April 01, 2018

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(3)


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(3)

            """"பதிவு எண்பத்துஇரண்டைவிரித்துச் சொல்ல
            ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

ராஜா அதைக் கேள்வி பட்டு
கோபமடைந்து
தன் சேனைகளை அனுப்பி
தன் ஊழியக் காரரை
கொலை செய்த
கொலை பாதகரை அழித்து
அவர்கள்
பட்டணத்தை சுட்டெரித்தான்.

அப்பொழுது அவர்கள்
தன் ஊழியக் காரரிடம்
கல்யாண விருந்து
ஆயத்தம் செய்யப்பட்டு இருந்தது
ஆனால் கல்யாணத்திற்கு
அழைக்கப்பட்டவர்களோ
அதற்கு தகுதியில்லாதவர்கள்
ஆனார்கள் என்றான்

கல்யாணத்திற்கு அழைப்பவர்களுக்கும்
கல்யாணத்திற்கு வருபவர்களுக்கும்
இரண்டு பேர்களுக்கும்
ஒரு ஒத்திசைவு
இருந்தால் மட்டுமே
கல்யாணத்திற்கு அழைத்தவர்களின்
வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து
கல்யாணத்திற்கு வருவார்கள்

கல்யாணத்திற்கு அழைப்பவர்களுக்கும்
கல்யாணத்திற்கு வருபவர்களுக்கும்
இரண்டு பேர்களுக்கும்
ஒரு ஒத்திசைவு
இல்லை என்றால்
கல்யாணத்திற்கு அழைத்தவர்களின்
வார்த்தைக்கு
மதிப்பு கொடுக்காமல்
கல்யாணத்திற்கு வரமாட்டார்கள்.

கல்யாணத்திற்கு அழைப்பவர்கள்
தங்களது தகுதிக்கு
தகுதியானவர்களை
அழைத்தால்
தகுதியானவர்கள்
கல்யாணத்திற்கு வருவார்கள்

அதே போல்
கல்யாணத்திற்கு அழைப்பவர்கள்
தங்களது தகுதிக்கு
தகுதியானவர்கள் - என்று
மட்டும் பார்க்காமல்
அனைவரையும் அழைத்தால்
கல்யாணத்திற்கு வருபவர்கள்
கல்யாணத்திற்கு அழைத்தவர்களுடைய
பெருந்தன்மையைப் பாராட்டி
வருவார்கள்

இந்த இடத்தில் ஒன்றை
நினைவில் கொள்ள வேண்டும்
திருமணத்திற்கு அழைப்பவருடைய
வார்த்தை எவ்வளவு
மதிப்பு மிக்கது என்று
பயன்படுத்தும் வார்த்தையைப்
பொறுத்துத் தான்
ஒருவர் திருமணத்திற்கு
வருவதும்
வராமல் இருப்பதும்
என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்
பயன் படுத்தப்படும் வார்த்தை
சில இடங்களில்
எவ்வளவு முக்கியத்துவம்
பெறுகிறது என்பதை நாம்
இந்த நிகழ்வில் இருந்து
தெரிந்து கொள்ள வேண்டும்

நடந்த விஷயத்தை
ராஜா பெரியதாக எடுத்துக்
கொள்ளாமல்
ஊழியக் காரர்களை அழைத்து
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.

ஒரு விஷயம் நம் வாழ்வில் நடைபெற்றால்
மக்கள் அதனை இரண்டு விதமாக
எடுத்துக் கொள்கிறார்கள்

ஒன்று : நடந்த விஷயத்தை பெரியதாக
                 எடுத்துக் கொள்பவர்கள்

இரண்டு: நடந்த விஷயத்தை சாதாரணமாக
                 எடுத்துக் கொள்பவர்கள்

ஒருவர் பத்தாம் வகுப்பில்
தேர்ச்சி அடையவில்லை
பெயிலாகி விட்டார்
அதனை நினைத்து அவர்
வேதனை அடைகிறார்
வருத்தம் அடைகிறார்
வாழ்க்கையே போய் விட்டது போல்
வருந்துகிறார்
மனம் வேதனைப் படுகிறார்
உறவினர்கள் என்ன சொல்வார்களோ
என்று வேதனைப் படுகிறார்
நண்பர்கள் கிண்டல் பண்ணுவார்களே
என்று வருத்தப் படுகிறார்
வாழ்க்கையே இழந்து விட்டது போல்
துனபம் அடைகிறார்

