September 04, 2018

திருக்குறள்-பதிவு-13


                        திருக்குறள்-பதிவு-13

இங்கிலாந்தில்
1859 ஆம் ஆண்டு
நவம்பர் 24 ஆம் நாள்
காலை பொழுது
விடிந்து கொண்டிருந்த
போது இந்த
உலகத்திற்கு தெரியவில்லை
ஒரு புதிய கருத்து
அன்று எழும்பப் போகிறது;
அந்த கருத்து
உலகம் முழுவதும்
பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தப் போகிறது;
கடவுள் உண்டு
என்று சொல்பவர்களுக்கும்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்களுக்கும்
பெரிய போராட்டம்
வெடிக்கப் போகிறது;
வரலாற்றில்
மறக்க முடியாத
நாளாக இந்த நாள்
இருக்கப் போகிறது
என்று தெரியாமல்,
குமுறப்போகும்
எரிமலையின் சீற்றம்
தெரியாமல்,
சுழன்றடிக்கப் போகும்
சூறாவளிக் காற்றின்
வேகம் தெரியாமல்,
பொங்கப்போகும்
கடலின் கோபம் தெரியாமல்,
இந்த உலகம்
உறக்கத்திலிருந்து
மெதுவாக விழித்துக்
கொண்டிருந்தது

1859 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம்
24 ஆம் நாள் மதியம்
01.00 மணிக்கு
“On the Origin of
Species by Means of
Natural Selection, or the
Preservation of
Favoured Races in the
Struggle for life”
என்ற புத்தகம்
வெளியிடப்பட்டது
உயிர்களின் தோற்றம்
என்று அழைக்கப்படும்
இந்த புத்தகம்
சொல்ல வருவது
பரிணாம வளர்ச்சி
கோட்பாடு
இந்த புத்தகத்தை
எழுதியவர்
சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வின்
எழுதிய இந்த புத்தகம்
வெளியான அன்றே
1250 பிரதிகளும் விற்று
தீர்ந்து விட்டன
அந்த புத்தகத்தின்
அன்றைய விலை
15 ஷில்லிங்

சார்லஸ் டார்வினின்
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாடு
சொல்ல வருவது
இது தான்
உயிரினங்கள் அனைத்தும்
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றமடைந்து, சின்ன
உயிரிகளிலிருந்து பெரிய
உயிரியாக மாற,
ஒவ்வொரு விலங்கினமாக
மாறி மாறி
இன்றைய உருவத்துக்கு
வந்திருக்கின்றன
எதுவும் ஒரே நாளில்
படைக்கப்பட்டதல்ல

உயிரினங்களின்
வாழ்க்கைப் போராட்டத்தில்
தகுதியும், திறமையும்
உள்ளவை நிலைத்து நிற்கும்
மற்றவை அழிந்து போகும்
இது புதிய இனங்களின்
உருவாக்கத்திற்கு
வழியேற்படுத்தும்

அதுமட்டுமல்ல
மனிதன் குரங்கிலிருந்து
வந்தவன் என்றார்
சார்லஸ் டார்வின்

உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டை கேட்டு
உலகமே ஸ்தம்பித்தது

உலகில் உள்ள
உயிர்கள் அனைத்தையும்
ஒரே நாளில் ஆண்டவன்
உருவாக்கினார் என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
டார்வினின் கருத்து
மாறுபட்டு இருந்தது

ஆண்டவன் மனிதனை
படைத்தார் என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு மாறாக
குரங்கிலிருந்து வந்தவன்
மனிதன் என்று
டார்வின் சொன்ன
கருத்து பைபிளுக்கு
விரோதமாக இருந்தது

பல நூற்றாண்டு காலமாக
பைபிளில் சொல்லப்பட்டு
வந்த கருத்துக்கு
மாறாக டார்வின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
ஒட்டு மொத்த
கிறிஸ்தவர்களின் எதிர்ப்புக்கு
ஆளானது டார்வினின் புத்தகம்

