December 14, 2011

போகர்-7000- சாயா தரிசனம்- வரலாறு - பதிவு-1



       போகர்-7000- சாயா தரிசனம் - நிழல் தவம் - பதிவு-1

"“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - விளக்கம் :
சாயா என்றால் நிழல் என்று பொருள் .
சாயா தரிசனம் என்றால் நிழலை தரிசனம் செய்து பெறப்படும் சக்திகள் என்று பொருள்.
சாயா தரிசனம் - நிழல் தவம் ,விஸ்வரூப தரிசனம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறது .

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களால் மட்டுமே சாயா தரிசனம் செய்யப்படுகிறது .
அதற்கு கீழ்க்கண்டவை முக்கிய  காரணங்களாக சொல்லப் படுகிறது:
1 சாயா தரிசனத்தின் மகிமைகள், சாயா தரிசனத்தை செய்வதால் கிடைக்கும் சக்திகள் மக்களில் பலருக்கு  தெரியவில்லை.
2 ஆன்மீக உலகில் சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள் சரியான வகையில் இல்லாமல் இருக்கிறது.
3 சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள், செய்யும் முறைகள் ,செய்வதால் கிடைக்கும் பலன்கள்  ஆகியவற்றை விளக்கும் புத்தகங்கள் இந்த உலகத்தில் அரிதாக உள்ளன.
4 சாயா தரிசனத்தின் சூட்சும ரகசியங்கள் குரு – சீடர்  பரம்பரை மூலமாக ரகசியமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
5 சாயா தரிசனத்தை அறிந்து செய்பவர்கள் குறைவு .அதிலும் சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்து பலன் அடைந்தவர்கள் அதை விட மிகக் குறைவு ஆகும்.
6 சாயா தரிசனத்தை விளக்கமாக சொல்லித் தரக்கூடிய ஆசிரியர்கள் இல்லை.

சாயா தரிசனம் இந்த உலகத்திற்கு கிடைத்த விதம் பற்றியும் ,
சாயா தரிசனத்தின் சிறப்புகள் பற்றியும் ,
சாயா தரிசனத்தைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் ,
போகர்  தன்னுடைய --போகர் - 7000 --- என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கி இருக்கிறார்.


சாயா தரிசனத்தை என்னுடைய குரு மூலமாக நான் கற்றுக் கொண்டு ,சாயா தரிசனத்தைச் செய்து ,n>,மகிமைகளை உணர்ந்து கொள்ள ஆசைப்படுபவர்
 பயன் பெறும் வகையில் எளிமையாகவும், புரிந்து கொள்ளும் வகையிலும் அனைவருக்கும் என்னால் முடிந்த அளவு சூட்சும ரகசியங்களை உடைத்து விளக்குகிறேன் .

சாயா தரிசனத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்  தெரிந்து செய்து பலன்களைப் பெற்று மகிழ்ச்சி அடையட்டும்.
சாயா தரிசனத்தை தொடர்ந்து படித்து சாயா தரிசனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சாயா தரிசனம் - வரலாறு :

பாடல் -1சாயா தரிசனத்தை இந்த உலகம் பயன்படுத்துவதற்கு வெளிப்படுத்தப் பட்ட வரலாறை கீழ்க்கண்ட பாடல்களின் மூலம் போகர் கூறுகிறார் :
”””தென்திசையில் அகத்தியனார்  முனிவர்தானும்
           செப்பினார்  இந்தமுறை செப்பினார்பாரே

    பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
          பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்
          நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
    சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
          செம்மலுடன் வழிசொன்னார்  மைதான்இல்லை
    கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
          கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
                                                -----------------போகர்- 7000--------
“””””தென்திசையில் அகத்தியனார்  முனிவர்தானும்
                     செப்பினார்  இந்தமுறை செப்பினார்பாரே”””””””
தெற்கு திசையில் இருந்த வாழ்ந்த அகத்தியர் என்ற மாமுனிவர்  சாயா தரிசனம் என்ற ஒரு பயிற்சி முறை என்ற ஒன்று  உள்ளது என்று கூறியுள்ளார்


”””பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
          பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்””””
சரம் பார்த்தலின் ரகசியத்தை எல்லாம் சொல்லும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற அரிய நுhலை ,இந்த உலகத்தில்  உள்ளவர்கள் கற்று பின் பற்றி உயர்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பாடி வைத்தார் அகத்தியர்.