இத்தகையவர்கள் தங்களுக்காக
வாழ மாட்டார்கள்
பிறருக்காக வாழ்பவர்கள்
எந்த ஒரு செயலைச் செய்தாலும்
எந்த ஒரு நிகழ்வு
தன் வாழ்க்கையில் நடந்தாலும்
பிறர் என்ன சொல்வார்களோ
பிறர் என்ன நினைப்பார்களோ
என்பதிலேயே
வாழ்க்கையை ஓட்டுபவர்கள்
இவர்கள் தங்களுக்காக
வாழ மாட்டார்கள்
பிறருக்காக வாழ்பவர்கள்

நாம் எப்பொழுது பிறர்
என்ன நினைப்பார்களோ
பிறர் என்ன சொல்வார்களோ
என்று வாழ
ஆரம்பித்து விட்டால்
நாம் நம் தனித்தன்மையை
இழந்து விடுவோம்
நம்முடைய உண்மைத் தன்மை
வெளிப்படாது

நாம் பிறரை பின்பற்றியே
வாழக்கூடிய நிலைக்கு
தள்ளப்பட்டு விடுவோம்
ஒரு விஷயத்தை பெரியதாக
எடுத்துக் கொள்பவர்கள்
எப்பொழுதும் தமக்காக
வாழ மாட்டார்கள்
பிறர் என்ன நினைப்பார்களோ
என்று வாழ்க்கையை
பயத்துடனே வாழ்வார்கள்

இவர்கள் வாழ்க்கையில்
ஒரு விஷயம் நடந்தால்
அதை பெரிதாக
எடுத்துக் கொள்பவர்கள்.

மற்றொருவர்
பத்தாம் வகுப்பு
தேர்ச்சி அடையவில்லை
பெயிலாகி விட்டார்
அவர் அதைப் பற்றி
கவலைப்படவில்லை
பெயில் தானே ஆனோம்
அடுத்த முறை எழுதி பாஸ்
பண்ணிக் கொள்ளலாம்
என்று அமைதியாக இருக்கிறார்.
இவர் எதைப் பற்றியும்
கவலைப்படவில்லை

உறவினர்கள்
தன்னை அவமானமாக நினைப்பார்களோ
என்று வருத்தப்படவில்லை
நண்பர்கள் கிண்டல் பண்ணுவார்களோ
என்று வருத்தப்படவில்லை
சுற்றத்தார்கள் தன்னை
இழிவாக நினைப்பார்களோ
என்று வருத்தப்படவில்லை.

இவர் தன்னைப் பற்றி
பிறர் என்ன நினைப்பார்களோ
என்று நினைத்து
வாழ்க்கையை வாழ்வதில்லை
இவர் பிறர் தன்னைப் பற்றி
இழிவாக நினைப்பார் என்று
நினைத்து வாழ்வதில்லை
தன் செயல்கள் சரியா
தான் செய்வது சரியா
தன்னுடைய செயல்கள் சரியா
என்று யோசித்து வாழ்பவர்கள்

இவர்கள் பிறரை நம்பி
வாழ மாட்டார்கள்
வாழ்க்கையில் எந்த
பிரச்சினை வந்தாலும்
அதை துணிச்சலாக எதிர்த்து
போராடக் கூடியவர்கள்
இவர்கள் பிறர் என்ன சொல்வார்களோ
என்று நினைத்து
வாழ்க்கையை வீணாக்காமல்
தனக்காக வாழ்பவர்கள்
தங்கள் சுயத்தை விட்டுக்
கொடுக்க மாட்டார்கள்
தங்கள் வாழ்க்கையில்
எந்த பிரச்சினை வந்தாலும்
எதிர்த்து போராடக்கூடியவர்கள்

வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தால்
அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல்
சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களால்
மட்டுமே
தன் சுயத்தை இழக்காமல்
பிறரை நம்பியே
எப்போதும் இருக்காமல்
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ முடியும்

இவர்கள் வாழ்க்கையில்
ஒரு விஷயம் நடந்தால்
அதை சாதாரணமாக எடுத்துக்
கொள்பவர்கள்.

