October 02, 2018

திருக்குறள்- பதிவு-29


                      திருக்குறள்- பதிவு-29

மாற்றத்தின் மூலம்
தோன்றிய
ஆண் இனம்
பெண் இனம்
ஆகிய இரண்டு
இனங்களும்
பிறப்பின் மூலம்
தோன்ற ஆரம்பித்து
பிறப்பின் மூலம்
தோன்றிக் கொண்டு
வருகிறது

மாற்றத்தின் மூலம்
தோன்றிய இனமான
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
பிறப்பினால் தோன்றிய
ஆண் இனத்தில்
மாற்றம் ஏற்பட்டும்,
பிறப்பினால் தோன்றிய
பெண் இனத்தில்
மாற்றம் ஏற்பட்டும்,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
மாற்றத்தின் மூலம்
தோன்றிக் கொண்டு
வருகிறது.

மூன்று இனங்களும்
மாற்றத்தின் மூலம்
ஒரே நேரத்தில்
தோன்றி இருந்தாலும்
ஆண் இனமும்,
பெண் இனமும்
எண்ணிக்கையில்
அதிக அளவில்
இருக்கின்ற காரணத்தினால்
இந்த இரண்டு
இனங்களும் குறைந்த
எண்ணிக்கையில் இருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
சமுதாயத்திலிருந்து
புறக்கணித்து
வைத்திருக்கிறது;
ஒதுக்கி வைத்திருக்கிறது;
இழிவு படுத்தி
வைத்திருக்கிறது;

பெரும்பான்மையாக உள்ள
ஆண் இனமும்
பெண் இனமும்
இச்சமுதாயத்தில்
தாங்கள் சந்தோஷமாக
வாழ்வதற்குரிய அனைத்து
வசதிகளையும் செய்து
வைத்துக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருக்கிறது ஆனால்
அன்றாட வாழ்க்கையை
நடத்துவதற்கு தேவையான
அத்தியாவசியமான
அடிப்படையான
தேவைகளைக் கூட
சிறுபான்மையாக உள்ள
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
ஆண் இனமும்
பெண் இனமும்
செய்யாமல் விட்டது
தான் மிகப்
பெரிய வேதனை

ஆண்கள் கழிவறை
பெண்கள் கழிவறை
என்று தங்கள்
இனத்திற்கு மட்டும்
எல்லா இடங்களிலும்
கழிவறைகளை
ஏற்படுத்திக் கொண்ட
ஆண் இனமும்
பெண் இனமும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
எங்கும் கழிவறை
அமைக்காமல்
விட்டதிலிருந்து
ஆண் இனம்,
பெண் இனம்
ஆகிய இரண்டு
இனங்களும்
எவ்வளவு பெரிய
மனிதத் தன்மையற்ற
செயலை செய்து
இருக்கிறது என்பது
தெரியும்

அனைத்து இடங்களிலும்,
அனைத்து செயல்களிலும்,
அனைத்து துறைகளிலும்
தங்களை மட்டுமே
முன்னிறுத்தி செயல்களைச்
செய்து வரும்
ஆண் இனமும்,
பெண் இனமும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
புற்க்கணித்தே வைத்து
இருக்கிறது

ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
பெற்றோர்கள் புறக்கணிப்பு,
சொந்தக்காரர்கள் புறக்கணிப்பு,
சுற்றத்தார்கள் புறக்கணிப்பு,
கல்வியில் புறக்கணிப்பு,
வேலை வாய்ப்பில்
புறக்கணிப்பு,
வீட்டை வாடகைக்கு
விடுவதில் புறக்கணிப்பு,
பழகுவதில் புறக்கணிப்பு,
என அனைத்து
நிலைகளிலும்
புறக்கணிக்கப்படும் போது
அவர்கள் தங்கள்
வாழ்வாதாரத்திற்காக
என்ன செய்வார்கள்

பிச்சை எடுப்பதும்,
தவறான தொழிலில்
ஈடுபவதும்,
போன்ற செயல்களைச்
செய்பவர்கள்
ஆண் இனத்திலும்
பெண் இனத்திலும்
இருக்கிறார்கள்
ஆனால் குறைவான
எண்ணிக்கையில் இருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த நிலையில்
உள்ளவர்கள் தங்கள்
வாழ்வாதாரத்திற்காக
செய்யும் செயல்களை
மட்டும் இச்சமுதாயம்
பெரியதாக பார்க்கிறது

