April 22, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-8



              ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-8

மற்ற புலவர்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்தார்கள்
வெகுமானம்
கிடைக்கவில்லை

ஒவையார்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
வகையில்
செயல்களைச்
செய்தும்
திறமையாக வேலை
செய்து
பொன்னும் பொருளும்
பாராட்டும் பெற்றார்

கஷ்டப்பட்டு
வேலை செய்த
புலவர்களுக்கு ஒன்றும்
கிடைக்கவில்லை

திறமையாக
வேலை செய்த
ஔவையாருக்கு
சன்மானம் கிடைத்தது
மட்டும் அல்லாமல்
அவர் எழுதிய பாடல்
நான்கு கோடிப்பாடல்
என்ற சிறப்பும் பெற்றது


ஔவையார் பாடிய
நான்கு கோடி பாடலில்
முதல் கோடி பெறும்
செயல் என்ன என்பதற்கான
அர்த்தத்தை பார்ப்போம்


"""மதியாதார் முற்றம்
மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்""""

ஒருவர் தன் வீட்டில்
ஒரு விசேஷம்
வைத்திருக்கிறார்
அதற்காக நம்மை
கூப்பிடுகிறார்
நாம் அவருடைய
வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
அவருடைய
வீட்டிற்கு செல்லுகிறோம்

ஆனால் அவர்
நம்மை
வாருங்கள் என்று
அழைக்காமல்
வாருங்கள் என்று
வரவேற்காமல்
அமருங்கள்
என்று சொல்லாமல்
சாப்பிடுங்கள்
என்று சொல்லாமல்
எப்படி வந்தீர்கள் என்று
கூட கேட்காமல்
இருட்டில் எப்படி
போவீர்கள்
என்று கேட்காமல்
தனியாகவா வந்தீர்கள்
என்று கேட்காமல்
வீட்டில் இருப்பவர்கள்
அனைவரையும்
கூட்டிக் கொண்டு
வர வேண்டியது தானே
என்று கேட்காமல்
கடமைக்கு அழைத்தோம்
இவன் வந்து விட்டான்
என்று நினைத்து
வரவேற்காமல்
மனம் வருத்தப்படும்படி
செய்கிறார்

நமக்கு மனம்
வருத்தமாய் இருக்கிறது
இருந்தாலும் பரவாயில்லை
விசேஷம் முடியும் வரை
இருப்போம் என்று
இருக்கிறோம்

விசேஷம் என்று வைத்தால்
அந்த விசேஷத்திற்கு
பலர் வருவார்கள்
பல வேலைகள் இருக்கும்
அனைவரையும்
கவனிக்க முடியாது
அதற்காக வருத்தப்படக்கூடாது
நாம் போக வேண்டும்
விசேஷத்தில் கலந்து
கொள்ள வேண்டும்
சாப்பிட வேண்டும்
வர வேண்டும்
என்று சொல்வார்கள் சிலர்

விசேஷத்திற்கு அழைத்து
நாம் ஒரு விசேஷத்திற்கு
கலந்து கொள்ள
சென்றால்
நம்மை வரவேற்பவர்
நம்மை பாசத்துடன்
வரவேற்கிறாரா
அல்லது
பாசமற்று வரவேற்கிறாரா
என்பது
அவர்கள் நம்மை
வரவேற்பதிலிருந்து
தெரிந்து விடும்

அவர் நம்மை
வரவேற்பதிலிருந்து
நாம் அவருடைய
விசேஷத்திற்கு வந்தது
அவருக்கு பிடிக்கவில்லை
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்,
---------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////


April 21, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-7




ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-7


அப்பொழுது அங்கே
ஔவையார்
வருகிறார்
இவர் தான்
திறமையாக
வேலை செய்பவர்
அதாவது
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
செயல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்.

அவர் நான் ஒரு
பாடல் எழுதி தருகிறேன்
அதை மன்னரிடம்
கொடுங்கள்
என்று கொடுத்தார்

முதலில் புலவர்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை
ஔவையார்
என் பாடல்
நான்குகோடிக்கு
ஈடானது
மன்னரிடம் கொடுங்கள்
என்று சொல்லிய
பின்னர் புலவர்கள்
வாங்கிக் கொண்டனர்.

ஔவையார் எழுதிய
அந்தப் பாடலில்
நான்கு செயல்களைச்
சொல்கிறார்
இரண்டு செயல்களை
செய்ய வேண்டாம்
என்றும்
இரண்டு செயல்களை
செய்ய வேண்டும்
என்றும் சொல்கிறார்.

நன்றாக உற்றுக்
கவனித்தால்
ஒரு செயலுக்கும்
மற்றொரு செயலுக்கும்
தொடர்பு உள்ளது
தெரியவரும்.