அதே போல் தான் ராஜாவும்
நடந்த விஷயத்தை
சாதாரணமாக எடுத்துக் கொண்டு
ஊழியக் காரர்களை அழைத்து
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.

நடந்த கஷ்டமான விஷயத்தை
நினைத்து வருந்தாமல்,
கஷ்டத்தை நினைத்து
சோர்ந்து விடாமல்,
கஷ்டத்தை நினைத்து
மனம் வேதனைப்படாமல்,
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.

உலகில் உள்ள கஷ்டங்களை எல்லாம்
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று  :  தானே ஏற்பட்ட கஷ்டம்
இரண்டு : தன்னால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
                   கஷ்டம்

தானே ஏற்பட்ட கஷ்டம் என்பது
நாமே உருவாக்காத கஷ்டம்
அது தனாகவே உருவான கஷ்டம்
அதாவது
நாமே உருவாக்கிக் கொள்ளாத
கஷ்டம்.

தன்னால் ஏற்படுத்திக்
கொண்ட கஷ்டம் என்பது
நாமே உருவாக்கிக் கொண்ட கஷ்டம்
அது தானாக உருவான
கஷ்டம் இல்லை.

எவைகள் இல்லாமல்
நாம் வாழ முடியாதோ
அவைகள் இல்லாமல்
நாம் வாழ்ந்தால்
அதற்குப் பெயர்
கஷ்டம்
அந்த வாழ்க்கைக்குப் பெயர்
கஷ்டமான வாழ்க்கை

எவைகள் இல்லாமல்
நாம் வாழலாமோ
அவைகள் இருந்தால்
தான் வாழ்வேன்
என்று சொல்வதற்குப்
பெயர் கஷ்டம் இல்லை,.

இவைகள் இல்லாமல்
வாழ முடியாது
என்று சொல்லும்போது
அது தானே ஏற்பட்ட கஷ்டம்

இவைகள் இல்லாமலும்
வாழலாம் ஆனால்
இவைகள் இருந்தால்
தான் வாழ்வேன்
என்று சொல்வது
தானே ஏற்படுத்திக்
கொண்ட கஷ்டம்

மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான
அத்தியாவசிய தேவை
மூன்று
  ஒன்று :  உண்ண உணவு
இரண்டு : உடுக்க உடை
 மூன்று : இருக்க இடம்

இவை மூன்றும் மனிதன்
உயிர் வாழ்வதற்குத்
தேவையானவை
ஆகும்,
இவைகளில் எது குறைந்தாலும்
(அல்லது)
எது ஒன்று குறைந்தாலும்
மனிதன் வாழ்க்கையை
வாழ்வதற்கு கஷ்டம்
மனவேதனை ஏற்படும்
ஏழ்மையில் வாழ நேரிடும்
துன்பங்கள் ஏற்படும்

உண்ண உணவு
இல்லையென்றாலும் கஷ்டம்
உடுக்க உடை இல்லையென்றாலும் கஷ்டம்
இருக்க இடம்  இல்லையென்றாலும் கஷ்டம்

இந்த கஷ்டங்களை எல்லாம்
நாம் உருவாக்கிக் கொண்ட
கஷ்டம் இல்லை
இவைகள் தானே
உருவான கஷ்டம்
எனவே,
இவைகளை தானே உருவான
கஷ்டம் என்கிறோம்
இவைகள் நாம் உருவாக்கிய
கஷ்டம் இல்லை

நாம் வாடகை வீட்டில்
தங்கி இருக்கிறோம்
வீடு ஒன்று வாங்க
முயற்சி செய்கிறோம்
ஆனால் பணம் அதிகமாகத்
தேவைப்படுகிறது
எப்படியாவது நாம் வீட்டை
வாங்க வேண்டும் என்று
கடன் வாங்கி வீட்டை வாங்குகிறோம்
வட்டி அதிகம் வாங்கி
வீட்டை வாங்குகிறோம்