ஆண்டாண்டு காலமாக
சமுதாயத்தால்
புறக்கணிக்கப்ட்டு வந்தாலும்;
சமுதாயத்தால்
இழிவுபடுத்தப்பட்டு
வந்தாலும்;
இச்சமுதாயம் மனித
இனத்தில் ஒரு இனமாக
அவர்களை மதிக்காமல்
அவமதித்தாலும்;
அவர்களை எதிலும்
சேர்க்காமல்
புறக்கணித்து வந்தாலும்;
அத்தனை கஷ்டங்களையும்
தாங்கிக் கொண்டு,
அத்தனை
மனவேதனைகளையும்
தாங்கிக் கொண்டு,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தில்
உள்ளவர்கள்
போராடிக் கொண்டு
ஒவ்வோரு துறையிலும்
முன்னேறிக் கொண்டு
வருகிறார்கள்

அவர்கள் முன்னேற்றத்திற்கு
ஆண் இனம், பெண் இனம்
ஆகிய இரண்டு இனங்களும்
உதவி செய்யாவிட்டாலும்
பரவாயில்லை
அவர்கள் முன்னேற்றத்தை
தடை செய்யக்கூடிய
செயல்களைச் செய்யாமல்
இருந்தாலே போதும்

--------- இன்னும் வரும்
---------- 01-10-2018
///////////////////////////////////////////////


September 30, 2018

திருக்குறள்-பதிவு-28


                   திருக்குறள்-பதிவு-28

இந்த உலகத்தில்
தோன்றிக்
கொண்டிருப்பவைகளை
எல்லாம் இரண்டு
நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று  : பிறப்பால்
         தோன்றிக்
         கொண்டிருப்பவைகள்

இரண்டு : மாற்றத்தால்
  தோன்றிக்
  கொண்டிருப்பவைகள்

விதையிலிருந்து
செடி முளைத்து
வெளி வருகிறது
இதில் செடியை
பிறப்பால் தோன்றியது
எனலாம்

பூவிலிருந்து
காய் வருகிறது
இதில் காயை
மாற்றத்தில் தோன்றியது
எனலாம் அதைப்போல்
காயிலிருந்து கனி
வருகிறது இதில்
கனியை மாற்றத்தில்
தோன்றியது எனலாம்.

ஒன்று முதலில்
தோன்றும் போது
பிறப்பால் தோன்றியது
என்றும்,
பிறப்பால் தோன்றி
வளரும் போது
அதில் மாற்றம்
ஏற்பட்டு தோன்றுவதை
மாற்றத்தால்
தோன்றியது என்றும்
கூறலாம்

விதையிலிருந்து செடி
தோன்றுவது முதலில்
தோன்றியது எனவே
செடியை பிறப்பால்
தோன்றியது என்றும்
செடி வளர்ந்து மரமாகி,
மரத்தில் பூவானது
காயாக மாற்றம்
அடைவதும்
காயானது கனியாக
மாற்றம் அடைவதும்
மாற்றத்தால் தோன்றியது
என்றும் கூறலாம்

மனிதன் மாற்றத்தின்
மூலம் தோன்றியவன்
பிறப்பின் மூலம்
தோன்றியவன் அல்ல

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு என்ற
நிலை கழிக்கப்பட்டு
மனிதன் தோன்றினான்
அதாவது மனிதன்
மாற்றத்தின் மூலம்
தோன்றினான்
பிறப்பின் மூலம்
தோன்றவில்லை

மாற்றத்தின் மூலம்
மனிதன் தோன்றிய
காரணத்தினால் தான்
மனிதனுடைய
எண்ணம்,சொல், செயல்
நிமிடத்திற்கு நிமிடம்
மாறிக் கொண்டே
இருக்கிறது

மனிதன் மாற்றத்தில்
தோன்றியதால் தான்
தன் சொல்லையும்
செயலையும்
இச்சமுதாயத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
பெற்றோர்கள், சொந்தக்காரர்கள்,
நண்பர்கள், சுற்றத்தார்கள்
ஆகியோருக்கு ஏற்றபடி
தன் குணத்தை மாற்றிக்
கொண்டே இருக்கிறான்.