ஔவையார் நான்கு
செயல்களைப்பற்றி
சொல்கிறார்
ஒவ்வொரு செயலையும்
கோடி பெறும்
என்கிறார்

கோடி என்ற சொல்லை
ஔவையார்
பணம் என்று
சொல்லவில்லை
நாம் கோடி என்ற
சொல்லை
பணமாகவோ,
பொன்னாகவோ,
புண்ணியமாகவோ
எடுத்துக் கொள்ளலாம்

எந்த இடத்தில் பணம்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
எந்த இடத்தில் பொன்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
எந்த இடத்தில்
புண்ணியம்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
என்பது தான் முக்கியம்

ஒவ்வொரு செயலும்
கோடி மதிப்புடையது
என்றால்
நான்கு செயல்கள்
நான்கு கோடி
மதிப்புடையது

ஒவ்வொரு செயலுக்கும்
மதிப்பு
ஒரு கோடி என்று
மதிப்பீடு செய்து
நான்கு செயல்களுக்கு
நான்கு கோடி என்று
தன்னுடைய பாடலுக்கு
மதிப்பீடு செய்த
செயல்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்துவது ஆகும்.

நான்கு கோடி
பாடல் எழுதாமல்
பாட்டிலேயே
நான்கு கோடியையும்
கொண்டு வந்தது
பிறர் ஏற்றுக் 
கொள்ளத் தக்க
வகையில்
செயல்களைச்
செய்தது ஆகும்.

மற்ற புலவர்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு.

ஒவையார்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
செயல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக் காட்டு.

--------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////////////////


April 19, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6


               
ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6

ஒன்பது நபர்கள்
பத்து ரூபாய்க்கு
ஐம்பது சிப்ஸ்கள்
வைத்து
விற்பனை செய்தாலும்
மக்கள் அதை
பெரும்பாலும்
வாங்கி சாப்பிடுவது
இல்லை
ஆனால்,
பத்து ரூபாய்க்கு
பத்து சிப்ஸ் வைத்து
மீதியிடங்களை காற்றால்
நிரப்பி ஏமாற்றி
விற்பனை செய்தாலும்
மக்கள் ஏன் இப்படி
மக்களை ஏமாற்றும்
விதத்தில் ஏமாற்றி
விற்பனை செய்கிறீர்கள்
என்று யாரும்
கேள்வி கேட்காமல்
ஒரு நபர் செய்த
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
வாங்கி பெரும்பாலான
மக்கள் அதனை
சாப்பிட்டு வருகின்றனர்,

இதுதான் கஷ்டப்பட்டு
உழைப்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் எற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்



இதே போல்
புலவர்களுக்கும்
ஒவையாருக்கும்
இடையே
நடைபெற்ற
நிகழ்ச்சியானது
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

நாளை காலைக்குள்
நான்கு கோடி பாடல்கள்
வேண்டும் என்று
சொன்னவுடன்
யோசிக்காமல்
தாங்கள் தொடர்ந்து
செய்யும் வேலையான
பாடல் எழுதுவதையே
நினைவில் கொண்டு
காலைக்குள் எப்படி
பாடல் எழுதி
முடிப்பது
எத்தனை பேர்
அழைத்து
பாடல் எழுத
சொன்னாலும்
நான்கு கோடி பாடல்
எழுத முடியாதே
என்று யோசித்தனர்

அரசர் இட்ட
கட்டளையை
எப்படி முடிப்பது
எத்தனை ஆட்களைக்
கொண்டு முடிப்பது
என்று தான் யோசித்தனர்

இவர்கள் தான்
கஷ்டப்பட்டு
வேலை செய்பவர்கள்

செய்த வேலையை
தொடர்ந்து செய்து
கொண்டிருப்பார்கள்

கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள் அனைவரும்
தொடர்ந்து தாங்கள்
செய்த வேலையை
திரும்ப
திரும்ப செய்வார்கள்

இந்தப் புலவர்கள்
அனைவரும் ஒரே
விஷயத்தைத் தான்
யோசித்தனர்
எப்படி நான்கு கோடி
பாடல் எழுதுவது
என்பதை மட்டும் தான்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////

April 18, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-5



ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-5


10 ரூபாய் மதிப்பு கொண்ட
சிப்ஸ் பாக்கெட்டில்
10 சிப்ஸ் தான்
போடப்பட்டு இருக்கும்
அந்த 10 சிப்ஸ்களும்
மற்ற ஒன்பது நபர்கள்
செய்த சிப்ஸை விட
வித்தியாசமான சுவை
கொண்டதாக இருக்கும்
மீதமுள்ள பக்கங்கள்
எல்லாம்
காற்று வைத்து
நிரப்பப்பட்டு வெற்றிடமாக
வைக்கப்பட்டிருக்கும்
என்ற அமைப்பைக்
கொண்ட
சிப்ஸ் பாக்கெட்டை
தயார் செய்தார்.
விற்பனை செய்தார்.