மாதா மாதம் கடனை
அடைப்பது மட்டும் அல்லாமல்
வட்டியையும் சேர்த்து அடைக்க
வேண்டி வருவதால்
கஷ்டப்பட வேண்டி இருக்கிறது
ஒவ்வொரு மாதத்தையும்
ஓட்டுவதே கஷ்டமாக இருக்கிறது

இதைத் தான் நாமே
ஏற்படுத்திக் கொண்ட
கஷ்டம்
என்கிறோம்
அதாவது நாம் வாடகை வீட்டில்
தங்கி இருக்கிறோம்
அதுவே நமக்கு போதுமானது
ஆனால் ஆசையின் காரணமாக
வரவுக்கு மேல் செலவு செய்து
வீட்டை வாங்கி
கடனையும் அடைக்க முடியாமல்
வட்டியும் கட்ட முடியாமல்
மாதா மாதம் கஷ்டப்படுகிறோம்
இது தான் நாமே
ஏற்படுத்திக் கொண்ட கஷ்டம்

இது இருந்தால் தான்
நாம்
வாழ முடியும்
அவைகள் கிடைக்கவில்லை
என்றால்
வாழ முடியாது என்ற
சூழ்நிலை வரும்போது
அவை தானே ஏற்பட்ட கஷ்டம்

இவைகள் இல்லாமலும்
நாம் வாழலாம்
ஆனால்
இவைகள் இருந்தால் தான்
நான் வாழ்வேன் என்பது
நாமே ஏற்படுத்திக் கொண்ட
கஷ்டம்

ராஜா தனக்கு ஏற்பட்ட
கஷ்டம்
தானே ஏற்பட்ட கஷ்டம்
தன்னால் ஏற்படுத்திக் கொண்ட
கஷ்டம் இல்லை
என்பதை உணர்ந்து
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.



அந்த ஊழியக்காரர்
புறப்பட்டு வழிகளிலே போய்
தாங்கள் கண்ணில் கண்ட
நல்லவர்கள், பொல்லாதவர்கள்
எல்லோரையும்
கல்யாணத்திற்கு கூட்டிக்கொண்டு
வந்தார்கள்

கல்யாணசாலை விருந்தாளிகளால்
நிறைந்தது

விருந்தாளிகளைப் பார்க்கும்படி
ராஜா உள்ளே
பிரவேசித்தபோது,
கல்யாண வஸ்திரம் தரித்திராத
ஒரு மனுஷனை அங்கே கண்டு
நீ கல்யாண வஸ்திரமில்லாதவனாய்
எப்படி இங்கே வந்தாய்
என்று கேட்டான்

அதற்கு அவன் எதுவும்
பேசாமலிருந்தான்

அப்பொழுது ராஜா
பணிவிடைக்காரரை நோக்கி
இவனைக் கையுங்காலும்
கட்டிக் கொண்டுபோய்,
அழுகையும், பற்கடிப்பும்
உண்டாயிருக்கிற புறம்பான
இருளிலே போடுங்கள்
என்றான்.

கல்யாண விருந்தில்
கலந்து கொள்ள வேண்டும்
என்று உண்மையாக
விரும்பியவர்கள்
கல்யாண விருந்தில்
கௌரவிக்கப்பட்டார்கள்
கல்யாண விருந்தை
புறக்கணித்தவர்கள்
போலியாக
கல்யாண விருந்தில்
கலந்து கொண்டவர்கள்
தண்டிக்கப் பட்டார்கள்

அதைப்போல்
பரலோக ராஜ்யம்
என்றால் என்ன
ஆண்டவர் என்பவர்
யார் என்பதை
உண்மையாக
தெரிந்து கொண்டு
அதைப் பின்பற்றுபவர்கள்
ஆண்டவரால் இரட்சிக்கப்
படுவார்கள்

பரலோக ராஜ்யம்
என்றால் என்ன
ஆண்டவர் என்பவர்
யார் என்பதை
அறிய விரும்பாதவர்கள்
அறிய விரும்புவது போல்
நடிப்பவர்கள்
தண்டிக்கப் படுவார்கள்
என்கிறார்
இயேசு.