காட்டில் விலங்குகளோடு
நாம் எளிதில்
வாழ்ந்து விடலாம்
ஏனென்றால்
எது புலி, எது சிங்கம்,
எது நரி, என்று
நமக்கு தெரியும்
அதனால் காட்டில் புலி,
சிங்கம், நரி
அவைகளுக்கு ஏற்றபடி
அவைகளின் குணத்திற்கு
ஏற்றபடி நாம்
வாழ்ந்து விடலாம்

ஆனால் நாட்டில்
யார் புலி போன்று
இருந்து மனித
இரத்தத்தை குடிப்பவர்;
யார் சிங்கம் போல் இருந்து
பிறரை அழித்து வாழ்பவர்;
யார் நரி போல் இருந்து
பிறர் வாழ்க்கையை
அழிக்க சதி செய்பவர்;
என்பதை நாம்
அறிய முடியாது
எனவே, நாட்டில்
மனிதர்களோடு
வாழ்வதைக் காட்டிலும்
காட்டில் விலங்குகளோடு
நாம் இன்பமாக வாழலாம்

மாற்றத்தின் மூலம்
மனித இனம்
தோன்றும் போது
மூன்று இனங்கள்
தோன்றின

ஒன்று  ; ஆண் இனம்
இரண்டு ; பெண் இனம்
மூன்று  : ஆணும், பெண்ணும்
          சேர்ந்த இனம்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன் என்ற இனம்
மாற்றம் அடைந்து
தோன்றியபோது
ஆண் இனம், பெண் இனம்,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
என்ற மூன்று இனங்கள்
ஒரே நேரத்தில் தோன்றின

இதில் ஆண் இனமும்
பெண் இனமும் கலந்தால்
பிறப்பு என்பது நிகழ்ந்து
ஆணோ அல்லது
பெண்ணோ பிறக்கிறது
என்பதை உணர்ந்து
கொண்ட ஆண் இனமும்,
பெண் இனமும்
தங்களுடைய இரண்டு
இனமும் இணைந்தால்
பிறப்பு என்பது நிகழ்ந்து
சந்ததிகளை உருவாக்க
முடியும் என்பதை
உண்ர்ந்து கொண்டது

எனவே, ஆண் இனமும்,
பெண் இனமும்
ஒன்றாக அதிக
அளவில் கலந்து
பிறப்பை ஏற்படுத்தி
சந்ததிகளை உருவாக்கி
பெரும்பான்மையாக
வளர்ந்து விட்டது

அப்படி என்றால்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
இச்சமுதாயம் என்ன
செய்தது என்பதைப்
பற்றி இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 30-09-2018
///////////////////////////////////////


September 28, 2018

திருக்குறள்-பதிவு-27


                     திருக்குறள்-பதிவு-27

யாளி சிலை
அதிக அளவில்
செதுக்கப்பட்டு
பெரும்பாலான கோயில்களில்
மட்டும் வைக்கப்பட்டு
ஏன் பிற இடங்களில்
வைக்கப்படவில்லை
என்பதை மனிதன்
யோசித்து இருந்தால்,
கோடிக்கணக்கில் பணம்
செலவு செய்து
கணக்கில் அடங்காத
மனித உழைப்பை
பயன்படுத்தி கட்டப்பட்ட
கோயில்களில் எல்லாம்
தேவையில்லாத
ஒரு சிற்பத்தை
‘பெரும்பாலான
எண்ணிக்கையில்
வைக்க வேண்டிய
அவசியமில்லை
பின் எதற்காக யாளி
சிற்பத்தை கோயிலில்
வைத்தார்கள்
யாளி சிற்பத்தில் ஏதோ
ஒரு ரகசியம் இருக்கிறது
என்பதை மனிதன்
சிந்தித்து இருந்தால்
யாளி என்ற
உயிரினத்திலிருந்து தான்
மனிதன் வந்தான்
என்பதை மனிதன்
அறிந்து இருப்பான்