பல நூற்றாண்டு காலமாக
மக்கள் நம்பிக் கொண்டு
இருந்த நம்பிக்கைக்கு
எதிராக டார்வினின்
கருத்து இருப்பதால்,
மக்களின் நம்பிக்கையை
கொச்சைப் படுத்தும்
வகையில்
டார்வினின் கண்டுபிடிப்பு
இருப்பதால்,
மக்களின் நம்பிக்கையை
தகர்க்கும் விதத்தில்
சார்லஸ் டார்வினின்
கண்டு பிடிப்பு இருப்பதால்,
மக்கள் தாங்கள்
கொண்ட நம்பிக்கையே
தவறோ என்று மக்கள்
சந்தேகிக்கும் வகையில்
டார்வினின் கண்டுபிடிப்பு
இருப்பதால்
டார்வினின் கண்டுபிடிப்பை
கிறிஸ்தவர்களும்
கிறிஸ்தவ அமைப்புகளும்
கடுமையாக எதிர்த்தன

டார்வின் கண்டு பிடித்த
கண்டுபிடிப்பு
சரியானது என்று சொல்லி
டார்வினுக்கு ஆதரவாக
ஒரு கூட்டம் கூடியது

இத்தகைய சூழ்நிலையில்
உலகம் இரண்டாக
உடைந்தது
கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள் ஒரு புறமும்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
மறு புறமும் இருந்தனர்

கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள்
டார்வினை எதிர்த்தனர்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
டார்வினை ஆதரித்தனர்

---------  இன்னும் வரும்
---------  04-09-2018
///////////////////////////////////////////////////////////


August 31, 2018

திருக்குறள்-பதிவு--12


                     திருக்குறள்-பதிவு--12

“””””பிறப்பென்னும் பேதைமை
நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது
அறிவு””””

உலகம் முழுவதும்
கடவுளை வணங்குபவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : கடவுளை அறிந்து
        வணங்குபவர்கள்

இரண்டு:: கடவுளை உணர்ந்து
         வணங்குபவர்கள்

கடவுள் என்பவர்
இப்படித்தான் இருப்பார்
இந்த முறைகளைப்
பயன்படுத்தித்தான் கடவுளை
வணங்க வேண்டும் என்று
பிறர் சொல்லியவைகளை
அப்படியே மனதில்
ஏற்றுக் கொண்டு
கடவுளை வணங்குபவர்களை
கடவுளை அறிந்து
வணங்குபவர்கள் எனலாம்

கடவுள் எங்கு இருக்கிறார்
அவரை அடையக்கூடிய
வழி எது
அவரை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை உணர்ந்து
அதை பயன்படுத்தி
கடவுளை வணங்குபவர்கள்
கடவுளை உணர்ந்து
வணங்குபவர்கள் எனலாம்

கடவுளை அறிந்து
வணங்குபவர்களை
மூன்று நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : சிறிய வயதில்
        ஒரு மதத்தில்
        வணங்கிய கடவுளை
        பெரிய வயதிலும்
        அதே மதத்தில்
        அதே கடவுளை    
        வணங்குவது

இரண்டு : சிறிய வயதில்
         ஒரு மதத்தில்
         வணங்கிய கடவுளுக்கு
         பதில் பெரிய வயதில்
         அதே மதத்தில்
         வேறு கடவுளை
         வணங்குவது

மூன்று : சிறிய வயதில்
        ஒரு மதத்தில்
        ஒரு கடவுளை
        வணங்கி விட்டு
        பெரிய வயதில்
        வேறு மதத்தில்
        வேறு கடவுளை
        வணங்குவது

சிறிய வயதில்
ஒரு கடவுளை
வணங்கிய குழந்தை
பெரிய வயது ஆனபிறகு
தான் சிறிய வயது முதல்
வணங்கிய கடவுள்
தனக்கு எல்லாவிதமான
கஷ்டங்களை நீக்காவிட்டாலும்
என்னுடைய முக்கியமான
சந்தோஷங்களை நிறைவேற்றி
இருக்கிறது என்பதை
நினைவில் கொண்டு
சிறிய வயதில்
ஒரு மதத்தில்
வணங்கிய கடவுளை
பெரிய வயதிலும்
அதே மதத்தில்
அதே கடவுளை       
வணங்குவது