மாணாக்கள் என்றால்  படித்து பின்பற்றுபவர்கள் என்று பொருள் .
போகர்  இந்த இடத்தில் படித்து பின்பற்றும் மக்களை எல்லாம் மாணாக்கள் அதாவது மாணாக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்””””
சரம் பார்த்தலின் ரகசியத்தை எல்லாம் சொல்லும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற அரிய நுhலை ,இந்த உலகத்தில்  உள்ளவர்கள் கற்று பின் பற்றி உயர்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பாடி வைத்தார் அகத்தியர்.

மாணாக்கள் என்றால்  படித்து பின்பற்றுபவர்கள் என்று பொருள் .
போகர்  இந்த இடத்தில் படித்து பின்பற்றும் மக்களை எல்லாம் மாணாக்கள் அதாவது மாணாக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
மரணம் இல்லாத ஓரு நிலையை ,மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை ,அடைவதற்கு தேவையான சாத்திரத்தை பாடி வைத்தார் அகத்தியர்  என்கிறார்  போகர்.

சாத்திரம் என்றால் எழுதியதை செயல்படுத்திப் பார்த்தால் உண்மை விளங்கும் என்று பொருள்.


      ”””””நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
    சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
          செம்மலுடன் வழிசொன்னார்  மைதான்இல்லை”””
இத்தகைய சிறப்பு வாய்ந்த சாத்திரங்கள் பலவற்றின் ரகசியங்களை எல்லாம் சொன்ன அகத்தியர்  சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும்,
சாயா தரிசனத்தை முறைப்படி செய்து எவ்வாறு பலன்களை அடைய வேண்டும் என்றும் ,
இந்த உலகத்திற்கு தேவையான ஆன்மீக விளக்கங்களை அகத்தியர் எடுத்துக் கூறவில்லை.


“””””””கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
                       கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
மையினது என்றால் சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருள் அறிவதற்கான வழி என்று பொருள்.
சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருளை காலங்கி நாதரின் சீடரான போகராகிய நான் அவருடைய அருள் ஆசியினால் சாயா தரிசனத்தின் சிறப்புகளையும் ,மகிமைகளையும் சாயா தரிசனத்தை செய்யக் கூடிய முறைகளையும் கூறினேன் என்கிறார்  போகர்.



பாடல் - 2

சாயா தரிசனத்தின் வரலாற்றை பாடல்கள் மூலம் விவரித்துக் கூறும் போகர், மேலும் விவரித்து அடுத்த பாடல்களில் சாயா தரிசனத்தின் வரலாற்றை  கீழ்க்கண்டவாறு  கூறுகிறார்:

””தானான சித்துமுனி கும்பயோனி
         தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்
    மானான காலங்கி எந்தன்நாதர்
         மகாதேவர்  கடாட்சமது கிருபையாலே
    தேனான கருக்குருவை யானும்கற்று
        தெளிவான மாணாக்கர்  பிழைக்கஎன்று
    பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
        பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
                                                                --------போகர்-7000-------
“””””தானான சித்துமுனி கும்பயோனி
                தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்””””
சித்தர்களின் தலைவரும் சித்தர்களில் உயர்வான தவ நிலையில் உள்ளவரும் சித்தர்களில் சிறந்தவரும் ஆகிய அகத்திய முனிவர்  சாயா தரிசனத்தில் உள்ள மையக் கருவையும் ,சூட்சும ரகசியங்களையும் சொல்லாமல் மறைத்து வைத்தார்


””மானான காலங்கி எந்தன்நாதர்
         மகாதேவர்  கடாட்சமது கிருபையாலே
    தேனான கருக்குருவை யானும்கற்று
        தெளிவான மாணாக்கர்  பிழைக்கஎன்று
    பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
        பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
என்னுடைய குருவான காலங்கி நாதரின் ஆசியாலும் ,அவருடைய அருளாலும் ,சாயா தரிசனத்தின் மையக் கருவை நான் கற்றுக் கொண்டேன் .