---------இதன் தொடர்ச்சி


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(4)
      ------------பார்க்கவும், படிக்கவும்






























இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(4)


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(4)

                   """"பதிவு எண்பத்துஇரண்டை விரித்துச் சொல்ல
                  ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""
திருவள்ளுவர்

 “”””””””பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.”””””””

                       -------திருக்குறள்


வார்த்தையில் உள்ள அர்த்தத்தை ஒருவர்
இரண்டு விஷயங்களை வைத்து தெரிந்து கொள்கிறார்

ஒன்று   : படித்ததினால் வந்த அறிவு
இரண்டு : அனுபவத்தினால் வந்த அறிவு

இந்த இரண்டை வைத்துத் தான்
ஒருவர் வார்த்தையில் உள்ள
அர்த்தத்தைத் தெரிந்து கொள்கிறார்

இந்த இரண்டிலும் முழுமை அடைந்தவர்
பெரும்பாலும் யாரும் இருக்க முடியாது.

இந்த இரண்டிலும் ஒவ்வொருவரும்
தங்கள் வாழ்வில் கற்றதை, பெற்றதை வைத்து
வார்த்தைக்கு அர்த்தம் சொல்வார்கள்

அவ்வாறு வார்த்தைக்கு அர்தத்தம்
சொல்பவர்கள் இரண்டு விஷயத்தை
வலியுறுத்தக் கூடாது

ஒன்று  : தான் சொன்ன அர்த்தம் தான் சரியானது
           என்று சொல்லக்கூடாது.
இரண்டு : தான் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொள்ள
           வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது.

ஏனெனில் ஒருவர்
தான் கல்வியின் மூலம் கற்றதும்,
அனுபவத்தின் மூலம் பெற்றதும்
குறைவான அளவே இருக்கும்
என்ற காரணத்தினாலும்,
முழுமையாக இருக்காது
என்ற காரணத்தினாலும்,
தாங்கள் சொல்வது தான் சரி என்று
சொல்லி வாதிடக்கூடாது.

ஏனென்றால், ஒவ்வொருவரும்
தாங்கள் கல்வியின் மூலம் கற்றதுக்கு ஏற்பவும்,
அனுபவத்தின் மூலம் பெற்றதற்கு ஏற்பவும்
அர்த்தம் சொல்வர்

ஒவ்வொருவரும் அவரவர் சொல்வது தான்
சரி என்று நினைத்துக் கொள்வர்
ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதுக்கு ஏற்பவும்,
ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றதுக்கு ஏற்பவும்
வார்த்தைகளின் அர்த்தம் மாறுபடும்
எந்த ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டாலோ (அல்லது)
எந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டாலோ (அல்லது)
எந்த ஒரு கவிதையை எடுத்துக் கொண்டாலோ
ஒருவர் கற்றது, பெற்றது ஆகியவற்றிற்கு ஏற்ப
வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்வர்.

“”நீர் இன்று அமையாது உலகு””

இந்த வார்த்தைக்கு ஒவ்வொருவரும்
ஒரு அர்த்தம் கொள்வர்.
அர்த்தம் எவ்வறு வேறுபடுகிறது
என்பதை இந்த வார்த்தைக்கு
ஒவ்வொருவரும் சொல்லும் அர்த்தத்தை
வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த உலகத்தில் உயிர்கள் வாழ
நீர் அவசியம் என்கிறார் முதல் நபர்.

இந்த உலகத்தில் உயிர்கள் வாழ
அனைத்தும் அவசியம்
அதில் நீரும் ஒன்று என்கிறார்
இரண்டாம் நபர்.

இந்த உலகத்தில் எதுவும்
இல்லாமல் வாழலாம்
ஆனால் நீர் இன்றி வாழ முடியாது
என்கிறார் மூன்றாம் நபர்.

பஞ்ச பூதங்களான
நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்
ஆகியவைகளில்
உயிர்கள் வாழ நீர் மிக முக்கியம்
என்கிறார் நான்காம் நபர்.