ஒன்பது நபர்கள் செய்த
சிப்ஸ் பாக்கெட்டில்
உள்ள சுவையை விட
ஒரு நபர் செய்த
சிப்ஸ் பாக்கெட்டில்
உள்ள சிப்ஸ்
வித்தியாசமான சுவை
கொண்டதாக இருந்தது
இது தான் வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்துவது.

பத்து ரூபாய்க்கு
பத்து சிப்ஸ் போட்டு
அடைத்து
மற்ற பக்கங்களை
காற்றை அடைத்து
வெற்றிடமாக வைத்து
விற்றாலும்
மக்கள் அதை விரும்பி
வாங்குகின்றனர்
இது பிறர் ஏற்றுக்
கொள்ளும் வகையில்
செயல்களைச் செய்வது
ஆகும்.

10 ரூபாய்க்கு 10 சிப்ஸ்
போட்டு விற்கிறான்
மற்ற இடங்களை
வெற்றிடமாக வைத்து
ஏமாற்றி விற்கிறான்
என்று யாரும்
கோபப்பட்டு கேள்விகள்
கேட்பதில்லை

மக்களுக்கு பிடித்திருக்கின்ற
காரணத்தினால்
10 ரூபாய்க்கு 10 சிப்ஸ்
போட்டு விற்றாலும்
மற்ற இடங்களை
காற்று அடைத்து
ஏமாற்றி விற்பனை
செய்தாலும்
அதில் உள்ள
ஏமாற்று வேலை
தெரிந்தாலும்
மக்கள் அதை
விருப்பப்பட்டு
வாங்குகின்றனர்,
இதுதான்
பிறர் ஏற்றுக் கொள்ளும்
வகையில் செயல்களைச்
செய்வது

ஒருவர் மட்டும் தனியாக
சிப்ஸ் செய்யும்
இந்த வேலை தான்
ஒரு வேலை
செய்யும் போது
வித்தியாசமாக
யோசனைகளைப்
பயன்படுத்தியும்
பிறர் ஏற்றுக் கொள்ளும்
வகையில் செயல்களைச்
செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்கள் ஆவர்.

கஷ்டப்பட்டு வேலை
செய்த ஒன்பது
நபர்களின்
சிப்ஸ் பாக்கெட்டை
பெரும்பாலானவர்கள்
வாங்கி சாப்பிடுவதில்லை.

ஆனால்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
வகையில்
செயல்களைச் செய்தும்
ஒருவரால் செய்யப்பட்ட
சிப்ஸ்ஸை
அனைவரும் வாங்கி
விருப்பமுடன்
சாப்பிட்டு வருகின்றனர்.

ஒன்பது நபர்கள்
செய்து விற்பனை
செய்த சிப்ஸ்
பாக்கெட்டை விட
ஒருவர் மட்டும்
விற்பனை செய்த
சிப்ஸ் பாக்கெட்
மட்டும் வேறுபட்டு
இருக்கிறது


---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////



April 17, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4



ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4   


கஷ்டப்பட்டு
உழைத்த
ஒன்பது
மாணவர்களுக்கும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட வினாவிற்கு
எவ்வாறு பதில் வழங்க
வேண்டும் என்ற
விவரம் தெரியவில்லை

ஆனால்
வித்தியாசமாக யோசித்து
திறமையாக
வேலை செய்த
ஒரு மாணவனுக்கு மட்டும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட
வினாவிற்கு எவ்வாறு
பதில் வழங்க வேண்டும்
என்ற விவரம் தெரிந்து
இருந்தது,

இது தான் கஷ்டப்பட்டு
வேலை செய்பவனுக்கும்
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தி
திறமையாக
வேலை செய்பவனுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

பத்து நபர்கள் சிப்ஸ்
என்ற உணவுப்பொருளை
செய்து அதை
பாக்கெட்டில் அடைத்து
விற்பனை செய்தார்கள்

அந்த பத்தில்
ஒன்பது நபர்கள்
தனித்தனியாக
விற்பனை செய்த
சிப்ஸ் பாக்கெட்
ஒரே மாதிரியாக
இருந்தது

ஒரு சிப்ஸ்
பாக்கெட்டில்
50 சிப்ஸ் வீதம்
10 ரூபாய்
என்ற விலையில்
அந்த ஒன்பது நபர்களும்
தனித்தனியாக
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்கள்
தனித்தனியாக
விற்பனை செய்தார்கள்

பத்தில் ஒரு நபர்
மட்டும்
சிப்ஸ் பாக்கெட்டை
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
செயல்களைச் செய்தும்
திறமையாக
வேலை செய்து
சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்.

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////