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
மரணம் இல்லாத ஓரு நிலையை ,
மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை அடைவதற்கு வேண்டிய பயிற்சி முறைகளை ,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்று உயர்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள்  தெளிவாக உணர்ந்து கொள்ளும் வகையில் ,
புரிந்து செயல்படுத்தும் வகையில்,
சாஸ்திரங்கள் பலவற்றை அலசி ஆராய்ந்து பார்த்து ,
இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு தனது பாடல்களில் சாயா தரிசனத்தைப் பற்றி பாடி வைத்தேன் என்கிறார்  போகர்.

""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                      போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”""




December 11, 2011

ராஜராஜேஸ்வரி-மந்திரம்-யந்திரம்-தந்திரம்-பதிவு-3



               ராஜ ராஜேஸ்வரி-மந்திரம்-யந்திரம்-தந்திரம்-பதிவு -3

“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

விரதம் இருக்கும் நாட்களில் நடைபெறுபவை :
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மந்திரத்தை விரதம் இருந்து உச்சாடணம் செய்யும் பொழுது கிடைக்கும் பலன்கள் , பெறும் சக்திகள் , நடக்கும் நிகழ்வுகள் , வெவ்வேறாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தினமும் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை உச்சாடணம் செய்து முடித்து விட்டு , சிறிது நேரம் கண்ணை மூடி தியானம் செய்ய வேண்டும் . அவ்வாறு தியானம் செய்யும் பொழுது கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறும் .


இந்த நிகழ்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ள வரிசைப் படியோ ( அல்லது ) வரிசை மாற்றியோ நிகழ்வுகள் கிடைக்கும் :
1 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது முதலில் ஒரு கண் கொணட உருவம் தெரியும் .
2 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு இரண்டு கண்கள் கொண்ட உருவம் தெரியும் .
3 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு கழுத்து வரை கொண்ட உருவம் தெரியும் .
4 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு மார்பு அளவு வரை உருவம் தெரியும் .
5 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு முழு உருவமும் தெரியும் .
6 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது அம்மன் நடந்து வரும் பொழுது உண்டாகும் சலங்கை சத்தம் கேட்கும் .
7 அனைவருக்கும் மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்பது இயலாத காரியம் .


ஆனால் 48 நாட்கள் விரதம் முடித்த பிறகு விரதம் இல்லாமல் பூஜை பொருட்களைப் பயன் படுத்தாமல் ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை மட்டும் தொடர்ந்து சொல்லி வரும் பொழுது மேலே சொல்லப் பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது

வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொடுக்கும் ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

ராஜ ராஜேஸ்வரி - மந்திரம் :
48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .


ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வாலை , அகார - உகார - மகார , 
ஸ்திரி , ஸ்ரீம், ஐம்,  மனோன் மணி ,
ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,
சர்வ ஜீவ வசிகரி ,
சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,
சர்வ சகல வசி, வசி,   ராஜ மோக வசி ,
சர்வ லோக ,    சர்வ புவன ,
ராஜ ராஜேஸ்வரி வசி வசி .


சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வசிய வசி ,
எந்தனைக் கண்டோர் ,    உந்தனைக் கண்ட பிரேதம் போல் ,
மாத்தான் ,      வஞ்சகர்  வந்து வணங்கிட ,
என் புருவ மையம் மையைக் கண்டோர் ,

அகார - உகார - மகார ஆதரவான தன்மைப் போல் ,
ஸ்திரி , ஸ்ரீம் , ஐம் என்று எனக்கு பதில் பேசாதிருக்க ,
வசிய வசிய வசி ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா.