சிறிய வயதில்
நான் வணங்கிய
கடவுள் எனக்கு எதுவும்
செய்யவில்லை
எனவே நான் வேறு
ஒரு கடவுளை
வணங்கப் போகிறேன் என்று
சிறிய வயதில் ஒரு
மதத்தில் வணங்கிய
கடவுளுக்கு பதில்
பெரிய வயதில்
அதே மதத்தில்
வேறு கடவுளை
வணங்குவது

சிறிய வயதில் நான்
வணங்கிய கடவுள்
எனக்கு எதுவும்
வழங்கவில்லை
என் மதத்தில் உள்ள
கடவுள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை
எனவே, நான் வேறு ஒரு
மதத்தில் வேறு ஒரு
கடவுளை வணங்கப்
போகிறேன் என்று
சிறிய வயதில்
ஒரு மதத்தில்
ஒரு கடவுளை
வணங்கி விட்டு
பெரிய வயதில்
வேறு மதத்தில்
வேறு கடவுளை
வணங்குவது

இந்த மூன்று
நிலைகளைப் பின்பற்றி
எந்த நிலையில்
கடவுளை வணங்கினாலும்
இன்பமும், துன்பமும்
மாறி மாறி வந்து
கொண்டே தான் இருக்கும்

எங்கள் மதத்தில் உள்ள
கடவுளை வணங்கினால்
இன்பம் மட்டுமே ஏற்படும்
துன்பம் என்பது
ஏற்படவே ஏற்படாது
என்று எந்த மதமும்
எந்த ஒரு கடவுளையும்
சுட்டிக் காட்ட முடியாது

ஒரே மதத்திற்குள்
ஒரு கடவுளை விட்டு
அதே மதத்திற்குள்
வேறு கடவுளை
வணங்கும் போது
நன்மை செய்யும் கடவுள்,
ஒரு மதத்திலிருந்து
வேறு மதத்திற்கு
சென்று கடவுளை
வணங்கும் போது
நன்மை செய்யும் கடவுள்
ஏன் வாழ்க்கை முழுவதும்
நன்மை செய்வதில்லை
என்பதை உணர்ந்து
கொண்டால் நாம்
கடவுளை அறிந்து
வணங்குகிறோம்
உணர்ந்து வணங்குவதில்லை
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்

ஏனென்றால்
கடவுளை அறிந்து
வணங்குபவர்களுக்கு
இன்பம் துன்பம் என்ற
இரண்டும் உண்டு
கடவுளை உணர்ந்து
வணங்குபவர்களுக்கு
இன்பம், துன்பம் என்ற
இரண்டு மட்டுமல்ல
பிறவி என்பதும் கிடையாது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்

கடவுள் எங்கு இருக்கிறார்
அவரை அடையக்கூடிய
வழி எது
அவரை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை உணர்ந்து
கடவுளை உணர்ந்து
வணங்குபவருக்கு
இன்பம், துன்பம் என்ற
இரண்டு மட்டுமல்ல
பிறவியும் ஏற்படாது
என்பதைத் தான்

“””””பிறப்பென்னும் பேதைமை
நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது
அறிவு””””

என்ற திருக்குறளின்
மூலம் தெரிவிக்கிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  31-08-2018
///////////////////////////////////////////////////


திருக்குறள்-பதிவு-11


                         திருக்குறள்-பதிவு-11

 “”””இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்
கெடும்””””

அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதைப்பற்றி
கருத்து சொல்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : அதிகாரத்தில்
        இருப்பவர்கள்
        தவறு செய்யும்
        போது
        அதிகாரத்திற்கு
        பயந்து தவறை
        சரி என்று
        சொல்பவர்கள்

இரண்டு : அதிகாரத்தில்
          இருப்பவர்கள்
          தவறு செய்யும்
          போது
          அதிகாரத்திற்கு
          பயப்படாமல்
          தவறை தவறு
          என்று
          சொல்பவர்கள்

ஒரு அலுவலகத்தில் உள்ள
ஒரு உயரதிகாரி
ஒரு திட்டத்தை
தானே தீட்டி
அதை செயல்படுத்த
வேண்டும்
என்று முடிவு செய்து
தங்கள் பணியாளர்களை
அழைத்து
கருத்து கேட்கிறார்.

