேசுவது சரி என்று ஆகி விடுமா?

 

அதுவே பாண்டவர்கள் கெட்டவர்கள் என்று மக்கள் பேசினால் மக்கள் சரியாகத் தான் பேசுகிறார்கள் என்று சொல்வீர்களா?

 

சொல்ல மாட்டீர்கள்

 

ஏனென்றால், நீங்கள் விருப்பப்பட்டு பேசுவதையே மக்கள் பேசுவதால் மக்கள் பேசுவதை சரி என்கிறீர்கள்.

 

நீங்கள் விருப்பப்பட்டு பேசுவதை மக்கள் பேசவில்லை என்றால் மக்கள் பேசுவது தவறு என்பீர்கள்

 

இது மனித இயல்பு

 

நீங்களும் மனிதர் தானே

 

அப்படித் தான் பேசுவீர்கள்

 

மக்கள் ஒரு விஷயத்தை நல்லது என்று சொன்னால்

அது நல்லதாக இருந்து விடுமா?

 

கெட்டது என்று சொன்னால் அது கெட்டதாக இருந்து விடுமா?

 

துரோணர் : மக்களில் பெரும்பாலானவர்கள் அல்லவா சொல்கிறார்கள். சரியானதாகத் தான் இருக்கும்.

 

அஸ்வத்தாமன் : பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக

நல்லது கெட்டதாகி விடாது, கெட்டது நல்லதாகி விடாது.

 

துரோணர் : மக்கள் தவறாக சொல்கிறார்கள் என்கிறாயா?

 

அஸ்வத்தாமன் :  மக்களை ஆட்டுவிப்பவர்கள் தான் மக்களை தவறாக சொல்ல வைக்கிறார்கள்.

 

துரோணர் : யாரை ஆட்டுவிப்பவர்கள் என்கிறாய்?

 

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

April 19, 2024

தென்காசி சரித்திரம்(14)-விந்தன் கோட்டைக்கு அருகில் உள்ள சமணர் படுகைகள்-19-04-2024

 

தென்காசி சரித்திரம்(14)-விந்தன் கோட்டைக்கு அருகில் உள்ள சமணர் படுகைகள்-19-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சமணர்கள்

பெரும்பாலும்

மக்களோடு மக்களாக

வாழவில்லை

 

ஊரைவிட்டு

வெளியே

மலைகளில்

குன்றுகளில்

பாறைகளில்

கற்படுகை

அமைத்து வாழ்ந்து

மக்களுக்கு

கல்வி, மருத்துவம்,

மருந்து

ஆகியவை அளித்து

சேவை செய்து

வந்தனர்

 

இந்தியா முழுவதும்

இத்தகைய கற்படுகைகள்

நிறைய எண்ணிக்கையில்

உள்ளது

 

விந்தன் கோட்டைக்கு

அருகில் உள்ள

சமணர் படுகையை

இப்போது பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----19-04-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////





April 17, 2024

தென்காசி சரித்திரம்-(13)-தண்ணீர் இல்லாத குற்றாலத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?-17-04-2024

 

தென்காசி சரித்திரம்-(13)-தண்ணீர் இல்லாத குற்றாலத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?-17-04-2024

 

 

அன்பிற்கினியவர்களே!

 

மாயை என்ற இருள்

விலகினால்

எப்படி இறைவனைக்

காண முடியுமோ

அதைப் போல

குற்றாலத்தில்

தண்ணீர் கொட்டாத போது

இறைவனைக் காணலாம்

 

இந்த உலகத்தில்

குறை உடையவன்

என்று யாரும் இல்லை

 

குறைகளுக்குள்

எல்லாம் வல்ல

அந்த இறைவன்

இருக்கிறான் என்பதை

உணர்ந்து கொண்டால்

நாம் முதலில்

மனிதன் ஆகலாம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----17-04-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////




April 11, 2024

வரலாறு-(9)-கணிதமேதை இராமானுஜத்தை விட மிகச்சிறந்த கணிதமேதை S.S.பிள்ளை-11-04-2024

 வரலாறு-(9)-கணிதமேதை இராமானுஜத்தை விட மிகச்சிறந்த கணிதமேதை S.S.பிள்ளை-11-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கணிதமேதை

இராமானுஜத்தை விட

மிகச்சிறந்த

கணிதமேதையும்,

 

உலகத்திலேயே

மிகச்சிறந்த

கணிதமேதை என்று

உலக கணிதமேதைகளால்

ஏற்றுக் கொள்ளப்பட்டவரும்,

 

ஐன்ஸ்டீன்

தன்னுடன் பணிபுரிய

அழைத்தும்

மறுத்த மாபெரும்

மேதையுமான,

 

வரலாற்றால்

மறைக்கப்பட்ட

திரு.S.S.பிள்ளை

என்று

சொல்லப்படக்கூடியவருமான

சிவசங்கர நாராயணன்

அவர்களைப் பற்றிப்

பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----11-04-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////




April 09, 2024

ஆன்மீகம்-(34)- மனிதனை மிகப்பெரிய பணக்காரனாக்கும் சுதர்சன மந்திரம் -(14)-09-04-2024

 ஆன்மீகம்-(34)- மனிதனை மிகப்பெரிய பணக்காரனாக்கும் சுதர்சன மந்திரம்

-(14)-09-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சுதர்சன மந்திரம்

யாருக்கு சித்தியாகிறதோ

அவர் சொல்படி தான்

சுதர்சன சக்கரம்

கேட்கும்

கீழ்படியும்

சொன்னவைகளைச்

செய்யும்

 

செல்வம் கொழிக்க

சுதர்சன மந்திரம்

சொன்னாலே

போதும்

 

வேறு எந்த

ஒன்றையும்

சொல்ல வேண்டிய

அவசியம் இல்லை

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----09-04-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////