ராஜ ராஜேஸ்வரி - யந்திரம் :
ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய யந்திரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது .

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்யும் பொழுது, கண்டிப்பாக ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய யந்திரத்தை வைத்துத் தான் பூஜை செய்ய வேண்டும்.


சூட்சும ரகசியம் :
எந்த தெய்வத்திடமிருந்து , எந்த சக்தியை , எந்த பலன்களை பெற விரும்புகிறோமோ , அந்த தெய்வத்தை மனதில் நிறுத்தி அந்த தெய்வத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ,
அந்த தெய்வத்திற்குரிய மந்திரம் ,
அந்த தெய்வத்திற்குரிய யந்திரம் ,
அந்த தெய்வத்திற்குரிய தந்திரம் ,
ஆகியவற்றைப் பயன்படுத்தி பூஜை செய்ய வேண்டும் அப்பொழுது தான் நாம் அதற்குரிய முழு பலன்களையும் பெற முடியும் .

அதைப்போல நாம் ராஜ ராஜேஸ்வரி அம்மனிடமிருந்து சக்தியையும் , வாழ்க்கைக்குத் தேவையான பலன்களையும் பெற ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம்,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய யந்திரம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய தந்திரம் ,
ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் .

மேலே சொல்லப்பட்ட பூஜை முறைகளில்
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய யந்திரம் ,
ஆகியவை மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளதாக நினைக்க வேண்டாம்.

மேலே சொல்லப்பட்ட பூஜை முறைகளில் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய தந்திரம்
சூட்சும முறைகளில் ரகசியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .


ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பூஜை முறைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களையும் பெற்று  , இன்புற்று சிறப்புடன் வாழுங்கள் .

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                    போற்றினேன் ராஜராஜேஸ்வரி தான்முற்றதாமே “”











December 08, 2011

ராஜ ராஜேஸ்வரி-விரதம்-பதிவு -2



 
         ராஜ ராஜேஸ்வரி-விரதம்-பதிவு -2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””;

விரதம் ஆரம்பிக்கும் முறை -1 :
48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை முறைகளில் முறை - ஒன்று கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆரம்பிக்கும் முதல்நாள் காலை :
தேங்காய் , பூ , பழம் , வெற்றிலை பாக்கு , மஞ்சள் வைக்க வேண்டும் .
வாழைப்பழம் , எலுமிச்சை பழம் ,மாம்பழம் , ஆப்பிள் , ஆரஞ்சு பழம், ஆகியவற்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும் .
வசதி இருந்தால் அவர்கள் வசதிக்கேற்ப எத்தனை பழங்கள் வைத்தும் பூஜை செய்யலாம் .
மேலே சொல்லப்பட்டவைகளை பூஜையில் வைத்து , அகர்பத்தி ஏற்றி , சாம்பிராணி கொளுத்தி, தேங்காய் உடைத்து ,கற்பூரம் கொளுத்தி ,ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .

ஆரம்பிக்கும் முதல் நாள் இரவு:
வெண்பொங்கல் (அல்லது) சர்க்கரை ,பொங்கல் , வடை, அவல், பொரி , கடலை, வெல்லம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .


விரதம் ஆரம்பிக்கும் முறை -2 :
48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை முறைகளில் முறை - இரண்டு கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆரம்பிக்கும் முதல் நாள்
இந்த பூஜை முறையை முதல் நாள் காலை , மதியத்திற்குள் முடித்து விட வேண்டும் .
தேங்காய் ,பூ , பழம், வெற்றிலை பாக்கு ,மஞ்சள் வைக்க வேண்டும் .
வாழைப்பழம் , எலுமிச்சை பழம் ,மாம்பழம் ,ஆப்பிள் ,ஆரஞ்சு பழம் ஆகியவற்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
வசதி இருந்தால் அவர்கள் வசதிக்கேற்ப எத்தனை பழங்கள் வேண்டுமானாலும் பூஜையில் வைக்கலாம் .
வெண்பொங்கல் (அல்லது) சர்க்கரை , பொங்கல் , வடை , அவல்பொரி கடலை, வெல்லம் ஆகியவற்றை  பூஜையில் வைக்க வேண்டும் .
மேலே சொல்லப்பட்டவைகளை பூஜையில் வைத்து அகர்பத்தி ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி ,தேங்காய் உடைத்து ,கற்பூரம் கொளுத்தி, ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .


விரதத்தின் போது தினமும் கடைபிடிக்க வேண்டியவை :
48 நாட்கள் விரதம் இருக்கும் பொழுது தினமும் கடைபிடிக்க வேண்டிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது .

தினமும் ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானம் செய்யும் பொழுது வெற்றிலை பாக்கு ,ஒரு ஸ்வீட் (அல்லது) சர்க்கரை (அல்லது) வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ராஜ ராஜேஸ்வரி அம்மன் படத்திற்கு ,ராஜ ராஜேஸ்வரி யந்திரத்திற்கு ,கற்பூரத்தைக் காட்டி விட்டு ,அமர்ந்து 108 முறை (அல்லது) 1008 முறை ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை உச்சாடணம் செய்ய தொடங்க வேண்டும் .
மந்திர உச்சாடணம்  முடித்த பிறகு கற்பூரம் காட்டி விட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் .

காலையிலும் , மாலையிலும் மேலே சொன்ன முறைகளைப் பயன் படுத்தி பூஜை செய்ய வேண்டும் .
முடிந்தால் காலை ,மதியம் ,மாலை ஆகிய மூன்று வேளைகளில் பூஜை செய்யலாம் .
சூரியன் உதிப்பதற்கு முன்பும் ,உச்சி வேளையிலும், சூரியன் அஸ்தமனம் அடைந்த பிறகும் ,பூஜை செய்வது சிறந்த பலன்களைத் தரும் .


48 நாட்களுக்குள் 1 லட்சம் மந்திரங்களை முடிக்கும் விதமாக மந்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் .
தினமும் எவ்வளவு முறை மந்திரம் சொன்னால்,  48 நாட்களில் 1 லட்சம் ஆகும் என்று கணக்கிட்டு , ஒரு நாளைக்குரிய மந்திரங்களின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்ளுவது , சிறந்த பலன்களைத் தரும், மந்திரம் சித்தியாவதற்கு உரிய நிலைமைகளை உருவாக்கும்.

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                      போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”

December 07, 2011

ராஜ ராஜேஸ்வரி-தியானம்-பதிவு-1



      ராஜ ராஜேஸ்வரி-தியானம்-பதிவு -1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

உலகில் வணங்கப் படும் தெய்வங்களில் மிக முக்கிய தெய்வங்களில் மிகச் சிறந்த தெய்வமாக நினைத்து வணங்கப் படும் தெய்வமாக இருப்பதும் ,
பெரும்பாலானவர்களால் பின்பற்றப் பட்டு அதிசய சக்திகள் பலவற்றைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தெய்வமாக இருப்பதும்,
கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பக்தர்களின் மனம் குளிரும் படி  அருளை வாரி வழங்கும்  தெய்வமாக இருப்பதும் ,
சித்துக்கள் பலவற்றை தன்னை தியானிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு இணங்க கொடுக்கும் தெய்வமாக இருப்பதும் ,
பக்தர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் அவர்களின் மனதின் தன்மையை அறிந்து பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் தெய்வமாக இருப்பதும் ,
அதிக அளவு சூட்சும ரகசியங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தெய்வங்களில் மிக முக்கியமான தெய்வமாக இருப்பதும் ,
சொற்களை வைத்துக் கொண்டு  சொல்ல வரமுடியாத , எழுத்திற்குள் எழுதிக் காட்ட முடியாத பல அதி அற்புத சக்திகளை தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மட்டுமே வெளிக் காட்டும் தெய்வமாக இருப்பதும் ,
ஆகிய பல்வேறு சிறப்புகளை தன்னுள் கொண்டிருக்கும் ராஜ ராஜேஸ்வரி அம்மனைப் பற்றித் தான்  நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம் .