ஒரு தவறான திட்டத்தை
உயரதிகாரி
கொண்டு வருகிறார்
இந்த தவறான
திட்டத்தால்
பல்வேறு விதமான
கஷ்டங்கள்
பணியாளர்களுக்கு
பணிச்சுமை
வேலைப்பளு
மன அழுத்தம் ஆகியவை
ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்பது
அனைவருக்கும்
தெரிந்து விடுகிறது

இருப்பினும்,
உயரதிகாரியை
பகைத்துக் கொண்டால்
தங்கள் வேலைக்கு
பாதிப்பு ஏற்படும்
என்பதை
கருத்தில் கொண்டு
உயரதிகாரி தவறு
செய்யும் போது
அந்த தவறை
சுட்டிக் காட்டாமல்
உயரதிகாரி செய்யும்
தவறான செயலை
சரியான செயல் என்று
தலை ஆட்டுபவர்களை,
அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதிகாரத்திற்கு பயந்து
தவறை சரி என்று
சொல்பவர்கள் என்றும்
இத்தகையவர்களை
சுயநலமிக்கவர்கள்
என்றும் சொல்லலாம்.

உயரதிகாரி
தவறு செய்யும் போது
அதை உணர்பவர்கள்
அந்த தவறை
சுட்டிக் காட்டினால்
எந்தவிதமான விளைவுகள்
தங்களுக்கு ஏற்படும்
என்பதை உணர்ந்தாலும்
அதற்கு அஞ்சாமல்
உயரதிகாரி தவறு செய்தால்
நான் சுட்டிக் காட்டுவேன்
உண்மையை எடுத்து
உரைப்பேன் என்று
எதற்கும் அஞ்சாமல்
தவறை தவறு என்று
சுட்டிக் காட்டுபவர்களை,
அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதிகாரத்திற்கு
பயப்படாமல்
தவறை தவறு என்று
சொல்பவர்கள் என்றும்
இத்தகையவர்களை
சுயநலமற்றவர்கள்
என்றும் சொல்லலாம்

அதிகாரத்தில்
இருப்பவர்கள் தவறு
செய்யும் போது
அதிகாரத்திற்கு பயந்து
தவறை சரி
என்று சொல்பவர்களை
அதாவது
சுயநலமிக்கவர்களை
மன்னன்
அருகில் வைத்துக்
கொண்டு,
அதிகாரத்தில்
இருப்பவர்கள் தவறு
செய்யும் போது
அதிகாரத்திற்கு
பயப்படாமல்
தவறை தவறு
என்று சொல்பவர்களை
அதாவது
சுயநலமற்றவர்களை
மன்னன்
அருகில் வைத்துக்
கொள்ளாமல் இருந்தால்
மன்னனை அழிக்க
அண்டை நாட்டிலிருந்து
படை எடுத்து வர
வேண்டிய அவசியமில்லை;
நாட்டை கைப்பற்ற
சதி வேலைகள்
செய்ய வேண்டிய
அவசியமில்லை;
மன்னனை
வஞ்சகத்தால் வீழ்த்த
வேண்டிய அவசியமில்லை;
துரோகத்தால் சாகடிக்க
வேண்டிய அவசியமில்லை
தவறான
திட்டங்களைத் தீட்டி
மன்னன் தன்னைத் தானே
அழித்துக் கொள்வான்
என்பதைத் தான்

“”””இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்
கெடும்””””

என்ற திருக்குறளின்
மூலம் தெரிவிக்கிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  30-08-2018
///////////////////////////////////////////////