அவர்கள் சொல்லும் அர்த்தம்
தவறாகக் கூட இருக்கலாம்

அவரவர் நிலைக்கு ஏற்ப
சொன்ன வார்த்தைகளின்
அர்த்தமாகக் கூட இருக்கலாம்

அது முழுமை பெறாத
அர்த்தமாகக் கூட இருக்கலாம்

முழுமை பெறாதவர்களால் சொல்லப்பட்ட
அர்த்தமாகக் கூட இருக்கலாம்

அரைகுறையாக புரிந்து கொண்டவர்களால்
சொல்லப்பட்ட அர்த்தமாகக் கூட இருக்கலாம்

தவறாகப் புரிந்து கொண்டவர்களால் சொல்லப்பட்ட
அர்த்தமாகக் கூட இருக்கலாம்.

வார்த்தைகளில் மறைந்துள்ள அர்த்தங்களை
புரிந்து கொள்ள முடியாதவர்களால் சொல்லப்பட்ட
அர்த்தமாகக் கூட இருக்கலாம்.

தான் புரிந்து கொண்டதே சரி
என்ற நினைப்பில் புரிந்து கொண்டவர்களால்
சொல்லப்பட்ட தவறான தகவலாகக் கூட
இருக்கலாம்

எனவே, ஒருவர் தன் வாழ்வில்
கற்றது, பெற்றதுக்கு ஏற்ப வாழ்க்கையில்
வார்த்தையின் அர்த்தம் மாறுபடும்.

நிகழ்வு-1

அரிசியை வைத்துக் கொண்டு

முதல் நபர் சாதம் செய்கிறார்
இரண்டாம் நபர் அரிசையை
வைத்துக் கொண்டு
தோசை சுடுகிறார்
மூன்றாம் நபர் அரிசியை
வைத்துக் கொண்டு
இட்லி சுடுகிறார்
நான்காம் நபர் அரிசியை
வைத்துக் கொண்டு
இடியாப்பம் செய்கிறார்
ஐந்தாம் நபர் அரிசியை
வைத்துக் கொண்டு
ஆப்பம் செய்கிறார்

ஐந்து வெவ்வெறு நபர்களும்
அரிசி என்ற ஒரு பொருளை
வைத்துக் கொண்டு
வெவ்வேறு பொருட்களை செய்கின்றனர்.
அரிசி அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப
வேறு ஒரு பொருளாக
மாறுபாடு அடைகிறது

ஒவ்வொருவரும் எத்தகைய
எண்ணத்தை கொண்டு
அரிசியைப் பார்க்கிறார்களோ
அந்த அரிசி அதுவாக மாறுபாடு அடைகிறது
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில்
கற்றது, பெற்றதற்கு ஏற்ப
அரிசி மாறுபாடு அடைகிறது

அதற்காக ஒவ்வொருவரும் அரிசியிலிருந்து
சோறு செய்வது தான் சரி என்று
சொல்வது தவறு
அரிசியிலிருந்து தோசை மட்டும் தான்
செய்ய முடியும் என்று சொல்வது தவறு.

அரிசியிலிருந்து இட்லி மட்டும் தான்
செய்ய முடியும் என்று சொல்வது தவறு.

அரிசியிலிருந்து பல்வேறு பொருட்கள்
செய்யலாம் என்பது உண்மை
தான் சொல்வது மட்டும் தான் சரி என்று
சொல்வது தவறானது.

நிகழ்வு-2

ஒரு நூலகத்திற்கு செல்லும்

முதல் நபர் இயற்கை
என்ற புத்தகத்தை படிக்கிறார்
பின்பு வைத்து விட்டு செல்கிறார்

இரண்டாம் நபர் அதே இயற்கை
என்ற புத்தகத்தை எடுக்கிறார் படிக்கிறார்
பின்பு வைத்து விட்டு செல்கிறார்

மூன்றாம் நபர் அதே இயற்கை
என்ற புத்தகத்தை எடுக்கிறார் படிக்கிறார்
பின்பு வைத்து விட்டு செல்கிறார்

முதல் நபர் இயற்கை என்ற புத்தகம்
தனக்கு சொந்தமானது என்று
சொந்தம் கொண்டாட முடியாது
அதே போல்
இரண்டாம் நபரும்
மூன்றாம் நபரும்
இயற்கை என்ற புத்தகம்
தன்னுடையது என்றும்
தனக்கு சொந்தமானது என்றும்
சொந்தம் கொண்டாட முடியாது

மூன்று நபர்களுக்கும் இயற்கை என்ற
புத்தகம் சொந்தமானதல்ல
இயற்கை என்ற புத்தகம்
நூலகத்திற்கு சொந்தமானது.