இத்தகைய மகிமை வாய்ந்த ராஜ  ராஜேஸ்வரி அம்மனை எப்படி வணங்குவது ,எப்படி அம்மனை அழைத்து நமக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வது ,
அம்மனின் அருளைப் பெற்று நாம் எப்படி வாழ்க்கையை  மகிழ்ச்சிகரமாக அமைத்துக் கொள்வது, என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்;

ராஜ ராஜேஸ்வரி - தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1 எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.
2 எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.
3 ஏவல் ,பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது .
4 விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.
5 துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.
6 அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும் .
7 சித்து வேலைகள் கை கூடும்.
8 அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயிற் கதவை
     தட்டும் .
9 தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும் .
10 அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும் .

விரத நாட்களில் கடைபிடிக்க வேண்டியவை :
48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும் அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன .அவைகளைப் பற்றி பார்ப்போம்:

1.            புலால் உண்ணக் கூடாது.
2.            போதை வஸ்துகளை உபயோகிக்கக் கூடாது.
3.            விரதம் இருக்கும் நாட்களில் பெண்கள் மேல் மோகமும் ,பெண்களுடன் இணையும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
4.            காலையிலும் மாலையிலும் தேவியை நினைத்து மந்திரம் உச்சாடணம் செய்ய வேண்டும்.
5.            முடிந்தால் மூன்று வேளையிலும் அதாவது காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் அம்மனை மந்திரத்தால் தியானம் செய்ய வேண்டும்.
6.            48 நாட்கள் எந்த வீட்டில் விரதத்தை ஆரம்பிக்கிறோமோ அந்த வீட்டில் தான்  48 நாட்களையும் நிறைவு செய்ய வேண்டும்.
7.            இரவில் எந்த இடத்திலாவது தங்கி விட்டால் விரதம் பாதியிலேயே முடிந்து விட்டதாகக் கருதப் படும்.
8.            48 நாட்களில் ஒரு லட்சம் மந்திரங்களையும் முடித்து விட்டால் சிறந்தது அப்படி செய்தால் நாம் விரதம் இருந்த பலன் தெரியும்.
9.            48 நாட்கள் விரதம் முடிந்த பிறகும் தினமும் அம்மன் மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்து கொண்டு வர அதிசய சக்திகளை நாம் பெறலாம்.
10.          அனுதினமும் வாழ்க்கையில் நமக்கு துணையாக அம்மன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்
11.          நாம் விரதத்தின் மூலம் மிக உயர்வான சக்திகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் என்பதை விரதம் இருக்கும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம்
12.          எவ்வளவு சுத்தமாக இருந்து அம்மனை நினைத்து தியானம் செய்கிறோமோ கேட்டதை விட அதிகமாக வரங்களை அளிப்பாள் ராஜ ராஜேஸ்வரி என்று தியானிக்கும் பொழுதே  தெரிந்து கொள்ளலாம்

விரதத்திற்கான பூஜை பொருட்கள் :
48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பவர்கள் விரத பூஜையை ஆரம்பிக்கும் முன்னர் முதல் நாள் அன்று செய்ய வேண்டிய பூஜை முறைகள் :

48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  ராஜ ராஜேஸ்வரி படம் வாங்கி பிரேம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான யந்திரத்தை கைகளால் வரைந்து பிரேம் போடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பிரேம் போட்ட படம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பிரேம் போடாத யந்திரம்,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம்
ஆகிய மூன்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பூஜையில் பயன்படுத்தப் பட வேண்டிய மிக முக்கியமான மூன்று சூட்சுமமான ரகசியங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும் .

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”