இந்து மதக் கோயில்களில்
ஆகம சாஸ்திர விதிகளின்படி    
கட்டப்பட்ட பல
கோயில்களுக்கு
நம்மில் பலர்
சென்றிருந்தாலும்
எத்தனை பேர் இந்த
யாளி சிலையைப்
பார்த்திருப்பார்கள்;
அப்படியே பார்த்து
இருந்தாலும்
இந்த சிலை என்ன
சிலை என்று
எத்தனை பேர் யோசித்து
இருப்பார்கள்;
எந்த விஷயத்தை
உணர்த்துவதற்காக
இந்த சிலை
செதுக்கப்பட்டிருக்கிறது
என்று சிந்தித்து
இருப்பார்கள்;
மனிதன் சிந்திக்காத
காரணத்தினால் தான்
யாளி பற்றிய
ரகசியத்தை மனிதனால்
கண்டுபிடிக்க முடியவில்லை

யாளி சிலை
தென் இந்தியாவில்
உள்ள ஆயிரக்கணக்கான
கோவில்களில்
லட்சத்திற்கும் மேற்பட்ட
சிலைகள் செதுக்கப்பட்டு
வைக்கப்பட்டு உள்ளன
உலகில் எந்த
ஒரு உயிரினத்திற்கும்
இந்த எண்ணிக்கையில்
முழு உருவ
முப்பரிமாண சிலைகள்
கிடையாது என்பதை
இந்த உலகம்
சிந்தனை செய்யத்
தவறி விட்டது

யாளி என்றால்
என்ன என்று மக்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
யாளிகளுக்கென்று
தமிழர்கள் தனியாகவே
ஒரு வரிசையை
கோவில் கோபுரத்தில்
ஒதுக்கி இருக்கிறார்கள்
அது யாளி வரிசை
என்றே அழைக்கப்படுகிறது

ராஜ ராஜ சோழன்
கட்டிய தஞ்சைப்
பெரிய கோயிலில்
யாளிக்கென்று ஒரு
முழு தனி வரிசையே
ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும் தஞ்சைப் பெரிய
கோயில் மட்டுமின்றி
மதுரை மீனாட்சி
அம்மன் கோயில்,
இராமேஸ்வரம் கோயில்,
சிதம்பரம் நடராசர் கோயில்,
காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாள் கோயில்,
தென்காசி விஸ்வநாதர்
கோயில் என்று
தமிழ் மன்னர்களால்
கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான
பழமையான கோயில்களில்
எல்லாம் இரண்டு
கால்களில் நிற்கும்
யாளி சிலை
வைக்கப்பட்டிருக்கிறது

யாளிகள் பல்வேறு
வடிவங்களில்
செதுக்கப்பட்டு கோயில்
தூண்களில் வைக்கப்பட்டு
இருக்கிறது
சிங்கத்தின் தலை
கொண்டதை
சிம்மயாளி என்றும்,
யானை முகத்தை
கொண்டதை
யானையாளி என்றும்,
ஆட்டுத் தலை கொண்டதை
மகரயாளி என்றும்,
குதிரை முகம் கொண்டதை
குதிரை யாளி
என்றும் அழைக்கப்படும்
சிலைகளே அதிக
அளவில் கோயில்களில்
வைக்கப்பட்டு இருக்கும்

இவ்வாறு பல்வேறு
வடிவங்களில்
யாளி சிலைகள்
செதுக்கப்பட்டிருந்தாலும்
யாளிகள் என்பவை
பொதுவாக
சிங்கத்தின் முகத்தையும்
மனித உடலையும்
கொண்டு இரண்டு
கால்களில் நிற்கும் படியும்,
இரண்டு கைகள்
இருக்கும்படியும்,
வடிக்கப்பட்ட
சிலை என்பதை
அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டும்

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சார்லஸ் டார்வின்
சொல்லி இருந்தாலும்,
தசாவதாரத்தில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு உயிரினமான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான் என்று
நம் முன்னோர்கள்
சொல்லி இருந்தாலும்,
மனிதனில்
முதலில் தோன்றியது
ஆணா, அல்லது பெண்ணா
என்பதை நாம் இது வரை
சிந்திக்க வில்லை
என்றால் இந்த
நேரத்தில் இருந்து நாம்
சிந்திக்கத் தொடங்குவோம்

--------- இன்னும் வரும்
---------- 28-09-2018
//////////////////////////////////////////////////////////