அந்த புத்தகத்தை நூலகத்திற்கு
வரும் யார் வேண்டுமானாலும்
எடுத்து படிக்கலாம்
புத்தகத்தை படிக்க வரும்
ஒவ்வொருவரும்
அந்த புத்தகம் என்னுடையது என்று
சொந்தம் கொண்டாட முடியாது
அந்த புத்தகம் என்னுடையது என்று
சொந்தம் கொண்டாடினால்
அத தவறானதாகும்

இயற்கை என்ற அந்த புத்தகம்
அனைவருக்கும் சொந்தமானது
என்னுடையது என்று தனிப்பட்ட முறையில்
யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது.
அந்த புத்தகம் அனைவரும் படித்து
பயன்பெற வேண்டும் என்ற பொதுவான நோக்கில்
நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுயநலத்துடன் அப்புத்தகம் தனது என்று
சொந்தம் கொண்டாடக்கூடாது.

திருக்குறளை படிப்பவர்கள் இரண்டு விதமான  
தவறான விஷயங்களைச் செய்கின்றனர்

ஒன்று  திருக்குறள் இந்த கருத்தைத் தான் சொல்கிறது
                என்று வலியுறுத்தி சொல்லக்கூடாது
       இரண்டு திருக்குறள் எங்களுக்கு சொந்தமானது என்று
                 சொந்தம் கொண்டாடக்கூடாது

அரிசியிலிருந்து சாதம் மட்டும் தான் செய்ய முடியும்
என்ற எப்படி வலியுறுத்தி சொல்ல முடியாதோ
அதே போல்,
திருக்குறள் எங்கள் மத கருத்துக்களை
தான் சொல்கிறது என்று சொல்லக்கூடாது

நூலகத்தில் உள்ள நூல் எப்படி
தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமில்லையோ
அதேபோல்,
எந்த மதமும்
திருக்குறள் எங்கள் மதத்திற்கு சொந்தமானது
என்று சொல்லக்கூடாது.

திருக்குறள் ஒரு உலகப்பொதுமறை நூல்
என்பதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகின்றது
அதாவது திருக்குறள் தனிப்பட்ட
எந்த ஒரு கடவுளையோ,
எந்த ஒரு மதத்தையோ,
எந்த ஒரு மொழியையோ,
எந்த ஒரு இனத்தையோ,
சார்ந்து சொல்லவில்லை.
அனைவருக்கும் பொதுவான
கருத்தை சொல்ல வருவதால்
இது உலகப்பொதுமறை எனப்படுகிறது
என்று சொல்லப்படுகிறது.
இதுவும் ஒரு காரணம் தான் தவிர
இதுவே காரணம் இல்லை.

திருக்குறளில் உள்ள
வார்த்தைகளின் அர்த்தங்களை
ஒவ்வொருவரும் தாங்கள்
கற்றது, பெற்றதற்கு ஏற்ப
ஒவ்வொரு மதமும் தங்கள்
மத கருத்துக்களை
திருக்குறள் சொல்கிறது
எனவே, திருக்குறள் எங்கள் மதத்தைச்
சார்ந்த நூல் என்பர்.

இந்து மதம்,
கிறிஸ்தவ மதம்,
இஸ்லாம் மதம்,
சீக்கிய மதம்,
புத்த சமயம்,
சமண சமயம்
என உலகில் உள்ள
பல்வேறு சமயங்கள் அனைத்தும்
திருக்குறள் தங்கள் மதநூல்
தங்கள் மத சம்பந்தப்பட்ட
கருத்துக்களை சொல்கிறது - எனவே,
திருக்குறள் தங்கள் மதநூல் என்று
சொல்லி பெருமைப்பட்டுக்
கொள்கிறது.

உலகில் உள்ள பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள்
மொழியைச் சார்ந்தவர்கள்,
இனத்தைச் சார்ந்தவர்கள்,
என பல்வேறு நிலையில் உள்ளவர்கள்
தங்கள் நூல் என்று சொல்லப்படக்கூடிய நிலையில்
இருக்கிறது திருக்குறள்.

உலகில் உள்ள அனைத்து மதங்களும்,
சமயங்களும் போதிப்பது
ஒன்றே ஒன்று தான்
மனிதன் மனிதனாக இருந்து
மனிதனை மனிதன் நேசிக்கணும்
என்பதைத் தான்

உலகில் உள்ள அனைத்து மதங்களும்,
சமயங்களும் பின்பற்றுவது
இரண்டு வழிமுறைகளைத் தான்.

   ஒன்று  :  இறை வழிபாடு
  இரண்டு :  அறநெறி வாழ்க்கை

இறை வழிபாடு என்பது
மனிதன் எவ்வாறு இறைவனை
வழிபட வேண்டும் என்பதைத்
தெரிவிக்கிறது.

அறநெறி வாழ்க்கை என்பது
மனிதன் எவ்வாறு
ஒழுக்க நெறியுடன் வாழ்வது
என்பதைத் தெரிவிக்கிறது.

இந்த இரண்டு வழிமுறைகளைத் தான்
உலகில் உள்ள அனைத்து
மதங்களும், சமயங்களும் பின்பற்ற
சொல்கிறது.

மனிதன் இறைவனை எவ்வாறு
வழிபட வேண்டும் என்பதையும்
மனிதன் எப்படி மனிதனாக
வாழ வேண்டும் என்பதையும்
போதிப்பது தான்
உலகில் உள்ள அனைத்து
மதங்களும், சமயங்களும்
ஆகும்.

உலகில் உள்ள
அனைத்து மதங்களும், சமயங்களுக்கும்
சொல்லும் பொதுவான
ஒரு கருத்தைத் தான்
திருக்குறள் சொல்கிறது.
எனவே, அனைத்து மதத்தில்,
சமயத்தில் உள்ள கருத்துக்கள்
திருக்குறளில் உள்ளது
என்று சொல்லப்படக்கூடிய
நிலையில் திருக்குறள் உள்ளது.

எனவே ஒவ்வொரு மதமும்
திருக்குறள் தங்கள் நூல்
என்று சொந்தம் கொண்டாடக் கூடிய
நிலையில் உள்ளது
உலகில் உள்ள அனைத்து மதங்களும்,
சமயங்களும் தங்கள் நூல்
திருக்குறள் என்று
சொந்தம் கொண்டாடும் நிலையில்
திருக்குறள் உள்ளதால்
திருக்குறளை நாம் உலகப் பொதுமறை
என்கிறோம்

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில்
கல்வியின் மூலம் கற்றதையும்,
அனுபவத்தின் மூலம் பெற்றதையும்
வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு
அர்த்தம் கற்பிக்கின்றனர்.

அந்த அர்த்தம் தான்
சரியானது என்று
சொல்லக்கூடாது
அதை அனைவரும்
ஏற்றுக் கொள்ளவேண்டும்
என்று சொல்லக்கூடாது.

சமுதாயத்தில் நிலவி வரும்
பல்வேறு பழமொழிகள்
அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப
அவரவர்
கல்வியின் மூலம் கற்றது
அனுபவத்தின் மூலம் பெற்றது
ஆகியவற்றை வைத்து விளக்கி
தங்கள் கருத்தே சரியானது
என்று பழமொழிக்கு
அர்த்தம் கற்பித்து

உலவவிட்டு விட்டனர்
இவைகள் இரண்டையும்
கடந்து பார்த்தால் மட்டுமே
அதாவது
கல்வியின் மூலம் கற்றது
அனுபவத்தின் மூலம் பெற்றது
ஆகியவற்றைக்
கடந்து பார்த்தால் மட்டுமே
பழமொழியின் உண்மை
அர்த்தம் நமக்கு
சரியாக புலப்படும்


             ---------இதன் தொடர்ச்சி
   இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(5)
      ------------பார்க்கவும், படிக்கவும்